எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 28, 2013

ஃப்ரூட் சாலட் – 51 – மறைந்த மனிதம் – நடனம் - ராணுவம்


இந்த வார செய்தி:இந்த வாரமும் உத்திராகண்ட் வெள்ளம் பற்றிய செய்தி தான். நேற்று தில்லி நண்பர் ஒருவர் கேதார்நாத் பகுதியிலிருந்து தில்லி திரும்பினார். பல்வேறு இடையூறுகளைத் தாண்டி அவரது கிராமத்திலிருந்து தில்லி வந்த அவர் அப்பகுதிகளில் நடந்த கதைகளைப் பற்றிச் சொல்லும் போது மனதில் அப்படி ஒரு அதிர்ச்சி. நீங்களும் கேளுங்களேன்....

வெள்ளத்தினாலும், மேகம் உடைந்ததாலும் ஏற்பட்ட சேதங்களும், அது பறித்த உயிர்களும் ஒரு புறம் இருக்க, அவர் அங்கே பார்த்து வந்து சொன்ன விஷயங்கள் – அப்பப்பா, கேட்கவே பயங்கரம்.  மலைப்பிரதேசங்களில் கிடந்த பல சவங்களில் கை விரல்களையும், சில உடல்களில் கைகளும் காணவில்லை – காரணம் அதில் உள்ள தங்க மோதிரம் மற்றும் வளையல்கள். கொஞ்சம் ஊறிப்போய் உப்பிவிட்ட சடலங்களிலிருந்து தங்க ஆபரணங்களை உருவ முடியாது போக, சில வெறிபிடித்த திருடர்கள் மொத்தமாக உருப்புகளை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார்களாம். என்ன ஒரு கொடுமை!குடும்பம் மொத்தமும் வெள்ளத்தில் மறைந்து போக, அவர்களுடைய உடைமைகளைத் திருடுவதில் பலர் மும்மரமாக இருந்திருக்கிறார்கள் – தொலைக்காட்சிகளில் தண்ணீர்ல் அடித்துச் செல்லப்பட்ட ATM-லிருந்து பணம் எடுத்துக் கொண்ட சாமியார்களைக் காண்பித்தார்கள். பல கடைகளில் திருட்டுப் போனதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாடு கடந்து போனதும் அங்கிருந்து வந்த நண்பர் சொன்னபோது, அவரிடம் நான் கேட்டது – அப்படி திருடுபவர்களை யாரும் ஒன்றும் செய்யவில்லையா? என்று தான்.உயிரோடு இருப்பவர்களைக் காப்பாற்றவே ஆட்கள் தேவையாக இருந்தபோது இவற்றை கவனிக்க இயலவில்லை என்பது தான் அவரது பதில்.எல்லாருக்கும் பணத்தின் மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மேலும் மோகம் இருக்கும். அது எப்போதும் விலகப் போவதுமில்லை.  அப்படியே மோகம் இருந்தாலும் இப்படியா, கொடுமையானவர்களாக இருப்பார்கள்.என்னத்த சொல்ல! ச்சே..... இந்த வார முகப்புத்தக இற்றை:IT IS HARD WHEN SOMEONE SPECIAL IGNORES YOU. BUT IT’S HARDER PRETENDING THAT YOU JUST DON’T CARE.இந்த வார குறுஞ்செய்திPAST OF ICE IS WATER. FUTURE OF ICE IS WATER TOO. LET’S LIVE LIFE LIKE ICE. NO REGRET FOR PAST AND NO WORRIES FOR FUTURE…..  ENJOY EVERY DAY!ரசித்த காணொளி: இந்த வயசிலேயே இப்படி ஆடுதே இந்தக் குழந்தை...  “மேகம் கருக்குது மழை வரப் பார்க்குதுபாடலின் காணொளி கிடைக்கிறதா என யூவில் தேடும்போது கிடைத்த காணொளி இது! சேவையைப் பாராட்டுவோம்!:உத்திராகண்ட் மாநிலத்தில் நமது ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுவோம்..... கீழே உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை......
ராஜா காது கழுதை காது:நேற்று பேருந்தில் ஒரு குடிமகன் – ஏம்பா இப்படி தண்ணி அடிச்சு வீணாப் போற?என்று கேள்வி கேட்ட மிஸ்டர் பொதுஜனத்திடம் – “வேலை செய்யறேன் குடிக்கறேன்...  உனக்கென்ன ஆச்சு! அதுவுமில்லாம, எனக்கு கிடைக்கற சம்பளம் இப்படி தண்ணி அடிச்சா கூட தீரமாட்டேங்குது!”.....அப்படி காசு வேண்டாம்னா, தேவைப்பட்டவங்களுக்குக் குடுக்கலாமே! :)படித்ததில் பிடித்தது!:பஸ்ல இடம் பிடிக்க எதை போடுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சு!ஏன் என்னாச்சு!யாரோ இடத்தை ரிசர்வ் செய்ய தன்னோட பல்செட்டை போட்டுட்டு போயிருக்காரு!என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

