எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 19, 2013

ஃப்ரூட் சாலட் – 54 – சத்துணவு - குண்டப்பாவின் மகன் - ரேவதி

இந்த வார செய்தி:

பீஹாரில் சத்துணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் மரணம். அதைத் தொடர்ந்து மக்களின் போராட்டம் – பஸ் எரிப்பு – சேதாரம் என தொடர்ந்து ஒரே அமளி.

பீஹாரின் சப்ரா மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. அங்கே இருக்கும் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் ஏழைகள் தானே என்று சமைக்கும் ஆட்களுக்கும் ஏதோ அலட்சியம் போல. கலப்படம் செய்யப்பட்ட பொருள் கொண்டு உணவு தயாரித்து எத்தனை குழந்தைகள் இறந்து விட்டார்கள், மற்றும் எத்தனை குழந்தைகள் மருத்துவமனையில்..... 

கண்கெட்ட பின்னே சூரிய உதயம் போல, இனிமேல் தயாரிக்கப்பட்ட உணவை முதலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உண்டு பார்த்த பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு இட்டிருக்கிறார் கல்வி அமைச்சர்.  தினமும் பல குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது எந்த விதமான பரிசோதனைகளும் இங்கே செய்வது கிடையாது. தயாரிக்கும் பணியாளர்களும் நிரந்தர ஊழியர்களோ இல்லை போதுமான ஊதியமோ கிடைக்காத தற்காலிக வேலையில் இருப்பவர்கள். சாப்பிடப் போகும் குழந்தைகள் ஏழைக்குழந்தைகள் தானே என்ற அலட்சியமும் சேர்ந்து கொள்ள இப்படி ஒரு கோரமான முடிவு. ஏதோ பெயருக்கு உணவு அளித்து ஆதாயம் தேடப் பார்க்கும் ஓட்டு அரசியல்!

இந்த பிரச்சனை பீஹாருக்கு மட்டும் உரியதல்ல என்று நிரூபிக்கும் வகையில் நேற்று தமிழகத்திலும் 100 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு மருத்துவமனையில் அனுமதி என செய்தி. அதுவும் எனது ஊரான நெய்வேலியில்..... 

என்ன தான் நடக்கிறது இங்கே.....  உண்ணும் உணவிலிருந்து, எல்லாவற்றிலும் ஊழல்.  சே.... என்ன ஊழலோ..... என்ன மனிதர்களோ! சத்துணவு என்ற பெயரில் மரணத்தினை தந்து கொண்டிருக்கும் அரசியல் தேவைதானா.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

எவ்வளவு தான் பணம் இருந்தாலும்
நிம்மதி தானா வராது.....
திருப்பம் இருந்தா வீதி அழகு
திருப்தி இருந்தா வாழ்க்கை அழகு.......

இந்த வார குறுஞ்செய்தி

தோல்வியடையும் போது உங்கள் நண்பன் சொல்லும் ஆதரவான ஒரு வார்த்தை, நீங்கள் வெற்றி பெற்றால் உங்களைப் புகழ்ந்து ஒரு மணி நேரம் பேசுவதை விட உயர்வானது.

[டிஸ்கி: ஆங்கிலத்தில் தான் வந்தது! காணாமல் போன கனவுகள் ராஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இங்கே தமிழில்!]

ரசித்த காணொளி: 

ஆரோக்கியமும் அறிவும் பெற்று வளர்ந்திட்டான் ஐயாஎன்று சந்தோஷமாகப் பாட்டு கேட்டு இருக்கீங்களா? லைஃப் பாய் சோப் அளித்திருக்கும் ஒரு விளம்பரம் இது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் இருபது லட்சம் குழந்தைகள் இறந்து விடுவதைச் சொல்லும் ஒரு அற்புதமான காணொளி.  நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். பாருங்களேன் – ஐந்து வயது நிறைந்து விட்ட அவரது குழந்தைக்காக அவரது தந்தை குண்டப்பா செய்யும் காரியத்தினை!
ரசித்த புகைப்படம்:என்ன ஒரு குறும்பு, குழந்தையின் கண்களில்.....

இதற்கு தோதாக ஒரு நகைச்சுவை துணுக்கும் இருந்தது படத்துடன்!
அத்துணுக்கு பிறிதொரு சமயத்தில்!

ரசித்த பாடல்:

மண்வாசனை ரேவதியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! அப்படின்னு சொன்னா உடனே தப்பா நினைக்கக் கூடாது. அவங்க நடிப்பு பிடிக்கும்னு சொல்ல வந்தேன்! ரேவதியோட சில பாடல்கள் ரசித்த பாடல் வரிசையில் என்றும் இடம் பிடிக்கக் கூடியவை. அப்படி ரசித்த பாடலில் ஒன்று இன்று – மண்வாசனை படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் – எஸ்.பி.பாலசுப்ரமணியன் மற்றும் எஸ். ஜானகியின் இனிமையான குரலில் – இதோ “பொத்தி வைச்ச மல்லிகை மொட்டுபாடல் உங்களுக்காக!

