எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 5, 2013

ஃப்ரூட் சாலட் – 52 – ஜல் தோஸ்த் – ஸ்வீட் பொண்டாட்டி - உள்ளே என்ன?


இந்த வார செய்தி:

தில்லி ஜல் போர்ட் தில்லி மக்களுக்கு தண்ணீரின் அத்யாவசியம் பற்றியும், அதைச் சேமிப்பது பற்றியும் எத்தனையோ முறை எடுத்துச் சொன்னாலும் கேட்பதில்லை. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்ட நிலையில், குடிதண்ணீருக்கும் அடுத்த மாநிலங்களைச் சார்ந்து இருக்கும் நிலை.

தில்லி மக்களுக்கு ஒரு பழக்கம் – தண்ணீரை விரயம் செய்வது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது – சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் வீட்டின் பால்கனியில் இருக்கும் இரும்புக் கம்பிகளைக் கூட குழாய் மூலம் வாரத்திற்கு ஒரு முறை கழுவி விடுவார்கள் – கீழ் வீட்டில் துணி துவைத்து காய வைத்திருந்தால் அதன் மேலும் இந்த அழுக்குத் தண்ணீர் விழுந்து அதற்கு சண்டை நடப்பது சாதாரணமான விஷயம் இங்கே.

இப்படியுள்ள மக்களுக்கு தண்ணீரின் அத்யாவசியம், அதைச் சேமிக்கும் முறைகள், விரயம் செய்யாமலிருக்க வழிமுறைகள் என்பதையெல்லாம் ஒரு புதிய சின்னம் மூலம் சொல்ல இருக்கிறார்கள்.  ஒரு தொப்பி அணிந்த நீர்த்துளிதான் அந்த புதிய் சின்னம்.

பிரபலமான விளம்பர நிறுவனமான JWT மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சின்னம் மக்கள் மத்தியில் தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவோம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ராமு: ஒரு பெண் அமைதியாக இருந்தால் அது என்ன நாள்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சோமு: எந்த நாளா இருந்தா என்னப்பா, அந்த நாளை எஞ்சாய் பண்ணு!

இந்த வார குறுஞ்செய்தி

ONE DAY SEA ASKED RIVER, “HOW LONG WILL YOU KEEP ENTERING INTO MY SALTY HEART?” THE RIVER REPLIED “UNTIL YOU BECOME SWEET”.  TRUE RELATIONSHIP NEVER LEAVES!

ரசித்த காணொளி: 

எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் தயாரித்த இந்த குறும்படம் பாருங்களேன்....  ஒரு முறை பார்த்தால் எப்போதும் யோசிக்க வைக்கும் படம்!  படம் சொல்ல வரும் விஷயம் புனிதமானது.....ரசித்த புகைப்படம்:நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே”....  என்று சொல்கிறதோ இப்பறவைகள்!

தொலைக்காட்சி:

காலை வேளைகளில் சமைக்கும் போது, ஏதோ ஒரு சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கட்டுமே என தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு [அட எந்திரன் ரோபோ ரஜினி மாதிரி கீழே இல்லீங்க!, ஸ்விட்ச் ஆன் பண்ணிட்டு], அதைக் கத்த விட்டு போவேன். நேற்று சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் அன்று பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி, இடையிடையே பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஒரு பாட்டு கூட குழந்தைகள் பார்க்கும்படியான பாடல்கள் இல்லை – சேம்பிளுக்கு இன்று ஒளிபரப்பிய ஒரு பாடல் – வாடி வாடி, வாடி என் ஸ்வீட் பொண்டாட்டி, தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி!”.  மற்ற பாடல்களும் இதே ரேஞ்சில் தான்!

என்ன ரசனையோ இந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு!

படித்ததில் பிடித்தது!:

ஒரு கண்காட்சி. அங்கே ஒருவர் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தார் அவரிடம் எல்லா வண்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. வியாபாரம் கொஞ்சம் டல்லடிப்போது போல தெரிந்தால் ஹீலியம் வாயு நிறைந்த ஒரு பலூனை காற்றிலே பறக்க விட்டு விடுவார். அது மேலே மேலே போக, குழந்தைகள் அதைப் பார்த்து விட்டு பலூன்கள் வாங்க வருவார்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும்! இது ஒவ்வொரு நாளும் நடக்கும். அப்படி ஒரு நாள் வியாபாரத்தின் போது அவரது சட்டை நுனியை யாரோ பிடித்து இழுப்பது தெரிய, கீழே பார்த்தால், ஒரு சிறுவன் கேள்வியோடு....  “நீங்க கறுப்பு கலர் பலூனை விட்டாலும் மேலே பறக்குமா? 

வண்ணத்தில் ஒன்றும் இல்லை மகனே, அதன் உள்ளே இருக்கும் ஹீலியம் தான் பறப்பதற்கு முக்கியம்என்று சொன்னாராம் அந்த வியாபாரி. நமது வாழ்விலும் இதே பாடம் தான். வெளியே இருக்கும் வேஷம் ஒன்றும் பெரிதல்ல.... நமது மனதில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம். நல்ல மனப்பான்மை இருந்தால் நாமும் வாழ்வில் மேலே செல்ல முடியும்.

“It is your attitude, not your aptitude that will determine your altitude”

[ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்ததன் தமிழாக்கம்! மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி!]

