எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 19, 2014

வாகனங்கள்......இறைவன் வீதி உலா வரும்போது விதம் விதமான வாகனங்களில் வருவதைப் பார்த்திருக்கிறோம். என்ன வாகனமாக இருந்தாலும், எத்தனை தான் அலங்காரம் செய்திருந்தாலும், அந்த நேரத்தில் வாகனம் மேல் வீற்றிருக்கும் இறைவனுக்குத் தானே எல்லா மரியாதையும். அப்போது மட்டுமல்ல, இந்த வாகனங்களுக்கு எப்போதுமே தகுந்த மரியாதை கிடைப்பதில்லை. வீதி உலா வராத நாட்களில் கோவில்களில் இந்த வாகனங்களை ஏதோ ஒரு பிரகாரத்தில் போட்டு விடுவார்கள் – அடுத்த ஊர்வலம் வரை எந்த கவனிப்பும் கிடையாது!

எந்த கோவில்களுக்குச் சென்றாலும், இந்த வாகனங்களை கவனிப்பதும் புகைப்படம் எடுப்பதும் எனக்கு ஒரு பழக்கம் – நாமாவது அவற்றை கவனிப்போம் என்று ஒரு எண்ணம். அப்படி எடுத்த வாகனங்களின் படங்கள் இன்றைய ஞாயிறில் உங்களுக்காக!

என்ன நண்பர்களே, இந்த வார ஞாயிறில் நான் பகிர்ந்த படங்களை ரசித்தீர்களா?  அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களை பார்க்கலாம்!....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.. தேவை வரும் போதுதான் தூசி தட்டுவார்கள்.....
  படங்கள் எல்லம் அழகாக உள்ளது... வாழ்த்துக்கள் .

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. வித்தியாசமான சிந்தனையில் விளைந்த வித்தியாச படங்கள். ரசிக்க முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. உங்களின் கவனிப்பிற்கு பாராட்டுக்கள்... படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. வாகனங்கள் கடவுளர்க்கு ஏன் ? அவை உணர்த்துவது என்ன என்பது பற்றி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட ஒரு புத்தகத்தை .
  அண்மையில் படித்தேன்.

  ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு சிறப்பு இயல்பு உண்டு. அதன் தனித் திறமை ஆற்றல் என்ன ? இவற்றினை தமது வாகனமாகக் கொண்டு இருப்பதின் நோக்கம் என்ன என்று அழகாக வர்ணித்துள்ளனர். கிட்டத்தட்ட எல்லா வாகனங்களும் இங்கே இடம் பெற்று இருக்கின்றன.

  இதை ஒரு wishful thinking என்று ஒதுக்கியும் விடலாம். அதே சமயம் பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதும் நினைவுக்கு வருகிறது. ஒரு சிங்கமும் யானையும் எந்த அளவுக்கு ஆற்றல் உடையவை அவையும் தம்மை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து பணிகின்றன. ஒரு பாம்பு எத்துனை விஷமுடைத்து ? இருப்பினும் அமைதியாக படுக்கை யாக வும் அமைந்துள்ளது.

  சிவனின் ஆபரணங்களைக் கவனியுங்கள். முற்றிலும் எதிர்மறை குணங்களை உடைய விலங்கினங்கள் உருவங்களுடன் கூட.இருக்கிறார் இறைவன்.

  இது போலவே தான் உலகமும். எதிர்மாறான குணங்களை உடைய மனிதர் இருப்பினும் ஒரு சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் ஒத்துப்போகவேண்டிய, தம்மை தம் எண்ணங்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டுக்குள் இருத்தி, அமைதி காத்திடுதல் வேண்டும் எனும் தத்துவம்.

  நேரம் கிடைப்பின் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்.

  சுப்பு தாத்தா.


  ReplyDelete
  Replies
  1. புத்தகம் தலைப்பு சொல்லுங்க....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 5. எப்போதுமே வாகனங்களில் வருபவர்களுக்குத்தான் மாலையும் மரியாதையும். வாகனத்திற்கு அல்ல. ஆனால் வாகனங்களும் கவனிக்கப்பட வேண்டியவை என்பதை அழகாக படங்கள் மூலம் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. அட விழாநாளிலே நம்மை கண்டுக்க ஆளிருக்காது .இவர் யாரு இப்போ போட்டோ புடிக்கிறாரு என்று வாகனங்கள் உங்களை அதிசயமாய் பார்த்திருக்கும் .அருமை சார் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 7. அன்புடையீர்..
  பழைமையான வீதியுலா வாகனங்கள் கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே - சேதமடைகின்றன. உண்மையில் இவற்றைக் காப்பாற்றுவது யார் பொறுப்பு?..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. ஒரே சமயத்தில் பத்துபதினைந்து சாமிகள் வீதியுலா வரும்போது அவர்களின் கையில் உள்ள ஆயுதங்களைவிட அவர்களின் வாகனங்களை வைத்துதான் பெயர் சொல்லுவோம்.

  வித்தியாசமான எண்ணம். தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 10. ஐ...இது நல்லா இருக்கே.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம் ஜீவா....

   Delete
 11. எந்த கோவில்களுக்குச் சென்றாலும், இந்த வாகனங்களை கவனிப்பதும் புகைப்படம் எடுப்பதும் எனக்கு ஒரு பழக்கம் – நாமாவது அவற்றை கவனிப்போம் என்று ஒரு எண்ணம்.
  /
  தேடிச்சென்று பார்த்து வருவதுண்டு .. சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. நமக்கு மட்டும்தான் வாகனங்கள் சொந்தமா ?
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. வாகனங்கள் அழகாய் இருக்கிறது. அழகாய் எடுத்து பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 14. வாகனங்கள் மகிழ்வித்தன. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. படங்கள் கிறிஸ்டல் கிளியர் ஆக உள்ளது. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 16. தங்களுக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வருகிறது. மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. பதிவைப் படிப்பதற்கும், புகைப்படத்தைப் பார்ப்பதற்கும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. பல கோவில்களில் நானு பார்த்திருக்கிறேன். அவற்றை கவனித்து அழகாக படம் பிடித்துவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 18. அருமையான பகிர்வு. தேடிச் சென்று எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 19. மேல் லோகத்தில் இன்னும் விலங்குகளை தான் உபயோகப் படுத்துகிறார்களா இல்லை அங்கேயும் டெக்னாலஜி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.. போய் தான் பார்க்கணும்.. ;-)

  ReplyDelete
  Replies
  1. போகும்போது பார்த்துக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 20. வாகனம் - பதிவு நல்ல கனம். வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 21. ஒரு வித்தியாசமான சிந்தனை! புதிய படங்கள்! சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 22. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் விழா நாட்களில் வாகனங்களில் ஆண்டவர் வீதியுலா வருவார். ஒரு முறை சென்றபோது ராவணன் தூக்கிய கைலாச பர்வதம் மேல் பவனி வருவது கண்டேன். அதில் ராவணனுக்கு ஒன்பது தலைகள் மட்டுமே இருந்தது. அதற்கும் ஒரு கதை இருந்தது என்று சொல்லத் தேவை இல்லை. உங்கள் பதிவில் ஒன்பதாவதுபடம் என்ன வாகனம்.?

  ReplyDelete
  Replies
  1. என்ன வாகனம் என்று தெரியவில்லை. அடுத்த முறை திருப்பராய்த்துறை செல்லும் போது கேட்டு பகிர்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....