எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 6, 2013

உலக மகளிர் தினம்

வரும் எட்டாம் தேதி அன்று உலக மகளிர் தினம். இந்த நாளை முன்னிட்டு மகளிர் பற்றிய சில விஷயங்கள் பார்க்கலாம்!

அம்மா எனும் அரிய பணி:

ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலத்திற்கு ஒரு பெண் தனது உரிமத்தினை புதுப்பிக்க வருகிறார். அங்கே இருந்த அலுவலர் அந்த பெண்ணின் விண்ணப்பத்தினை பார்த்தபடியே நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்எனக் கேட்டபோது, அந்தப் பெண்மணி சற்றே யோசித்தார். அப்போது அந்த அலுவலர் உதவும் மனப்பான்மையோடு, “நீங்கள் ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிகிறீர்களா, இல்லை ஏதாவது சொந்தமாய் வர்த்தகம் ஏதும் செய்கிறீர்களா?எனக் கேட்க, அந்தப் பெண் நான் ஒரு முழு நேர பணியாளர் நான் ஒரு தாய்என்று சொல்லவே அந்த அலுவலர் – இதெல்லாம் எங்களது படிவத்தில் இல்லை! நீங்கள் ஒரு இல்லத்தரசி என எழுதிவிடுகிறேன் – அதுவே அனைத்திற்கும் சமம்!என்று சொன்னார்.

இன்றைய நிலையில் இதே கேள்வியை இந்த அலுவலகத்தில் கேட்கும்போது நீங்கள் இப்படி பதில் சொல்லலாம்! “நான் குழந்தை வளர்ப்பு, சத்துணவு மற்றும் சக மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்!இதைக் கேட்டபின் அந்த அலுவலர் முகத்தில் நிச்சயம் ஒரு கேள்வி தெரியும்? நீங்கள் சொன்னதை அப்படியே எழுதி விட்டு அடுத்த கேள்வியை கேட்டும் விடுவார் – ‘அது என்ன வேலை? அதில் நீங்கள் செய்வது என்ன?நீங்கள் இப்படி பதில் சொல்லலாம்!

என்னுடைய ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது [அம்மாவிற்கு ஏது பணி ஓய்வு!]. எனது ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கூடத்திலும், களத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு இரு முதலாளிகள் [ஒன்று கடவுள் மற்றது என்னுடைய குடும்பம்!]. எனக்கு இதுவரை இரு விருதுகள் கிடைத்துள்ளன [ஒரு மகன், ஒரு மகள்]. ஆராய்ச்சிகளிலேயே மிகவும் கஷ்டமானது எனது ஆராய்ச்சி தான் [எல்லா அம்மாக்களும் ஒத்துக் கொள்வார்கள்!].

நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய வேண்டியிருக்கிறது. சில நாட்களில் 24 மணி நேரம் கூட போதுவதில்லை! அதிலும், இப்பணியில் இருக்கும் சவால்கள் வேறெந்த பணியிலும் இல்லை! [குழந்தை வளர்ப்பு என்பது சுலபமானதா என்ன?] எனக்குக் கிடைக்கும் மன அமைதியும், சந்தோஷமும் பணம் கொடுத்து வாங்க முடியாதது!

அம்மா எனும் பணி எவ்வளவு சீரிய பணி. உலகத்தில் இருக்கும் பணிகளிலேயே உயர்ந்ததும் கூட!

மேலே சொன்னது ஒரு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது. இங்கே தமிழில்!

GIRL EFFECT:

பெண்களை அவர்களது இயல்பிலே வளர விடுவோம்! பனிரெண்டு வயதில், பதினான்கு வயதிலேயே குடும்பப் பொறுப்புகளை சுமக்க வைக்க வேண்டாமே! இன்னும் பல கிராமங்களில் 14 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். 16 வயதில் குழந்தை – அம்மா எனும் பொறுப்பு. என்னதான் அம்மா எனும் பணி மிகச் சிறந்த பணியாக இருந்தாலும், 16 வயதில் அம்மா எனும் பணி மிகவும் கடினம். நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தால் தான் எந்தச் செயலுக்குமே மரியாதை.

இந்த எண்ணத்தினை பிரதிபலிக்கும், GIRL EFFECT என்று ஒரு காணொளி பார்த்தேன். நீங்களும் பாருங்களேன். பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:

33 சதவீத ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ, தற்போதைக்கு 25 சதவீத ஒதுக்கீடு மகளிர்க்கு  கிடைத்திருக்கிறது! எங்கே என சந்தேகத்துடன் கேட்பவர்களுக்கு, தில்லியில் தான். தில்லி அரசாங்கம் சென்ற வாரம் ஒரு அரசாணை பிறப்பித்து இருக்கிறது – இந்த மார்ச் மாதம் முதல் எல்லா அரசு பேருந்துகளிலும் உள்ள இருக்கைகளில் 25 சதவீதம் பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

இதன் மூலம் பெண்களுக்குப் எத்தனை தூரம் பலன் இருக்குமென்பது போகப் போகத்தான் தெரியும்!

