எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 13, 2013

ஃப்ரூட் சாலட் – 60 – தொடர் ஓட்டம் – நிழல் – ஊதா கலர் ரிப்பன்இந்த வார செய்தி:செப்டம்பர் 11 ஆம் தேதி 1893 ஆம் வருடம் – சிகாகோவில் ஸ்வாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க உரை அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. விவேகானந்தர் உரை ஆற்றிய இதே தினம் – 120 வருடம் முடிந்து விட்ட நிலையில், அவரது 150 பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் போது தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என யோசித்து நண்பர் திரு அருண் பரத்வாஜ் செய்யும் செயலைப் பற்றிய செய்தி தான் இந்த வாரத்தில்.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அஹமதாபாதிலிருந்து சூரத் நகருக்கும் இடைப்பட்ட தூரம் 267 கிலோ மீட்டர். அங்கிருந்து திரும்ப அஹமதாபாத் நகர் திரும்ப வர 267 கிலோ மீட்டர். இதனோடு 66 கிலோ மீட்டர் சேர்த்து 600 கிலோ மீட்டர் தூரத்தினை 150 மணி நேரத்தில் ஓடியே கடக்க முடிவு செய்து விவேகானந்தரின் 150 பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது தனது பங்காக செய்கிறார் திரு அருண் பரத்வாஜ்.

சிகாகோ நகரில் விவேகானந்தர் சிறப்பாக உரையாற்றிய அதே செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தனது ஓட்டத்தை அஹ்மதாபாத் நகரின் டவுன் ஹால் பகுதியிலுள்ள விவேகானந்தர் சிலையருகிலிருந்து துவங்கிய அருண் பரத்வாஜ் அன்று மாலையே 7 மணி நேரம் 2 நிமிடங்களில் 50 கிலோ மீட்டர் தொலைவினை ஓடி முடித்து விட்டார். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இவர் 150 மணி நேரத்தில் 600 கிலோ மீட்டர் தொலைவினை சுலபமாக கடந்து, ஆறு நாட்களில் 567 கிலோ மீட்டர் ஓடிய தனது முந்தைய சாதனையை முடியடிக்க இருக்கிறார். இந்தியாவின் தலை நகரிலுள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரியும் எனது வலைப்பூவினை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு புதியவரல்ல.  சில மாதங்கள் முன்பு எனது வலைப்பூவில் கார்கில் 2 கன்யாகுமரி பதிவில் தொடர்ந்து 60 நாட்களில் கார்கிலில் இருந்து கன்யாகுமரி வரை ஓடியே கடந்த்து பற்றி எழுதியிருப்பது நினைவில் இருக்கும்.

தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வரும் திரு அருண் பரத்வாஜ் அவர்களை வாழ்த்துவோம்.
  
இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு ஆணுக்கு Girl Friend இருக்கிறாரா இல்லையா என்பதை அவரது பர்ஸை வைத்தே  சொல்லி விடலாம் என்கிறார் ஒருவர். எப்படி என்றால் இப்படித்தான்!இந்த வார குறுஞ்செய்தி

FRIEND AND BLOOD HAVE ONLY ONE DIFFERENCE. BLOOD ENTERS IN HEART AND FLOW OUT. BUT FRIENDS ENTER IN HEART AND STAY INSIDE FOR EVER.

ரசித்த காணொளி: 

இந்த காணொளியை ரசித்தேன் எனச் சொல்வதை விட பார்க்கும்போது ஒரு ஓரத்தில் இக்குழந்தையின் தந்தையை நினைத்து கோபமும் வந்தது.  அழும் குழந்தையை சமாதானம் செய்யாமல் இப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்ற கோபம் தான்! 
ரசித்த பாடல்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ஊதா கலர் ரிப்பன் உனக்கு யாரு அப்பன்என்ற பாடல் ஏனோ அடிக்கடி முண்முணுக்க வைத்துவிட்டது.  சமீப நாட்களில் எந்த சானலில் பார்த்தாலும் இந்த பாடல் வருகிறது என்பதாலோ! நீங்களும் பாருங்களேன் என்ன இருக்கிறது இப்பாடலில் என!
ராஜா காது கழுதை காது:

திருப்பராய்த்துறையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஒரு தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். வழியில் சில ஆசிரியர்கள் ஏறிக்கொண்டார்கள்.  ஏறியதிலிருந்தே பேசிக்கொண்டே இருந்தார்கள் – ஆசிரியர்களுக்கு பேசிப் பேசியே பழகிவிட்டது இல்லையா! பக்கத்திலேயே ரயில்வே ட்ராக் – கரூரிலிருந்து திருச்சி வரும் ரயில் வந்து கொண்டிருக்க, அதன் ஒரு பெட்டியில் கதவுக்கருகில் அமர்ந்து படிகளில் கால்களை வைத்துக்கொண்டு ஒரு காதல் ஜோடி அமர்ந்திருக்க, அதைப் பார்த்து ஒரு மூத்த ஆசிரியர் சொன்னது – “என்ன கொழுப்பு பாரு அந்த பொண்ணுக்கு! இப்படியா உட்கார்ந்து வருவாங்க. ஏதாவது ஆச்சுன்னா அப்பன் ஆத்தாவுக்கு யாரு பதில் சொல்றது. நெஞ்சில பயமே இல்லை பாரு!

கூடவே படியில் உட்கார்ந்திருக்கும் அந்த பையனை கொஞ்சம் கூட திட்டவேயில்லை! :)

படித்ததில் பிடித்தது!:

இரண்டு சண்டைக் கோழிகள் பண்ணையில், ‘யார் பெரியவன்?என்பதைத் தீர்மானிக்க ஆக்ரோஷமாகச் சண்டை போட்டன. இறுதியில் ஒரு கோழி தோற்றுப் போய், இறகிழந்து, உடலெல்லாம் ரணமாகி, நொண்டி நொண்டிச் சென்று செடிகளுக்குள் மறைந்து கொண்டது.

ஜெயித்த கோழியோ பெருமிதத்தில் நடனமாடிக் குதித்து, களித்து, ‘நான் தான் பண்ணை ராஜாஎன்று பறைசாற்றியது.

அவ்வழியே மேலே பறந்து கொண்டிருந்த பருந்து அதை கவனித்து, டைவ் அடித்து, ‘மத்யான டிபனுக்கு ஆச்சுஎன்று அதைக் கொத்திக் கொண்டு போய் சாப்பிட்ட்து.

தோற்ற கோழி, மாற்றுக் கோழி இல்லாததால், பண்ணை ராஜாவாகப் பட்டமேற்றது.

நீதி: வெற்றிப் பெருமிதம் அழிவில் முடியும்.

-          சுஜாதாவின் “புதிய நீதிக்கதைகள்புத்தகத்திலிருந்து!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. ரசிக்க வைக்கும் ஃப்ரூட் சாலட்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 2. வழக்கம் போல நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 3. விவேகானந்தரை எல்லோரும் குறிப்பிடும் போது சிகாகோவில் அவர் பேசிய பேச்சையையே குறிப்பிடுகிறார்கள் அதற்கு அப்புறம் அவர் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவும் பேசவே இல்லையா அல்லது வெளிநாட்டில் பேசியதுதான் பெருமை என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களா என்ன?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 4. இரசித்தேன் நண்பரே! ஊதாக்கலர் முணுமுணுக்க வைப்பது உண்மைதான்!நீதிக்கதை அருமை! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 5. சுவையான ப்ரூட் சாலட்.

  உங்க பர்ஸ் இப்ப எப்படியிருக்குன்னு தெரியலையே....:))

  ReplyDelete
  Replies
  1. சஸ்பென்ஸ்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 6. தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வரும் திரு அருண் பரத்வாஜ் அவர்களை வாழ்த்துவோம்.