64 comments:

 1. எல்லாருக்கும் பணத்தின் மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மேலும் மோகம் இருக்கும். அது எப்போதும் விலகப் போவதுமில்லை. அப்படியே மோகம் இருந்தாலும் இப்படியா, கொடுமையானவர்களாக இருப்பார்கள்.//

  படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.
  குழந்தை ஆடுவது அழகு.

  நமது ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுவோம்.....//
  அவர்களுக்கு பாராட்டுக்கள் வணக்கங்கள். அவர்கள் எல்லோருக்கும் இறைவன் உடல் நலம், நீள் ஆயுள் தரவேண்டும்.
  அவர்களின் சேவைக்கு மீண்டும், மீண்டும் ஆயிரம் நன்றிகள், வணக்கங்கள்.
  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 2. முன்பு ஒரு ரயில் விபத்திலும் இதுவே நடந்ததாய் சொல்வார்கள். மனிதர்கள் சிலர் இப்படித்தான். திருத்தவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. பண, நகை வெறியில் மனிதம் மரித்துப் போனதை அறிகையில் மனம் வேதனையில் துடிக்கிறது. அதே நேரம் தன்னலம் கருதா சேவையாற்றும் நம் ராணுவத்தினரை போற்றிப் புகழ்ந்து மனம் பூரிக்கிறது. குறுஞ்செய்தியும், இற்றையும் சுவை. தண்ணியடிச்சும் தீராத அளவுக்கு அப்படி நல்ல சம்பளம் வாங்கற குடிமகன், பஸ்ல ட்ராவல் பண்ண மாட்டானே? அப்படி என்னதான் வேலையா இருக்கும் அவனுடையது?

  ReplyDelete
  Replies
  1. அவர் இருந்த தண்ணியில் நான் கேட்க முடியவில்லை கணேஷ்.... அவ்வப்போது க்வாட்டர் திறந்து ஊற்றிக்கொண்டு வேறு இருந்தார். எதையாவது கேட்டு, எனக்கும் கொஞ்சம் கொடுத்துவிடுவாரோ என நினைத்தேன். கேள்வியைத் தவிர்த்தேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. ஃப்ரூட் ஸாலட் அருமை!

  இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.

  ஒருநாள் பிந்திப்போச்சு.
  அடுத்த பிறந்தநாளுக்கு அட்வான்ஸா வச்சுக்கிட்டாலும் சரியே:-)))

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை.... ஒரு நாள் பிந்தினாலும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி டீச்சர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. ///எல்லாருக்கும் பணத்தின் மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மேலும் மோகம் இருக்கும். அது எப்போதும் விலகப் போவதுமில்லை. அப்படியே மோகம் இருந்தாலும் இப்படியா, கொடுமையானவர்களாக இருப்பார்கள். ///

  உலகெங்கும் இதே நிலமைதான்..... என்னத்த சொல்ல..


  நீங்கள் இட்ட ராணுவ வீரர்களின் போட்டோகளில் முதலில் இட்ட படம் இந்திய ராணுவத்தினருடைய படம் அல்ல அது சீன ராணுவத்தினருடைய படம் என்பதுதான் உண்மை

  எல்லோரும் வெள்ளிக்கிழமை என்றால் கோயிலுக்கு செல்லும் வழக்கம் வைத்திருப்பார்கள் அது போலத்தான் நானும் வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன் உங்கள் ப்ரூட் சாலட்-ஐ ரசிக்க

  ReplyDelete
  Replies
  1. முதல் படம் - எனக்கும் தெரிந்தது - வெளியிட்ட பின்! சரி பரவாயில்லை என எடுக்காது விட்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்..

