எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 24, 2013

ஃப்ரூட் சாலட் 47 – அருணிமா சிங் – நதியா – அழகுக்கிளி – Steel Anniversaryஇந்த வார செய்தி:

சென்ற செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஃப்ரூட் சாலட் 12 பகிர்வில் ”தன்னம்பிக்கை மனுஷி” என்று அருணிமா சிங் என்ற பெண்ணைப் பற்றி கீழ்க்கண்ட தகவல் வெளியிட்டு இருந்தேன்.ஏப்ரல் 12, 2011:  உத்திரப்பிரதேசத்தின் பரைலி நகரிலிருந்து தில்லி வரும் பத்மாவதி எக்ஸ்பிரஸ்.  குண்டர்கள் சிலர் தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எதிர்த்துப் போராடினார் அருணிமா சின்ஹா.  கோபம் கொண்ட அந்தக் கயவர்கள் ஓடும் ரயிலிருந்து அருணிமாவைக் கீழே தள்ளிவிட எதிர் பக்கத்திலிருந்து வந்த மற்றொரு ரயிலில் அவரின் கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பயங்கர அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருணிமாவின் உயிரைக் காப்பாற்ற அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.    

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இருக்கும் ஒரு சிகரம் சாம்சேர் காங்க்ரி. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 21710 அடி.  கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி  அருணிமா சின்ஹா என்ற பெண்ணும் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினரும் இச்சிகரத்தின் 21110 அடி வரை சென்றிருக்கிறார்கள்.  இன்னும் 600 அடி சென்றால் சிகரத்தினைத் தொட்டிருக்க முடியும் – ஆனால் இடைவிடாத பனிப்பொழிவும் மழையும், போதிய வெளிச்சம் இல்லாமையாலும் அவர்களால் இன்னும் 600 அடி ஏறி சிகரத்தினைத் தொடமுடியவில்லையாம். 

தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!பச்சேந்த்ரி பால் அவர்களிம் மலையேற்றத்திற்கான  பயிற்சி பெற்ற இந்த தன்னம்பிக்கை மனுஷி, சென்ற 21 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தினைத் தொட்டிருக்கிறார். தனக்குக் கால் இல்லையென எல்லோரும் பரிதாபமாய் பார்ப்பதைத் தவிர்க்க ஏதாவது செய்தே தீரவேண்டும் என நினைத்து விடாமுயற்சியுடன் பல இன்னல்களைக் கடந்து சிகரம் தொட்ட இந்தப் பெண்மணிக்கு மனதார வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

APOLOGY DOESN’T MEAN THAT YOU WERE WRONG, OR THE OTHER PERSON WAS RIGHT. IT MEANS YOUR RELATIONSHIP IS MORE VALUABLE THAN YOUR EGO.

இந்த வார குறுஞ்செய்தி:

GOOD PEOPLE GIVE YOU REAL HAPPINESS. BAD PEOPLE GIVE WORST EXPERIENCE. WORST PEOPLE GIVE GOOD LESSON, BUT BEST PEOPLE ALWAYS GIVE SWEET MEMORIES.

ரசித்த பாடல்:

’உனக்காகவே வாழ்கிறேன்’ படத்திலிருந்து ‘இளஞ்சோலை பூத்ததா’ பாடல் இந்த வார ரசித்த பாடலாக. எஸ்.பி. பாலசுப்ரமணியன் குரலில் இதோ உங்கள் ரசனைக்கு! 

ரசித்த காணொளி:

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்….. நிரூபிக்கிறானோ இச்சிறுவன்! 


 
ரசித்த புகைப்படம்:

அழகான க்ளிக்…..  நான் ரசித்தேன். நீங்களும் ரசிக்க இங்கே…..

படித்ததில் பிடித்தது:

”ஒருவர் எவ்வளவு மனோபலம் உடையவராக இருந்தாலும் சரி…. அவரைத் தொடர்ந்து ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் அவர் சலனமடைவார், ஏன் இப்ப்டைப் பார்க்கிறாய் என்று கேட்கப் போய் ‘சும்மாதான்’ என்று அவர்கள் கூறினாலும் அதைக்கேட்டு மனது சமாதானமடையாது. இப்படி ஒரு பதிலைச் சொன்னபிறகு மீண்டும் பார்த்தால் பார்க்கபடுபவர்க்கு மிகப்பெரிய அளவில் மனதில் அச்சமும், குழப்பமும் ஏற்படும்.

அதன்பின் அவர்களை சாதாரணமாக யாராவது பார்த்தால் கூட, ஏதோ ஒரு கெட்ட நோக்கத்தோடு தான் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கிறார்கள் என்று நினைப்பார்.

பார்வைக்கு அப்படி ஒரு சக்தி உண்டு.

ஹாலந்தில் ஒரு வக்கீலை இப்படிப் பார்த்துப் பார்த்தே பைத்தியமாக்கிவிட்ட சம்பவம் ஒன்று உண்டு.

அந்த வக்கீல் ஒரு பிரபலமான கிரிமினல் லாயர். வழக்கு ஒன்றில் அவரால் பாதிக்கப்பட்ட எதிரிகளில் சிலர் தான் இப்படி நடந்து கொண்டனர். ஒருவர்க்கு நான்கு பேர் அவரைக் கண்காணித்தனர். வக்கீலும் தனக்குள் சமாதானங்களைச் செய்து கொண்டு அவர்கள் பார்வையை தவிர்க்கப் பார்த்தார். ஆனால் அவர்கள் விடவில்லை. இறுதியில் மனம் வெறுத்து அவர் கத்திக் கூப்பாடு போட்டு பைத்தியமாகவே ஆகிவிட்டார்.

