எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 12, 2013

ஃப்ரூட் சாலட் – 41 – மனித நேயம் – கைம்பெண் திருமணம்


இந்த வார செய்தி:

நான் தினமும் அலுவலகம் செல்லும்போது தில்லியின் பிரபலமான பிர்லா மந்திர் [லக்ஷ்மி நாராயண் மந்திர்] வழியாகத்தான் செல்வது வழக்கம். அங்கே காலை வேளைகளில் ஒரு நபர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கோவிலுக்கு நேரெதிரே வண்டியை நிறுத்துவார். அவர் தூரத்தில் வருவதை பார்த்தவுடனேயே பல நாய்கள், பறவைகள் என அவ்விடத்தினைச் சுற்றிச் சுற்றி வரும்.

ஒவ்வொரு நாளும் அரை கிலோ பனீர், அரை கிலோ பால், 1 பாக்கெட் பிஸ்கெட் அல்லது ரஸ்க் என ஸ்கூட்டரின் டிக்கியில் எடுத்து வருவார். அரை கிலோ பனீர் எடுத்து சிறு சிறு துண்டுகளாக கையினால் விண்டு காக்கை, குருவி, சில சமயங்களில் பருந்துகள், நாய்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிர்ந்து அளிப்பார். அவர் காலைச் சுற்றியபடியே இருக்கும் இந்த ஜீவராசிகள். மேலே தூக்கிப் போட பல சமயங்களில் காக்கைகள் காற்றிலேயே கவ்விப்பிடித்து செல்வது அழகாய் இருக்கும்.

பனீர் கொடுத்த பிறகு பிஸ்கெட்டுகள் [அ] ரஸ்க்! இதையும் பகிர்ந்தளித்த பிறகு தாகம் தீர்க்க வேண்டுமே! அதற்காக ஒரு அரை கிலோ பாக்கெட் பால் – கூடவே மூன்று நான்கு பிளாஸ்டிக் கவர்கள் – பாலை நான்கு பங்குகளாகப் பிரித்து பிளாஸ்டிக் பைகளில் நாய்கள் நக்கிக் குடிக்க ஏதுவாய் நான்கு இடங்களில் வைத்து, அவை குடித்து முடித்த பின் அந்த பிளாஸ்டிக் பைகளை எடுத்து குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்!

நாள் தவறினாலும் தவறலாம் ஆனால் இவர் இப்படிச் செய்வது தவறியதில்லை! ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் இதைச் செய்து வருகிறார். அவரிடம் சென்று பேச்சுக் கொடுக்க வேண்டுமென பல நாட்களில் எனக்குத் தோன்றும். ஆனாலும் அலுவலகம் செல்லும் அவசரம், தயக்கம் என ஏதோ காரணத்தினால் இது வரை கேட்கவில்லை. அவரிடம் என்றாவது ஒரு நாள் கேட்டு விட வேண்டியது தான்! பார்க்கலாம் என்று எனக்கு தைரியம் வருகிறதென!

ஆனாலும் இங்கே உங்களுடன் இந்த மனிதரின் மனித நேயத்தினைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை! அதனால் இன்று உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். என்றைக்கு அவரிடம் பேசுகிறேனோ அன்று நிச்சயம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

வாழ்க அந்த மனிதர் – வாழ்க அவரது மனித நேயம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

துன்பம் வரும்போது கண்ணை மூடாதே! அது உன்னை கொன்றுவிடும்.  கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம்!

இந்த வார குறுஞ்செய்தி

FLOWERS BLOSSOM IN STYLE EVEN WHEN THERE IS NO ONE TO ADMIRE ITS BEAUTY. LETS CONTINUE OUR GOOD WORK WITH HONESTY EVEN WHEN NOBODY IS WATCHING.

ரசித்த புகைப்படம்: 


எனது கேரள நண்பர் பிரமோத் எடுத்த புகைப்படம். இடம் கேரளத்தின் அருகே இருக்கும் பொன்முடி. அருமையான புகைப்படத்தினை எடுத்த நண்பர் பிரமோத் அவர்களுக்கு வாழ்த்துகள்!

