எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 23, 2014

கும்மிருட்டினில் இரவு உணவு பட உதவி: கூகிள்

சில உணவகங்களில் Candle Light Dinner என்று மிகவும் குறைந்த வெளிச்சத்தில் இரவு உணவு வழங்குவார்கள். நமது தமிழகத்திலும் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் உண்டு. நிலவின் ஒளியில் முன்னிரவு நேரத்தில் எல்லோரும் அமர்ந்துகொள்ள, அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ எல்லோருக்கும் குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என விதம் விதமாய் பிசைந்து உருண்டைகளாக கையில் தர அம்ருதமாக உள்ளே இறங்கும். பாசத்துடன் பரிமாறப்பட்ட அந்த உணவின் ருசி மிக அதிகம் என்பதால், சாதாரண நாட்களை விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவது நமக்குப் புரியாது.

இந்த மிதமான ஒளியும் இல்லாது அடர்த்தியான இருளில் உங்களை இரவு உணவு உண்ணச் சொன்னால், எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

சமீபத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனம், சிங்கப்பூரில் 40 பேருக்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தது. வந்திருந்த விருந்தினர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பின் தன்னிலை விளக்கம் அடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது.

அந்த காணொளி முடிந்தபிறகு அடுத்த நிகழ்ச்சி பற்றிய ஒரு சிறிய விளக்கம். அடுத்த நிகழ்ச்சிக்கான கருப்பொருள் – இருட்டினில் இரவு உணவு - அதாவது வந்திருந்த 40 விருந்தினர்களுக்கும் வெளிச்சமில்லாத அடர்த்தியான இருட்டான அறையில் இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி. ஒரு சிறிய விளக்கமும் தரப்பட்டது.

விளக்கம் தந்த பெண் குரலில் நீங்களே விளக்கத்தினை கேளுங்களேன். நண்பர்களே, வணக்கம். இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நானும் எனது இரண்டு நண்பர்களும் இரவு உணவு வழங்க இருக்கிறோம்! உங்கள் தட்டில் இருக்கும் பொருட்கள் பற்றிப் பார்க்கலாம். தட்டினை ஒரு கடிகாரமாக நினைத்துக் கொள்ளுங்கள். மூன்று மணி இடத்தில் ஒரு தேநீர்க் கரண்டி, அதன் எதிரே ஒன்பது மணி இடத்தில் முட்கரண்டி. இரண்டு மணி இடத்தில் ஒரு கண்ணாடி குவளை. தட்டின் நடுவே ஒரு கண்ணாடி கோப்பை. ஆறு மணி இடத்தில் காகித கைக்குட்டை.

இதுவரை சொன்னது புரிந்ததா? மேலே பார்க்கலாம். உங்களிடம் இரு கோப்பைகள் எடுத்து வருவார்கள். கோப்பையினை தொட்டு உணர்ந்தால், சாதாரணமாக இருக்கும் கோப்பையில் தண்ணீரும், வேலைப்பாடுகள் செய்த கோப்பையில் பழச்சாறும் இருக்கும். எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். அதை நீங்களாகவே மூன்று மணி இடத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி குவளையில் விட்டுக் கொள்ளலாம். விடுமுன் உங்கள் உங்கள் கைகாட்டி விரலை குவளையில் உள்ளே வைத்தபடி தண்ணீர்/பழச்சாறை விடுங்கள். அது உங்கள் விரலை அடைந்ததும் ஊற்றுவதை நிறுத்தலாம்.

இதுவரை சொன்னது உங்களுக்கு புரிந்திருக்குமென நம்புகிறேன். இல்லையெனில் மீண்டும் சொல்வதில் எனக்கு கஷ்டமில்லை!” 

எல்லோரும் புரிந்ததாகச் சொல்லவே, சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு இருட்டான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அடர்த்தியான இருட்டு சூழ்ந்திருந்த அந்த அறையில் எங்கள் கைகளை பிடித்து அழைத்துச் சென்று எங்களுக்கான இருக்கைகளில் அமர்த்த, பதிவு செய்தபோது நாங்கள் குறிப்பிட்டிருந்தபடி சைவ/அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.