இரு கண்களால் கூர்மையாகப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல!”

-    திரு இந்திரா சௌந்தரராஜன் எழுதிய “மார்கழி ரோஜா” எனும் கதையிலிருந்து…..

என்ன நண்பர்களே, இந்த வார பழக்கலவையைச் சுவைத்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறொரு பழக்கலவையோடு உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்


வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..டிஸ்கி: அட என்னமோ தலைப்பில் Steel Anniversary அப்படின்னு எழுதிட்டு அதைப் பத்தி ஒண்ணுமே எழுதலைன்னு நீங்க கேட்கறது புரியுது! வேற ஒண்ணும் இல்லைங்ணா! ஒரு ஸ்டீல் பாடியும் கோவை லேடியும் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள் இது. அதாங்க இன்னிக்கு எங்களுக்கு எஃகு திருமண நாள் அதாவது Steel Anniversary அதாங்க 11-ஆவது திருமண நாள்! எல்லோரும் மனசார வாழ்த்திட்டு போங்க!
 

58 comments:

 1. அருணிமா சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  சிறுவன், இனிமையான பாடல் காணொளி உட்பட அனைத்தும் அருமை...

  திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 3. இன்று போல என்றும் வளமுடன் வாழ்க என்று உங்களது திருமணநாளில் மனதார வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 4. 11-ஆவது திருமண நாள்! -

  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

   Delete
 5. ஸ்டீல் பாடியா? நீங்களே சொல்லிக்கிட்டா எப்படி? அதை கோவை லேடியில்லே சொல்லணும்?
  வாழ்த்துக்கள். அமோகமாக வாழுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. துரை, in fact, ஸ்டீல் பாடின்னு சொன்னதே அவ்ங்கதான் - ஒல்லியா இருந்ததனால கிண்டலா சொல்வாங்க!

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 6. Happy wedding anniversary.
  I also wish you many more years of happy married life venkatji

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 7. எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. Steel Anniversary ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் சார்... இல்லறம் நல்லறமாக சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இதுக்கேனப்பா இப்படி ஒரு சிரிப்பு!....

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு!

   Delete
 9. பதிவுலகின் முதன்மைத் தம்பதிகளுக்கு
  எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 10. Replies
  1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. அருணிமா சின்ஹா அவர்களின் மனோதிடம் நம்க்கெல்லாம் ஒரு பாடம்.
  மினம் கனிந்த
  திருமண நாள்
  வாழ்த்துக்கள்
  அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 12. ஆஹா! திருமணத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்].

   Delete
 13. //அதாங்க இன்னிக்கு எங்களுக்கு எஃகு திருமண நாள் அதாவது Steel Anniversary அதாங்க 11-ஆவது திருமண நாள்! எல்லோரும் மனசார வாழ்த்திட்டு போங்க!//

  மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. வாழ்த்துக்கள் வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி bandhu ஜி!

   Delete
 15. எல்லாமே அருமையான செய்திகள்.
  முதல் செய்தியை உங்கள் வரிகளிலேயே பாசிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொள்கிறேன்...உங்கள் அனுமதியுடன்!

  திருமணநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அனுமதி உங்களுக்கு எப்போதும் உண்டு!

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. அருணிமா சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...! உங்கள் 11-வது திருமணநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 17. அருணிமா சிங். உன்னதப் பெண்மணி.எடுத்துக் காட்டியதற்கு மிகவும் நன்றி.
  நதியாவுக்கு என்றும் இளமை.அவருக்கு அமைந்த பாடல்களும் இனிமை.
  உங்களது 11 ஆவது திருமணநாளுக்கு வாழ்த்துகள்.இன்னும் பல்லாண்டுகள் ஆனந்தமாக வாழ வாழ்த்துகள். ரோஷ்ணி குட்டிக்கிட்ட சொன்னீங்களா:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 18. ஃப்ரூட் சாலட்டின் சுவை அதிகமாக இருந்தது.

  உங்களின் திருமண நாளுக்கு
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 19. திருமண நாள் வாழ்த்துக்கள் வெங்கட், ஆதி.
  வாழ்கவளமுடன்.
  ”தன்னம்பிக்கை மனுஷி” அருணிமா சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா... அலைபேசி வழியாகவும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிம்மா..

   Delete
 20. ப்ரூட்சாலட் சூப்பர். எல்லாமே பிரமாதம். அதிலும் அந்த டிஸ்கி செய்தி டாப்...

  இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே!!!
  வாழ்க வளமுடன்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 21. அருணிமா போன்றோரும் இருக்கிறார்கள் என்பதே நிறைவாக இருக்கிறது 

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 22. happy wedding day !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 23. இனிய மணநாள் வாழ்த்துகள்!

  நல்ல தொகுப்பு. அருணிமா சிங் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 24. அருணிமா சிங்கை வாழ்த்துவதுடன் அவரின் தன்னம்பிக்கை + தைரியத்தை கைக் கொள்வோம். உங்களிருவரு்க்கும் மனம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 25. அனைத்து செய்திகளும் நன்று
  திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 26. முதலில் திருமண நாளுக்கு வாழ்த்திக்குறேனுங்க சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 27. கிளி படம் சூப்பர், குரங்கு ஷேஸ்டையும் ச்ச்ச்ச்சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 28. தாமதமான திருமண நாள் வாழ்த்துகள், ஆசிகள். சென்ற வருஷம் எங்க திருமண நாளன்னிக்குத் தான் உங்க வீட்டுக்கு வந்தோம். இந்த வருடம் அதை நினைவு கூர்ந்தோம். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 29. appadiyaa....!


  vaazhthukkal anne...!

  thakavalkalukku nantri ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....