திங்கள், 6 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 9 – எழிலி சேஷாத்ரி



டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஒன்பதாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.



இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

திருமதி எழிலி சேஷாத்ரி, தனியாக ஏதும் வலைப்பூ வைத்திருப்பவர் அல்ல. அவர் காரஞ்சன் சிந்தனைகள் எனும் பெயரில் வலைப்பூவில் கவிதைகள் எழுதி வரும் நமது நண்பர் சேஷாத்ரி அவர்களின் துணைவி.  ஏற்கனவே இந்த ஓவியத்திற்கு நண்பர் சேஷாத்ரி எழுதிய கவிதை இரண்டாம் கவிதையாக வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இல்லையெனில் இங்கே பார்க்கலாமே! 

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....


இறையனார் கவிதையிலே

இடம்பெற்ற வண்டினமே!



கடிமலர்ச் சோலையிலே

காளையவன் வரவுக்காய்

காத்திருந்து பூத்தவிழி

காண வந்தீரோ?



பிரிவுத்துயர் போக்க

பரிவுடனே வருடலுடன்

நறுமண மலர்ச்சரத்தை

நங்கைக்கு அவன் சூட்ட

மலர்ந்த முகங்கண்டு

மயங்கிச் சூழ்ந்தீரோ?



நாணித் தலைசாய்த்து

நங்கையவள் புன்னகைக்க

புன்னகையைப் பூவென்று

எண்ணி விட்டீரோ?



எத்தனையோ மலரிருக்க

என்னவளை ஏன்சூழ்ந்தீர்?

மதுவின் மயக்கத்தில்

ஏதும் செய்வீரோ

என்றவனும் விரட்டுகிறான்!



வண்ண ஓவியத்தை

வார்த்தையில் உரைத்திட

எண்ணத்தில் எழுந்தவற்றை

எழுதிவிட்டேன் கவிதையிலே!

                       

-          எழிலி சேஷாத்ரி


என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான ஒன்பதாம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!



டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்துவிட்டேன். ஆகையால் ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கிற அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:










டிஸ்கி: இந்த வாரம் வலைச்சரத்தில் எனது துணைவி ஆதி வெங்கட் ஆசிரியர் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  அவரது முதல் பதிவு - இரண்டாம் அத்தியாயம்.  இது தகவலுக்காக!

44 கருத்துகள்:

  1. புன்னாகையைப் பூவென்று நினைக்கும் மயக்கம். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஓவியத்திற்கேற்ற அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. கவிதை அருமை எழிலி அவர்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    கவிதை மிகவு அருமை ..வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம.5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  6. என் மனைவியின் கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  7. வண்ண ஓவியத்தை
    வார்த்தையில் உரைத்திட
    எண்ணத்தில் எழுந்தவற்றை
    எழுதிவிட்டேன் கவிதையிலே! //

    அழகான வார்த்தை ஓவியம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. அருமை... திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  10. சிறப்பான வரிகளுப்புப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
    மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  11. திருமதி சேஷாத்திரிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  12. கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்
    உள்ளம் கவர் கள்வனுக்கே சொந்தம்!
    தள்ளி நிற்பீர் வண்டினமே! நெஞ்சை
    அள்ளும் கவி கொடுத்தீர் - வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் எழிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  15. எளிமையான அழகு கவிதை.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  16. திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    மிக அருமையான படத்திற்கு
    பொருத்தமான் கவிதை.
    வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  17. நல்ல கவிதை! நானும் எழுத முயற்சித்தேன்! வேளைப்பளுவால் முடியவில்லை! இரண்டாம் வாய்ப்பில் முயற்சிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  18. அருமை, இனிமை புதுமை
    அடியேனும் முயற்சித்துபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதை கிடைத்தது. நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்.

      நீக்கு


  19. வணக்கம்!

    வண்டினைப் பார்த்து வடித்திட்ட சொல்லெல்லாம்
    கண்டினை ஒக்கும் கழம்ந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

      நீக்கு
  20. கவிதைக்கும் உமக்கும் வாழ்த்து! த ம10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  21. Arumaiuyana kavidhai. The lyrics in the fifth stanza i.e. ""ethanaiyo Malar iruikka" is really superb. Among all the kavidhai's published so far, the entire picture has been narrated in this only.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணே!

      நீக்கு
  22. Arumaiyan kavithai. Chittirathil ulla anaithaiyum pangaga edutthu vilakki ullar. Adhuvum 5th Stanzavin varigal "எத்தனையோ மலரிருக்க என்னவளை ஏன்சூழ்ந்தீர்? மதுவின் மயக்கத்தில் ஏதும் செய்வீரோ என்றவனும் ரட்டுகிறான்! miga arumai. Kavignarukku en vazhthukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணே... வாழ்த்துகளைச் சொல்லி விடலாம்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....