ராஜா காது கழுதை காது:

இதுவும் சென்னையில் கேட்டது தான்! வண்டியில் பில்லியன் ரைடராக உட்கார்ந்து சென்று கொண்டிருந்தபோது பக்கத்தில் இன்னுமொரு பைக். அதில் பில்லியன் ரைடராக இருந்தவர் அணிந்திருந்த ஜீன்ஸ்-ல் பல இடங்களில் கிழித்து விடப்பட்டிருந்தது. ஓட்டியவர் பின்னால் இருந்தவரிடம், ‘இது என்னடா பிச்சைக்காரன் மாதிரி வேஷம்!எனச் சொல்ல, நீயாவது பரவால்லடா, தஞ்சாவூர் போகும்போது, ஏண்டா எங்க மானத்தை வாங்கற, என எங்கப்பா வீட்டுக்குள்ளேயே விடல!என்று சிரித்தபடியே சொல்கிறார்! அவரது கிழிந்த ஜீன்ஸ் மேல் அப்படி ஒரு காதல்!

ரசித்த காணொளி:

ஐ.பி.எல். ஜூரம் எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது. எனக்கும் சேர்த்து தான்! இப்போதெல்லாம் தினமும் மாலையில் பார்க்க ஆரம்பித்து விட்டேன். விளையாட்டின் நடுவே வரும் ஜெம்ஸ் விளம்பரம் – ஜெம்ஸ் மிட்டாய்களை வைத்தே டான்ஸ், ஐ.பி.எல். கப் என கலக்கலாக இருக்கிறது. இக்காணொளியை மிகவும் ரசித்தேன். யூவில் இருக்கிறதா எனப் பார்த்தால் பழைய காணொளிகள் தான் கிடைக்கின்றன. இன்னும் எந்தப் புண்ணியவானும் இணையத்தில் போட வில்லை போல!


படித்ததில் பிடித்தது:கைம்பெண்ணுக்கு வாழ்வளித்து
கரம்பிடிக்கும் ஆசை அவனுக்கு.

பெருமையாய் சொல்லிக்கொண்டேன்
என் நண்பன் அவனென்று...

சாத்திர சாக்கடையில்
மூத்திரமாய் சிக்காது
சிந்திக்கத் தெரியாத ஆடவனென்று...

லட்சியத்தின் நிறைவேற்றலுக்காய்
வாழ்த்தியதோடல்லாது,
அவனுக்கான துணையென
தேடிப்பிடித்தேனொரு தோழியை....

ஆவலாய் கேட்டறிந்து பின்
அவதியாய் கூறினான்...

“என் ஜாதியில் இருந்தா சொல்லு!
-        -   இந்திராவின் கிறுக்கல்கள்.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. வழக்கம்போல சுவையான சத்தான
  பயனுள்ள சாலட் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. மனித நேய மனிதரின் ஃப்ரூட்சாலட் பகிர்வுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. அருமை .எல்லாமே நல்ல இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 5. இந்திரா ‌சொடுக்கிய கவிதைச் சாட்டை மிகப் பிடித்தது எனக்கு! என்றாவது அந்த மனிதரிடம் பேசிவிட்டுப் பதிவிடுகிறேன் என்று நீங்கள் குறிப்பிட்ட மனிதரின் இரக்க உள்ளம் முடித்தது. மற்றப் பகுதிகளும் சோடையில்லை. ரசனையான சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   சாலட் ரசிக்கும்படி இருந்தது எனச் சொன்னதில் மகிழ்ச்சி.

   Delete
 6. எல்லாமே பிரமாதம். மனித நேய மனிதர்.. பிரமிக்கவைக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 7. வாழ்க அந்த மாமனிதர். வாழ்க அவரது அன்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. பெயர் தெரியாத அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்... சீக்கிரம் பேட்டியை போடுங்க...

