எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 24, 2013

எந்தப் பூவிலும் வாசமுண்டு....


சென்ற வார ஞாயிறில் நாளைய பாரதம் – 4 எனும் தலைப்பில் நான் குழந்தைகளை எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரம் அக்குழந்தைகள் போலவே மென்மையான பூக்களை எடுத்த படம்!


இந்த மாத PIT போட்டிக்கு இந்தப் புகைப்படத்தினை அனுப்பி இருக்கலாமோ? இரண்டு வண்ணங்கள் எனச் சொல்லி இருந்ததாய் நினைவு! இதில் மூன்றாவது வண்ணமாக பச்சையும் இருக்கிறதே!


இந்தப் பூ என்ன பூ எனத் தெரியாது.  தில்லியில் நிறையவே இருக்கிறது! உதிர்ந்து விழும் இதழ்களைப் பார்த்தால் குங்குமப் பூவோ என ஏமாற்றம் அடைய வாய்ப்புண்டு!


ரோஜா.....  பூக்களின் ராஜா!


இது என்ன பூ? வாசனை இருப்பதில்லை. ஆனால் இதில் இரண்டு மூன்று வண்ணங்கள் உண்டு! தில்லியில் பல இடங்களில் இருக்கிறது. பெரிய மரத்தில் பூக்கும் பூக்கள் இவை.....


மேலே பார்த்த அதே பூ....  நிறம் தான் வேறு! என்ன பூ எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்!


சாமந்தியில் ஒரு வகை!அடுக்கு சாமந்தி!


என்ன நண்பர்களே இந்த புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


36 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. பூக்களின் அழகோ அழகு...ரோஜா தவிர வேறெந்த பூவுக்கும் பெயர் தெரியவில்லை அண்ணே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 3. உங்கள் வலைத்தளப் பூ மிக அழகு. உங்கள் புகைப்படங்களும் அருமை. உங்கள் மின் அஞ்சல் தாருங்கள். காவிரிமைந்தன் kaviri2012@gmail.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது காவிரி மைந்தன்.....

   மிக்க மகிழ்ச்சி. எனது மின்னஞ்சல் venkatnagaraj@gmail.com

   Delete
 4. மலர்களை ரஸித்தோம். மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 6. அழகான வண்ண மலர்கள்.மிகவும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.....

   Delete
 7. அழகு,வண்ண மயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா.

   Delete
 8. அத்தனையும் கொள்ளை அழகு! மிகவும் ரசித்தேன்!
  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  என் வலைப்பூவிலும் ஒரு பூ இருக்கிறது. பார்த்தீர்களா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   உங்கள் வலைப்பூவையும் பார்க்கிறேன்.

   Delete
 9. //என்ன பூ எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்!//

  முடிச்சுப்பூ! :)))

  எல்லாப் படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முடிச்சுப் பூ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. மலர்களின் பெயர் எதுவாய் இருந்தால் என்ன ?எல்லாமே கண்ணுக்கு விருந்து !
  த.ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. பூக்களின் அழகை எடுத்துச் சொல்லும் புகைப் படங்கள் ஒவ்வொன்றும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 13. அழகான பூக்கள். முதல் படத்தை க்ளோஸ் அப்பில் எடுத்திருந்தால் போட்டிக்கு சரியாக இருந்திருக்கும்:)! இரண்டாவதில் பூவும், பொகேயும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. எடுக்கும்போது போட்டிக்கு அனுப்ப வேண்டும் எண்ணமெல்லாம் இருப்பதில்லை! :) அதனால் அப்போதைய நிலைப்படி எடுத்திருக்க வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. Malargalile pala niram kanden... padal ninaivirku varugiradhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.....

   Delete
 15. எல்லாப் பூக்களுமே அழகு. கண்ணிற்கு குளுமையும், மனதிற்கு இனிமையும் சேர்த்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 16. முதல் படம் கல்வாழை

  ரெண்டாவது ஸில்க் ட்ரீ பூ போல இருக்கு. நம்மூரில் வாகை மரம் என்று இதைச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 17. ரோஜாவைத் தவிர மற்ற பூக்கள் என்ன பெயர் என்று என்னால் சொல்ல இயலவில்லை. வழக்கம் போல நீங்கள் எடுத்த போட்டோக்கள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 18. படம் நான்கு, ஐந்து கார்த்திகைப் பூவில் ஓரினம் என்று நினைக்கின்றேன். சரியாகத்தெரியவில்லை.

  அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....