எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, July 25, 2013

ஃப்ரூட் சாலட் – 55 – ரத்தம் - வெற்றியை நோக்கி – நம்பிக்கை


இந்த வார செய்தி:

நம் உடலில் ஓடும் ரத்தம் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக பிரிக்க முடியும். அதில் ஒவ்வொன்றிலும் + மற்றும் – என இரு வகைகள் – அதாவது எட்டு விதமான ரத்த வகைகள் தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும்.  இதில் சேராத இன்னும் இரண்டு வகைகள் உண்டு. மிகவும் குறைவான எண்ணிக்கையான மக்களுக்கே இவ்வகை ரத்தம் உண்டு. அதை Bombay Rh +ve மற்றும் Bombay Rh –ve என அழைக்கிறார்கள். 

முதன் முதலாய் பம்பாய் நகரில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் இந்த வகை ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த ரத்த வகைக்கு “Bombay Rh” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


நன்றி: http://www.therishikesh.com/donate_blood.php

கேரளத்தின் கொச்சியிலுள்ள ஒரு நோயாளிக்கு இந்த Bombay Rh –ve வகை ரத்தம் தேவைப்பட மருத்துவமனை நிர்வாகம் இதற்கான வேண்டுகோளை இந்தியா முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கும், ரத்த வங்கிகளுக்கும் அனுப்பி இருக்கிறது. மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட, இது பற்றி கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஆதேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, மும்பையின் மஹாத்மா காந்தி சேவா மந்திர் ரத்த வங்கிக்கு வந்து தனது அரிய வகை ரத்தத்தினை தானம் செய்திருக்கிறார். 

இது அரிய வகை ரத்தம் என்பதை, இந்தியா முழுவதிலுமுள்ள ரத்த தானம் செய்பவர்களில் வெறும் 70 பேருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருக்கிறது என்பதிலிருந்து கணிக்க முடியும்.  இந்த இளைஞர் தானம் செய்த ரத்தம் கேரளத்தினைச் சேர்ந்த ரெஞ்சீவ் எனும் 26 வயது இளைஞரை காப்பாற்றியிருக்கிறது.  ஆதேஷ் போல ரத்த தானம் செய்ய மனமுள்ளவர்கள் இருந்துவிட்டால்... 

சமயத்தில் அரிய வகை ரத்தம் தானம் செய்த இளைஞர் ஆதேஷினை பாராட்டுவோம்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

நீங்கள் எடுத்து வைக்கும் சிறிய அடி கூட உங்கள் வாழ்க்கைப் பாதையில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தினை தரக்கூடியதாக அமையலாம். வெற்றியை நோக்கி சின்னச் சின்னதாய் அடி எடுத்து வையுங்கள் பரவாயில்லை; ஆனால் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு வெற்றி கிட்டவில்லை எனச் சொல்லுதல் மூடத்தனம்.

இந்த வார குறுஞ்செய்தி

யாருக்காவது பரிசு தரும் எண்ணம் இருக்கிறதா? நீங்கள் கொடுக்கக் கூடிய சிறப்பான பரிசு என்ன தெரியுமா? நீங்கள் அவருடன் செலவழிக்கும் உங்களின் பொன்னான நேரம் தான்....  ஏனெனில் உங்களால் அதை திரும்பப் பெற முடியாது.

ரசித்த காணொளி: 

சமீபமாக கிட்கேட் விளம்பரம் பார்த்தீர்களா? பார்க்கவில்லையெனில் நிச்சயம் பாருங்கள். வரும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவர்களது சிரிப்பினை ரசிக்கலாம்! ஏற்கனவே ரசித்தவர்கள் இன்னுமொரு முறையும், பார்க்காதவர்கள் முதல் முறையும் ரசிக்க இதோ அந்த காணொளி...
ரசித்த புகைப்படம்:

WWW.TPOTY.COM – Travel Photographer of the Year என்று ஒரு தளத்தில் ஒவ்வொரு வருடமும் பயணங்கள் சம்பந்தமான சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் வழங்குகிறார்கள்.  இந்த வருடமும் இந்த போட்டியில் பங்குபெற அழைத்திருக்கிறார்கள்.  விருப்பமிருப்பவர்கள் தளத்தின் சுட்டியில் க்ளிக்கினால் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். பங்குபெற கட்டணம் உண்டு.

சென்ற வருடத்தின் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இங்கே ரசித்த படமாக!


நன்றி WWW.TPOTY.COM இணைய தளம்.

ரசித்த பாடல்:

வரப் பிரசாதம் படத்திலிருந்து ரவிச்சந்திரன், ஜெயசித்ரா நடிப்பில் “கங்கை நதியோரம் ராமன்ஆர் கோவர்த்தனம் அவர்களது இசையில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் குரலில் நான் ரசித்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு! படத்தில் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது திரு கோவர்த்தனம் அவர்களுடன் பணிபுரிந்த இளையராஜா என்றும் சொல்கிறார் இந்த காணொளியை தரவேற்றம் செய்திருப்பவர்..... 