  ஃப்ரூட் சாலட்...அருமை ..பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. ரஸிக்க வைக்கும் ஃப்ரூட் சாலட்டுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. //60 நாட்களில் கார்கிலில் இருந்து கன்யாகுமரி வரை ஓடியே கடந்த்து பற்றி எழுதியிருப்பது நினைவில் இருக்கும்.// ஆமாம் நன்றாக நினைவில் உள்ளது.. அப்பா மனுஷன் அசராம ஓடிட்டே இருக்காரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. பர்ஸ் நல்லாயிருக்கே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 10. ப்ரூட் சாலட் அருமையான ருசி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 11. ப்ருட் சாலட் வழக்கம் போல சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா....

   Delete
 12. ஃப்ரூட் சாலட் வழக்கம்போல அருமை
  பர்ஸ் நிஜமும் பரத்வாஜின் சாதனையும்
  மனம் கவர்ந்தது
  எனக்கும் நிழல் பார்த்து பயப்படும் குழந்தைக்கு
  அரட்டியில் ஏதாவது ஆகிவிட்டால் என்னஆவது என
  பயமாகத்தான் இருந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. //அரட்டியில் ஏதாவது//

   அரட்டி - இதற்கு என்ன அர்த்தம் ரமணி ஜி!..... மதுரை பாஷையா?

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. சாலட் - இல் சாட் மசாலா தெளித்தது போல
  தூக்கல் சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 15. ஊதா கலர் ரிப்பன் பாட்டில் கேட்கும் வித்யாசமான குரல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பார்த்தவர்களுக்கு கேட்ட குரல் தான். ஹரிஹரசுதன் தான் அதை பாடியது.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்களுக்கு வெற்றி பாதை குடுப்பதில் இசை அமைப்பாளர் இமானுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.திருச்சியின் சிவகார்த்திகேயனின் வெற்றியும் பிரமிக்க வைக்கும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார். சூப்பர் சிங்கர் பாடகர்களில் பலர் திரைப்படங்களுக்கும் பாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் தான்.

   Delete
 16. ஒரு ஆணுக்கு Girl Friend இருக்கிறாரா இல்லையா என்பதை அவரது பர்ஸை வைத்தே சொல்லி விடலாம் என்கிறார் ஒருவர். எப்படி என்றால் இப்படித்தான்!//

  பெண் பதிவர்கள் சண்டைக்கு வந்துறப்போறாங்க... ஆனால் அதுதான் உண்மை... :))

  ReplyDelete
  Replies
  1. நானே யோசித்து, பயந்து போய் தான் போட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 17. திரு அருண் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  ப்ரூட் சாலட் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 18. திரு அருண் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அழும் குழந்தையை பார்க்க முடியவில்லை. பாவம்! ஊதா கலரு - பாடல் காட்சிகள் வரும் என்று நினைத்தேன்.
  சுஜாதாவின் புதிய நீதிக் கதை நன்றாக உள்ளது.
  போன வாரம் ஒரு சின்ன வர்ணனை கொடுத்துவிட்டு, எழுதியது யார் என்று கேட்டிருந்தீர்களே, பதில் கொடுத்தீர்களா? அங்குதான் போய் பார்க்க வேண்டுமோ? போய்ப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   போன வாரம் படித்ததில் பிடித்தது பகுதியில் எழுதியிருந்தது திரு கி. ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த பதிவின் பின்னூட்டத்திலேயே அதை தெரிவித்திருந்தேன்.....

   Delete
 19. வழக்கம் போலவே அருமை! .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. சூப்பர் பகிர்வு,நிழலைப் பார்த்து பயந்து அழும் குழந்தை சுவாரசியம் தான்.பாடல் இப்ப தான் கேட்கிறேன்.பகிர்ந்த பர்ஸ் படம் சூப்பர்.ரயில் படிக்கட்டில் பயணம் செய்த பெண்ணை மனதில் நிறுத்தி விட்டீர்கள்.டெம்ப்லேட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா.....

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் வருகை.... நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....