எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 13, 2013

இரண்டு தில்லி சம்பவங்கள்.....

கடந்த சனிக்கிழமை அன்று தில்லிகை இலக்கியச் சந்திப்பிற்குச் சென்றேன். இந்த மாதத்தின் தலைப்பு உலக இலக்கிய ஆளுமைகள்”.  இந்தப் பதிவு இலக்கியச் சந்திப்பு பற்றியதல்ல என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன். அது பற்றி பிறிதொரு பகிர்வில் முடியும்போது எழுதுகிறேன்.தில்லி தமிழ்ச் சங்கத்திற்குச் செல்ல, வீட்டிலிருந்து பேருந்து மூலம் சென்றேன். க்ரிஷி பவன் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஐந்தாறு மாணவர்கள் ஏறினார்கள். அங்கிருந்து ராமகிருஷ்ணபுரம் வரை வந்த அவர்கள் பேசிய பேச்சு.....  அப்பப்பா – கேட்கவே காது கூசும் எனச் சிலர் எழுதியதைப் படித்திருக்கிறோம். அதை பேருந்து பயணத்தின் போது உணர்ந்தேன்.

கிட்டத்தட்ட 35-40 நிமிடங்கள் பயணத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசிய வாக்கியங்களில் அத்தனை வசவுகள் – அம்மாவில் ஆரம்பித்து அக்காவில் முடிந்தது இல்லை என்றால் அக்காவில் ஆரம்பித்து அம்மாவில் முடிந்தது! சாதாரணமாகவே வட இந்திய மக்களிடம் ஒரு பழக்கம் – ஒவ்வொரு வாக்கியமும் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை கலந்து தான் பேசுவார்கள் – மெத்தப் படித்தவர்கள் உட்பட.  தனது குடும்பத்தினர் முன்னிலையில் கூட. 

பெரியவர்கள் மட்டும் தான் இப்படி பேசுகிறார்கள் என்றால் அதைக் கேட்கும் குழந்தைகளும் அதையே கடைபிடிக்கிறார்கள். அதுவும் பள்ளி செல்லும் சிறுவர்கள் – பொது இடத்தில் இப்படி பேசுவதைக் கண்டித்துக் கேட்க ஒருவருக்கும் இஷ்டமில்லை – கேட்டு யார் அவர்களிடம் அவமானப் படுவது என்ற எண்ணம் தான்.  பேருந்தில் இருந்த பெண்கள், பெரியவர்கள் உட்பட அவர்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்களே தவிர ஒருவரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. என்னையும் சேர்த்துதான் – முன்பே ஒரு முறை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதால். 

இப்படிப் பேசுவதில் என்ன இன்பம் கிடைத்துவிடப் போகிறது – அதுவும் பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வதற்காகத் தான் இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என நினைக்கிறார்களா?

இது இப்படி என்றால் அடுத்த பாதித்த சம்பவம் தில்லி மெட்ரோவில் நடந்தேறியது. இலக்கிய சந்திப்பு முடிந்த பின் நண்பர் பத்மநாபன் [ஈஸ்வரன் என்ற பெயரில் எனது பதிவுகளில் கருத்துரை எழுதுபவர்] வீட்டிற்குச் சென்று ஒரு Black Tea அருந்திவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து தில்ஷாத் கார்டன் சென்று இரவு 10.00 மணிக்கு மேல் வீடு திரும்ப தில்லி மெட்ரோவினை நாடினேன்.தில்லி மெட்ரோவில் முதல் பெட்டி பெண்களுக்கானது. இரண்டாவது பெட்டியில் ஏறினேன். இரவு 10 மணிக்கும் மெட்ரோவில் கூட்டம். முதல் பெட்டியிலும் நிறைய பெண்கள் கூட்டம். ஒரு மெட்ரோ நிலையத்தில் நிறைய பெண்கள் ஏற, அதில் ஒருவர் கர்ப்பிணி. வண்டி நின்று மீண்டும் பயணிக்கும்போது ஒரு குலுக்கல் இருக்கும். அதில் முன்னால் நின்றிருந்த இன்னுமொரு பெண்ணின் மேல் கர்ப்பிணிப் பெண் சற்றே உரசிவிட வந்ததே கோபம் அந்த இளம் பெண்ணிற்கு.  ஒழுங்கா நில்லு, ஏன் மேலே ஏன் இடிக்கற?என்று ஒரு கூச்சல்.