வரிசைக் கிரமப்படி, சாப்பிட்ட பின் நாங்கள் கேட்பதற்கு முன்னதாகவே, காத்திருக்க அவசியமின்றி அடுத்த உணவு வழங்கினார்கள். வழங்குவதில் எந்த குறைபாடும் எங்களுக்குத் தெரியவில்லை. இப்படி குழுக்களாக எல்லோருக்கும் உணவு பரிமாறி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. அனைவரும் உண்டு முடித்த பிறகு அந்த அறையில் விளக்குகள் போடப்பட, அடர் இருட்டினிலிருந்து மீண்ட உணர்வு.

இந்த இருட்டினில் இரவு உணவு பற்றிச் சொல்லும்போது உங்களுக்கு முதலில் சொல்லாத விஷயம் – இந்த உணவினை பரிமாறிய அனைவரும் கண் தெரியாதவர்கள். தாங்கள் தினம் தினம் அனுபவிக்கும் விஷயத்தினை மற்றவர்களுக்கும் புரிய வைக்க இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அவர்கள் கண் பார்வை இல்லாது எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கண்பார்வை உள்ள அனைவரும் எத்தனை அதிர்ஷ்டசாலி என்பது தெரிந்தது.  ஆனாலும் இருப்பதை விட்டு இல்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்காக எப்படி ஓட்டமாய் ஓடுகிறோம், ஆசைப்படுகிறோம் என்பது புரிந்ததுஆண்டவன் நமக்களித்த ஆற்றல்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இல்லாதவற்றிற்கு ஏங்குகிறோம்.

கண் பார்வை இல்லாத அந்த மூன்று பேரும் கண்பார்வை இருந்தும் குருடர்களாய் இருந்த எங்களின் அகக்கண்களை திறந்து வைத்தார்கள்.

மேலே தந்திருப்பது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.  ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் தந்திருக்கிறேன். படித்தபின் நமது அகக் கண்களும் திறந்திருக்கும் என நம்புகிறேன். 


மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நண்பருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.


மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


54 comments:

 1. அருமை. செய்முறை விளக்கத்தின் மூலம் காட்டியது அனைவருக்கும் நன்கு புரிய வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 2. ஏதோ சிறப்பான உணவு தரீங்கனு காலங்கார்த்தாலே ஓட்டமா ஓடி வந்தேன். :)))

  ReplyDelete
  Replies
  1. உணவு தானே தந்துட்டா போச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 3. தொடங்கும்போதே இதில் ஏதோ ஒன்று இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் பார்வையற்றவர்களின் நிலையினை புரிந்து கொள்வதற்காக என்பதை ஊகிக்க முடியவில்லை. அற்புதமான Demonstration. கண்கலங்க வைத்தது பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. சொல்லிப் புரிய வைத்தாலும்இப்படி நிதர்சனமாக புரியவைக்க முடியாது !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. வணக்கம்
  ஐயா.

  தங்களின் பதிவை படித்த போது. என் நெஞ்சம் கனத்தது ஐயா...
  அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. வணக்கம்
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. "//கண் பார்வை இல்லாத அந்த மூன்று பேரும் கண்பார்வை இருந்தும் குருடர்களாய் இருந்த எங்களின் அகக்கண்களை திறந்து வைத்தார்கள்//" - சாத்தியமான உண்மை.
  தங்களுக்கு வந்திருந்த ஆங்கில மின்னஞ்சலை தமிழாக்கம் செய்து பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. படித்துக்கொண்டு வரும்போது, தாங்கள் சிங்கப்பூருக்கு அலுவல் விஷயமாக சென்றிருப்பீர்கள் போல என்று நினைத்துக்கொண்டேன. இது தங்களுக்கு வந்த மின்னஞ்சல் என்று எண்ணவேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 9. மனதை நெருடிய சம்பவம் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 10. என்ன சொல்வது. மனம் நெகிழ்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. ///இருப்பதை விட்டு இல்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்காக எப்படி ஓட்டமாய் ஓடுகிறோம், ஆசைப்படுகிறோம் என்பது புரிந்தது. ஆண்டவன் நமக்களித்த ஆற்றல்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இல்லாதவற்றிற்கு ஏங்குகிறோம்.///

  வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை கேட்டால் அதிகம் ஆசைப்படு அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்று சொல்லுகிறார்கள் தரையில் நடக்கும் நாம் பறவை போல பறக்க ஆசைப்பட்டோம் ஏக்கப்பட்டோம் அதன் விளைவாக கண்டு பிடிக்க பட்டதுதான் விமானம்..

