எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 1, 2013

ஃப்ரூட் சாலட் – 56 – சலூன் கடை பெண்மணி – பரவும் அன்பு - கவிதைஇந்த வார செய்தி:பல்லடம்: படித்தது பி.காம்., (ஃபாரின் டிரேட்); வைத்திருப்பதோ சலூன் கடை.  அட இதுல என்னங்க செய்தி இருக்கு? ஆண்களுக்கு மிக நேர்த்தியாக கட்டிங், சேவிங் செய்து அசத்துவது பல்லடத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்.

தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட பி.காம். படித்து அரசு வேலைகளுக்கு முயற்சி செய்து, அது கிடைக்காததால், தனது தந்தையின் தொழிலான சிகை திருத்தும் தொழிலை தானே நடத்த துணிந்து களத்தில் இறங்கியிருக்கிறார் தேவி எனும் 30 வயதான பெண்.  முதலில் இவரது கடைக்கு வருவதில் ஆண்களுக்கு கூச்சமாக இருந்தது எனவும், இப்போது இவரின் தொழில் நேர்த்தி பற்றி தெரிந்து பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் இவரிடம் வாடிக்கையாளர்களாக ஆகியிருக்கிறார்களாம்.

தில்லியிலுள்ள சில மேல்மட்ட சலூன்களில் சில பெண் சிகைதிருத்துபவர்கள் உண்டு. அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் சிகை திருத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனாலும் நமது தமிழகத்திலும் தைரியமாக இந்த தொழிலையும் கையிலெடுத்து தன்னையும், தனது குடும்பத்தினையும் காப்பாற்றும் இந்தப் பெண்மணியின் மன தைரியத்தினைப் பாராட்டுவோம்.....

வறுமை கண்டு பயப்படாது, அதை எதிர்த்துப் போராட, தனது தந்தையின் தொழிலையே கையிலெடுத்திருக்கும் இந்த சகோதரிக்கு வாழ்த்துகள்.

-          நன்றி தினமலர்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

நமக்குப் பிடித்தவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போது தான்......  இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்கத் தோன்றும்......

இந்த வார குறுஞ்செய்தி

I HAVE LEARNT SILENCE FROM THE TALKATIVE, TOLERATION FROM THE INTOLERANT AND KINDNESS FROM THE UNKIND; YET STRANGE, I AM UNGRATEFUL TO THE STRANGERS……  K. GIBRAN.

ரசித்த காணொளி: 

இந்த காணொளியைப் பாருங்கள்..... நாம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது அடுத்தவரிடம் காட்டும் அன்பு நிச்சயம் அனைவருக்கும் ஏதேனும் ஒருவிதத்தில் பரவும் என்பதை மிக அழகாய்ச் சொல்லி இருக்கிறார்கள்..... எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்குமென நினைத்து இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதோ காணொளி உங்கள் ரசனைக்கு.....
ரசித்த புகைப்படம்:இதற்கு அர்த்தம் சொல்லவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன்!

ராஜா காது கழுதை காது:

சில நாட்களாக எங்கேயும் வெளியே போக முடியாத சூழ்நிலை – அலுவலகம் – வீடு – அலுவலகம் என ஒரே சுழலில் மாட்டிக்கொண்ட உணர்வு. அதனால் சில ஃப்ரூட் சாலட்களாக – ராஜாவின் காது நீண்டு கழுதைக் காது ஆகவில்லை! 

சில நாட்களாக எங்களுடைய குடியிருப்பில் தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்கள்.  தண்ணீர் இல்லாத சிலர் கீழேயிருந்து கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டு பெண்மணி, தனது மகனிடம்.....

பெண்மணி: “கொஞ்சமாவது வெட்கப்படு. நான் போய் தண்ணீர் எடுத்து வருகிறேன். நீ இங்க உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டு இருக்க....  உன்னை பெத்ததுக்கு ஒரு நாயைப் பெத்துருக்கலாம்!

மகன்: ஏன் நாயைப் பெத்துருந்தா, உனக்கு கீழேருந்து இரண்டு பக்கெட் தண்ணி கொண்டு வந்து கொடுத்திருக்குமா என்ன!

படித்ததில் பிடித்தது!:

தாத்தாவும் பேரனும்....

தாத்தா.... இங்க ஒரு மலை
இருந்துச்சே எங்க?
கொள்ளை அடிச்சிட்டாங்கப்பா...

தாத்தா இங்க ஒரு ஆறு
இருந்துச்சே எங்க?  
காணாப்போயிடுச்சுப்பா...

தாத்தா இங்க இருந்த நிலங்கள் எல்லாம்?
பாரு கட்டடங்கள் பெருத்துப் போச்சு,
நிலங்கள் செத்துப் போச்சு!

சிட்டுக் குருவிகள் எங்க தாத்தா?
எல்லாம் புத்தகத்துல படமா இருக்கு,
பறந்த காலம் பறந்தே போச்சு!

மண்புழுவப் பாக்கணும் போல
இருக்கு தாத்தா....
அட போப்பா, மனுஷனையே பாக்க
முடியுமான்னு
சந்தேகமா இருக்கு.....
மண்புழுவுக்கு எங்க போக?

