எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 31, 2014

ஃப்ரூட் சாலட் – 78 – சாதனை – பெப்சி – வாசகர் கூடம் – அடையாளம்
இந்த வார செய்தி:

வினோத் குமார் சிங் – பீஹார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் பாராசிக்வாரா எனும் கிராமத்தினைச் சேர்ந்த 33 வயது இளைஞர். பீஹார் மாநில அரசில் வேலை பார்க்கும் இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தனது ஊரிலிருந்து கொல்கத்தா செல்வார். தனது ஊரில் நீச்சல் பயிற்சிக்கு போதிய வசதி இல்லை என்பதால் வாராவாரம் இப்படி பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

தேசிய அளவில் பல நீச்சல் போட்டிகளில் வென்றுள்ள இவர், உலகளவிலும் சில போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான தகுதிகளை அடைந்துள்ளார்.  இவரது நீச்சல் திறமையின் காரணமாகவே இவருக்கு பீஹார் மாநில அரசில் வேலை கிடைத்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.  இப்போது இவர் நீச்சலில் இன்னும் ஒரு மகத்தான சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

என்ன சாதனை? புகழ் பெற்ற English Channel ஐ நீந்திக் கடக்கும் சாதனை, அதுவும் எப்படி, தனது கண்களை கட்டிக் கொண்டு, கால்களை இரண்டையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நீந்திக் கடக்கும் சாதனை செய்ய முயற்சி செய்ய இருக்கிறார்.  நீச்சலில் ஒரு வகையான Butterfly Stroke இவருக்கு மிகவும் சுலபமாகவும், இயற்கையாகவும் வருகிறது என்கிறார் இவரது பயிற்சியாளர். 

கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவரது தந்தை இவருக்கு நல்ல படிப்பினைக் கொடுத்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கொல்கத்தாவிலே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற இவர் மேல்படிப்புக்காக பீஹார் வந்தாராம்.  ஆனாலும், படிப்பினை விட நீச்சலில் இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து அதில் ஈடுபட்ட அவருக்கு அந்த நீச்சல் காரணமாகவே வேலையும் கிடைத்திருக்கிறது. 

ஏற்கனவே இந்த English Channel-ஐ குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் கடந்திருக்கிறார்கள். இவரை மட்டும் இங்கே சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு – பிறவியிலேயே இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. தனது குறையை பெரியதாக எடுத்துக் கொள்ளாது, வாழ்க்கையில் சிறப்பான செயலை செய்ய நினைக்கும் வினோத் குமார் சிங் அவர்களை வாழ்த்துவோம். அவரது முயற்சி வெற்றி அடைய உங்கள் சார்பில் எனது வாழ்த்துகளும்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்துடன் அமர்வதில்லை. ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை.

இந்த வார குறுஞ்செய்தி

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம் போன்றது. ஆனால் என்னிடம் பல சிறப்பான மலர்கள் கொண்ட அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அப்படி ஒரு சிறப்பான பூ ஒன்று இப்போது இந்த குறுஞ்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிறது!

இந்த வாரத்தின் புகைப்படம்: 


என் இலைகள் எங்கே?
மீண்டும் நான் துளிர்ப்பது எப்போது?

ரசித்த காணொளி:

பெப்சியும் கோகோ கோலாவும் போட்டிப் போட்டுக்கொண்டு பல விளம்பரங்களைச் செய்வதுண்டு.  அப்படி ஒரு பெப்சி விளம்பரம் இன்றைய ரசித்த காணொளியாக உங்கள் பார்வைக்கு......புதிய வலைப்பூ:

வாசகர் கூடம் – புத்தகம் சரணம் கச்சாமிஎன்ற தலைப்பில் நம்ம பதிவுலக வாத்யார் கணேஷ், அவரது சீடர்களான திடம் கொண்டு போராடும் சீனு, நஸ்ரியா புகழ் பரப்பும் கோவை ஆவி, வேலையில் சேர்ந்து விட்டாலும் இன்னமும் பள்ளி மாணவனாகவே நினைக்கும் ஸ்.பை. சரவணன், அலைகளை கரை சேர விட மறுக்கும் அரசன் மற்றும் கனவுகளை மெய்யாக்க நினைக்கும் ரூபக் ராம் ஆகியோருடன் சேர்ந்து புதியதாக ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம்துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள். 

