எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 3, 2013

ஃப்ரூட் சாலட் – 44 – 20 ரூபாயில் அகில இந்தியா – கலக்கல் சாவித்ரி - மனைவிஇந்த வார செய்தி:

எனது பதிவுகளில் முன்பே ஒரு முறை சொல்லி இருக்கிறேன், நான் தில்லியில் இருப்பது புகழ் பெற்ற பிர்லா மந்திர் கோவில் அருகே என. இது பிரபலமான ஒரு சுற்றுலா தலம். கரோல் பாக் பகுதியில் இருக்கும் அனைத்து சுற்றுலா ஏற்பாடு செய்யும் நபர்களும் சுற்றுலா பயணிகளை தினசரி தில்லி தர்ஷன்அழைத்துச் செல்லும் போது முதலில் வருவது பிர்லா மந்திர் தான். இங்கேயும், இன்னும் மற்ற சுற்றுலா தலங்களிலும் மிட்டாய்க் கடையில் உள்ள தின்பண்டங்களை ஈக்கள் மொய்த்துக் கொள்வது போல உங்களை மொய்த்துக் கொள்ள பல விற்பனையாளர்கள் காத்திருப்பார்கள்.

10 ரூபாயில் மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய கைவிசிறி, சிறிய கைப்பைகள், ஸ்டாப்லர் மெஷின் போல உருவத்தில் இருக்கும் கையடக்க தையல் மிஷின், கூலிங் கிளாஸ், இந்தியா பற்றிய புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை விற்கும் வியாபாரிகள் இங்கே இருப்பார்கள். அது போன்ற ஒரு விஷயத்தினை விற்கும் போது அவர்கள் இப்படிச் சொல்லித் தான் மக்களை கவர்ந்து இழுப்பார்கள்! எப்படி என்றால்,

“20 ரூபாயில் அகில இந்தியா, 20 ரூபாயில் அகில இந்தியா

என்னடா, இந்தியாவின் மதிப்பு 20 ரூபாய் தானா என அதிர்ச்சி அடைந்து விட வாய்ப்புண்டு. அவர்கள் விற்கும் பொருள் ஒரு சாதாரணமான, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு பொருள். காமிரா வடிவில் இருக்கும் இந்த பொருளில் View Finder, மேலே ஒரு திருகு குழல், முன் புறம் பிளாஸ்டிக்-ஆல் ஆன லென்ஸ் என அனைத்தும் உண்டு. View Finder-ல் கண்ணை வைத்து மேலே உள்ள குழலை திருகினால், உள்ளே ஒரு மெல்லிய நாடாவில் பதித்து வைத்திருக்கும் அகில இந்திய சுற்றுலா தலங்களின் படங்கள் ஒவ்வொன்றாய் உங்கள் கண் முன்னே விரியும்.

ஒரு நாள் இப்படி விற்கும் நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் போது அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்களே இதை செய்வீங்களா, எங்கேயிருந்து வாங்குவீங்க, எவ்வளவு ரூபாய்க்கு வாங்கி 20 ரூபாய்க்கு விக்கறீங்க? ஒரு நாளைக்கு எத்தனை விக்க முடியுது உங்களால?போன்ற கேள்விகள்.

தில்லியின் சதர் பஜார் பகுதியில் இருக்கும் மொத்த விலைக் கடைகளில் வாங்கி வந்து தான் விற்கிறார்கள். அடக்க விலை இவருக்கு 12 முதல் 15 வரை. ஆக ஐந்து முதல் எட்டு ரூபாய் வரை நிகர லாபம். நாள் முழுவதும் கையில் பல வரைபடங்கள், புத்தகங்கள், விரல்களில் நாடாக்களில் தொங்கிக் கொண்டு இருக்கும் இக்காமிராக்கள் என அலைந்து அலைந்து விற்றால் 100 முதல் 200 ரூபாய் வரை லாபம் பார்க்க முடிகிறது எனச் சொன்னார். அதற்குள் ஒரு பேருந்து வந்து அங்கே நிற்கவே சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டு இருந்தார்கள். மீண்டும் அறைகூவல் விடுக்கத் தொடங்கினார் அந்த வியாபாரி...... “20 ரூபாயில் அகில இந்தியா......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவது பலவீனத்தின் அடையாளம்.  - அரவிந்தர்.

இந்த வார குறுஞ்செய்தி

WHEN WE CAN’T LAUGH AGAIN ON THE SAME JOKE, WHY DO WE CRY AGAIN AND AGAIN FOR ONE AND THE SAME PAIN…. 

ரசித்த புகைப்படம்: 


இந்தப் புகைப்படத்தினை நான் மிகவும் ரசித்தேன். கூடவே அதில் இருக்கும் வார்த்தைகளை!

