திங்கள், 23 டிசம்பர், 2013

ஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது மூன்றாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு பத்மநாபன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

நண்பர் திரு ரா.ஈ. பத்மநாபன் தில்லியில் வசிப்பவர். நான் பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து எனது நண்பர். நாகர்கோவிலை அடுத்த ராஜாக்காமங்கலம் எனும் ஊரைச் சேர்ந்தவர். தமிழில் ஆர்வம் அதிகம் உடையவர். என்னுடைய வலைப்பூவின் தொடர் வாசகர்களில் அவரும் ஒருவர். பல முறைச் சொல்லியும் வலைப்பூ ஆரம்பிப்பதில் இவர் தயக்கம் காட்டுவது ஏனோ புரியவில்லை – நேரம் இல்லை என்பது தான் அவர் சொல்லும் முதல் காரணம். அது உண்மையும் கூட. நிறைய விஷயங்கள் அவரிடம் உண்டு.  ஊர் கதைகளை, சிறு வயது நினைவுகளை அவர் சொல்லும் போது சுவாரசியமாக இருக்கும். விரைவில் வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.

திரு பத்மநாபன் அவர்கள் மேலே கொடுத்த ஓவியத்திற்கு எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்.... கவிதையை அனுப்பிய அவர் மின்னஞ்சலில் எழுதியதை அப்படியே தந்திருக்கிறேன்!

திரு ராஜனின் ஓவியத்திற்கு இந்த கவிராஜனின் கவிதை (சரி! சரி! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!)


தேன் சொட்டும் சோலையிலே
மான் பிடிக்க வந்தவனே!
வான் முட்டும் சேனையுடன்
வந்தவனை மறந்தாயோ!

வாளைத் தொடு காளையென
தோளைத் தொட வந்தவனே!
நாளையென நாள் குறித்து 
நடப்பவனை மறந்தாயோ!

நெஞ்சம் கவர்ந்தவளை,
கொஞ்ச வந்த கோமகனே!
வெஞ்சமர்க்கு மார்தட்டி
வந்தவனை மறந்தாயோ!

தையல் முகம் கண்டு
மையல்கொள வந்தவனே!
புயல் போல களம் காண
புறப்படவே மறந்தாயோ!

மெல்லினத்தைக் களவாட
வல்லினமாய் வந்தவனே!
எல்லைக் கோட்டருகே
எமனொருவன் நிற்கின்றான்!

வந்தவனை வென்றிட்டால், இந்தவனம் நந்தவனம்!
சொந்தசுகத்தினிலே செருவெல்ல மறந்திட்டால்
பிந்தைநாளெல்லாம் பிதற்றித் திரிவதன்றி
கந்தைதுணியணிந்து கதறிநிற்கும் வாய்ப்புமுண்டு.

பேதை விழியசைவில் போதை நீ கொண்டால்
பாதைமாறி விடும்! பயணம் சிதைந்து விடும்!
மாதை மறக்காமல் மதிவதனம் நோகாமல்
தோதாய் விடை சொல்லு! வென்றிடவே நீ செல்லு!

காமத்தீ அணைத்து களம் காண கிளம்பிவிடு!
நாமம் நிலைத்துவிடும்! நலமும் திளைத்து விடும்!
தீதை தீய்த்திட்டால் தீயும் உனை அஞ்சும்!
காதை காவியமாய் உலகெங்கும் பேர் விஞ்சும்!

-          ரா.ஈ. பத்மநாபன்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான மூன்றாம் கவிதை இது. கவிதை படைத்த திரு பத்மநாபன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



இன்றைக்கு திங்கள் கிழமை – 23-ஆம் தேதி.  வரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது ஒன்பது நாட்கள் - கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .பகிர்ந்து கொண்ட
    தங்களும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  2. அருமை... விரைவில் வலைத்தளம் ஆரம்பிக்கவும் திரு. பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    கவிதை சிறப்பாக உள்ளது ..எழுதி அனுப்பிய நண்பர் திரு.ரா.ஈ.பத்மநாபன்..அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அதை அருமையாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.

    த.ம 3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  5. அற்புதமான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு

  6. வணக்கம்!

    நல்ல கவிபத்ம நாபன் கவியடிகள்
    சொல்லச் சுரக்கும் சுவை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

      நீக்கு

  7. வணக்கம்

    மல்லி மணக்கின்ற மங்கையை ஈா்த்தருகே
    அள்ளி அணைக்கின்ற ஆணழகன்! - கள்ளியவள்
    கோடிக் கனவுகளைக் கொண்டு மெலிந்தாலும்
    ஓடி மறைவாள் உடன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர். கி. பாரதிதாசன் ஐயா.....

      //கோடி கனவுகளைக் கொண்டு மெலிந்தாலும்
      ஓடி மறைவாள் உடன்!//

      அருமை......

      நீக்கு
  8. பதில்கள்
    1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கவிஞர் கி. பாராதிதாசன் ஐயா.

      நீக்கு
  9. அருமையாக எழுதி இருக்கிறார் திரு பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. வண்ணமும் எண்ணமும் மிக அருமை ஐயா...!
    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.....

      நீக்கு
  11. அழகான ஓவியம் , நல்ல கவிதை ரசித்தேன் ! அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  12. வீரக் கவிதை படைத்த திரு . பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. Then, maan, thaiyal, maiyal, vallinam, mellinam, konjam, thanjam.....ippadi rhythamaga arumayana kavidhai padiththadhil manadhirku magizhchi kidaiththadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  14. அந்தப் புரத்தில் கொஞ்சநேரம் ஆசு'வாசமாய் 'இருக்கும் மன்னனை போர்க் களத்திற்கு அனுப்புவதிலேயே குறியாய் இருக்கிறாரே,கவிஞர் பத்மநாபன் !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு

  15. அழகிய ஓவியத்தை கவிதையால் உயிர்பித்த திரு பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. கவிதை நன்று! கவிஞர்களை வளர்க்கும் தங்கள் முயற்சி வெல்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  17. அழகான கவிதைப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  18. நல்லதொரு கவிதையை நமக்கிங்கு தந்த திரு பத்மநாபன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்!

    பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துடன் நன்றியும் சகோ!

    கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் வெண்பாவும் மிக மிக அருமை!
    அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  19. திரு. பத்மநாபன் அவர்களின் கவிதையை இரசித்தேன்! அருமை! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  20. வெண்மை பத்மத்தாள் வேணமட்டும் அருளியதால் வண்ணத் தமிழினிலே வழங்கிய கவிதை இது! பண்ணுக்கு இனியதுவாய் பாங்காக அமைந்துளது! ஓவியத்தில் பொதிந்துள்ள ஆழக் கருத்தெடுத்து அழகாக வைத்துள்ளீர்! தொடர்க காவியத்திறன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.

      நீக்கு
  21. ;) கவிதை எழுதியவருக்குப் பாராட்டுக்கள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  22. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் திரு. பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  23. திரு பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  24. வாழ்த்தியோர்க்கு வணக்கங்கள்! வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  25. //மெல்லினத்தைக் களவாட
    வல்லினமாய் வந்தவனே!
    எல்லைக் கோட்டருகே
    எமனொருவன் நிற்கின்றான்//

    நான் ரசித்த வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....