 

படித்ததில் பிடித்தது!:

ஒரு கிராமத்தில் மழை பெய்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஊர் கூடி முடிவு செய்தார்கள் – குறிப்பிட்ட நாளில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்தப்படும். அனைவரும் கண்டிப்பாக பிரார்த்தனையில் பங்கு பெற வேண்டும் என உத்தரவு வந்தது.  அனைத்து மக்களும் வந்தார்கள் கூட்டத்திற்கு. வந்திருந்த கூட்டத்தில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையோடு வந்திருந்தான் – அது தான் செய்யும் பிரார்த்தனையில் அவனுக்கு உள்ள அசைக்க முடியா நம்பிக்கை!

ஒரு வயதுக் குழந்தையை தகப்பன் மேலே தூக்கிப் போட்டு பிடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா – அப்படி போடும்போது குழந்தை மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கும் – அது தகப்பன் மேல் இருக்கும் நம்பிக்கை – “நிச்சயம் நம்மைப் பிடித்து விடுவார் அப்பா!

ஒவ்வொரு இரவும் படுக்கப் போகும்போது அடுத்த நாள் காலையில் எழுந்திருப்போமா என்று தெரியாது – ஆனாலும் தினம் தினம் காலையில் விழிக்க அலாரம் வைத்து விடுகிறோம் – நிச்சயம் நாம் நாளையும் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை!

குறிப்பு: ஆங்கிலத்தில் மேலே சொன்ன மூன்று நம்பிக்கைஎனும் வார்த்தைக்கு மூன்று விதமாய் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் – FAITH, TRUST & HOPE! – தமிழில் மூன்றிற்கும் நாம் நம்பிக்கைஎனும் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறோம். வேறு தமிழ் வார்த்தைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!  

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. மூடத்தனம், பொன்னான நேரம், புகைப்படம், 3 நம்பிக்கை என ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை... நன்றி...

  ஆதேஷ் அவர்களின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அருமையான ரசிக்கவைத்த காணொளி .. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அரிய வகை ரத்தம் தானம் செய்த இளைஞர் ஆதேஷினை பாராட்டுவோம்.....
  >>
  என்னோட பாராட்டை சேர்த்துக்கோங்க சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 4. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இளைஞர் சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....

   Delete
 5. ஃபுருட் சாலட் மிக மிக சுவையாக இருக்கிறது. நெகடிவ் வகை ரத்தம் பற்றிய தகவல் ஆச்சர்யம்.
  அருமையான சாலட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 6. பாம்பே ரத்த ரீஸஸ் நெகடிவ் க்ருப் பற்றி தகவல் வெளியிட்டமைக்கு
  நன்றி பல.

  இந்த ரத்தம் குடியா கொந் என்னும் ஆதி வாசிகளிடையே 33 நபர்களுக்கு ஒரு நபர் வீதம் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

  உண்மையில் இது Rarest of Rare Case என்றும் சொல்லப்படுகிறது.
  மேல் விவரங்கள் இங்கு இருக்கின்றன.

  http://www.rhesusnegative.net/work/?s=bombay+blood&submit.x=0&submit.y=0


  நிற்க.
  நீங்கள் தமிழர் பதிவாளர் திருவிழாவுக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.
  அதற்குள் நானும் இந்தியா திரும்பி விடுவேன்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. Bombay Rh வகை பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா......

   //நிற்க.
   நீங்கள் தமிழர் பதிவாளர் திருவிழாவுக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.
   அதற்குள் நானும் இந்தியா திரும்பி விடுவேன். //


   நின்னுட்டேன்! :) பதிவர் திருவிழா வருவது இன்னும் முடிவு செய்யமுடியவில்லை. அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது கடினம்.... கிலோ கணக்கில் ஆணி கொட்டிக் கிடக்கிறது. வர முயற்சிக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
  2. //கிலோ கணக்கில் ஆணி கொட்டிக் கிடக்கிறது.// ஹா ஹா ஹா ...!

   Delete
  3. உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்... முடிந்த வரை , வர முயற்சி செய்யவும்

   Delete
  4. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு....

   Delete
  5. வர முயற்சிக்கிறேன் ரூபக்ராம்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 7. நம்பிக்கை அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.....

   Delete
 8. அனைத்தும் அருமை.

  புதிய பம்பாய் ரத்தவகை பற்றி இன்று தான் கேள்விப்படுகிறேன்.

  காணொளியில் குழந்தைகள் + நடனம் சூப்பர்.

  படித்ததில் பிடித்த நம்பிக்கைகளும் நல்லா இருக்கு.

  பகிர்வுக்கு நன்றிகள்.ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.....

   Delete
 10. இந்த வாரம் ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை.

  தவிர கடைசியாக... நம்பிக்கை!!

  நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையிலேயே ஆணை, உண்மை, உறுதிப்பாடு, சத்தியம், விசுவாசம் என்ற வார்த்தைகள் அடங்கிவிடும்.

