வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 59 – மாரத்தான் ஓட்டம் – ஒரு கலக்கு! – சிரிப்பு

இந்த வார செய்தி: சமீபத்தில் ஹைதை நகரில் Half Marathan போட்டி நடைபெற்றது. அதில் The Challenging Ones [TCO] அமைப்பினைச் சேர்ந்த இருபதிற்கும் மேலான நபர்களும் கலந்து கொண்டு போட்டியில் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் ஓடி சாதனை புரிந்துள்ளார்கள்.


37 வயதான ரவி ஸ்ரீவத்ஸவா - ஆந்திர அரசில் பணி புரியும் இவர் இந்த மாரத்தான் போட்டியில் பல பிரச்சனைகளைக் கடந்து கலந்து கொண்டு ஓட்டத்தினை முடித்திருக்கிறார். கூடவே கார்கில் போரில் பங்குபெற்ற மேஜர் D.P. Singh, சென்னையைச் சேர்ந்த 23 வயது கிருஷ்ணா முத்துசாமி, நாகர்கோவிலைச் சேர்ந்த சுப்பையா, ஹைதையைச் சேர்ந்த 27 வயது கிரன் கனோஜியா எனப் பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மாரத்தான் ஓட்டம் தானே, இதில் என்ன பெரிய சிறப்பு எனச் சந்தேகத்துடன் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு செய்தி – இவர்கள் அனைவருமே – விபத்துகளிலோ, போரிலோ தத்தமது காலை இழந்தவர்கள். கால்களை இழந்த பிறகு PROSTHETIC LIMB வைத்துக்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இப்படி தன்னம்பிக்கை இழக்காது தங்களாலும் கடினமான மாரத்தான் ஓட்டங்களிலும் பங்குபெற்று முழு ஓட்டத்தையும் முடிக்க இயலும் என நிரூபித்து இருக்கிறார்கள்.

இந்த செயற்கைக் கால்கள் பொருத்துவதற்கு இன்சூரன்ஸ் இதுவரை கொடுப்பதில்லை. இதற்கு இந்த அமைபினர் முயற்சி செய்து வருவதாகக் கூறும் இந்த அமைப்பின் திரு தஸ்தகீர், சாதாரண செயற்கைக் கால் பொருத்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது எனச் சொல்கிறார். இதுவே இன்னும் சிறப்பான Carbon-Fibre Balde Runner செயற்கைக் கால் எனில் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனச் சொல்கிறார்.

இழந்தது கால் மட்டுமே, எங்களது தன்னம்பிக்கையை அல்ல எனச் சொல்லும் இவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறட்டும். இவர்களிடமிருந்து நாமும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், சாதிக்க வேண்டும் எனும் வெறியையும் கற்றுக் கொள்வோம். இந்த செய்தியை நாளிதழில் படிக்கும்போதே நமக்கும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டியில் பங்குகொண்ட அனைத்து நபர்களுக்கும் நமது வாழ்த்துகள் – பூங்கொத்துகள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்.

இந்த வார குறுஞ்செய்தி:

ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர்: ”அடித்தது மணி. முடிந்தது என் பணி….”

மாணவன்: தொலைந்தது சனி. ஜாலி தான் இனி…… 

ரசித்த பாடல்: உதய கீதம் படத்திலிருந்து “பாடு நிலாவே தேன் கவிதை” பாடல், இந்த வார ரசித்த பாடலாக உங்கள் ரசனைக்கு. இதுவும் ரேவதி பாடலாக அமைந்தது தற்செயலான ஒன்று!



 
ராஜா காது கழுதை காது: பல்லவன் விரைவு வண்டி – சென்னையிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு கணவன் – மனைவி.  மனைவி பால் வாங்கி வரச் சொல்ல, கணவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆவின் பால் வாங்கி வந்தார்.  சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும் போல – ஒரு வேளை ஒழுங்கா கலக்கலையோ! :) சந்தேகம் வந்த மனைவி – “ஏங்க, உங்க பேனாவைக் கொஞ்சம் குடுங்க, சக்கரை கலக்கணும்!”  அதற்கு கணவன் சொன்ன பதில்: “ஏண்டி, உங்க குடும்பமே இப்படித்தானா? பால்ல சக்கரை கலக்க பேனாவையா உபபோகிப்பீங்க!”…..

