எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 22, 2013

சற்றே இடைவெளி தேவை……


 நன்றி: கூகிள்.....

இந்தியாவின் கணக்கிலடங்கா மக்கள் தொகை பற்றியோ, மக்கள் தொகையை விட அதிகமாகத் துடிக்கும் அலைபேசி எண்ணிக்கை பற்றியோ இங்கே எழுதப் போவதில்லை. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே போதிய இடைவெளி தேவை என நிறைய விளம்பரங்கள் செய்வது போல எனது பதிவுகளுக்கு இடையே சற்று இடைவெளி தேவை என எனது கணினி நினைத்தது போலும். அதனால் தான் “தடங்கலுக்கு வருந்துகிறேன்” பதிவில் சொன்னது போல “எனது மடியை” விட்டு இறங்கிவிட்டது.

நன்றி: கூகிள்.....

தற்போதெல்லாம் மனிதர்களுக்கே ஏதேனும் உடலுறுப்பு பழுதடைந்துவிட்டால் மாற்று உறுப்பு பொறுத்துவது வழக்கமாகிவிட்டதே. அது போல எனது கணினிக்கும் ஒரு மாற்றுறுப்பு பொருத்த வேண்டியிருக்கிறது. அதன் ஹார்ட் டிஸ்க் மொத்தமாக படுத்துவிடவே அதை எடுத்து வெளியே எறிந்துவிட்டு வேறொன்றை பொறுத்த கணினி மருத்துவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் எடுத்துக் கொண்டு போனதோடு சரி – இதய அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் வரிசை போல நீண்ட வரிசை இருக்கிறது போல….  இன்னும் எனது கணினிக்கான நாள் வரவில்லை.

நன்றி: கூகிள்.....

அதற்காக இத்தனை இடைவெளி விட்டுவிட்டால் பதிவுலகம் என்னை மறந்து விடும் அபாயம் இருக்கிறதே….  அதனால் நண்பர் ஒருவரின் மடிக்கணினியை தற்போதைக்கு எடுத்து வந்திருக்கிறேன்.  அதனால் இனிமேல் எனது தளத்தில் வழக்கம்போல் பதிவுகள் வெளிவரும் எனும் அபாய சங்கொலியை ஒலித்து விடும் நோக்கத்திலேயே இந்த பதிவு.

இந்த இடைவெளியும் ஓர் விதத்தில் நல்லது தான். கடந்த சில தினங்களில் பல புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைத்தது. அமரர் கல்கி கடைசியாக எழுதிக்கொண்டிருந்த, அவரது மகள் ஆனந்தி அவர்கள் எழுதி முடித்த அமரதாரா [நான்கு பகுதிகள்], காலச்சக்கரம், மோகன் குமார் அவர்களின் வெற்றிக்கோடு, சேட்டை அண்ணாவின் மொட்டைத்தலையும்….. என படித்த புத்தகங்களின் எண்ணிக்கை நிறையவே.  படித்த புத்தகங்கள் பற்றி ”படித்ததில் பிடித்தது” தலைப்பில் சில பதிவுகள் வெளிவரும்….  :)

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை தொடரின் அடுத்த பகுதி நாளை வெளிவரும் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். கடைசியாக உங்களை ஒரு ஹோட்டலில் அடுத்த டேபிள் ஆசாமி சாப்பிடும் காட்சியில் விட்டுவிட்டு ஓடிவிட்டேன். அந்த ஆசாமி பாவம் எவ்வளவு நாட்கள் தான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்…  அவரையும் விடுவிக்க வேண்டும் இல்லையா…..அட....  என்ன சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு....  நான் எழுதலைன்னு இப்படியா அழுவாங்க...  அதான் வந்திட்டேனே....  ம்...  கண்ணை தொடைச்சிக்கோ.....  இப்படி அழுதா நல்லாவா இருக்கு.... 

படம்: கூகிளுக்கு நன்றி.

சரி நண்பர்களே, இந்த இடைவெளி போதும் என நான் நினைத்து எழுத ஆரம்பித்து விட்டேன். நீங்களும் இடைவெளி போதும் என நினைத்தால் எனது பதிவுகளை மீண்டும் படிக்க ஆரம்பித்து விடலாம்! சரி தானே….

வழக்கம் போல் மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


50 comments:

 1. எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் தனியாக வாங்கி அதை உபயோகப்படுத்த முடியாதோ?
  படம் பிரமாதம்!

  ReplyDelete
  Replies
  1. அதை வைத்திருக்கிறேன் - கோப்புகளையும், படங்களையும் சேமிக்க மட்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. //இனிமேல் எனது தளத்தில் வழக்கம்போல் பதிவுகள் வெளிவரும் எனும் அபாய சங்கொலியை ஒலித்து விடும் நோக்கத்திலேயே இந்த பதிவு.//

  ;))))) வாங்கோ ஜி. WELCOME!.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. அண்ணே....கணினி மருத்துவர் சுகமா இருக்காரா ? ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க....

