எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 9, 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்.


தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தடங்கலுக்கு வருந்துகிறோம் என அறிவிப்பு ஒன்று போட்டு எந்த வித ஒலியோ/ஓசையோ இல்லாது இருக்கும். அது போல எனது வலைப்பூவிலும் சில நாட்களுக்கு இந்த அறிவிப்பு தான் இருக்கப் போகிறது.அலுவலகத்தில் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் போதாதென்பது போல, எனது மடிக் கணினிக்கும் என் மேல் தீராத  கோபம். "நான் என்ன உன் காதலியா? எப்ப பார்த்தாலும் என்னையே கட்டிட்டு, என்னை மடி மேல வைத்துக் கொண்டு இருக்கிறாயே, கொஞ்சம் எனக்கும்  ஓய்வு கொடேன்" எனக் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் காதில் விழாத மாதிரியே இருக்க, இப்போது மொத்தமாக படுத்து விட்டது - அட என் மடி மீது இல்லைங்கோ! ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்து விட்டது. எதோ கொஞ்சம் டிங்கரிங் பண்ணி, பட்டி பார்த்து கொடுத்து இருக்கார் கணினி மருத்துவர். இன்னும் நிறைய விஷயங்கள் சரியாக  வில்லை. எதை செயல் படுத்தினாலும், "டிங். டிங். என சத்தம் செய்து, "என்னைத் தொடாதே, என்னைக் கிள்ளாதே, மீறினால் மேலிடத்தில் புகார் அனுப்புவேன்" என மிரட்டுகிறது.ஆகையால் நண்பர்களே, இன்னும் சில நாட்களுக்கு இங்கே 'தடங்கலுக்கு வருந்துகிறேன்' என்ற அறிவிப்பு தான். "புதிய பதிவுகள் வெளி வராது. நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளையும் படிக்க முடியாது" என்பதை வருத்தத்துடன் [ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] தெரிவித்துக்  கொள்கிறேன்.மீண்டும் கணினி சரியான பிறகு, அலுவலகத்தில் ஆணி கொஞ்சம் குறைந்த பிறகு உங்களைச சந்திக்கிறேன். அதுவரை....

எஞ்சமாய்........

வெங்கட்
புது தில்லி 
 

60 comments:

 1. //[ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] //

  ;))))) மீண்டும் மீண்டு வர முயற்சி செய்யுங்கள்.

  என் தொடரின் பகுதி-60 க்கு மட்டும் எப்படியாவது வந்து ஓர் சின்ன கமெண்ட் கொடுங்கோ என என் கணக்குப்பிள்ளை கிளியார் கேட்டுக்கொள்கிறார், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   64-ஆவது வரை படித்து கருத்தும் எழுதி விட்டேன்.

   Delete
  2. Yes .... Venkat.

   As it is Nothing is pending,

   Thank you.

   Delete
  3. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. பிறகு வெளியிட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.

   Delete
 2. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/10/60.html

  - VGK's கிளி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. கிளிக்கும் தான். :)

   Delete
  2. பகுதி-59 வரை வந்தவரை பகுதி-60ல் திடீரெனக் காணோமே என கிளி கொஞ்சம் கீச்சிட்டது, பதறியது, கவலைப்பட்டது. உண்மைதான்.

   அதன்பின் வெள்ளைக்கார துரைபோல நீங்க வந்து கருத்தளித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தது அந்தக்கிளி.

   அன்புடன் VGK

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. சீக்கிரம் மடிக் கணணி சரியாகி மீண்டும் வலையில் உலா வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. முழுதும் சரியாகவில்லை. எதோ தட்டுத தடுமாறி வேலை செய்கிறது. மொத்தமாய் ஒய்வு கொடுக்க வேண்டியது தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 4. விரைவில் மீண்டு மீண்டும் வருக...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அது தலையில ரெண்டு தட்டுத் தட்டிவிட்டு
  தொடர்ந்து எழுதுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க கணவரை தட்டுவது போல அவர் மனைவியை தலையில் தட்டமுடியாது...

