எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 3, 2013

சிநேகமுள்ள சிங்கம்


‘சென்னை நகரம் பதினோரு மணி வெயிலில் வேகமில்லாது நடந்து கொண்டிருந்தது. தலைப்பைப் போர்த்திக் கொண்டு ரேஷன் கடைக்கோ, திருப்புகழ் வகுப்புக்கோ நாற்பது வயது பெண்மணி நடந்து போவாளே அந்த நடை. அதிக வேகமும் இல்லாது, மெல்ல நடப்பது என்பதும் இல்லாது மிதமான நடை.

“பதினோரு மணி சென்னை நாற்பது வயதுப் பெண் போல. நாற்பது வயது நல்ல வயது. வேகம் இல்லாத வயது. அதே சமயம் வேகம் முடியாத வயதல்ல. வேகத்தை விவேகமாய் மாற்றிய அருமையான வயது. கட்டு சற்று தளர்ந்திருந்தாலும் கம்பீரமான வயது.

உலகின் மிகச் சிலருக்கே வயது வேகமாய் நகரும். இருபது வயதில் முப்பது வயது தன்மை வரும். முப்பது வயதில் நாற்பத்து நாலு வயசின் அமைதி வரும். அதற்கு பலமான காரணங்கள் இருக்க வேண்டும். கடினமான அனுபவம் வாய்த்திருக்க வேண்டும்.

தனக்கு இப்போது என்ன வயது கணிக்க முடியும்சித்திரைப் பாண்டியன் யோசித்தான். குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டு நாற்பதா என்று சிரித்தான். பேண்ட் போட்டால் ஐந்து வயது குறையும். ஏனோ பேண்ட் போட மனசு ஒப்பவில்லை. கதர் வேட்டியும் சட்டையும் மாட்டி நடந்த போது பரம சுகமாய் நடை இருந்தது.இப்படித்தான் ஆரம்பிக்கிறது சமீபத்தில் படித்த சிநேகமுள்ள சிங்கம்எனும் பாலகுமாரனின் கதை. கதை நாயகன் முப்பத்து நாலு வயதில் கதர் வேட்டியும் சட்டையும் போட்ட சித்திரைப் பாண்டியன் கல்லூரிக்கு படிக்க வருகிறார். தமிழில் மிகுந்த ஆர்வம் இருக்க, எம்.ஏ. தமிழ் படிக்க வருகிறார்.


வெள்ளை மலர் மிசை, வேதக் கருப்பொருளாக
விளங்கிடுவாள்
தெள்ளு தமிழ் கலைவாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத் திறைப் பொழுதும் பலனின்றி
இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் அவள் பேர் சக்தி
வேல் சக்தி வேல் சக்தி வேல் – “பேசுனா உபயோகமா பேசணும். பேசத் தெரிஞ்சா போச்சுன்னு சளசளன்னு பேசக்கூடாது. பயனில்லாம என் நாக்கில் இருந்துராதே சரஸ்வதி. பயன் வேணும். அதுக்கு வெள்ளம் மாதிரி பேச்சு வரணும்னுபாரதி சொன்னது போல தமிழ் படிக்க ஆசை.

ஆனால் இத்தனை வயதுக்கு மேல் கல்லூரிக்கு வரக் காரணம் – பாதியில் படிப்பு நின்றது தான். அது ஏன்? கேட்கிறாள் எம்.ஏ. வகுப்பில் படிக்கும் பெண் ஒருத்தி – சொன்ன பதில் உங்களை அதிர்ச்சியாக்கும் – “இத்தனை நாள் நான் ஒரு கேஸ்ல ஜெயில்ல இருந்தேங்க!

கல்லூரியில் படிக்க வந்தபோது தமிழுக்காக ஒரு விழா எடுத்து அரசியல்வாதி ஒருவருக்கு தங்க முலாம் பூசிய வாள் பரிசளிக்க, அது பிடிக்காத சில ரசாயனத் துறை மாணவர்கள் சேர்ந்து கல்லூரியில் தகராறு செய்ய அப்போது நடந்த குழப்பங்களில் சித்திரைப் பாண்டியனின் கையிலிருந்த வாளால் ஒரு மாணவனின் கால் வெட்டுப் படுகிறது. பதினைந்து வருட தண்டனை கிடைக்க கல்லூரி வாழ்வு முடிந்து சிறை வாசம்.

சிறையிலேயே பி.ஏ. ஆங்கிலமும் படித்து, நன்னடத்தை காரணமாக தண்டனை குறைக்கப்பட சிறை வாசம் முடிந்து இப்போது மீண்டும் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ. படிக்க வந்திருக்கும் சித்திரைப் பாண்டி.

காதல் இல்லாத பாலகுமாரன் கதையேது. இதிலும் காதல் உண்டு – அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் காதல் -


எப்படிடா அவனுக்கு காதல்.... லக்குடா அவனுக்கு.....  “அதெல்லாம் இல்ல துரை....  துட்டு. துட்டு இருந்தா யாரை வேணா எப்ப வேணா லவ் பண்ணலாம். உனக்கும் எனக்கும் பஸ் சில்லரையே தகராறு

என்பது போன்ற வசனங்கள் இந்த புத்தகத்திலும் உண்டு.


உசிரோட இருக்கறதை விட முக்கியமான வேலை உலகத்துல எதுவுமே இல்லை. மரணம் நிச்சயம். ஆனால் முடிஞ்ச வரை உசிரோட, சந்தோஷமா வாழறது ரொம்ப முக்கியம். நாம பொறந்த்தே அதுக்குத் தான்.....