நீண்ட மௌனம்.....
இருவரும் நடந்தனர்.
தாத்தாவிடம் இன்னும் சொல்வதற்கு
இருந்தன, இழந்த கதைகள்.
பேரன்தான் கேட்பதை
நிறுத்திக் கொண்டான்.
காரணம் – அவன்
புரிந்துகொண்டான்.

-          ராஜா சந்திரசேகர், ஆனந்த விகடன் தீபாவளி மலர், 2012.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. /// நாம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது அடுத்தவரிடம் காட்டும் அன்பு நிச்சயம் ... ///

  நிச்சயம் ...

  படித்ததில் பிடித்தது உட்பட ஃப்ரூட் சாலட் நல்ல ரசனை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. சலூன்கடைப் பெண்மணி விஷயம் ஏற்கெனவே பாசிட்டிவுக்கு குறித்து வைத்திருக்கிறேன்! ரசித்த புகைப்படம் புன்னகைக்க வைத்தது! ப.பி எனக்கும் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... நான் முன்னாடி எழுதிட்டேனா... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. சலூன் கடை பெண்மணி செய்தி அருமை...

  காணொளி நன்றாக இருந்தது... சென்னைப் பித்தன் ஐயாவும் பகிர்ந்து இருந்தார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 4. காணொளி மிகவும் அருமை. இதையே தான் இன்று திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்களும் வெளியிட்டிருந்தார். ஆனால் அதில் என்னால் சரிவர பார்க்க முடியவில்லை. தங்கள் தளத்திலாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியே.

  இதோ போல உலகம் பூராவும், ஒருவருக்கொருவர் உதவிட முடிந்தால் உலகம் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்!

  >>>>>.

  ReplyDelete
  Replies
  1. சென்னை பித்தன் ஐயா இந்த காணொளியை வெளியிட்டு இருந்தாரா? நான் இன்னும் பார்க்கவில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. முதலில் கூறியுள்ள பெண் பற்றிய செய்தியை நானும் படித்தேன். நீங்கள் சொல்வது போல தமிழ்நாட்டுக்கு இது புதுமை தான். நிச்சயமாக அந்தப் புரட்சிப்பெண்ணைப் பாராட்டத்தான் வேண்டும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். தமிழ்நாட்டுக்கு புதுமை...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 6. //நமக்குப் பிடித்தவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போது தான்...... இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்கத் தோன்றும்......//

  அதன் வலியை நான் என் அனுபவத்திலேயே மிகவும் நன்றாக உணர்ந்துள்ளேன். நல்லதொரு செய்தியே.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பல சமயங்களில் நமக்கு காயம் ஏற்படுத்துபவர்கள் தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்களோ என நினைத்ததுண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 7. குறுஞ்செய்தியும் அருமை.

  புகைப்படம் மிகவும் ரஸிக்கும்படியான வார்த்தைகளுடன் உள்ளது.

  ஆனந்த விகடன் தீபாவளி மலர், 2012.செய்தியும் யோசிக்க வைப்பதாக உள்ளது.

  //ராஜாவின் காது நீண்டு கழுதைக் காது ஆகவில்லை! //

  நாய்க்காதாக ஆகிவிட்டதோ????? ;))))))

  பாராட்டுக்கள் வெங்கட் ஜி.


  ReplyDelete
  Replies
  1. அட நாய்க்காது....... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 8. ஃப்ரூட் சாலட்டில் சொன்ன அனைத்து தகவலும் மிக அருமை இதை ஏதோ சொல்ல வேண்டுமென்று சொல்லவில்லை உண்மையாகவே சொல்லுகிறேன் மிக மிக அருமை பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. /ஏதோ சொல்ல வேண்டுமென்று சொல்லவில்லை....// நன்றி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 9. தேவியின் துணிச்சலும் திறமையும் பாராட்டுக்குரியது. பெண்கள் எது செயினும் சிறப்பாகவே செய்வார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 11. இந்த வார ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை.
  முக்கியமாக காணொளி சூப்பராக இருந்தது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 12. முகப் புத்தக இற்றை ஒத்தடம்.

  நாம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது அடுத்தவரிடம் காட்டும் அன்பு//

  சிறப்பு.

  உழைப்பின் மீதான நம்பிக்கையும் தொழில் நேர்மையும் தேவியை காப்பாற்றும். பாராட்ட வேண்டும் அவரை.

  ராஜா காது செம சிரிப்பு.

  கவிதையின் வலி நம்முள்ளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 13. அனைத்திலும் ருசி அதிகம்.. வாழ்த்துகள் வெங்கட்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 14. வறுமை கண்டு பயப்படாது, அதை எதிர்த்துப் போராட, தனது தந்தையின் தொழிலையே கையிலெடுத்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 15. ஃபுரூட் சாலட் அருமை அதிலும் அந்த காணொளியை மிகவும் ரசித்தேன், மனிதர்கள் யாவரும் இப்படியே இருந்துவிட்டால் இந்த உலகில் அணு ஆயுதம் எதற்கு இல்லையா ? அருமையான பகிர்வு...!