கர்ப்பிணி பெண், தன்னுடைய வயிற்றைக் காட்டி ஒழுங்கா நிக்க முடியலம்மா, வேண்டுமென்றே நான் இடிக்கலை எனச் சொல்ல, மீண்டும் மீண்டும் அந்த இளம்பெண் இவரைத் திட்டியபடியே இருந்தார். இப்போது கோபம் காட்டவேண்டிய முறை கர்ப்பிணிப் பெண்ணுடையது! விட்டார் பிடி சாபம் – “உனக்கும் கல்யாணம் ஆகும். நீயும் இப்படி ஏழு மாதம் கர்ப்பத்தோடு கும்பலான மெட்ரோவில் பயணம் செய்வாய். அப்போது தெரியும் என் கஷ்டம்

மீண்டும் இளம்பெண்ணின் வாக்குவாதம் – “நான் ஒண்ணும் உன்னை மாதிரி மெட்ரோவில் வரமாட்டேன். அப்படியே கர்ப்பமா இருந்தா, சொந்த கார்லயோ, வாடகை டாக்சியிலோ தான் போவேன்”......

இப்படியே மாற்றி மாற்றி சண்டை போட, பெட்டியில் இருந்த வேறு சில பெண்கள் சேர்ந்து சமாதானம் செய்தார்கள். அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு வேறொரு பெண் இருக்க இடம் தர அமர்ந்த பின்னும் சண்டை தொடர்ந்தது!  நான் இறங்கும் இடம் வரை தேவையில்லாத வாக்கு வாதங்கள் தொடர்ந்த படியே!

என்ன தான் நடக்குது இங்கே.......  சிறுவர்கள் முதல் சம்பவத்தில் அசிங்கமாக நடந்து கொண்டார்கள் என்றால் பெண்கள் இரண்டாம் சம்பவத்தில்.....  பயணம் முடிந்து வீடு சேர்ந்தாலும் நமது மக்களிடையே நிலவும் இந்த நிலை மனதினை விட்டு அகலவில்லை. தில்லி மட்டுமல்ல, நமது நாட்டின் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என நினைக்கிறேன். மெதுவாக எல்லா விதமான கட்டுப்பாட்டையும் இழந்து ஏதோ ஒரு விதத்தில் மக்கள் அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்...... 

மீண்டும் வேறொரு பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

72 comments:

 1. //தில்லி மட்டுமல்ல, நமது நாட்டின் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என நினைக்கிறேன். மெதுவாக எல்லா விதமான கட்டுப்பாட்டையும் இழந்து ஏதோ ஒரு விதத்தில் மக்கள் அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்...... //

  அப்படிச்சொல்ல முடியாது வெங்கட்ஜி.

  பொதுவாக கர்ப்பிணிப் பெண் என்றாலே, எல்லோருக்குமே ஒருவித இரக்கம் தான் ஏற்படும். பெண்களுக்குள் இப்படியொரு சண்டை என்பது மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

  முதல் சம்பவம் எங்கேயுமே சகஜமாக நடக்கக்கூடியது தான். ஆனால் பொது இடங்களில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதே.

  மெட்ரோ ட்ரெயினைப்பார்த்ததும், எனக்கு அதில் நான் 2006 இல் டெல்லியில் பயணித்த நாட்கள் நினைவுக்கு வந்தது. ;)))))


  ReplyDelete
  Replies
  1. //பொது இடங்களில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதே.//

   உண்மை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. //வட இந்திய மக்களிடம் ஒரு பழக்கம் – ஒவ்வொரு வாக்கியமும் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை கலந்து தான் பேசுவார்கள் – //

  அண்ணே, இங்கே சென்னையிலும் அப்படித்தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 3. என்ன சொல்லறதுன்னே தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. மக்கள்தொகை அதிகமாக ஆக.... மனிதத் தன்மை குறைஞ்சுக்கிட்டே போகுது போல:(

  மனசுக்குக் கஷ்டமா இருக்கு இந்நிலை.

  ReplyDelete
  Replies
  1. மனசுக்குக் கஷ்டமா இருக்கு..... அதே அதே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. படத்தை பார்த்து கெட்டு போயிருக்காங்க பசங்க

  குழாயடி சண்டையின் பரிணாம வளர்ச்சி மெட்ரஓ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.....

   Delete
 6. சங்கடம் தரும் காட்சிகள்..!

