எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 4, 2013

விசிலோசைசாதாரணமா ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து விசிலடித்தால் பிரச்சனை தான். அதே மாதிரி ஒரு பெண் ஆணைப் பார்த்து விசிலடித்தாலும் பிரச்சனை தான்!

கல்லூரி நாட்களில் கோவை-கேரளா சுற்றுலா சென்றபோது எங்கள் கல்லூரி பெண் ஒருவர் எங்கள் பேருந்தினை ஒரு லாரி கடக்க முயன்றபோது விசிலடிக்க, கிட்டத்தட்ட பாலக்காடு முதல் கோவை வரை, எங்கள் பேருந்திற்கும் அந்த லாரிக்கும் ஒரு ஹாட் ரேஸே நடந்தது! ஒவ்வொரு முறையும் அந்த லாரி முன்னேற, அந்த தோழி விசிலடிக்க, லாரி பின்னே செல்லும்!

விசில் என்றாலே தவறான கண்ணோட்டத்தோடு பார்வையிடும்போது அந்த விசிலோசை வைத்து கர்நாடக பாடல்கள், சினிமா பாடல்கள் என்று வாசித்தால்!

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் வரும் காலைத்தென்றல்நிகழ்ச்சியின் ஒரு பகுதி ‘நம் விருந்தினர்’.  சென்ற வாரத்தில் ஒரு நாள் அந்த நிகழ்ச்சியில் விசிலோசை மூலம் கர்நாடக பாடல்களை இசைக்கும் “விசிலோசைதிரு ஆர். பத்மநாபன் என்பவரை நேர்காணல் கண்டார்கள். ஒரு வாய்ப்பாட்டுக்காரரான இவர் பலருக்கு இசை பயிற்றுவிக்கிறார்.  கோவை வாசியான இவர் சிறு வயது முதலே விசிலோசையை பழகி வருகிறார்.

சிறு வயதில் அவரது அம்மா ‘விசிலடிக்காதேஎன்று கண்டித்தாலும், விசில் மூலம் கீர்த்தனை, ராகம் போன்றவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வாசிக்கிறார்.  விசில் வாசிப்பதில் – காற்றினை உள்வாங்குவது, வெளியே அனுப்புவது என சில வகைகள் இருக்கின்றன என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் சாதகம் செய்து வரும் இவர், நேர்காணலின் போது புல்லாங்குழலுக்கும் விசிலோசைக்கும் இருக்கும் வித்தியாசத்தினையும் சொன்னார்.

புல்லாங்குழலில் மூச்சுக்காற்றினை செலுத்தி புல்லாங்குழலில் உள்ள துளைகளில் விரல்கள் கொண்டு அடைத்தும், திறந்தும், ராகத்தினை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் விசிலோசை என்பது முழுக்க முழுக்க மூச்சு மட்டுமே.  அதாவது மூச்சினை மட்டுமே இசையாக மாற்றுவது. இதற்கு கடுமையான மூச்சுப் பயிற்சி அவசியம். விசிலோசை மூலம் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாது சினிமா பாடல்களும் பாடிக் கண்பித்தார்.  நிகழ்ச்சியின் போது பாரதியாரின் எண்ணிய முடிதல் வேண்டும்பாட்டினை வாய்ப்பாட்டாகவும், விசிலோசையாகவும் வாசித்துக் காண்பித்தார். நாட்டை ராகத்தில் ஸ்ருதியோடு வாசித்தது ரசிக்கும்படி இருந்தது.

கச்சேரிகளில் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், கடம் என்று இருக்கும்போது கூடவே விசிலோசை மூலமும் கச்சேரிகள் நடத்தி இருப்பதாகச் சொன்னார் திரு பத்மநாபன். தொடர்ந்து மூன்று மணி நேரம் விசிலோசை மூலம் கச்சேரிகள் நடத்தி இருப்பது ஆச்சரியம் தான்.  