மனிதனின் புத்தியால், திட்டத்தால் வாழ்க்கை நடப்பதில்லை. ஏதோ ஒன்று தலைக்கு மேல் நின்று அவனை அலைக்கழிக்கிறது. ஊழ்வினை என்று அதைத் தமிழிலக்கியம் சொல்கிறது. கடவுளுக்கும் ஊழ்வினை உண்டு என்கிறது. ஒரு வினை நடக்க அதன் விளைவாய் இன்னொரு வினை வளரும். பிரமம் விரும்பிப் பிரபஞ்சம் உண்டாயிற்று. பிரபஞ்சத்தில் உலகம் உருவானது. உலகத்தில் கடவுள் மனிதனாய் வர வேண்டிய அவஸ்யம் ஏற்பட்டது.

பாலகுமாரன் புத்தகம் என்றாலே மேலே இருப்பது போன்ற வாக்கியங்கள் இல்லாமலா? இவையும் ஆங்காங்கே உண்டு.

அது சரி கதை மேலே சொல்லுங்களேன்...  எனக் கேட்கும் நண்பர்களுக்கு, எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தபின் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாது இருக்க வேண்டும் என நினைத்தாலும் பிரச்சனை அவரை நோக்கி வருகிறது. சில சமயங்களில் பிரச்சனைகளை நாம் வரவழைக்கிறோம் – பல சமயங்களில் பிரச்சனை தாமாகவே வந்து நம் மடி மீது காலாட்டியபடி அமர்ந்து கொண்டு விடுகிறது. அதே போலத் தான் இப்போதும்.

என்ன பிரச்சனை? அந்த பிரச்சனைகளிலிருந்து சித்திரைப் பாண்டி விடுபட்டாரா? இல்லை மீண்டும் ஏதாவது பழி அவர் மீது வந்து விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான்......இந்த பூனை படிக்கிற மாதிரி சிநேகமுள்ள சிங்கம் புத்தகம் படிக்க வேண்டியது தான். ஆனா அதுக்குன்னு வேகவேகமா பக்கத்தை திருப்பக் கூடாது! புத்தகம் எங்கே கிடைக்கும்னு சொல்லாம போனா எப்படி?


விசா பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட்நாராயணா ரோடு, தியாகராய நகர், சென்னை-600017. விலை ரூபாய் 95/- [ஐந்தாம் பதிப்பு – மே, 2008].

என்ன நண்பர்களே, புத்தகத்தினை படித்து முடிவைத் தெரிந்து கொள்வீர்களா?

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 comments:

 1. இந்தப் புத்தகம் படித்ததில்லை.

  இணைத்திருக்கும் படம் மிக ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சிறப்பான விமர்சனம். சிநேகமுள்ள சிங்கம் - கதைத்தலைப்பே கதாநாயகனின் குணாதிசயத்தைக் காட்டுகிறது. இங்கே நூலகத்தில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

   Delete
 3. Dear Kittu,

  Kadaiyin thalaippu arumai.Naan idu varai balakumaranin kadai padithadhillai.Padipadarku arvathai thoondugiradu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 4. சிங்கக் கதைன்னு உள்ள வந்தா பூனை புக்க திருப்பிட்டு இருக்கு.. ஹஹஹா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 5. நல்ல விமர்சனம்... "ஜெயில்ல இருந்தேங்க" எனும் போதே, பல திருப்பங்கள் இருக்கும், படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... அட... பூனை என்ன வேகமாக பக்கத்தை திருப்புகிறது...!

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. தலைப்பைப் போர்த்திக் கொண்டு ரேஷன் கடைக்கோ, திருப்புகழ் வகுப்புக்கோ நாற்பது வயது பெண்மணி நடந்து போவாளே அந்த நடை.

  ஆரம்பமே அருமையான அவதானிப்பு .. தலைப்பம் வசீகரிக்கிறது ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. விமரிசனம் சிறப்பா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. புத்தகம் இருக்கட்டும்.
  நீங்கள் அதைப் பற்றி சுவையாகப் பகிர்ந்த விதம் தான்
  என்னைக் கவர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 9. ஆஹா..புத்தக விமர்சனமும் தொடங்கியாச்சா? படங்களும் பகிர்வும் நன்று வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வாசித்த புத்தகங்கள் பற்றி எழுதுவது புதியதல்ல.... இது புத்தகம் பற்றிய பத்தொன்பதாவது பகிர்வு..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 10. தங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது... படங்கள் சிறப்புங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.....

   Delete
 11. புத்தக விமர்சனமும், அதன் தலைப்பும், ஆரம்ப வரிகளும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. புத்தகத்தைப் படித்து சிங்கத்தை சிநேகிதமாக்கி கொள்ள வேண்டியதுதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 13. unusual ஆரம்பமா இருக்கேன்னு நினச்சேன் ...! பூனை வேகத்துல படிச்சாதான் சீக்கிரம் படிக்க முடியும்போல ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.....

   Delete
 14. ஓ.... நாற்பது வயதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா....?
  (நான் இன்னும் ரொம்ப நாள் காத்திருக்கனும்...)
  புத்தகம் கிடைத்தால் நிச்சயம் படித்துவிடுவேன்.
  அருமையாக விமர்சிக்கிறீர்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 15. நல்ல விமர்சனம்...
  பூனை படம் அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 16. தலைப்பு பார்த்துட்டு சினிமா விமரிசனமோன்னு வந்தேன்.இப்படி ஒரு சினிமா வந்துச்சு. மலையாளம்.

  .இந்தக் கதை ( பாலகுமாரன்) வாசிக்க்லை.

  நம்ம ரஜ்ஜூ படிக்கும் ஸ்டைல் அபாரம்:-)))))

  ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....