  அதனால் நம்மவர்கள், நம்பிக்கை என்ற ஒரே வர்த்தையிலேயே அனைத்து அர்த்தங்களையும் புதைத்து அதன் மேலேயே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துவிட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 11. ரத்ததானம் செய்த தம்பிக்கு அநேகமாயிரம் நன்றிகள்...!

  குழந்தைகளின் சிரிப்பு மனசுக்கு சிலிர்ப்பு...!

  நம்பிக்கை - விசுவாசம்'னும் சொல்லலாமோ ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 12. ரத்ததானம் மிகச்சிறந்த விஷயம். நான் எங்கள் மாமாவுக்கு பதில் ரத்தம் கொடுக்கச் செல்லும்போதுதான் எனக்கு ர.கொ இருப்பது தெரிந்தது! சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ரத்ததான க்ளப்பில் இருப்பது தெரிந்தது. ஆனால் யார் அப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தது என்றுதான் நினைவில்லை!!!

  வரப்ரசாதம் பாடல் எனக்கும் பிடிக்கும். தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் மாதாந்திரப் படமாக 16 mm இல் போடப் பட்டபோது பார்த்த ஞாபகம் வருகிறது! இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா என்றே நான் அறிந்திருந்தேன்/நினைத்திருந்தேன்!

  ஹிஹி... 'நம்பிக்கை'யை எங்கள் 'உள்பெட்டி'யில் முன்பு ஒருமுறை நானும் பகிர்ந்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரத்தம் கொடுத்த ஆதேஷுக்குப் பாராட்டுக்கள்... புகைப்படம் அருமை... சுவையான ப்ரூட் சாலட்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 14. ஃப்ரூட் சாலட் அருமை வெங்கட்..ஆதேஷுக்குப் பாராட்டுக்கள்.. கிட்‍‍கேட் விளம்பரம் அருமை. முதல் முறையாகப் பார்க்கித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.....

   Delete
 15. சாலட் சூப்பர் டேஸ்ட்டுங்க ...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன்சுப்பு.

   Delete
 16. ’ஆதேஷ்! ஹமாரா தேஷ் கா மாதேஷ்! வாழ்க!

  ’நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு - கவிஞர் கண்ணதாசன்.’

  சத்தான ஃப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 17. ஆதேஷ் போன்ற இளம் தலைமுறையினர் நல்ல செயல்கள் செய்ய முன் வரவேண்டும். வழக்கம் போல சாலட் சிறப்புங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.....

   Delete
 18. அடுத்த வெள்ளி வரை தாங்கும் இந்த சாலடின் தெம்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

   Delete
 19. சாலட் என்று பெயரில் அருமையான செய்திகள்.இது போல இரத்த வகை இருப்பதே தெரியாது.
  நல்ல செய்தி தந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 20. அறிய வகை இரத்தம் பற்றிய புதிய தகவல் தெரிந்து கொண்டேன். ஆதேஷ் என்னும் கொடையாளி வாழ்க!
  நின்ற இடத்திலேயே நின்று கொண்டு வெற்றி கிடைக்கவில்லை என்று சொல்லுதல் மூடத்தனம்.
  இன்னொருவருக்கு நீங்கள் கொடுக்கும் அரிய பரிசு உங்கள் நேரம். இரண்டுமே அருமை.
  குழந்தைகளின் நடனம் ஆனந்தம்! அவர்களின் சிரிப்பு ரொம்ப பிடித்திருந்தது.
  பாடல் அருமை.
  நம்பிக்கை தான் எல்லாமே.
  அருமையான ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 21. சமீபத்தில் பார்த்த 'கஹானி' திரைப்படத்தில் இந்த பாம்பே குரூப் இரத்தம் பற்றி பேசப்பட்டது. எனக்கு அப்போது புதியசெய்தியாக இருந்தது. இப்போதுதான் முழுமையாக அறிந்துகொண்டேன். இளைஞர் ஆதேஷூக்குப் பாராட்டுகள். சிறப்பான பரிசு சிந்திக்கவைத்தது. சென்றவருடத்தின் பரிசு பெற்றப் புகைப்படம் சொல்லும் சேதி அதிகம். அழிந்துவரும் இயற்கையால் விபரீதமாகும் எதிர்காலத்தை நினைத்தபடி இயலாமையோடு மரத்தின் வேரில் காத்திருக்கும் மனிதம்! அனைத்தையும் ரசித்தேன். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete

 22. ஃப்ரூட் சலாட் அருமை. நம்பிக்கை பற்றி இன்னும் ஒரு கதை. பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டுதான் போகும் . குட்டிக்குத் தாய்மேல் நம்பிக்கை. ஆனால் குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றைப் பிடித்துக்கொண்டுதான் போகும். தாயின் மேல் “அவ” நம்பிக்கை.....?

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கை பற்றிய இன்னுமொரு கதை பகிர்வுக்கு நன்றி ஜி.எம்.பி. ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 23. பாம்பே நெகடிவ் வகை ரத்தம் குறித்த செய்தி புதிது...நம்பிக்கை குறித்த செய்திகள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. நல்ல தொகுப்பு. WWW.TPOTY.COM போட்டியில் தேர்வான புகைப்படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....