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் பாடிய இரண்டு சினிமா பாடல்கள் – அக்னி நக்ஷத்திரம் படத்திலிருந்து “தூங்காத விழிகள் இரண்டுமற்றும் பச்சை விளக்கு படத்திலிருந்து “கேள்வி பிறந்தது அன்று.  நிகழ்சியின் போது இன்னுமொரு தகவலையும் சொன்னார். வாய்ப்பாடல் சொல்லித்தரும் இவர் விசிலோசையையும் பயிற்றுவிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வமும், கொஞ்சமாவது விசிலடிக்கும் திறமையும் இருந்தால் நீங்களும் கற்றுக் கொள்ளலாம்!

விசிலோசை வாசிக்கும் இவர்கள் Indian Whislters Association என்ற ஒரு அமைப்பினையும் வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த அமைப்பில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பில் தமிழகத்திலிருந்து மட்டுமே 100 பேர் உறுப்பினர்களாம் – திரு பத்மநாபன் மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோரும் இதில் Elite Members. இந்த அமைப்பிற்கு ஒரு இணைய தளம் கூட இருக்கிறது.

சென்ற வருடம் சென்னையில் விசிலோசை மூலமாகவே எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களது பாடல்களை தொடர்ந்து வாசித்து இருக்கிறார்களாம். 19 ஃபிப்ரவரி 2012 அன்று நடந்த WHISTLING TRIBUTE TO DR. S.P. BALASUBRAMANIAM என்ற நிகழ்ச்சியில் 19 விசிலோசை வாசிப்பவர்கள் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியில் விசிலோசை வாசித்ததில் திரு பத்மநாபன் அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி!

இந்த அமைப்பு 48 நபர்களைக் கொண்டு வாசித்து LIMCA BOOK OF RECORDS-ல் இடம் பெற்றுள்ளார்கள் – விசிலோசை மூலம் வாசித்த பாடல் என்ன தெரியுமா – ‘சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா இதன் காணொளி கீழே! என்ன நண்பர்களே இனிமே யாராவது விசிலடிச்சா, தப்பா நினைக்காதீங்க! விசிலோசைக்கு பயிற்சி செய்யறதா நினைச்சுக்கோங்க!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. பத்மநாபன் யார்?
  அறியாத விஷயம். சுட்டிக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பத்மநாபன் யார்? - கோவையிலிருக்கும் ஒருவர். எனது தில்லி நண்பருக்குத் தெரிந்தவர். IWA தளத்தில் Tribute to SPB நிகழ்ச்சியில் பாடிய பலரில் முதல் நபர் தான் பத்மநாபன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 2. விசிலடிச்சான் குஞ்சுகளாக இருப்பது தப்பில்லை போலருக்கோ... ஆனாலும் ஒண்ணு ரெண்டு பாட்டுக்கு மேல வாசிக்க முடியாதுன்னு நினைச்சேன். மூணு மணிநேரம் கச்சேரி பண்ற அளவுக்கு வாசிக்கறார்ங்கறது பிரமிப்பு! அதுலயும் கர்நாடக சங்கீதத்தை விசில்மூலமா வெளிப்படுத்தறார்ங்கறது ரொம்ப ஸ்பெஷல்! இவருக்கு ‘விசில் வித்தகர்’னு பட்டமே கொடுத்திரலாம் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ் அண்ணே.

   Delete
 3. தளத்தில் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாட்டை விசிலில் பிளந்து கட்டியிருக்கிறார் ஒருவர். பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 4. நல்லதொரு பகிர்வு. சிறு வயதில் எல்லோரையும் போலவே நானும் விசிலில் திரைப் பாடல்கள் இசைத்ததுண்டு. எங்கள் வீட்டில் உறவு வட்டத்தில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு எழுதும் பெண் விசிலில் கர்னாடக இசைப் பாடல் வாசிக்குமளவு தேர்ச்சி பெற்றுள்ளார் - ஒரு வருடத்துக்கு முன்பாகவே!

  தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இப்போது சேர்த்து விட்டேன். தமிழகத்தில் தான் நிறைய பேர் இப்படி விசிலோசை வல்லுனர்கள் இருக்கிறார்கள் என அவர்களது தளம் சொல்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. உய்.....உய்.......உய்....... என்ன புரியலையா ? நான் விசில் சத்தம் மூலம் 'உங்கள் பதிவு அருமை' என்று சொல்லி இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அட நல்லாவே விசில் அடிக்கறீங்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 6. என் கணவர் விசிலில் கர்நாடக இசை, சினிமாபாடல்கள் பாடுவார்கள். நாங்களும் தொடர்ந்து பாடுங்கள் என்று சொல்லி வருகிறோம்.