முதல் பதிவாக பரபரப்பின் பெயர் துளசிதளம்! என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம் கதை பற்றி எழுதி இருக்கிறார்கள். சிறப்பான இவர்களது சேவை தொடர நீங்களும் ஆதரவு தரலாமே!


படித்ததில் பிடித்தது!:

அன்புருவமாய்
அமைதிப் பூங்காவாய்
கருணைக் கடலாய்
பண்புப் பெட்டகமாய்
தியாகச் சுடராய்
அழகுச் சிலையாய்
போகப் பொருளாய்
வரையறுக்கப்பட்ட அடையாளங்களில்
தொலைந்தே போனது
எம் ஆதி அடையாளம்!

-   கிருட்டினம்மாள். [சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பிலிருந்து!]
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. இன்றைய முகப்புத்தக இற்றை, பறவை தன் சிறகுகளை நம்புவது போல, கைகள் இல்லாமல் நீச்சல் பயிற்சி செய்து சாதனை படைக்க விழையும் வினோத் குமார் சிங்கிற்கு பொருத்தமான ஒன்று! அவர் தன் உழைப்பையும், தன் மேல் உள்ள நம்பிக்கையையும், திறமையையும் நம்புவதால்! வாழ்த்துவோம் அவரை!!!

  குறுஞ்செய்தி அபாரம்!!!! ஃப்ரூட் சாலடின் சுவையை அமிர்தம் போல் இன்னும் கூட்டி விட்ட்து!!!!

  புகைப்படம்—இலைகள் விழுவதும் மீண்டும் துளிர்ப்பதும், இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறி மாறித்தான் வரும் என்பதை விளக்குகின்றதோ!? , விளம்பரம் அருமை! அருமையான கற்பனை! புதிய வலைப்பூ அறிந்தோம்!

  சுஜாதா அவர்களின் கற்றலும் பெற்றலுமிலிருந்து எடுத்த கவிதை ஏற்கனவே வாசித்த்து தான் என்றாலும் அதை இங்கு பகிர்ந்து திரு சுஜாதா அவர்களை நினைவு கூர்ந்த்தற்கு மிக்க நன்றி!! யாருமே மறக்க முடியாத ஒரு எழுத்தாளர்!  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 2. தான் முன்னேறாதற்கு பல குறைகளை சுட்டிக்காட்டி கொண்டிருப்பவர்களிடையே தனக்கு குறை இருந்தும் அதை சொல்லாமல் சாதனை படைக்கும் வினோத் ஒரு வினோதமான நல்ல மனிதனே. அவரின் சாதனையை வாழ்த்தும் அதே நேரத்தில் அந்த சாதனையை எங்களிடம் பகிர்ந்த உங்களையும் பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வினோத் ஒரு சாதனை மனிதர் தான்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. ப்ரூட் சாலட் எப்போதும் போல சுவையாக இருந்தது.. வாசகர் கூடம் தள அறிமுகத்திற்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 4. வீடியோவைப் பார்த்ததும் கடைசிக் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்... வாசகர் கூடம் அறிமுகத்துக்கு நன்றி....

  ReplyDelete
  Replies
  1. பார்த்து சரவணன், விழுந்து சிரிக்கும் போது பெப்சி கேன் கீழே இருந்துவிடப் போகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   Delete
 5. ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்துடன் அமர்வதில்லை. ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை

  என்னும் அருமையான வரிகளும்
  காணொளி விளம்பரமும் ரசிக்கவைத்தது...! ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. வாசகர் கூடம் தளம் அறிமுகம் உட்பட ப்ரூட் சாலட் நல்ல சுவை...

  நன்றி... வாழ்த்துக்கள்..,.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 8. இரு கைகள் இல்லாமலே சாதனை செய்ய விரும்பும் வினோத் குமாருக்கு வாழ்த்துக்கள் !
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி.