ரசித்த காணொளி: SEBI வெளியிட்ட ஒரு காணொளி. இப்படி எத்தனை அறிவுரை சொன்னாலும், அதிக லாபம் அடைய பேராசை பட்டு தன்னுடைய கடின உழைப்பினால் சம்பாதித்த பணத்தைத் தொலைத்து நிற்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை.  இதோ காணொளி – பாருங்களேன். [ஹிந்தி புரியாதவர்கள் மன்னிக்க!]


 
படித்ததில் பிடித்தது:

“அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச் சிரிக்க மாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்! கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்குப் புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்! கடைக்கண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்ப்பார்வையில் சிரிப்பது. [அவளுடைய சிரிப்பிலேயே இது தான் அழகு.] கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு – ஒரு சிரிப்புக் காட்டுவாள். [அப்போது கண்கள் ஜொலிக்கும்.] சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!”

     இது ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. நாவலாசிரியர் மிகவும் புகழ் பெற்றவர். கண்டுபிடிக்க முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


டிஸ்கி: பயணத்தில் இருந்ததால், கடந்த இரண்டு வாரங்கள் ஃப்ரூட் சாலட் வெளியிட முடியவில்லை. இனி வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று ஃப்ரூட் சாலட் வெளிவரும்.

32 கருத்துகள்:

  1. தி.ஜானகிராமனா:)

    ராகா க கா சூப்பர்!
    அதைவிட சிறந்தது சாலஞ்சிங் ரன். வணங்குகிறேன். செபி விளம்பரம் மிகவும் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.ஜா. இல்லை. இந்த வரிகளை எழுதியது கி. ராஜநாராயணன் - எடுக்கப்பட்டது அவரது கோபல்ல கிராமத்திலிருந்து.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  2. தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், சாதிக்க வேண்டும்
    எனும் வெறியையும் கற்றுக் கொள்ள அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. /// அதிக லாபம் அடைய பேராசை பட்டு தன்னுடைய கடின உழைப்பினால் சம்பாதித்த பணத்தைத் தொலைத்து நிற்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை... ///

    இன்று அதிகம்...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. ப்ரூட் சாலட் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான சுவையான ஃப்ரூட் சாலட்
    குறிப்பாக மாரத்தான் ஓட்டமும் காணொளியும்..
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. //இழந்தது கால் மட்டுமே, எங்களது தன்னம்பிக்கையை அல்ல எனச் சொல்லும் இவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறட்டும்.// Our Wishes too!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  7. மாரத்தான் ஓட்டத்தில் பங்கு எடுத்தவங்களுக்கு வாழ்த்துகள்.

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு பால் கலக்க பேனா கேட்ட சகோதரிக்கு தெரிஞ்சிருக்கு.

    எத்தனை விளம்பரம் இதுப்ப்போல வந்தாலும், பேராசைப்படும் நம் மனமும், கலர் கலரா ஃப்லிம் காட்டி ஏமாத்தும் ஆட்கள் திருந்த போறதில்லை.

    எனக்கு பிடிச்ச பாட்டை நினைவுப்படுத்தினதால நான் போய் பாட்டு கேக்குறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. இவர்களிடமிருந்து நாமும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், சாதிக்க வேண்டும் எனும் வெறியையும் கற்றுக் கொள்வோம். இந்த செய்தியை நாளிதழில் படிக்கும்போதே நமக்கும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

    நிச்சயமாக. இத்தகைய செய்திகள் இவற்றை படிக்கும் அனைவருக்குமே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  10. கோழி குருடா இருந்தா என்ன! குழம்பு ருசியா இருக்குதுல்ல! அதான் எந்த ரைட்டரு வர்ணிச்சிருந்தா என்னா! அந்தச் சிரிப்பு சிங்காரிக்குதுல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  11. எனக்கும் திஜா என்று தோன்றுகிறது. காப்பில சர்க்கரை கலக்க பேனாவா? கலக்கல் ஐடியா!
    இனிமையான பாடல்.

    உறுப்புகளை இழந்தும் தங்கள் தன்னம்பிக்கையை இழக்காத இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் இன்ஷூரன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    ருசியான பழக்கலவையைக் கொடுத்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  12. மாரத்தான் வாழ்த்துகள்.

    குறுஞ்செய்தி :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. இழந்தது கால் மட்டுமே, எங்களது தன்னம்பிக்கையை அல்ல எனச் சொல்லும் இவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறட்டும். இவர்களிடமிருந்து நாமும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், சாதிக்க வேண்டும் எனும் வெறியையும் கற்றுக் கொள்வோம்.//

    அருமையான கருத்து! ஃப்ரூட் சாலட் மொத்தத்தில் மிகவும் ருசியாக இருந்தது! பாடல் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....