  ‘சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா’ – காணொளி அருமை.
  நல்ல பகிர்வு.
  தப்பாக நினைக்கவில்லை என்றால் சொல்கிறேன்,
  எனக்கும் கொஞ்சம் விசில அடிக்க தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்கள் இருவருமே விசிலோசை செய்பவர்களா? பாராட்டுகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 7. விசிலோசை பயிற்சி - சில இடங்களில் உதவும்... பலமுறை முயற்சி (முதலில் வெறும் காற்று தான் வந்தது) செய்து சிறிது கற்றேன்... ஆலையில் பணியில் இருந்தபோது உதவியது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. வியக்கவைக்கும் பகிர்வுகள்..

  கோமதி அரசு அவர்களுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. ஆஹா! நீங்க சொல்லிக் கொடுத்தும் என்னால் விசில் அடிக்க வரவில்லையே என இப்போது வருத்தமாக உள்ளது....:)

  கோமதிம்மா நீங்க சூப்பர்....

  ReplyDelete
 10. புது தகவல் நன்றி விசிலும் இசையாகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 11. விசிலோசை அருமை. பாராட்டுக்கள். வெங்கட் ஜி.

  [நானும் விசிலடிப்பேன் என்னையறியாமலேயே .... ஆனால் அதுவும் எப்போதாவது குளியல் அறையில் மட்டுமே.]

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. puthiya thakaval !

  nantri anne...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 13. இராஜராஜேஸ்வரி அவர்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு கொஞ்சம் விசில் அடிக்க தெரியும் என்றேன் பாட்டுக் கச்சேரி செய்யும் அளவு எனக்கு தெரியாது.

  ஆதி, கருத்துக்கும் நன்றி. என் பேரனிடம் விசில் அடித்து காட்டினால் சிரிப்பான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 14. தொடர்ந்து மூன்று மணி நேரம் விசிலோசை மூலம் கச்சேரிகள் நடத்தி இருப்பது ஆச்சரியம் தான்.

  எங்கள் அலுவலகத்திலும் ஒருத்தர் இருந்தார். சினிமா பாடல்களை அப்படியே விசிலடிப்பார்.

  திறமை யார் யாரிடம் எந்த ரூபத்தில் இருக்கோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 15. விசில் அடிப்பது பற்றி புதிய சிறப்பான தகவல்கள் வெங்கட். காணொளி சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி!

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. ரொம்ப சுவாரஸ்யமான பதிவு..விசில்ல இவ்ளோ பண்ணமுடியுமா!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 18. நல்ல திறமை எங்கிருந்தாலும் வெளிபட்டுவிடும்.
  ஆனால் அதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவை.

  அருமையான புதுமையான பகிர்வு ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 19. விசில்
  இசைக்கிறது..
  நானும்
  முயற்சிக்கிறேன்
  விசிலடிக்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேன்....

   Delete
 20. பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  (விசில் என்பதன் தமிழாக்கம் என்ன? பக்கத்து வூட்டுப் பையன் பிகில்ன்னு சொல்கிறான்.)

  ReplyDelete
  Replies
  1. ஊதல்

   [பள்ளிகளில் அ,ஆ,இ, ஈ சொல்லிக் கொடுக்கும் பொழுது ஊ எழுத்துக்கு ’ஊசி’ அல்லது ‘ஊதல்’ தான் சொல்வர்; அந்த வகுப்புக்கு ‘கட்’ அடிச்சிட்டீங்களா?]

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. அடேங்கப்ப. நல்ல விவரம். சுவையாக இருந்தது. நானும் விசிலடிப்பேன். பெற்றொர் திட்டலுக்குப் பயந்து விட்டுவிட்டேன்:)
  பேரன் பேத்திகளுக்குப் பொழுது போக்காகச் செய்து காட்டுவது உண்டு.
  விசிலடிப்பவர்களின் திறமை அசர வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. அட நீங்களும் விசிலடிப்பீங்களா? :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 23. இந்தப் பதிவுக்கு ஒரு விசில்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....