அனைத்து மகளிர்க்கும், முன்னதாகவே ‘உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்!மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. அம்மான்னா சும்மா இல்ல என்கிறது பதிவு.

  பெண்ணின் பெருமைகளைப் போற்றுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஓவியம் நன்றாக இருக்கிறது.

  தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஓவியம் இணையத்திலிருந்து எடுத்தது.... வரைந்த ஓவியருக்குத் தான் பாராட்டுகள் சேர வேண்டும்.....

   Auto Schedule செய்து வைத்து விடுவதால், தமிழ்மணம் சப்மிட் செய்ய முடிவதில்லை.... எப்போது கணினி முன் அமர்கிறேனோ அப்போது தான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கிறேன். :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அன்னை என்ற மந்திரத்திற்கு நிகர் ஏது? பெண்மையைப் போற்றிய சிறப்பான பதிவு வெங்கட். (அதுசரீரீரீ... ஆடவர் தினம்னு எதும் கிடையாதா?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   உங்களுக்கு பதில் விதவிதமா கிடைச்சிடுச்சு பாருங்க! :)

   Delete
 4. இல்லத்தரசி என்றால் வேலைக்குச் செல்லும் பெண்ணைவிட பொறுப்பு அதிகம்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. எனக்கு இரு முதலாளிகள் [ஒன்று கடவுள் மற்றது என்னுடைய குடும்பம்!]. எனக்கு இதுவரை இரு விருதுகள் கிடைத்துள்ளன [ஒரு மகன், ஒரு மகள்]. ஆராய்ச்சிகளிலேயே மிகவும் கஷ்டமானது எனது ஆராய்ச்சி தான் [எல்லா அம்மாக்களும் ஒத்துக் கொள்வார்கள்!].//

  இனிய மகளிர்தின வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. நல்ல பகிர்வுகள். காணொளியும் பார்த்தேன். வசதிக் குறைவான வீடுகளில் சிறுவயது திருமணங்கள் பெங்களூரிலும் நடக்கின்றன. ஏழ்மையோடு இணைந்த பல்வேறு பயங்கள், காரணங்களுக்காக:(.

  அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   இன்னும் பல கிராமங்களில் சிறு வயது திருமணங்கள் நடப்பதன் காரணம் நீங்கள் சொன்னது போல ஏழ்மை தான்......

   Delete
 7. சென்னையில் முதலில் ஆண்களின் பகுதியில்தான் பெண்கள் அமர்கிறார்கள் அவர்களின் பகுதிக்கு யாரும் இல்லையென்றாலும் ...இருந்தாலும் நாமும் பெருந்தன்மையாக விட்டுகொடுக்க வேண்டியுள்ளது பாவம் எவ்வளவு அவஸ்தையில் வெளியில் பயணம் செய்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 8. மின்னஞ்சலில் வந்ததை பகிர்ந்து கொண்டது மேலும் சிறப்பு...

  உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. அம்மா எனும் பணி எவ்வளவு சீரிய பணி. உலகத்தில் இருக்கும் பணிகளிலேயே உயர்ந்ததும் கூட!//


  அம்மாவின் பெருமையை கூறும் வார்த்தைகள் கேட்க சந்தோஷ்மாய் இருக்கிறது.
  என் அப்பாவின் அம்மாவுக்கு அந்த காலத்தில் திருமணம் ஆகும் போது 12 என் தாத்தாவுக்கு 18. என் பாட்டிக்கு மகன் (என் பெரியப்பா பிறக்கும் போது 14 வயது) அந்தகாலத்தில் சாரதா சட்டம் வரவில்லை போலும்! ராமலக்ஷ்மி சொல்வது போல் இப்போதும் நடப்பது கொடுமை.

  என் மாமியாருக்கு 15, மாமானருக்கு 30 வயது . எனக்கு 17 , என் கணவருக்கு 23 . 21 வயதில் தான் பெண்ணுக்கு ஒரளவு வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் என நினைக்கிறேன்.
  மகளிர்தின வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.
  நானும் மகளிர்தின வாழ்த்து சொல்லிக்கிறேன் எல்லோருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 10. // [அம்மாவிற்கு ஏது பணி ஓய்வு!].//

  உண்மைதான்.

  மகளிர் தினத்திற்கான மிகவும் சிறப்பான பகிர்வு வெங்கட்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 11. பாலகணேஷ்,

  நவம்பர் 19 ஆடவர் தினம்னு இருக்கு.

  http://en.wikipedia.org/wiki/International_Men%27s_Day

  (எல்லா நாளுமே ஆடவர் தினம் தானே இதுல தனியா வேற இன்னாத்துக்கு)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 12. பதிவு ரொம்ப அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 13. அந்த வீடியோ லிங்க் ரொம்ப அருமையா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.