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. JWT புதிய சின்னம் விரைவில் மக்களை உணர வைக்கட்டும்... படித்ததில் பிடித்தது உட்பட மற்ற ஃப்ரூட் சாலட் அருமை...

  பறவைகள் படம் சூப்பர்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. சுவையான ப்ரூட் சாலட்... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. ரசித்த காணொளி: -- கண்தானத்தை வலியுறுத்தி மனதில் நிறைந்தது ..

  ப்ரூட் சாலட். பகிர்வுகள் அனைத்தும் அருமை..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. சுவையான ப்ரூட் சாலட்...அனைத்து பகுதிகளையும் ரசித்தேன்.

  சேம் பின்ச்! ரோஷ்ணிக்கு ஷூ, சாக்ஸ் போட்டு விட்டுக் கொண்டே இந்த பாட்டை கேட்டு விட்டு தான் குழந்தைகள் பிறந்தநாளுக்கு போடுகிற பாட்டா என்று சொல்லிக் கொண்டிருந்தேன்...:))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி என்னவளே!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 7. படங்கள் அருமை...காணொளி அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 8. ருசியான சாலட்..

  பலூன் தத்துவம் ஜூப்பரு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete

 9. மனதை தொட்டது வீடியோ க்ளிப்.....ஒரு பெண் அமைதியாக இருப்பாளா? அப்படி இருந்தால் அவள் பெண் இல்லையே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. ஃப்ரூட் சாலட் வெகு அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 11. ப்ரூட் சாலட் வெகு சிறப்பு. படம் வெகுவாக கவர்ந்ததுங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 12. ஒரு தொப்பி அணிந்த நீர்த்துளிதான் அந்த புதிய் சின்னம்//
  தொப்பி அணிந்து தலை காப்பது போல், தண்ணீரை சிக்கனமாய் செலவு செய்து நீர்வளம் காப்போம்.
  ரசித்த காணொளி கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

  ப்ரூட் சாலட் பகிர்ந்த விஷயங்கள், படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. அருமையான ப்ரூட் சாலட்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ ஜி!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. ஸ்வீட் பொண்டாட்டி - ன்னு தலைப்பு வச்சு ஒரு கல்லுல ரண்டு மாங்காயா! நடக்கட்டும், நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நடக்கட்டும்... நடக்கட்டும்! அட எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க அண்ணாச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   Delete
 17. தில்லி மக்கள் இரும்பு வேலியை தண்ணி ஊத்தி சுத்தம் செய்யுறாங்கன்னு நீங்க தமிழ்நாட்டு மக்கள் கிட்டே சொல்லி வம்பு செய்யணுமா? ஹிஹி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... நல்ல சொன்னீங்க அப்பாதுரை.. எதுக்கும் நான் ரெடியாகிடறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. true love never tires என்று ஒரு கருத்து ஏறக்குறைய இதே கதையில் சொல்லப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓஓ.... அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 19. அந்தப் புகைப்படம்! ஆஹா! என்ன அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 21. பறவைகளின் புகைப்படம் அழகோ அழகு அய்யா நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 22. உண்மையிலேயே "ப்ரூட் சாலட்" ரசிக்க மட்டும் அல்ல... சுவைக்கவும் செய்தது...! பகிர்வுக்கு மிக்க நன்றி..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தங்கம் பழனி.

   Delete
 23. காணோளி வியக்கவைத்தது . மிக நன்றி வெங்கட். இந்த பலூன் விஷயம் ஒரு கறுப்புப் பையன் பலூன் வியாபாரியைக் கேட்பது போலப் படித்திருக்கிறேன். அருமையான கருத்து.
  எல்லோரும் சேர்ந்து தொலைக்காட்சிகளுக்கு கடிதம் அனுப்பலாம். இதுபோல பாடல்களை ஒளிபரப்பவேண்டாம் என்று.
  இந்தக் குழந்தைகளே இந்து போலப் பாடி ஆடுகிறார்களே. என்ன சொல்ல:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 24. ப்ரூட் சாலட் மிக ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 25. குறும்படம் மனத்தைக் கவர்ந்தது. எல்லோருமே கண்தானம் செய்ய முன்வர வேண்டும்.

  இங்கும் கூட இப்படித்தான் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் குழாயில் நீரை விட்டு வாசல், சுற்றி இருக்கும் நடைபாதை எல்லாவற்றையும் கழுவுவார்கள். வயிற்றெரிச்சல்!

  attitude பற்றிய கதை அருமை.
  இந்த வார ப்ரூட் சாலட் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 26. நீர் சிக்கனத்துக்கான விழிப்புணர்வு அவசியம். சின்னம் அருமை. காணொளி மற்றும் பகிர்வுகள் யாவும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 27. ப்ரூட் சாலட் அருமை.
  காணொளி மற்றும் புகைப்படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 28. சார் அருமையான ஃப்ரூட் சாலட். அந்த யு டியூபை என் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். ரசனையுடன்..

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா முல்லை.

   Delete
 29. மகுடம் வைத்தார் போன்ற பதிவு ....
  பறவைகளுக்கு இட நெருக்கடியோ ?
  அல்லது குளிரோ ? புகைப்படம் பார்த்து
  சிலிர்ப்பும் சிரிப்பும் ஏற்பட்டது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 30. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....