எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 13, 2013

க்ளீன் [B]போல்ட்[d]! – குறும்படம்சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில குறும்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். நடுவே சற்றே இடைவெளி. இனிமேல் ஒவ்வொரு புதன் கிழமையும் நான் ரசித்த ஒரு குறும்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.  இந்த வாரத்தின் குறும்படமாக க்ளீன் [B]போல்ட்[d]! எனும் குறும்படம்.

Excuse me Entertainers வெளியிட்டு இருக்கும் இப்படத்தில் சொல்ல வரும் விஷயம் சுவாரசியம் – வேறென்ன காதல்! முகப்புத்தகம் மூலம் ஒரு பெண்ணைப் பார்த்து அவரிடம் காதல் கொள்கிறார் கதாநாயகன்.....  காதலை அப்பெண் ஏற்க மறுத்தாலும் இவர் தொடர்ந்து காதலிக்கிறார்.  காதலியின் பிறந்த நாள் பரிசு வாங்க தன்னுடைய செயினை அடகு வைக்கும் அளவுக்கு காதல்!

பிறந்த நாளும் வந்தது. நண்பரிடம் செயினைக் கொடுத்து பரிசு வாங்கச் சொல்ல, அவரும் ஒரு வைர மோதிரம் வாங்கி வைத்திருக்கிறார்.  அதற்குள் கதாநாயகனின் அப்பா [சர்ஜன்] மூலம் ஒரு விஷயம் தெரியவருகிறது. அந்த பெண்ணே தனக்கு அவனை பிடிக்கிறது எனச் சொல்ல வரும்போது அந்த பெண்ணிடம் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை எனத் திட்டி விட்டு  வீட்டுக்கு வருகிறான்.

சரியான வில்லத்தனமான அப்பா – என்ன செய்து விட்டார் என்பதை பிறகு தான் பார்க்க வேண்டும்! கடைசியில் எழுத்து போட்டு விட்டார்கள் என எழுந்து சென்று விடாதீர்கள்! கடைசி வரை பாருங்கள் – ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் கடைசியில்! :)

உங்கள் ரசனைக்கு இதோ அந்த குறும்படம் - க்ளீன் [B]போல்ட்[d]படம் பார்த்து நீங்களும் க்ளீன் [B]போல்ட்[d]! ஆகியிருப்பீர்கள் என நம்புகிறேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

24 comments:

 1. சுவாரஸ்யம்தான். நானும் விடையைச் சொல்லவில்லை! ஓகேயா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. ஹா ஹா. நல்ல திருப்பம். திருப்பமோ திருப்பம்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 4. உண்மைதான் கிளீன் போல்ட் ஆகிவிட்டேன் !
  த.ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. அடடா.. என்ன படம்னு இப்போ பார்க்க முடியாது.. சஸ்பென்ஸ் தாங்கல..

  ReplyDelete
  Replies
  1. மாலை வந்து பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 6. ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ ஜி!

   Delete
 7. நல்ல குறும்பட விமரிசனம். சஸ்பென்ஸ் வைத்து முடிவை வெள்ளித் திரையில் காணுங்கள் என்று எழுதி அசத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. ஏற்கனவே பார்த்துவிட்டேன்.
  இருந்தாலும் திரும்பவம் இங்கே பார்த்த போதும்
  சுவாரஸ்யம் குறையவில்லை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 9. உண்மையிலேயே கிளீன் போல்டு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 10. அருமை.இனி ஓவ்வொரு புதன்கிழமையும் நல்ல படங்களையும் நல்ல செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 11. உண்மையிலேயே நல்ல ட்விஸ்ட்... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டிபிஆர். ஜோசப் ஜி!

   Delete
 12. கதை முடிந்தது என நினைக்கும் போது கடைசியில் இன்னொரு டிவிஸ்ட்.... :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....