  ReplyDelete
  Replies
  1. அவர் நலமே.. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 4. சில இடங்களை எளிதாக
  நிரப்பிவிட முடியாது
  உங்களிடமும் அப்படியே
  என்போன்ற உங்கள் அபிமான
  தொடர்பவர்களை உத்தேசித்து
  பல்வேறு சிரமங்களுக்கிடையிலும்
  மீண்டும் பயணப்பட துவங்கியமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.

   வாழ்த்திய நல்லுள்ளத்திற்கும் நன்றி.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. மீண்டும் வருக.... தொடர்ந்து பதிவுகள் எழுதுக....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 7. கடைசியாக உங்களை ஒரு ஹோட்டலில் அடுத்த டேபிள் ஆசாமி சாப்பிடும் காட்சியில் விட்டுவிட்டு ஓடிவிட்டேன். அந்த ஆசாமி பாவம் எவ்வளவு நாட்கள் தான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்… அவரையும் விடுவிக்க வேண்டும் இல்லையா…..

  பாவம் அவர் .. சீக்கிரம் விடுதலை தந்து அழுகையை நிறுத்தப் பாருங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. # ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே போதிய இடைவெளி தேவை#ன்னு தம்பதியர்கள் படுத்துக் கொண்டால் 'இடைவெளி' எங்கே இருக்கும் ?
   நீங்களும் இடைவெளி விடாமல் பதிவை தொடர வாழ்த்துக்கள் !
   த.ம 5

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!.

   Delete
 8. வருக.... வருக... மீண்டும் தொடர்க... உங்கள் கணினியும் விரைவில் குணமாகட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. வருக வருக மீண்டும் வருக.
  அழறதை நிறுத்திட்டோம். புத்தகப் பதிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 10. உண்மையிலேயே பதிவுகளுக்கிடையில் இடைவெளி இருப்பது சில சமயம் சில மறந்து போன வேலைகளைச் செய்வதற்கும் விட்டுப்போன நூல்களைப்படிக்கவும் உபயோகமாகி விடுகிறது!

  புகைப்படம் பயமுறுத்துக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... படம் பார்த்து பயந்துட்டீங்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 11. நல்லது:). மீண்டும் வருக! வாசித்த நூல்கள் குறித்தும் விரைவில் பகிர்ந்திடுக.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. தொடர்ந்து எழுதுங்க,அளவான இடைவெளியும் அவசியம் தான் சகோ. அதற்காக இப்படியா அழுற படத்தை போட்டு சிரிக்க வைப்பது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 13. அழுகை புகைப்படம் அருமை! நாங்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு நீங்கள் எழுதுவதை தொடர்ந்து படிக்க தயாராயிட்டோம்!
  நல்வரவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 14. கணனி பழுதடைந்தாலும் சும்மா இருக்க முடிவதில்லை! உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 15. சீகிரம் ஃப்ரூட் சாலட்டை பரிமாறும் வழியை பாருங்க அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   வரும் வெள்ளி அன்று ஃப்ரூட் சாலட் வழக்கம் போல் வெளியிடுகிறேன்.

   Delete
 16. என் கணிணிக்கு அறுவை சிகிட்சை எல்லாம் செய்யவில்லை.
  மருந்து மட்டும் கொடுத்ததும் இப்பொழுது நன்றாக ஓஓஓஓஓஓடுகிறது.
  தவிர மருந்து கொடுத்தது சற்று நகைச்சுவையான நிகழ்வு.
  அதைச் சின்ன பதிவாக்கி விடுகிறேன்.

  நீங்கள் திரும்பவம் தொடர்வது குறித்து மிகவும் மகிழ்ச்சி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீங்களும் பதிவிடுங்கள்....

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 20. வாங்க, வாங்க, WAITING! WELCOME BACK!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. வணக்கம் அய்யா! தங்களது தளத்திற்கு முதல் வருகை. தாங்கள் மீண்டு வரும் வேளையில் எனது அறிமுகமும் அரங்கேறுவது கண்டு மகிழ்ச்சி. மீண்டும் வருவேன். பதிவிடுங்கள் காத்திருக்கிறோம். நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அ. பாண்டியன்.

   Delete
 22. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை தொடரின் அடுத்த பகுதி நாளை வெளிவரும் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.//

  வாருங்கள். படிக்க காத்து இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 23. Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 24. இனிய வணக்கம் நண்பரே...
  வருக வருக...
  இடைவெளி தளத்தில் இருந்தாலும்..
  எங்கள் நெஞ்சில் இல்லை இடைவெளி...
  இணைந்தே இருக்கிறோம் எழுத்துக்களாலும் அன்பாலும்...
  தொடருங்கள்..தொடர்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. இடைவெளி தளத்தில் தான் - மனதில் இல்லை - சரியாகச் சொன்னீர்கள் மகேந்திரன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....