  என் பேஸ்புக்கில் இதை பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.....

   Delete
 16. பாடல் கணொ ளி அற்புதம். இனிக்கும் ஃப்ரூட் சாலடிற்கு மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 17. தேவி பாராட்டப்பட வேண்டியவர்.

  சந்திரசேகரின் கவிதை சூபர்ப்..

  இப்ப உள்ள பசங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது :-)))

  ReplyDelete
  Replies
  1. இப்ப உள்ள பசங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது..... 100% உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 18. காணொளியை மிகவும் ரசித்தேன். அன்பு தானே நாம் விரும்புவது. அது எப்படி தோற்று நோயாகிறது என்பதை அழகாய் பார்த்தேன்.
  தேவியும் என் உள்ளம் கவர்ந்தார்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 19. பேரன்தான் கேட்பதை
  நிறுத்திக் கொண்டான்.
  காரணம் – அவன்
  புரிந்துகொண்டான்.

  மற்றவர்க்ள் புரிந்துகொண்டால் சரி..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 21. //வறுமை கண்டு பயப்படாது, அதை எதிர்த்துப் போராட, தனது தந்தையின் தொழிலையே கையிலெடுத்திருக்கும் இந்த சகோதரிக்கு வாழ்த்துகள்.//

  மகிழ்ச்சியான செய்தி....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.....

   Delete
 22. ராஜா காது - ரசித்தேன்
  முடி திருத்தும் பெண்- வியந்தேன்
  படித்ததில் பிடித்தது - புரிந்து கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி...

   Delete
 23. ஃப்ரூட் சாலட் - நன்று! நன்று!

  ராஜா காது - டயலாக் முன்னொரு காலத்தில் எங்க வீட்டுல கேட்டதாச்சே!

  ‘Women are always right‘ - நம்ம சிவபெருமான் இடம் (ஐ மீன் லெஃப்ட்) கொடுத்தார். அவங்க வலம் போறாங்க! சரி! சரி! அவங்க வலம் போனா என்ன இடம் போனா என்ன! நாம நேராப் போவோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 24. இன்னைக்கித்தான் முதல் முறையா வரேன். ஃப்ரூட் சாலட் ரொம்ப டேஸ்ட்டா இருந்துது. ஏதாச்சும் ஒரு விஷய்த்த வச்சிக்கிட்டு எழுதற பதிவ விட இப்படி தேடி அலைஞ்சி ஒரு குட்டி மேகசீன் மாதிரி தர்றதுதான் ரொம்ப கஷ்டம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி.......

   Delete
 25. நற்செய்திகள் அடங்கிய பதிவு ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்........

   Delete
 26. அன்பு தொடர்சங்கிலி ஆகும் கணொளி மிக அருமை.
  இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
  ஃப்ரூட்சாலட் பகிர்ந்தவை அனைத்தும் மிக மிக சுவையாக இருந்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 27. இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்குது புரூட் சாலட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   Delete
 28. எந்தத் தொழில் ஆனால் என்ன, உழைத்துச் செய்தால் எல்லா தொழிலிலும் கௌரவம் இருக்கும். ஆண் தொழில் பெண் தொழில் என்று எதுவுமில்லை என்று நிரூபித்த தேவிக்கு வாழ்த்துக்கள்.
  'oneday' காணொளி அருமை. கொடுக்கக் கொடுக்க பரவும் அன்பு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  கவிதை மனதை கனக்க வைக்கிறது!

  நல்லதொரு ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 29. இங்கே பெரும்பாலும் சிகைதிருத்தும் தொழிலில் பெண்கள்தான் உள்ளனர். போனால்போகிறது என்பது போல் சில கடைகளில் ஆண்களை வேலைக்கு வைத்திருப்பார்கள். நம் நாட்டில் இதற்கு தயக்கம் காட்டும் மனிதர்கள் மத்தியில் தேவியின் துணிவான முடிவும் செயலாக்கமும் வியப்பைத் தருகிறது. இவர் இதுபோல் தயக்கம் காட்டும் பல பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அன்பின் சங்கிலித்தொடர் அரவணைத்துப்போன காணொளி மனம் இளக்கியது. பழக்கலவை ரசிக்கவைத்த இனிய சுவை. நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 30. ராஜா காது நன்று.
  பெண்கள் தாஜ் போன்ற ஹோடல்களில் 80களில் முடிதிருத்தம் செய்து வருகிறார்களே? தெருக்கடைகளில் முடியலங்கார வேலை செய்ய ஆண்கள் அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். தெருவில் துணிச்சலாக இஸ்திரிவண்டி நடத்திய வீராங்கனை பற்றிச் சிறுவயதில் படித்த குமுதம் செய்தி நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. //தெருக்கடைகளில்...... ஆண்கள் அனுமதிக்கவில்லை என நினைக்கிறேன்.//
   இருக்கலாம். பெண்களுக்கும் தைரியம் இருந்திருக்காது இதுவரை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை. பிசி?

   Delete
 31. ருசித்தேன்;ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிகக் நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....