வியாழன், 30 ஜனவரி, 2014

அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்......



உங்களுக்கு ஜாதகம், எண் ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா? எனக்கு கிடையாது! அதற்காக அதில் நம்பிக்கை உள்ளவர்களை பழிப்பதும் கிடையாது. அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது பார்க்கிறார்கள், நமக்குப் பிடிக்கவில்லை, பார்க்கவேண்டாம்என்ற எண்ணம் தான். ஆனால் பல சமயங்களில் இந்த அதிர்ஷ்ட எண்கள், ஜோதிடம் போன்றவை நம் மீது திணிக்கப்படுவதுண்டு.

இப்படி அதிர்ஷ்ட எண்கள் பற்றிய விஷயம் தான் இன்றைய பதிவு. சில வருடங்களுக்கு முன்னர் நான் ஏர்டெல் அலைபேசி எண்ணை புதிதாக வாங்குவதற்கு கடைக்குச் சென்றேன். புதிய எண் வேண்டும் எனக் கேட்டபோது நான்கைந்து எண்களை எடுத்துக் கொடுத்து எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, 4566 என முடியும் ஒரு எண்ணை எடுத்துக் கொண்டேன் – கொஞ்சம் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதால்!

 பட உதவி: கூகிள்

எடுத்துக் கொடுத்தவுடன் அந்த கடைக்காரர் சொன்னது – “கடைசி நாலு நம்பர் கூட்டுனா 3 வருது.  நல்ல ராசியான எண்! உங்களுக்கு நல்ல செட் ஆகும்!என்றார். அடடா, சாதாரணமா எடுத்தா, இப்படி சொல்றாரே, வேற நம்பர் எடுக்கலாமா?என நினைத்தேன். பிறகு சரி இருக்கட்டும் என விட்டு விட்டேன்.  எல்லா நண்பர்களுக்கும் இந்த எண் கொடுத்தாயிற்று, உறவினர்களுக்கும் கொடுத்து நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆரம்பித்தது தொல்லைகள்! மாலை, இரவு என பார்க்காது பல சமயங்களில் அலைபேசி அடிக்கும் – தெரியாத எண்ணாக இருந்தால் பொதுவாக எடுப்பதில்லை – இருந்தாலும் சில சமயங்களில் எடுக்க வேண்டியிருப்பதால் எடுத்தால், எதிர் முனையிலிருந்து ஒரு குரல் – “சாயங்காலத்திலேருந்து கேபிள் வேலை செய்யலை, சீக்கிரமா வந்து கொஞ்சம் சரி பண்ணுங்க! முக்கியமான மேட்ச் இருக்கு!என்று சொல்லும் ஒரு ஆண் குரல்! அவரிடம் நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை என்று புரியவைப்பேன்.

சில சமயங்களில் அலைபேசியை எடுத்தால் எதிர் முனையிலிருந்து பெண் குரல் – ‘அட என்னப்பா உங்கூட ரோதனையா போச்சு! நல்ல விறுவிறுப்பான கட்டத்துல Kyunki Saas Bhi Kabhi Bahu Thi சீரியல் நல்ல கட்டத்துல போயிட்டு இருக்கும்போது கேபிள் கட் பண்ணிட்டயே”.  அவங்களுக்கு மாதாஜி, நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை, தப்பான எண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டீங்கன்னு சொன்னா நம்ப மாட்டாங்க!. நம்ம கட் பண்ணாலும், திரும்பவும் ஃபோன் பண்ணுவாங்க!

கிட்டத்தட்ட மூணு நாலு வருஷமா இந்த எண் தான் இருக்கு, அப்பப்ப இந்த மாதிரி கேபிள் வரலைன்னு வர அழைப்புகளும் வந்தபடியே தான் இருக்கு. பல பேர் கிட்ட இந்த நம்பர் இருக்கறதால மாத்தணும் நினைச்சா முடியல! சரி இந்த அலைபேசி விவகாரம் தான் இப்படி இருக்குன்னு பார்த்தா MTNL [அதாங்க நம்ம ஊரு BSNL-க்கு ஒண்ணு விட்ட தம்பி!] தரும் தொலைபேசி சேவையிலும் சில தொல்லைகள்!

