எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 10, 2014

ஃப்ரூட் சாலட் – 75 – மலை ஏற்றமும் காய்கறி வியாபாரமும் – ரேவதி சங்கரன் – கனவு!
இந்த வார செய்தி:

ஹரியானா மாநிலத்தின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் டொஹானா. இதுவரை கேள்விப்படாத ஊராக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். கிராமமாக இருந்தாலும் இதுவும் ஒரு பிரபலமான ஊர் தான். இங்கேயிருந்து மலையேற்றத்தில் புகழ் பெற்றவர்கள் இரண்டு பேர் – ஒன்று வினய் வர்மா மற்றொன்று அவரிடம் மலையேற்றம் பயின்ற ராம் லால் ஷர்மா.  நாம் இந்த வார செய்தியாக பார்க்கப் போவது 24 வயதான ராம் லால் ஷர்மா எனும் இளைஞர் பற்றி தான்.

கடந்த வருடத்தின் மே மாதம் ராம் லால் ஷர்மா எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து இந்தியாவின் மூவர்ணக் கொடியை நட்டு விட்டு வந்தார்.  அவருடைய இந்த சாதனையை பாராட்டி ஹரியானா அரசாங்கம் ஐந்து லட்ச ரூபாய் பரிசுத்தொகை அளிப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியிட்டது. அது வெறும் செய்தியாக மட்டுமே வெளியிடப்பட்டது என்பது தான் வருத்தம் தரும் செய்தி!

மலையேற்றத்திற்கு உண்டான செலவுகளை ஈடுகட்ட முடியாது, அரசாங்கம் அறிவித்த பரிசுத் தொகையும் கிடைக்காத ராம் லால் ஷர்மாவிற்கு மேலும் ஒரு அடி! அவரது தந்தை உடல் நிலை சரியில்லாது போகவே தினசரி வாழ்விற்குக் கூட ஆதாரம் இல்லா நிலை. என்ன செய்வது, வாங்கிய கடன் வேறு கழுத்தை நெரிக்க, இப்போது வேலை செய்ய ஆரம்பித்து விட்டார் – சொந்தமாய் ஒரு வேலை! என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு – தலைப்பில் சொன்னது போல காய்கறி வியாபாரம் தான்.

சில தன்னார்வ நிறுவனங்களையும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் உதவி கேட்டு சந்தித்த போதெல்லாம் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இவர் போலவே எவரெஸ்ட் சிகரம் தொட்ட மற்றொரு நபருக்கு ஹரியானா அரசாங்கத்தில் டி.எஸ்.பி. பதவியும் 21 லட்சம் பரிசுத் தொகையும் ஏற்கனவே கிடைத்து விட்டது. இப்படி இருக்க, இவருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையோ, உதவியோ கிடைக்காது போனதற்கு என்ன காரணம் என்பது அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம்!

ராம் லால் ஷர்மா போன்றவர்களுக்கு கிடைக்கும் இந்த மாதிரியான புறக்கணிப்பு மலையேற்றம் போன்ற கடினமான விஷயங்களில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு மனவேதனை தான் தரும் – அவர்களும் இவற்றை விட்டு விட வாய்ப்பு உண்டு! எல்லோரும் கிரிக்கெட் மட்டுமே கட்டிக்கொண்டு அழ வேண்டியது தான்! அதில் தானே எல்லா வியாபாரமும் இருக்கிறது!

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி

CONFIDENCE DOESN’T COME WHEN YOU HAVE ALL THE ANSWERS. BUT IT COMES WHEN YOU ARE READY TO FACE ALL THE QUESTIONS.

இந்த வாரத்தின் புகைப்படம்: 

பறவைகளும் மிருகங்களும் தங்கள் காலடிகளை மட்டுமே பதித்துச் செல்ல, மனிதன் மட்டுமே தான் இருந்த அடையாளமாக எத்தனை தடயங்களை விட்டுச் செல்கிறான்? இங்கே பாருங்களேன்!ரசித்த பாடல்:

ரேவதி சங்கரன் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் – பல திறமைகள் படைத்த ஒரு நபர். இங்கே ஒரு பாடல் பாடியிருக்கிறார் பாருங்க! இசையில்லாமலேயே நன்றாக இருக்கிறது. ஓ அம்மே ஓ அய்யேஎன்று அழைத்து அவர் சொல்லும் விஷயமும் நன்றாகவே இருக்கிறது. இதோ உங்கள் ரசனைக்கு!
ராஜா காது, கழுதைக் காது:

எனது வீட்டின் அருகிலேயே ஒரு பள்ளி இருக்கிறது – அங்கே படிப்பவர்கள் பெரும்பாலும் தில்லியில் மூன்றாம் தலைமுறையாக வசிக்கும் தமிழர்கள் – முக்கால்வாசி வட இந்தியர்கள். தமிழ் பேசினாலும் ஹிந்தி கலந்து தான் இருக்கும்! நேற்று பள்ளி உடையில் இரு மாணவிகளும் இரு மாணவர்களும் பள்ளி நேரத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர் – ஜோடிகளாக!

அதில் ஒரு மாணவன், அடுத்த மாணவன் கைபிடித்து சென்று கொண்டிருந்த மாணவியிடம், எனக்கு எப்பவும் உன்னை பற்றிய ட்ரீம் வருது!அதற்கு அந்த மாணவி சொன்னது – “நீ ஏண்டா தூங்கற! தூங்காதே!