   Delete
 14. // [அம்மாவிற்கு ஏது பணி ஓய்வு!].// ;)))))

  மிகச்சிறப்பான பதிவு. வரையப்பட்டுள்ள படம் அழகோ அழகு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   ஓவியம் எனக்கும் பிடித்திருந்தது. இணையத்தில் பார்த்து இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன். ஓவியம் வரைந்த முகம் தெரியா நண்பருக்கு எனது நன்றிகள்.....

   Delete
 15. சிறப்பானதொரு அன்னையர் தின கட்டுரை... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பிரபாகரன்.

   Delete
 16. எங்க வீட்டில் பெண்களுக்கு நூறு சதவீதம்.

  (பாலகணேஷ்: ...ஆடவர் தினம்னு எதும் கிடையாதா?.
  சார்! அதான் தினசரி ஆடுவோர் தினம் கொண்டாடறாங்களே!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி....

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. அருமையான பகிர்வு.

  (எல்லாம் சரிதான்...!
  உலக மகளிர் தினத்திற்காக..
  அந்த ஒரு நாளைக்காவது பெண்களுக்கு
  ஓய்வு கொடுத்தால் நன்றாக இருக்கும்.)
  இது மகளிர் அனைவருக்கான
  எனது வேண்டுகோள்!!

  நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. விடுமுறை எடுத்துக் கொள்ளுங்களேன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 19. பெண்ணின் பெருமையை அழகாகச் சொன்னீர்கள் வெங்கட் பெண்.படம் நீங்கள் வரைந்ததா?அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   பெண் படம் நான் வரைந்ததல்ல.... இணையத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தப் பட்டது. மிகவும் அழகாய் இருந்ததால் இங்கே உபயோகித்திருக்கிறேன். முகம் தெரியா அந்த ஓவியருக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 20. அருமை.
  அம்மா என்னும் பணி எவ்வளவு சீரிய பணி.
  ஓவியம் அழகோ அழகு.

  பெண்மை வாழ்கவென்று கூத்தாடுவோமடா - என்ற பாரதியின் வரிகள் மனதில் நிழலாடுகின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

   பெண்மை வாழ்கவென்று கூத்தாடுவோமடா.... எனக்கும் அந்த வரிகள் தான் நினைவில் வந்தன!

   Delete
 21. உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...! அம்மாவே தெய்வம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. நல்ல பதிவு. அந்த மெயில் முன்பே எனக்கும் வந்தது, மிகவும் ரசித்தேன். (ஹி.. ஹி.. நானும் இப்போ “குழந்தை வளர்ப்பு, சத்துணவு மற்றும் சக மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்”!!)

  இளவயதுத் திருமணங்கள்.. சில இடங்களில் ஏழ்மையினால், சில இடங்களில் “கடமையைக் கழிக்க”... :-((

  அதை எதிர்க்கும் அளவிலேயே, காலங்கடந்த திருமணங்களையும் எதிர்க்கவேண்டிய நிலை இப்போது. சில முதியவர்கள், “என் (30+ வயது) மகன்/ள் இப்போ திருமணம் வேண்டாம்னு சொல்றான்/ள்” எனச்சொல்லும்போது அவர்களின் குரலில் இருக்கும் வருத்தம் சொல்லிமுடியாது!! :-((

  //அதுசரீரீரீ... ஆடவர் தினம்னு எதும் கிடையாதா?//
  @பாலகணேஷ் சார்!! 365 நாளில் ஒண்ணே ஒண்ணுதான் எங்களுக்கு!! மீதியெல்லாம் உங்களுக்குத்தானே?! :-))))

  ReplyDelete
  Replies
  1. Happy Women's Day Let us celebrate every day

   Delete
  2. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
  3. Thanks for your first visit and comments PRINCIPLE CENTRE.

   Delete
 23. பெண்மையைப் போற்றுவோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 24. யார் வரைந்த சித்திரம்? விட்டு விலக முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. முகம் தெரியா அந்த ஓவியரின் சித்திரம் அனைவரும் ரசிக்க முடியும் ஓவியம். முன்பு ஒரு முறை கூகிள் மூலம் கிடைத்ததை சேமித்து வைத்திருந்தது. இன்றைய பதிவுக்கு பயன்படுத்தினேன். முகம் தெரியா ஓவியருக்கு எல்லா பாராட்டுகளும்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை...

   Delete
 25. டூ மச்சு ஆராய்ச்சி ஹூஸைனம்மா.

  ReplyDelete
  Replies
  1. :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 26. மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்மையின் உயர்வினைப் போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 27. வீட்டில் HOME MAKER ஆக இருக்கும் பெண்களுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை... என் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்தேன் நன்றி... வீட்டில் இருக்கும் எந்த பெண்ணும் சும்மா இருக்கிறோம்... என சொல்லத் தேவையில்லை.. அவர்களால் தான் குடும்பமே இயங்குகிறது... இதனை அந்தப் பெண்ணும் , அவளைச் சார்ந்தோரும் உணரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 28. இன்றுதான் இந்த பதிவை படிக்க நேரம் இருந்தது. உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு பதிவு! சிறப்பாகவே உள்ளது.! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 29. என்ன அருமை அம்மாவின் மகிமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....