   Delete
 6. மனிதனின் ஆசை என்றுதான் மரித்திருக்கிறது? இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் என்ற பாடல் கேட்டிருக்கிறேன். அடுத்த நிமிடம் அவர்களை அதே இயற்கை உயிரோடு விட்டு வைக்குமா என்று தெரியாது. இந்நிலையில் பணத்தில் ஆசை, பொருளில் ஆசை. கஷ்டமாகத்தான் இருக்கிறது அந்தக் கஷ்டத்தை ராணுவ வீரர்கள் சேவைச் செய்தி ஈடுகட்டுகிறது. நம்மூர் பிரவீன் உட்பட எத்தனை தியாக உயிர்கள்?

  மற்ற செய்திகளும் சுவை. உங்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. உத்திராகண்ட் மாநிலத்தில் நமது ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுவோம்..

  பாலமாய் கிடந்து கரையேற்றும் மனித தெய்வங்களை வணங்கி வாழ்த்துவோம் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. மனிதம் என்றோ செத்து விட்டது... இது ஒரு உதா"ரணம்"...

  நம் ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. உத்ராகண்ட் பேரிடர் குறித்த உங்கள் கட்டுரைகள் உண்மைக்கு மிக நெருக்கமாய் அமைந்திருந்தன. உங்களின் பகிர்தல்களுக்கு மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுந்தர் ஜி!

   Delete
 10. மனித நேயம் காக்க வேண்டும் மனிதனாக வாழவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்....

   Delete
 11. உங்களுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனக்கு சூலை பதினொன்றாம் தேதிதான்.நான் உங்களைவிட சின்னவன் அதனால் வணங்குகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகள் கண்ணதாசன்.....

   Delete
 12. அந்த முதல் படம் (கார்ட்டூன்படம்) சொல்லும் செய்திகள் ஓராயிரம். நம்ம தமிழ்நாட்டிலும் அரியலூர் ரெயில் விபத்தின்போதும் (1956) சிலர் கொள்ளையடித்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 13. மிகவும் வேதனையான விஷயம் இது, இவர்களை என்ன செய்தால் தகும்...?

  குட்டியின் டான்ஸ் அருமை...!

  கடைசி ஜோக் ஹா ஹா ஹா ஹா...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 14. உலகம் போகிற போக்கை இன்றைய செய்தியும், நல்லார் ஒருவர் உளரேல்... என்ற பாடலுக்கு சான்றாக இராணுவ வீரர்களின் சேவையும் காட்டித்தர, வழக்கம் போல் வாரக்கடைசி விருந்து அறுசுவை. குறுஞ்செய்தியும் முகப்புத்தாக இற்றையும் மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதுதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 15. இறந்த பின் எந்தச்செல்வமும் கூடவே வருவதில்லை என்பதை நேரடியாகப் பார்த்தபின்னும் கொள்ளையடித்த மனிதமிருகங்களை என்னவென்று சொல்வது..

  ராணுவத்தினரின் சேவை போற்றப்படவேண்டியது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 16. ///எல்லாருக்கும் பணத்தின் மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மேலும் மோகம் இருக்கும். அது எப்போதும் விலகப் போவதுமில்லை. அப்படியே மோகம் இருந்தாலும் இப்படியா, கொடுமையானவர்களாக இருப்பார்கள். ///
  இந்த ஒரு குணம் தான் மனிதன் என்பதை உணர்த்தும் போல... கொடுமை கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 17. என்ன கொடுமை! இதயமே இல்லையா!?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 18. மனிதாபிமானம் உள்ளவர்கள் இராணுவத்தில் இருந்தால்
  மக்களின் வாழ்வும் வளமும் செழிப்புறும் அதற்க்கு சில
  உதாரணமாக இவற்றைச் சொல்லலாம் சில இடங்களில்
  நிகழும் கொடுமைகளை நினைத்துப் பார்த்தால் வெறுப்பும் தான்
  வருகிறது சகோதரா என் செய்வோம் :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   Delete
 19. ”பஸ்ல இடம் பிடிக்க எதை போடுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சு!”  ஏன் என்னாச்சு!  யாரோ இடத்தை ரிசர்வ் செய்ய தன்னோட பல்செட்டை போட்டுட்டு போயிருக்காரு!

