எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 21, 2014

கைச்சிலம்பாட்டம்தலைநகரிலிருந்து பகுதி - 25

இந்த வருடம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய மாபெரும் தை தமிழ் விழா 2014தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 17,18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற்றது. முதல் இரண்டு நாட்களும் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. ஞாயிற்றுக் கிழமை வேறு சில இடங்களுக்குச் சென்றுவிட்டு தமிழ்ச் சங்கத்தினை அடைந்த போது மணி மாலை 07.00. அப்போதுதான் கிராமியக் கலைஞர்களை கௌரவித்துக் கொண்டிருந்தார்கள்.


முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி நண்பர் பத்மநாபன் சொல்லிக் கொண்டிருந்தார். ஞாயிறு அன்று நடைபெற்றது மூன்றே நிகழ்ச்சிகள் என்றாலும் முத்தான நிகழ்ச்சிகள். முதலில் திருச்சி கல்லூரி ஒன்றில் படிக்கும் நான்கு மாணவிகளின் கரகாட்டம், அதன் பிறகு பொய்க்கால் குதிரை ஆட்டம், நிறைவாக கைச்சிலம்பாட்டம்.கரகாட்டம் வெகு சிறப்பாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் இந்த பெண்கள் நமது மாநிலத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகாட்டத்தினை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இவர்கள் நடனம் முடிந்த போது அறிவிப்பாளர் சொன்ன விஷயம் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதால், அதையும் இங்கே எழுதுகிறேன். இந்த வருடம் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் இவர்கள் நான்கு பேரும் கரகம் ஆட இருக்கிறார்கள். இந்த யுவதிகளுக்கு உங்கள் சார்பில் எனது பாராட்டுகள்!பொய்க்கால் குதிரை ஆட்டமும் மிகவும் சிறப்பாக இருந்தது. மராட்டியர்கள் வழி வந்த இந்த கலை இன்னமும் தஞ்சை பகுதிகளில் இருக்கிறது. தஞ்சை பகுதியில் இருந்து தான் இன்றைய நிகழ்வில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடத்திய இருவரும் வந்திருந்தார்கள்.  இவர்கள் நடுவே ஒரு சிறிய மேஜிக் நிகழ்ச்சியும் நடத்தினார்கள். இந்த இருவரும் கணவன் – மனைவி என்பது கூடுதல் தகவல்.   என்னை மட்டுமல்லாது, திரளாக வந்திருந்த தமிழ் மக்கள் பலரையும் வெகுவாக ஈர்த்தது கைச் சிலம்பாட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டம் தான்.  முதலில் அறிவிப்பு செய்தபோது ஏதோ கழி வைத்து விளையாடும் சிலம்பாட்டம் என்று நினைத்திருந்தேன்.  மேடையில் வந்த கிராமியக் கலைஞர்களிடம் சிலம்பாட்டம் ஆட ஏதுவாய் கழி ஏதும் இல்லாது இருக்கவே அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.கைச்சிலம்பாட்டம் என்பது கிராமியக் கலைகளில் ஒன்று எனவும், கண்ணகி மதுரையை எரித்தபோது கையில் வைத்திருந்த ஒரு கால் சிலம்பு போல இக் கலைஞர்கள் கைகளில் சிலம்புகள் வைத்துக் கொண்டு, கால்களில் சதங்கை கட்டிக் கொண்டு ஆடுவது என்பதும் அறிவிப்பாளர் சொன்ன பிறகே தெரிந்தது. அப்பப்பா இந்த இளைஞர்கள் ஆடிய ஆட்டம்! ரசித்துக் கொண்டிருந்த  அனைவரையும் எழுந்து ஆட வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. சில சமயங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நானும் அதை விடுத்து கரகோஷம் எழுப்பியபடியே இருந்து விட்டேன்!


கைகளில் சிலம்பு கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டமும், பல்வேறு விதமான சாகசங்களும் மனதினைக் கொள்ளை கொண்டது. அநாயாசமாக ஒருவர் மீது ஒருவர் நின்று கொண்டும், சைக்கிள் மீது ஏறி நின்றும், அவர்கள் செய்த பல விஷயங்களை விவரிக்க எனக்கு வார்த்தைகள் பற்றாக்குறை என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய பதிவில் அவர்களது கைச்சிலம்பாட்டம் நிகழ்வின் போது எடுத்த சில படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். மற்ற படங்கள் பிறிதொரு சமயத்தில்.....சிறப்பான இந்த கலைஞர்களுக்கு, விழாவின் ஆரம்பத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் குமாரி சச்சு அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள். நிகழ்வின் முடிவில் அனைத்து கலைஞர்கள், உருமி, மேளம், நாயனம் போன்ற வாத்தியங்களை இசைத்தவர்கள் ஆகிய அனைவரும் மேடையில் மொத்தமாக நின்று கொண்டிருக்க, அவர்களை அப்படியே என் காமெராவுக்குள் சிறை பிடித்து அவர்களை வாழ்த்தி மனதில் அவர்கள் தந்த நிகழ்வுகளை அசை போட்டபடியே வெளியே வந்தோம் நானும் நண்பர் பத்மநாபனும்.