  நாம் கடவுள் நமக்கு அளித்த ஆற்றல்களை முறையாக பயன்படித்தியதால்தான் இந்த வெற்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 12. Candle Light Dinner என்று பார்த்ததும் டில்லிக்காரர் ரொமண்டிக்காக ஏதோ சொல்லுகிறார் என்று ஏக்கத்தோட ஒடிவந்தேன்...ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. ரொமாண்டிக் பதிவு : ))) எழுதிடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. அனைவரும் கண் தெரியாதவர்கள் எனும் போது வியப்பை தந்தது... கண்டிப்பாக அனைவரும் உணர்ந்திருப்பார்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. படிக்க ஆரம்பித்ததும் ஏதோ கோக்கு மாக்கு பண்றாங்களாக்கும்னு நினைத்தேன். ஆனால் நோக்கம் தெரிந்ததும் பாராட்டத் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 15. சுதா த்வாரகாநாதன் புது தில்லிJanuary 23, 2014 at 11:03 AM

  சொல்லிப் புரிய வைப்பதை விட செய்து புரிந்து கொள்வது சுலபம் இல்லையா. இதைத்தான் அந்த பன்னாட்டு நிறுவனம் செய்துள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 16. தமிழ்நாட்டுல பாதி நேரம் இருட்டுலதான் சாபுடுறோம் அம்மா புண்ணியத்தில்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 17. கண்பார்வை உள்ள அனைவரும் எத்தனை அதிர்ஷ்டசாலி என்பது தெரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 18. நல்ல அனுபவம். உண்மையில் கண்பார்வை இல்லாதவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகத்தில் அனைத்துமே நல்லவைதான். தீயவற்றை காண தேவையே இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் அவர்களுக்கும் பார்வை வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். நல்ல தமிழாக்கம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 19. பிறர் படும் கஸ்ரங்களைப் பார்த்து எம்மை நாமே திருப்தி கொள்ள
  வைத்தல் அவசியம் என்பதை உணர வைத்த சிறப்பான பகிர்வுக்கு
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 20. எவ்வளவு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும்! த்ரில்ட். அனுபவித்தவர் எப்படி எதையும் ஒன்றோடு கலக்காமல் சாப்பிட்டாரோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. படிக்க படிக்க எப்படி இருட்டில் எப்படி பரிமாரியிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே படித்தேன்.. நல்ல அனுபவம்.. ரசித்தேன் இந்த பதிவை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 22. நானும் இதைப் படித்தேன். நாம் கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது இந்த தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 23. அருமையான பகிர்வு. இருளில் உணவு என்றதும் பார்வை இல்லாதவர்களின் நினைவே வந்தது. அழகாக விளக்கிச் சொல்லி இருக்கிறார் உங்களுக்குக் கடிதம் அனுப்பியவர்.பகிர்வுக்கு மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 24. மனதைத் தொட்ட பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா.

   Delete
 25. இருப்பதை விட்டு இல்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்காக எப்படி ஓட்டமாய் ஓடுகிறோம், ஆசைப்படுகிறோம் என்பது புரிந்தது. ஆண்டவன் நமக்களித்த ஆற்றல்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு இல்லாதவற்றிற்கு ஏங்குகிறோம்.//

  உண்மை.
  செயல்முறையில் அனுபவத்தை உணர்த்தியது அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 26. பார்வை அற்றவரின் மீதான empathy-க்கு ஒரு செயல் விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 27. நல்ல பகிர்வு. சமீபத்தில் மலேஷியா சென்றிருந்த என் தங்கை இப்படியொரு அனுபவத்தை விவரித்திருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....