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலில் ஆண்டவன் கட்டளை எனும் பட்த்திலிருந்து டி.எம். சௌந்தர்ராஜன் குரலில் இந்தப் பாடல். நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு!ரசித்த காட்சி:

ஒண்ணும் ஒண்ணும் மூணு, ரெண்டும் ரெண்டும் அஞ்சு, மூணும் மூணும் எட்டு, எட்டும் நாலும் பத்து....  அட இது என்ன கணக்கு?  பாருங்களேன் சாவித்ரி மற்றும் மனோரமா நடிப்பில் இந்த சுவையான காட்சியை..... 
படித்ததில் பிடித்தது:

பில் கிளின்டனும் ஹிலாரி கிளின்டனும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். பெட்ரோல் போடுவதற்கு ஒரு பங்க் சென்ற போது அங்கிருந்த ஒரு நபரை அடையாளம் கண்டு கொண்ட ஹிலாரி, அவரை தனது கணவருக்கு “இவர் ஹென்றி, என்னுடைய கல்லூரித் தோழர்என அறிமுகம் செய்து வைத்தார்.

திரும்பி வரும்போது பில் கிளின்டன் நீ அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், இந்நேரம் ஒரு பெட்ரோல் போடுபவரின் மனைவியாக இருந்திருப்பாய் எனப் புன்னகையோடு சொல்ல, அதற்கு ஹிலாரி கிளின்டன் சொன்ன பதில்.... 

இல்லை நான் அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருப்பார்!

நீதி: பொண்டாட்டி கிட்ட சும்மா வாயக் கொடுத்து மாட்டிக்கக் கூடாது....

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. பொண்டாட்டி கிட்ட சும்மா வாயக் கொடுத்து மாட்டிக்கக் கூடாது....

  அமெரிக்க அதிபரே ஆனாலும் ....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. நம்ம கிட்ட கூட ”20 ரூபாயில் அகில இந்தியா” இருந்ததே அது தானே...:) அப்போ அது 10 ரூபாய்...:)

  இற்றை, குறுஞ்செய்தி, பாடல், காட்சி என அனைத்தும் அருமை...

  காட்சி நவராத்திரி படம் தானே..

  ReplyDelete
 4. 20 ரூபாயில் அகில இந்தியா, இது நல்லா இருக்கே.. அனைத்துப் பகுதிகளும் அருமை.. ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete

 5. படித்தேன் சுவைத்தேன்

  //நான் தில்லியில் இருப்பது புகழ் பெற்ற பிர்லா மந்திர் கோவில் அருகே என. இது பிரபலமான ஒரு சுற்றுலா தலம்.//

  வலைஉலகத்தில் புகழ் பெற்ற நீங்கள் புகழ் பெற்ற இடத்தில் இருப்பதில் அதிசயம் இல்லைதான்.

  பாயிண்டை நோட் பண்ணிக் கொண்டோம் .... இந்தியா வரும் போது உங்கள் வீட்டு கதவை தட்டிவிட வேண்டியத்துதான்

  ReplyDelete
  Replies
  1. வருக வருக.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்....

   Delete
 6. வார்த்தைகளை விட அந்தப் புகைப் படத்தை ரசித்தேன் காரணம் ஹி ஹி ஹி ஐ ஆம் எ பேச்சிலர்...

  ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. பேச்சிலர்... இப்பவே பேச முடியாவிட்டால், கல்யாணத்திற்குப் பிறகு எங்கே பேசுவது! :)) Just for fun! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 7. 20 ரூபாயில் அகில இந்தியா...!

  அர்த்தமுள்ள புகைப்படம்...

  இனிமையான பாடல்...

  மற்ற ஃப்ரூட் சாலட் அனைத்தும் சுவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 10. 20 ரூபாயில் உலகம் அருமை.
  அரவிந்தர் சொன்னது உண்மை,
  புகைப்படம் அழகு வாழ்க்கை பாடத்தை சொல்கிறது.
  பாடல்கள் மிகவும் பிடித்தபாடல்
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. புகைப்படமும் வாசகமும் அருமையோ அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 12. ரசித்த புகைப்படத்தின் வாசகங்களைப் படித்ததும் கல்லூரிக் காலத்தில் நண்பன் கொடுத்த ‘நினைவு வாசகம்’ நினைவு வந்தது. அவன் எழுதிக் கொடுத்தது “Wife is a knife. That cuts your life." அவனுக்கு என்மேல என்ன கோபமோ!