   Delete
 9. வழக்கம்போல் தாங்கள் தரும் இந்த பழக்கலவையும் அருமை. அதிலும் எனக்குப்பிடித்தது ‘’பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை.’’ என்ற துணுக்குத்தான். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. இருகை இல்லையெனில் என்ன? வினோத் குமாரின் தன்னமபிக்கையை கண்டு வியக்கிறேன் !

  முகபுத்தக இற்றை எப்போதோ ட்வீட் வடிவில் படித்ததாக நியாபகம் 'பறவைகள் அமர்வது கிளையை நம்பி தங்கள் சிறகுகளை நம்பி' அப்பப்பா என்ன ஒரு தத்துவம்

  வாசகர் கூடம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி சார்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 11. ஃப்ரூட் சாலட் வழக்கம்போலவே சுவையாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி. ஆர். ஜோசப் ஜி!

   Delete
 12. நல்ல தொகுப்பு. வாசகர் கூடம் நல்லதொரு முயற்சி. குழுவினருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. கைகள் இல்லாமல்... கால்களையும் கட்டிக் கொண்டு... அடேங்கப்பா... வினோத் குமார் சிங்குக்கு வாழ்த்துகள் சொல்வோம்.

  குறுஞ்செய்தியும் புகைப்படமும் அருமை.

  புதிய வலைப்பூ தொடங்கியிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. வினோத் குமார் வாழ்க!

  புதிய விமர்சனத்துக்கான தளம் அறிமுகத்துக்கு நன்றி சகோ.

  தன் சிறகை நம்பும் பறவை நமக்கு முன்னோடி.

  குறுஞ்செய்தி இறுதி வரி புன்னகை தந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 15. சுவையான ஃப்ரூட் சலாடில் காணும் செய்திகள் எல்லாம் பதிவிட்ட உங்களை வாழ்த்தச் சொல்கிறது. நம்முடைய சில தொலைக்காட்சித்தளங்கள் மாற்றுத்திறனாளிகள் பலரை வெளிச்சத்துக்கொண்டு வருகிறது. ஆனால் வினோத் குமாரின் நீச்சலை காண்பிக்க முடியாதோ என்னவோ. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 16. இரு கைகள் இல்லாமலே நீச்சலா? எனக்கு நீச்சலே தெரியாது. கைகள் இல்லாமல் நீச்சல் அடிப்படை என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை .
  மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை என்னைப்போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
  அவருடைய புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். இதனை பகிர்ந்துக்கொண்டாதற்காக உங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. முகநூல் இற்றை அருமை!சுவையான பழக்கலவை! வாக்கு நவம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 18. எப்பவும் போல அருமையான ஃப்ரூட் சாலட்.. வாசகர் கூடம் அருமையான அறிமுகம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 19. சுவைத்தேன் மகிழ்ந்தேன் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 20. வினோத் குமார் சிங் அவர்களை வாழ்த்துவோம். அவரது முயற்சி வெற்றி அடைய உங்கள் சார்பில் எனது வாழ்த்துகளும்!//

  வினோத் குமார் சிங் அவர்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  //பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை.//

  அருமை.

  //எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம்//

  அந்த கதை குமுதம் என்று நினைக்கிறேன் தொடர்கதையாக வந்த போது பயந்து கொண்டு படித்தது நினைவு இருக்கிறது.
  புதிய தளம் துவங்கி இருக்கும் ரூபக்ராம் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ஃப்ரூட்சாலட் அருமை.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 21. சாதனை மனிதர் வினோத் குமாருக்கு வாழ்த்துக்கள்! வாசகர் கூடத்தில் முதல் இடுகையை படித்துவிட்டேன்! முகநூல் இடுகை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 22. Indha advertisement ippadhan paarkkiren. nandraga irukkiradhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 23. அருமையான ஃப்ரூட் சாலட். வாசகர் கூடம் நல்லதொரு முயற்சி. குழுவினருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....