   Delete

  2. தட்டிக் கொடுத்து தான் தாஜா செய்து கொண்டிருக்கிறேன். மொத்தமாய் என்னை அனுப்பி விடு என்கிறது.பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
  3. நான் இந்த விளையாட்டுக்கு வரலை மதுரை தமிழன்.

   Delete
 6. Replies
  1. கணினிக்கு "Get Well Soon" சொன்னீங்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. தடங்கல்கள் ...
  நிறை பதிவுகளுக்கான
  இடைவேளை தானே..
  வாருங்கள்.. நண்பரே.. காத்திருக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 8. எங்களுக்கு இந்தத் தடங்கல்
  நிச்சயம் இழப்புதான்
  விரையில் வேலைப் பளு குறையவும்
  கணினி சீரடையவும் வேண்டிக் கொள்கிறோம்...
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி...

   Delete
 9. Replies
  1. தமிழ்மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. தடங்கல் சீக்கிரம் சரியாக வாழ்த்துகள். விரைவில் வருக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. விரைவில் தடங்கல் நிவர்த்தியாகி தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 12. தடங்கலுக்கு நாங்களும் வருந்துகிறோம்.கணினி விரைவில் நலம்பெறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 13. எழுத வேண்டிய பதிவை எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள். லேப்டாப் சரியான பின் ஒரு நாளைக்கு குறைந்தது 3 பதிவுகள் இட்டு விடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - அது என்ன பேப்பரில் எழுதுவது? மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது மதுரைத் தமிழன். கையெழுத்து போடுவது மட்டும் தான் பேனாவால். :(((

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. சீக்கரமா சிகிச்சை கொடுத்து மீண்டும் மடிமீது வையுங்க நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 15. ஆபீஸில் ஆணி பிடுங்குவது போரடித்து ,சீக்கிரம் வலைப்பூ பக்கம் வந்து விடுவீர்கள் !

  ReplyDelete
  Replies
  1. போரடித்தாலும் ஆணியை பிடுங்கித்தானே ஆக வேண்டியிருக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 16. Dear kittu,

  Meendum viraivil pudhupudhu padhivugaludan yedhirparkirom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 17. Dear kittu,

  Kanini viraivil gunamagi meendum padhivugal vara vendikkolgiren.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 18. அடடா நானே அபூர்வம ஔங்க வலைப்பூ பக்கம் வரேனே இப்படின்னு வந்தா என்ன இப்படி மேலும் வருந்தவைக்கிறீங்க? வருக விரைவில்
  வருக விரைவில்


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 19. விரைவில் கணனி கைகொடுக்கட்டும் வலையில் உறவுகளைச் சந்திக்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 20. விரைவில் நலம்பெறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. தடைகள் நீங்கி மீண்டும் வருக!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 22. சீக்கிரம் நலம் பெறட்டும் கணினி:)! வேலைகளை முடித்துக் கொண்டு விரைவில் வருக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 23. தடைகள் வருவது சகஜம்தான். இருந்தாலும் எழுதுவதை நிறுத்த வேண்டாம். ஆதி மூலம் பப்ளிஷ் செய்ய முடியாதா.. ஓஹோ அதற்கும் கணின் வேண்டுமோ.
  பரவாயில்லை. கணினி சீக்கிரம் நலம் பெறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   எழுதுவதற்கும் கணினி வேண்டுமே.... :(

   Delete
 24. ஓடிக் களைத்த கணினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.எல்லாம் சரியான பின்பு மீண்டும் வருக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 25. விரைவில் வாங்க அண்ணா...
  காத்திருக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 26. கணினிக்கும் தேவை ஓய்வு.
  ஆனாலும் அதிக நாள் விடுமுறை எடுக்க வேண்டாமே?
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. விரைவில் ஓய்விலிருந்து திரும்புகிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 27. கொஞ்சம் ஓய்வும் தேவை தான். :))) ஓய்வும் எடுத்துக்குங்க. அதே சமயம் விரைவில் கணினியும் சரியாகட்டும். விஜயதசமி வாழ்த்துகள். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....