  (என்னது! அந்த வாசகம் சரியா! இல்லை, இப்போ நீங்கள் காட்டிய வாசகம் சரியா என்று கேட்கிறீர்களா? அடப் போங்கப்பா! ஆடி அடங்கியவனுக்கு ஆடி வந்தா என்ன! ஆவணி வந்தா என்ன?)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நான் வரல இந்த விளையாட்டுக்கு...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 13. தொடர்ந்து நான் விரும்பிப் படிக்கும் ஃப்ரூட் சாலட்டை வெயில் காலம் அதுவுமா கண்ணுல காட்ட ரொம்ப லேட் பண்ணீட்டிங்க சார்...சூப்பர் சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது ஆர்வத்திற்கு நன்றி.....

   ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலையில் ஃப்ரூட் சாலட் வெளியிடுகிறேன். வாரா வாரம் நீங்கள் பழக்கலவையை ரசிக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. 20 ரூபாயில் இந்தியா.!சூப்பர்.
  ஹில்லாரி உண்மையில் இண்டெலிஜெண்ட்!
  வெங்கட்டின் பழக்கலவை சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்...

   Delete
 15. எல்லாமே அருமை. குறிப்பாக புகைப்படமும், பாடல்களும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. ப்ரூட் ஸாலட் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ரொம்ப வருஷங்களுக்கு முன்னே பாருபாரு பயாஸ்கோப்புபாருசென்னை,பட்டனம்பாரு, சினிமாஸ்டாருபாரு என்று ஏதோ சில காசுகளை வாங்கிக்கொண்டு படங்களைக் காட்டுவார்கள் பசங்கள் போட்டி போடும். நாம அதெல்லாம் பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது ஞாபகம் வந்தது.ஒபாமா,மனைவி ஸம்பாஷனை
  பெண்கள் கெட்டிக்காரிகள் என்பது ஸரி. நல்ல பழவர்கம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ஒரு வித பயாஸ்கோப் தான்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 17. ஃப்ரூட் சாலட் மிக ருசிகரமாக இருந்தது என்று தான் சொல்ல வேன்டும். எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த புகைப்படத்தை? மிக மிக அழகான, அர்த்தம் பொதிந்த புகைப்படம். அமைதியான பின்னணியில் முகம் தெரியாதிருந்தும் கூட அவர்களின் அந்நியோன்யத்தை மனம் உள்வாங்கி ரசிக்க முடிகிற‌து!

  'அமைதியான நதியினிலே' சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று! ஆனால் வீடியோ வேலை செய்யவில்லை!

  ReplyDelete
  Replies
  1. புகைப்படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது தான்... நன்றாக இருந்தது - படமும் வார்த்தைகளும். அதனால் தான் ரசித்த புகைப்படமாக பகிர்ந்து கொண்டேன்.....

   வீடியோவினைப் யூ ட்யூபில் பகிர்ந்தவர் எடுத்திருக்கக் கூடும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 18. அது புகைப்படமல்ல பேசும் படம் அருமை அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 19. ஃப்ரூட் சாலட் ருசிகரமாக இருந்தது.
  Eniy paaraaddu.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 20. wife is life என்று ஒரு அருமையான புகைப்படம் போட்டுவிட்டு பெண்டாட்டி கிட்ட வாயக் கொடுத்து மாட்டிக்க கூடாது என்று அறிவுரை. இரண்டுமே ரசிக்க வைத்தன.

  நவராத்திரி காணொளி நல்ல நகைச்சுவை. பல வருடங்களுக்கு முன் பார்த்த படம். பழைய நினைவுகளை கொண்டு வந்தது.
  அமைதியான நதியினிலே பாடல் 'removed by the author' என்று வருகிறதே!

  வழக்கமான கவிதை, ராஜா காது எல்லாம் காணோமே!

  ஆனாலும் பழக்கலவை நன்றாகவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ராஜாவிற்குக் கொஞ்சம் காது வலி! :) இப்படி ஒட்டுக்கேட்டா என்று சிலர் கேட்பது புரிகிறது. அடுத்த பகுதியில் நிச்சயம் ராஜா தனது காதைத் தீட்டிக்கொண்டு கேட்ட விஷயம் வெளி வரும்!

   பாடல் பார்க்கிறேன்....

   எல்லா வாரமும் கவிதை போட்டால், சிலர் குச்சியோடு காத்திருப்பதாகத் தகவல் வந்ததால் இம்முறை கவிதை மிஸ்ஸிங்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 21. 20 ரூபாயில் இந்தியாவை வாங்காத யார்தான் இருக்க முடியும். நான் உள்பட.

  ReplyDelete
  Replies
  1. அதுதானே.... தில்லி வரும் பலர் இதை வாங்கி விடுகிறார்கள்.... நானும் வாங்கியிருக்கிறேன் பெண்ணிற்காக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 22. புகைப்பட வாசகம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 23. குறுஞ்செய்தி மற்றும் புகைப்படம் அருருருருமை...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....