படித்ததில் பிடித்தது!:

நேற்று என்பது நீ திட்டமிட்டது போல முடியவில்லை என்பதற்காக நம்பிக்கையை இழக்காதே! ‘இன்றுஎன்பதை உனக்காகவே கடவுள் உருவாக்கி இருக்கிறார். மீண்டும் தொடங்கு! உனக்கான சிறந்த விஷயம் இனிமேல் தான் வரவிருக்கிறது!

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. பரிசுத்தொகை அல்லது உதவி கிடைக்காதது வருத்தப்பட வைக்கிறது... புகைப்படம் சிந்திக்க வேண்டிய ஒன்று... மற்ற ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  நாட்டு நடப்புக்களையும் மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை படம் மூலம் விளக்கியுள்ளிர்கள்
  மனதுக்கு மிகவும் இதமான பாடலும் மிக நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்
  த.ம.3வத வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. அற்புதமான காணொளியுடன்
  பழமொழியுடன் மனதைச் சுடும்
  ஆதங்கத்துடன் அருமையான புரூட் சாலட்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. அருமையான பதிவு! புகைப்படம் உணர்த்தும் கருத்து அருமை! குறுஞ்செய்தி யோசிக்க வைக்கிறது! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 6. ஃப்ரூட் சாலட் படித்ததில் பிடித்தது!:

  நேற்று என்பது நீ திட்டமிட்டது போல முடியவில்லை என்பதற்காக நம்பிக்கையை இழக்காதே! ‘இன்று’ என்பதை உனக்காகவே கடவுள் உருவாக்கி இருக்கிறார். மீண்டும் தொடங்கு! உனக்கான சிறந்த விஷயம் இனிமேல் தான் வரவிருக்கிறது! ...!

  பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 8. புகைப்படச் செய்தி - நச்.

  (ராஜாக்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு நடப்பதால்தான் காதலர்கள் ஒருவருக்கொருவர் சப்தமாக பேச முடியாமல் கன்னத்தோடு கன்னம் வைத்து பேசுகிறார்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. நல்ல பகிர்வு. வித்தியாசமாய் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 10. ஃப்ரூட் சாலட் சுவை அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. “நீ ஏண்டா தூங்கற! தூங்காதே!”
  >>
  சரியான கேள்விதான்.

  மனிதனின் தடயம் யோசிக்க வைக்குது..,

  கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளை விளையாட்டா புறக்கணிக்குறாங்கப் போல

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. ஆஹா ... ரேவதி சங்கரன் அவர்களின் கணீர் குரல்
  இசை இல்லாமலேயே களை கட்டி இருக்கிறது .
  அவரவர் அதிர்ஷ்டம் போலும் ...... உச்சியைத் தொட்ட
  மனிதரின் கதை. குப்பை மட்டுமே மனிதனின்
  அடையாளமாகி விட்டது வருந்தத் தக்க விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 13. ராம் லால் ஷர்மாவின் விசயத்தில் அரசாங்கம் விட்ட பிழை ஒரு
  பெருந் துரோகமே .முயற்சி உடையவர்கள் தோற்க மாட்டார்கள் .
  இன்றைய ஃப்ரூட் சலாட் வெகு சிறப்பு .உங்களுக்கு என் மனமார்ந்த
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 14. ரஸித்தேன். பாராட்டுக்கள். அனைத்தும் அருமை.

  திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் பேச்சும், எழுத்தும், மற்ற அனைத்துத் திறமைகளும் என்னை எப்போதுமே வியக்க வைக்கும்.

  பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. ஆக மொத்தம் பெற்றோர்கள் தூக்கம் போச்சு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 16. ராம்லால் போன்ற இளைஞர்கள் புதிய முயற்சி இனி செய்யவே மாட்டார்கள். வாழ்க நமது அரசாங்கம்!
  ரேவதி சங்கரனின் பாட்டு சூப்பர்!
  இந்த வாரமும் ப்ரூட் சாலட் வழக்கம்போல இனிப்பாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 17. கிரிக்கெட் மற்ற விளையாட்டுக்களை அழித்துவிட்டது வேதனையானது! சுவையான புருட் சாலட்! பேஸ்புக் இடுகை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. இந்த வார ஃப்ரூட் சாலட் மிகவும் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக நம் இந்தியாவில் கொஞ்ச காலமாவது கிரிக்கெட்டை தடை செய்துவிட்டு, மற்ற விளையாட்டுக்களுக்கு கொஞ்சம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 19. பள்ளிக்குழந்தைகள் ஜோடிகளாக - வருத்தப்பட வைக்கக்கூடிய செய்தி.

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 20. அருமையான சாலட் பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 21. ராம்லால் செய்தி வருத்தம் அளிக்கிறது.
  ரேவதிசங்கரன் பாடல் அருமை.
  அருமையான் ஃப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 22. வழக்கம்போல் பழக்கலவை சுவையாய் இருந்தது.குறிப்பாக திருமதி ரேவதி சங்கரனின் பாடல் கருத்துள்ள இனிமையான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 23. ஃப்ருட் சாலட் அருமை ரேவதி சங்கரன் அவர்களின் பாடலும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....