  புகைப்படம் அருமை...

  சுவையான சாலட்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். விரைவில் அவரிடம் பேசுகிறேன்.....

   Delete
 9. எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி அவற்றின் பசிப்பிணியைப் போக்கி அருந்த நீரும் கொடுக்கும் அந்த முகம் தெரியாதவருக்குப் பாராட்டுக்கள்.
  கவிதை மிகவும் அருமை - நிறைய பேர் இப்படித்தான்!
  ப்ரூட் சாலட்டில் முதலிடம் பிடித்தவர் அந்தக் கருணை மனிதர் தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 10. வந்தேன் படிச்சேன், ரஸித்தேன்.மனித நேயம் எ்ன்பதைவிட உயிர்களின்மேல் நேயம் போலுள்ளது. பக்ஷிகள், மிருகங்கள், சிந்தியதைச் சாப்பிடும் ஊர்வன என்று அன்புகொட்டும் மனிதர். மலைக்கத் தோன்றுகிறது.விதவாவிவாகம், பேசத்தானே தவிர ஏதோ காரணம் தட்டிக் கழிக்க. அவரும் மனித ஜாதிதானே! மற்றும் யாவும் படிக்க அருமையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 11. புருட் சலட் இனிமை.
  வேதா.இலங்காதிலகம்.

  (தங்களிற்கு ஓரு கவிதை ( போட்டோ வரிகள்.) மின்னஞ்சலில் அனுப்பினேன் கிடைத்ததாகத் தகவல் இல்லையே.)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பக்கத்தில் பகிர்ந்த கவிதையா? இல்லை வேறு அனுப்பினீர்களா? மீண்டும் மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 12. சென்னையில் கூட ஒருவர் பூனைகளுக்கு உணவிடுவதாக படித்த நினைவு.புகைப்படம் நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 13. அருமையான ஃப்ரூட்சாலட்! அனைத்தும் அற்புதமாக இருந்தாலும் ரொம்பப் பிடித்தது ஃப்ரூட்சாலட்டில் கஜூ நட்ஸாக மேலுக்கிருந்த மனிதநேயம்...:)

  அனைத்தும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. பாராட்டுக்குரிய மனிதர்.

  குறுஞ்செய்தி நன்று. இயற்கையிடம் நாம் கற்க வேண்டிய ஒன்று.

  கவிதை அருமை.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. வாழ்க அந்த மனிதர் – வாழ்க அவரது மனித நேயம்!

  நல்லதொரு மனித நேயப்பதிவு தந்துள்ள தங்களுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 16. மனித நேயம் மிக்க மாமனிதர் வாழ்க! ஒருநாள் அவரிடம் பேசி அவர் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  இந்திராவின் கிறுக்கல் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 17. அந்த அருமையான மனிதரை நீங்கள் சீக்கிரம் பெட்டி காணுங்கள், தயக்கம்'என்றால் வீடு திரும்பலிடம் ட்ரைனிங் செல்லவும்..

  கிழிந்த ஜீன்ஸ் என் கண்களிலும் அடிகடி தட்டுப்படுகிறது, எங்கே வாங்கி விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது...

  நீங்கள் ரசித்த காணொளி " என் வாழ்நாளில் நானும் இப்படியொரு காணொளியை ரசித்தது இல்லை

  ReplyDelete
  Replies
  1. ட்ரையினிங்.... :) மோகன்குமார் இப்போது பயங்கர பிசி! சென்னை வரும்போது அவரிடம் பேச முடியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 18. மனித நேயம் இன்னும் கால் பதித்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சாட்சி கிடைத்தது
  கவிதைஅல்ல அது நிஜம் இப்படிதான் ஆசிரியருக்கு பாராட்டு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 19. அருமையாக உள்ளது சகோதரரே வாழ்த்துக்கள் தொடரட்டும் மேலும் சுவையான
  இப் ஃப்ரூட்சலாட் வகைகள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 20. இரசித்தேன்!மீண்டும் படித்தேன்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....