பாரம்பரிய கலைகளில் பலவற்றை சினிமா எனும் பேரரக்கனுக்கு இழந்து விட்ட நிலையில் இது போன்ற பாரம்பரிய கலைஞர்களை தொடர்ந்து ஆதரிக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எனது வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.   


  

34 comments:

 1. அருமையான படங்கள் மூலம், கைச்சிலம்பாட்டம் உட்பட நிகழச்சியின் சிறப்பை அறிய முடிந்தது...

  தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. உங்களின் பதிவின் வாயிலாக கைச்சிலம்பாட்டம் பற்றி இன்று தான் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு புகைப்படமும் தங்களது புகைப்படம் எடுக்கும் திறமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. தை தமிழ் விழாவில்
  கைச்சிலம்பாட்டம் -மற்றும் கிராமிய கலை விருந்துகளைபகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. கைச்சிலம்பாட்டம் நேரில் பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்வாரசியமாகத் தான் இருந்தது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. புரவி நடனக் கலைஞர்களான தம்பதியரை நான் தஞ்சையில் பார்த்திருக்கின்றேன்.
  பாரம்பரிய கலைஞர்களை ஆதரித்து கலைநிகழ்ச்சிகளின் மூலமாக அவர்களை சிறப்பிக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்களே..
  தில்லித் தமிழ்ச் சங்க கலைநிகழ்ச்சிகளை பதிவின் மூலம் வெளிப்படுத்திய தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. எனக்கு கரகாட்டம் பார்க்க பிடிக்கும். கல்ர்ஃபுல் ட்ரெஸ், வாழைக்காய் வெட்டுறது, ஊசியை கண்ணுல எடுக்குறது, இரும்பு வளையத்துக்குள் புகுந்து வருவது என எத்தனை விசயம் இருக்கு அந்த ஆட்டத்துல!! என்ன அதுல கொஞ்சம் ஆபாசம் கலந்துப் போச்சு. அதான் சோகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. புகைப்படங்கள் அருமை. மீண்டும் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்த உணர்வு.

  பொய்க்கால் குதிரையாட்டம் அழகாக ‘stylish'ஆக ரசிக்கும் படி இருந்தது.

  கைச்சிலம்பாட்டக் கலைஞர்களுக்கு ஒரு சலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 8. கைசிலம்பாட்டம் தகவல்களும் படங்களும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 9. gramia nigazhchchigalai neril paarththa unarvu kidaiththadhu. nice photography.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 10. ஏல்லாப்படங்களும் அருமை. கரகாட்டம் ஆடியக்க் கல்லூரி மாணவிகளுக்கு வாழ்த்துகள்.பொய்க்கால் ஜோடியும் நன்றாக இருக்கிறார்கள். தேடிச்சென்று நல்ல நிகழ்வுகளைக் கொடுக்கிறீர்கள். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 11. அருமை அண்ணா...
  படங்கள் அனைத்தும் அருமை...
  அந்த கைச்சிலம்பாட்டக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 12. தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்..உங்களின் பகிர்வுக்கு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்.

   Delete
 13. படங்களும் பகிர்வும் அருமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 14. படங்கள் மிகவும் அருமை .
  இன்னமும் நம் பாரம்பரிய கலைகள் உயிருடன் இருக்கிறது என்று தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. நமது பாரம்பரியக் கலைகளை கல்லூரி மாணவ மாணவிகளும் கற்றுத் தேர்ந்து வருகிறார்கள் எனும் செய்தி நிறைவைத் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 16. மொழியையும் , கலைகளையும் இழந்தால் ஒரு இனம் அழிந்து விடும் , தொன்மையை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. புகைப்படங்கள் அருமை !

  ReplyDelete
 17. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

  ReplyDelete
 18. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை இன்றும் கட்டிக்காத்து வரும் கண்மணிகளுக்குப் பாராட்டுகள். குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் கரகாட்டம் ஆடும் கல்லூரிப் பெண்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். கைச்சிலம்பாட்டம் என்பது உங்களைப் போன்றே கழி சுற்றி ஆடுவது என்றே நானும் நினைத்திருந்தேன். புதியதொரு கலையை அறிமுகம் செய்வித்தமைக்கும் படங்களோடு நிகழ்வினைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....