 படித்ததில் பிடித்தது!:

தி.ஜ.ர. என்று ஒரு பிரபலமான எழுத்தாளர். 1901 ஆம் ஆண்டு பிறந்து 1971 [நான் பிறந்த வருடம்!] மறைந்த இவர் மஞ்சரி இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர்.  எழுதுவது பற்றி இவர் சொன்னது என்ன என்று தெரிந்து கொள்வோமா?

“எழுதுவது என்பது நீந்துகிற மாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டு இருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டு, வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். குதி, குதித்துவிடு!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. திருப்பம் இருந்தா வீதி அழகு
  திருப்தி இருந்தா வாழ்க்கை அழகு.......//

  தலை கீழாக கைகளால் நட்ந்து பிரார்த்தனை நிறைவேற்றுக் காணொளி கவர்ந்தது ..

  குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் குழந்தை ரசிக்கவைத்தது ...

  பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. தண்ணியை கையை விட்டு ஆழம் பாக்காமலே குதித்துவிட்டு கன்னாபின்னான்னு நீந்திட்டிருக்கேன் நான். தி.ஜ.ர. சொன்னது ரொம்பச் சரி. இற்றையையும், குறுஞ்செய்தியையும் ரசித்ததை விடவும் அதிகமாக அந்தக் குழந்தையின் புகைப்படத்தை மிக ரசித்தேன். What a Lively Photograph! Super!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 3. கல்வி அமைச்சர் சரியான உத்தரவைத் தான் இட்டுள்ளார்...

  புகைப்படம் அழகு... மற்ற ஃப்ரூட் சாலட் தகவல்களும் சுவையானவை... நன்றி...

  "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" என்றும் இனிக்கும் பாடல்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 4. பீஹார் சத்துணவு பற்றிய முதல் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.;(((((

  //தோல்வியடையும் போது உங்கள் நண்பன் சொல்லும் ஆதரவான ஒரு வார்த்தை, நீங்கள் வெற்றி பெற்றால் உங்களைப் புகழ்ந்து ஒரு மணி நேரம் பேசுவதை விட உயர்வானது.// ;)))))

  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. ரசாயன பொருட்கள் எல்லாம் இட்டு வைத்திருந்த இடத்தில்தான் குழந்தைகளின் சாப்பாட்டு பொருட்களையும் வைத்து இருந்தார்களாம்...!

  குழந்தைகள் விஷயத்தில் என்னே ஒரு அக்கறை பாருங்க...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. பழக்கலவை கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 7. குறுஞ்செய்தி - சூப்பர்!

  புகைப்படத்தில் உள்ள பொடிசு கிட்ட கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்டே! பயபுள்ள லல்லுவை விட பொல்லாத அரசியல்வாதியா வருவாம் போல இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 8. ப்ரூட் சாலட் இனிமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 9. கண் கெட்ட பிறகே... சரியாக சொன்னிங்க. மிகவும் வருந்ததக்க நிகழ்வுகள் தொடராமல் அரசு தான் காக்க வேண்டும்.
  குறுஞ்செய்தி நல்லா இருந்தது. பழக்கலவை சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 10. பாவம் குழந்தைகளும், பெற்றவர்களும். நல்ல ஒரு தொலைநோக்கோடு செயல்படும் அரசாங்கம் தேவை, இந்த நாட்டுக்கு.

  குறுஞ்செய்தி, இற்றை, புகைப்படம் - அனைத்தும் அருமை.

  தி ஜ. ரங்கநாதன் மகள், பேத்தியுடன் அறிமுகம் உண்டு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 11. குழந்தையின் குறும்பு மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது.
  தனது குழந்தை ஐந்து வயதிற்கு மேல் வாழ்கிறது என்பதற்காக ஒரு தந்தையின் செயல் மனதை நெகிழ வைத்தது. இந்த செய்தியுடன் வந்திருக்கும் குறிப்பு மனதை மிகவும் வருத்தியது.
  தி.ஜ.ர. சொல்லியிருப்பது போல ப்ளாக்கர்கள் எல்லோருமே 'குதித்து'விட்டவர்கள் தான்!

  ப்ரூட் சலாட் சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 12. ப்ரூட் சாலட் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 13. தி.ஜ.ர சொல்லிய விஷயம் அற்புதம்....

  சத்துணவு கேட்ட உணவாக மாற கலப்படம் ஊழல் எல்லாமும் காரணம், பாவம் ஏழைக் குழந்தைகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 14. நெய்வேலி சம்பவத்தை பற்றி நான் அறிந்த தகவல் என்னவென்றால் அங்கு உண்மையில் நான்கு ஐந்து பேருக்கு வந்த சிறு கோளாறுக்கு அங்கிருந்த நூறு பேரையும் மருத்துவமனையில் சேர்த்து அது NDTV, CNNIBN வரை பறந்து விட்டது..ஆனால் தமிழகத்திலும் இனி அம்மா உணவகங்களும் சத்துணவு கூடங்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete
 15. சத்துணவு பற்றிய செய்தி வேதனை தரும் ஒன்று...
  ரேவதியின் ரசிகர்களுள் நானும் ஒருவன்...இனிமையான பாடல்....
  தி.ஜ.ர. சொல்லிய செய்தி அருமை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்

   Delete
 16. முதல் செய்தி பெரும் வேதனை.

  படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....