  ReplyDelete
  Replies
  1. உண்மை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. சில தருணங்களில் அறிவுரை சொல்ல முனைந்தால் (அ)கண்டிக்க முனைந்தால் இவற்றைக் காணநேர்ந்ததால் ஏற்படும் மன உளைச்சலை விட அதிகமான உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது! என்ன செய்வது! திருந்தாத ஜென்மங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே ஒரு முறை நானும் அந்த அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் பேருந்திலும் மௌனம் காத்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 8. வருத்தம் தருகிற நிகழ்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. பதிவு போட ரெண்டு மேட்டர் கிடைச்சுதுன்னு சந்தோசப் படுவதைத் தவிர வழியில்லை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. Dear Kitttu,

  Indha padhivu "Pennukku penne yedhiri" yenbadhai unarthivittadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 11. தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, பலவேறு காரணங்களால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. என்னென்னமோ காரணங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 12. மிக வருத்தம் மேலிடுகிறது வெங்கட். படிப்பு இருந்தென்ன. அடிப்படை மரியாதை இல்லாத சமூகம் இருந்தால் என்ன போனால் என்ன.
  இன்னும் பேச்சு சுதந்திரம் கேட்கிறார்கள். இதைவிடநாக்கை நாசப்படுத்தவா.:(

  ReplyDelete
  Replies
  1. வருத்தப் படுவது தான் மிஞ்சி இருக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 13. இந்தியாவில் (தமிழ் நாட்டில்) பேசிக்கொண்டே இருப்பவர்கள் அதிகம்தான்... எங்கு பார்த்தாலும் எதையாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் - அது சண்டையாகவும் இருக்கலாம் அல்லது வெட்டி வம்பாகவும் இருக்கலாம்.. கோவில்,ஜவுளிக்கடை, மார்கெட், புத்தகக்கடை, உணவுக்கடை என.. வியப்பாகவும் மளைப்பாகவும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பேசிப் பேசியே பொழுதை வீணடிப்பதில் ஒரு ஆனந்தம்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   Delete
 14. மாணவர்களை யாரும் கண்டிக்க முடியாது. ஆசிரியர்கள் நிலையோ அவலம். மேலும் ஆசிரியர்கள் யாரும் மாணவர்களைக் கண்டிக்கும் அளவுக்கு உரிமை பெறவில்லை. முன்னெல்லாம் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருப்பார்கள். சொல்லப் போனால் பெற்றோரே ஆசிரியர்களிடம் கண்டித்துச் சொல்லிக் கொடுக்குமாறு கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். என் அப்பாவே அப்படித் தான் சொல்லுவார். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. வீட்டிலும் குழந்தைகளுக்குச் செல்லம், பள்ளியிலும் கண்டிக்க முடியாது. வேறென்ன செய்ய முடியும்! அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் தான் பயப்படுத்தும் விஷயம். அதுவும் நாளைய இந்தியா! :((((( செல்ஃபோன் கலாசாரம் வந்ததும் இன்னும் அதிகம் பாருங்க. இந்துலேகா விளம்பரத்தில் ஒரு மாணவி சக மாணவனுடன் கோவித்துக் கொண்டு செல்கிறாளாம். என்னடா உங்களுக்குள்ளே அப்படினு நண்பன் கேட்க, தலைமயிர் நீளமாக இல்லைனு கோவிச்சுக்கிறாள்னு நண்பனிடம் சொல்கிறன். இந்துலேகாவை சிபாரிசு பண்ணச் சொல்லி நண்பன் சொல்கிறன். உடனே அந்தப் பெண்ணின் நீளமான தலைமயிரினால் அவளுக்குச்சந்தோஷம் வந்து நண்பனோடு சேர்ந்து செல்கிறாளாம். இருவருக்கும் வயசு எட்டிலிருந்து பத்துக்குள் இருந்தால் ஜாஸ்தி! இப்படியான விளம்பரங்கள் வரச்சே மாணவர்கள் பேசுவதுக்குக் கேட்பானேன்!