  :))))))))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   Delete
 20. உத்ரகாண்ட் மிக வேதனையான விசயம்.. அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 21. நம் நாட்டில் சுனாமி வந்த போதும் இதே நிலைதான்.
  “நாளை இறக்கும் பிணங்கள்
  இன்று அழுகின்றன“ என்ற பட்டினத்தாரின் வாக்குத்தான்
  நினைவுக்கு வருகிறது.

  மற்ற அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 22. மரித்துப்போனவர் உடலங்களிலிருந்து
  மரத்துப்போன மனமுடையோரின்
  ஈனச்செயல்...
  கண் பனித்துப் போனது கூடவே
  இயங்க மறுக்குது இதமும்...

  உயிரைத் துச்சமாய் நினைத்து
  உயிர்காக்கும் உத்தமருக்கு
  தலைதாழ்ந்த வணக்கங்கள்!

  குழந்தை காட்டும் நாட்டியம்
  எதிர்காலத்தில் உலகை ஆட்டிடும்...:)

  அத்தனையும் சிறப்பு!

  அதிலும் அதிசிறப்பு....

  இன்று உங்கள் பிறந்தநாளாமே...
  தனபாலன் சார் சொன்னார் அவருக்கு நன்றி! உங்களுக்கு...
  மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் சகோதரரே!
  வாழ்க வளமுடன்!


  த ம.11

  ReplyDelete
  Replies
  1. பிறந்த நாள் - 27.6. அன்று..... 28.6 அன்று அல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 23. வழக்கம் போல் ஃப்ரூட் சாலட் தன் தரத்தில் குறைவில்லாமல் இருந்தது... குட்டிப்பாப்பா டான்ஸ் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்... அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. மறைந்த மனிதம் - வருத்தம் அளிக்கும் செய்தி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 25. இராணுவத்தினர் சேவை வணக்கத்துக்குரியது. முதல் படம் உணர்த்தி விடுகிறது அச்செய்தியின் வேதனையை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 26. உத்திராகண்ட் படிக்கவே மனம் பதறுகிறது அய்யா. மனிதாபிமானம் எங்கு போயிற்று. மனிதம் என்பதே மரத்துப் போய்விட்டதே.
  இராணுவத்தினரின் சேவை மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   Delete
 27. அசத்தலான தொகுப்பு. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 28. உத்திரகாண்ட் சோகம் மறைய பல நாட்கள் ஆகும்.
  நீங்கள் போட்டிருக்கும் படங்களில் ஒன்றான ஜவான்களின் மேல் மக்கள் நடந்து வருவது நம்மூரில் நடந்தது இல்லையாம். சீனாவில் எப்போதோ நடந்ததை நம்மூர் தொலைக்காட்சி செய்தி சானல்கள் போட்டு பெயர் வாங்கிக் கொண்டிருக்கின்றன என்று முகநூலில் ஒரு செய்தி வந்துள்ளதே!

  குழந்தையின் நடனம் இப்பவே இப்படின்னா என்ற கேள்வியை எங்கள் மனதிலும் ஏற்படுத்தியது!
  ப்ரூட் சலாட் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. முதல் படம்... வெளியிட்ட பிறகு தான் எனக்கும் தெரிந்தது. இருந்தும் ராணுவ வீரர்கள் செய்யும் நல்ல காரியத்தினைச் சொல்லும் படம் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 29. எத்தனையோ பாபங்கள். சோகங்கள். ம்மிண்டு வருவது மிகக் கடினம். குடும்பங்களை இழந்து தவிப்பவர்களுக்குப் பணம் போதும. ராணுவத்தாருடைய சேவை சொல்லி முடியாது. அவர்களும் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள்தாமே. அந்த வீரத்தாய்களுக்கு வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 30. எல்லாமே அருமை. முக்கியமாய் முகப் புத்தக இற்றை. மனதைக் கவர்ந்தது. உத்தராகண்ட் செய்திகள் அனைத்துமே மனதை நோக அடிக்கும் வண்ணமே இருக்கிறது. எவ்வளவு மோசமான மனிதர்களாக மாறி விட்டோம்! :(((

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 31. சேவையைப் பாராட்டுவோம். மனம் நெகிழவைக்கும் படங்கள்.

  திருடும் கூட்டம் :(((( அவங்களை வெள்ளம் அடித்துப் போகாதாம் :(((

  ReplyDelete
  Replies
  1. அவங்களை வெள்ளம் அடித்துப் போகாதாம்..... :(((((

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 32. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....