  பெண்களுக்குப் பொறுமை எல்லாம் போய் எந்தக் காலமோ ஆகிவிட்டது. பொறுமையாய் இருந்தால் ஜடம் என்ற பெயர் தான் வாங்கிக்கணும். அதான் சண்டை போட்டிருக்காங்க. குழாயடிச் சண்டை கெட்டது போங்க! :((((

  ReplyDelete
  Replies
  1. செல்ஃபோன் கலாச்சாரம்..... :(

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 15. படிப்பு நாகரீகம் கலாச்சாரம் என நாம்
  ஆயிரம் மேல்பூச்சு பூசினாலும் நம் சமூகம்
  மன ரீதியாக மிகவும் நாறிக் கிடக்கிறது
  என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகளே

  ReplyDelete
  Replies
  1. // நம் சமூகம் மன ரீதியாக மிகவும் நாறிக் கிடக்கிறது//

   உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 16. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 17. Replies
  1. True.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 18. அந்த இளம் பெண் செய்தது மாபெரும் தவறு இருந்தாலும் கர்பிணிப் பெண் தன் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்த வாக்குவாதத்தில் ஈடுபடமால் இருந்திருக்கலாம்..

  எல்லாருக்கும் தங்கள் தன்மானம் பெரிதாகிப் போகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 19. பசங்க விஷயத்தில் மும்பையும் கெட்டுத்தான் போயிருக்கு. ஆனா, கர்ப்பிணிப்பெண்ணை திட்டுற அளவுக்குக் கெடலை. இடம் கொடுக்கவோ அல்லது, அவர்களை சௌகர்யமாக உணரச்செய்யவோ செய்யும் ஆட்களைப் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 20. சிறுவர்கள் விஷயத்தில் நாம் பெற்றோரைத்தான் குறை சொல்ல வேண்டும். அதுவும் பெரும்பாலான தில்லிவாழ் பெற்றோர் குழந்தைகளை தில்லி வால் குழந்தைகளாகத்தான் வளர்க்கின்றனர்.

  இளம்பெண் விஷயத்தில் பெண்களுக்கான பெட்டியில் ஏறி பெண்ணிடம் இடிவாங்க வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சலாக இருக்குமோ!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி

   Delete
 21. தில்லி மட்டுமல்ல பொதுவாகவே மக்களிடம் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மனிதாபிமானம் மற்றும் அன்பு குறைந்து தான் போயுள்ளது.. வயதானவர், கர்ப்பிணிப்பெண்கள் என்ன கூட்டமிருந்தாலும் யாரும் இடம் கொடுப்பதில்லை....வீட்டிலேயே இந்த குணங்கள் குறைந்து போனதாலே தான் இவ்வளவு விவாகரத்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 22. வேறு ஒரு பிரச்சனை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் போது அடுத்தவர்கள் மேல் தேவையில்லாமல் கோபம் வருகிறது. (மெட்ரோ போல்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 23. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு கிடக்க பெற்றோர்கள்தான் காரணம் நம் நடத்தையை பார்த்துதான் குழந்தைகள் போல செய்கிறது ஆகவே அவர்கள் முன்னிலையில் நாம் கவனமாக நடக்க வேண்டும் .

  மனித தன்மை குறைந்துகிடக்கும் சமூகத்தில் நாம் உலவுகிறோம் என்பதை அவபோது இப்படி நிகழ்வுகளில் மூலம் பார்க்க முடிகிறது வேதனைதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை மு சரளா.

   Delete
 24. மாணவர்கள் எல்லா ஊரிலும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கர்ப்பிணிப்பெண் சம்பவம் பாவமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 25. மாணவ இளைஞர்களிடம் வாயைக் கொடுக்காமலிருப்பது நலல்து. கர்ப்பிணிப் பெண் விஷயம் - இப்படியுமான்னு தோணுது!

  கீதா மேடம் சொல்லிருக்க விளம்பர விஷயம் - மாணவர்கள் வயது எட்டு-பத்து என்பது - பயங்கர ஷாக்கா இருக்கு.

  வல்லிமா சொல்வது போல, இன்னும் அதிக பேச்சு சுதந்திரம் என்னாத்துக்கோ... :-(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

   Delete
 26. படித்தேன்; வருந்தினேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 27. பொது இடத்தில் நம்மவர்கள் பழகும் விதம் மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது என்பதற்கு உதாரணம் இது போன்ற நிகழ்வுகள். அடிப்படை பண்பு குறைந்து கொண்டு வருவது தான் மூல காரணம். என் மகன் சிறியவனாக (9 வயது இருக்கும்) இருந்த போது எங்கள் எதிர் வீட்டுப் பையன் “ சாலா” என்று திட்டி விட்டான். நான் அலுவலகம் சென்றிருந்த நேரம். என் மகன் அழுது கொண்டே அந்த பையனின் அம்மாவிடம் சென்று ஆண்ட்டி, பாபி ”சாலா” என்று திட்டுகிறான், என்று புகார் கொடுத்திருக்கிறான். அதற்கு அவர்கள் சொன்ன பதில் “சாலா அப்படியா சொன்னான், வரட்டும், கேட்கிறேன்”. என்பது தான். இதை நான் வந்த பிறகு விவரிக்கும் போது என் மகன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.

  யாரை குறை சொல்லலாம்?

  ReplyDelete
  Replies
  1. யாரைக் குறை சொல்வது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன்னரும் அசிங்கமாகப் பேசுவதால் குழந்தைகளுக்கு அது தவறில்லை என்று தோன்றிவிடுகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

   சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பூவில் உங்கள் கருத்துரை. நன்றி.

   Delete
 28. பொது இடங்களில் நாகரீகமின்றி பழகுவது இன்றைய தலைமுறைக்கு வழக்கமாகி விட்டது, அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. வளரும் விதம், சூழல் போன்ற பல காரணங்களும் உண்டு. என் மகன் சிறியவனாக இருந்த போது எங்கள் எதிர் வீட்டில் இருந்த சிறுவன் “சாலா” என்று திட்டி விட்டான். நான் அலுவலகம் சென்றிருந்த நேரம். என் மகன் எதிர் வீட்டிற்கு சென்று ஆண்ட்டீ, பாபி, சாலா என்று கெட்ட வார்த்தை சொல்லுகிறான் என்று புகார் கொடுக்க, அவர்கள் சொன்னது என்ன தெரியுமா, “சாலா, அப்படியா சொன்னான், வரட்டும்’ போன வேகத்தில் திரும்பி வந்து விட்டான் புகார் கொடுக்க போன என் பிள்ளை.
  மாலை நான் வந்த பின் இந்த நிகழ்ச்சியை என்னிடம் விவரித்த பின் அவன் சொன்னது, “ அம்மா, யார் மேல தப்பு, பாபி மேலயா, ஆண்ட்டி மேலயா” நான் என்ன சொல்லியிருப்பேன்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன்.

   Delete
 29. பெரியவர்களுக்குண்டான சண்டையில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம். அந்த மரபு கூடிய விரைவில் வழக்கொழிந்து போய்விடும்.
  ஆனால் சிறுவர்கள் பேசிய மொழிக்குண்டான முழு பொறுப்பும் இந்த சமூகத்தையே சாரும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 30. பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம்,மனித நேயம், எல்லாம் குறைந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
  சிறு வயதிலிருந்தே சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, அனைவரையும் மதிக்கும் தன்மையை வீட்டிலிருந்து வர வேண்டும் கீதா அவர்கள் சொல்வது போல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 31. பயணம் முடிந்து வீடு சேர்ந்தாலும் நமது மக்களிடையே நிலவும் இந்த நிலை மனதினை விட்டு அகலவில்லை.

  உண்மைதான்... பசங்க பேசுவது எல்லாரும் நம்மைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்... பெண்கள்... கர்ப்பிணி லேசாக இடித்ததைப் பொறுக்காத கன்னி எப்படி வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வாள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்....

   Delete
 32. வெட்கம்... வேதனை... பண்பு கிலோ என்ன விலை?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 33. ஆயிரமாவது பதிவுக்கு
  வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
  மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 34. சென்னையிலும் பல இடங்களில் அப்படித்தான்... சமீபமாக பெண்கள் வரம்பு இன்றி அணியும் ஆடைகள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது... நாம் எதை நோக்கி செல்கிறோம் என்று கேள்வி எழுகிறது ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக்ராம்.

   Delete
 35. மாணவர்கள் வருங்காலம் ???

  கர்ப்பிணிபெண் வருத்தப்படவைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 36. அன்பு நண்பரே

  துளசி கோபால் சொல்வது போல

  "மக்கள்தொகை அதிகமாக ஆக.... மனிதத் தன்மை குறைஞ்சுக்கிட்டே போகுது போல"

  இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இறைவன் தான் இந்தியாவை காப்பற்ற வேண்டும்.
  உங்களின் பாணி (பணி ) தொடரட்டும் உங்களின் பஸ் பயணமும் தொடரட்டும்.

  வாழ்த்துக்கள்
  விஜய் / டெல்லி

  ReplyDelete
 37. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....