இதுல நமக்கு தேவையான எண்ணை எல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது. அவங்க என்ன எண் கொடுக்கறாங்களோ அது தான்.  இப்படி அவங்களா கொடுத்த நம்பர் மூலம் தான் அழைப்புகளும், இணைய இணைப்பும். வந்து கொஞ்ச நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு வேளை! சமையல் அறையில் குக்கர் விசில் வந்தவுடன் நிறுத்த காத்திருக்கையில் மணி அடித்தது! சரின்னு சின்னதா வைச்சுட்டு ரிசீவரை கையில் எடுத்து காதில் வைத்தேன் – அங்கிருந்து ஒரு பெண் குரல் – 5 கிலோ ஆட்டா [கோதுமை மாவு] வீட்டுக்கு அனுப்புங்க!என்று கேட்க, அவரிடம் “நீங்க அதுக்கு மளிகைக் கடைக்கு ஃபோன் பண்ணுங்க!ன்னு சொல்லி வைச்சுட்டேன்.

அப்பப்ப இந்த மாதிரி அழைப்பு வரும், நான் இது கடை இல்லைன்னு சொல்லி வைச்சுடுவேன். ஒரு நாள் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன்.  பாதி குளித்துக் கொண்டிருந்த போது ட்ரிங்.... ட்ரிங்!க அப்போது இங்கே வந்திருந்த என் அப்பா, எடுத்து, ‘ஹலோ சொல்ல, வழக்கம்போல அங்கிருந்து ஹிந்தியில் ஏதோ பேச, அப்பாவுக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில், ”ஒரு நிமிஷம் ஹோல்ட் பண்ணுங்க, நான் என் பையனை கூப்பிடறேன்ன்னு சொல்லி என்னை சீக்கிரமா வாடா எனக் கூப்பிட, பாதிக் குளியலில் என்ன அவசரமோ என வந்தேன்!

ரிசீவரை எடுத்து காதில் வைக்க, அந்தப் பக்கத்தில் ஒரு பஞ்சாபி பெண்மணி, பஞ்சாபியில் பேசுகிறார்! கடையில நீ இருக்காம, வேற யாரையோ ஆங்கிலத்தில் பேச வைக்கிறயே, எழுதிக்கோ, 10 கிலோ ஆட்டா, 3 கிலோ கடுகு எண்ணை, சன்னா மசாலா.....என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார்.  நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை! சரி சொல்லி முடிக்கட்டும் என காத்திருந்து பின்னர் அவரிடம் சொன்னேன் – மாதாஜி, இது கடையல்ல, நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கடைக்கு சொல்லுங்க!ன்னு சொன்னா, அதான் வீட்டுல சொல்லிட்டேனே, நீயே கடைக்கு சொல்லிடு, சாயங்காலத்துக்குள்ள சாமான் அனுப்பிடுந்னு சொல்ல, ஒரே களேபரம்.

அலைபேசியில் கேபிள் கனெக்‌ஷன், தொலைபேசியில் மளிகை சாமான்கள் என இரண்டிலுமே தொந்தரவு! சில சமயங்களில் பேசாம இரண்டு இணைப்புகளையும் தூக்கி எறியலாமா, தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாம இருக்கலாமான்னு கூட தோணும்!”.  ஆனா பழகிடுச்சே!

நேற்று கூட சாலையைக் கடக்கும்போது அலைப்பேசியில் அழைப்பு – சாலையைக் கடந்ததும், எடுத்து பேசினால் – ஒரு ஆண் குரல் – கோபத்துடன் – “உடனே வந்து கேபிள் கட் பண்ணிடு – நீ கொடுக்கற சர்விஸ் ரொம்பவே மோசம், மாசத்துக்கு நாலு தடவை கட் ஆகுது!என்று தொடர்ந்து நடுநடுவே தில்லியின் புகழ்பெற்ற வசவுகளை கொட்ட, எனக்கும் கடுப்பு! நானும் இரண்டு வசவுகள் சொல்லி, முதல்ல நம்பரை சரியான்னு பாருடா என் வென்று!என அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததை புரிய வைத்தேன்! ஒரு சாரி கூட சொல்லாது இணைப்பை துண்டித்தது அந்த குரலுக்குரிய ஜென்மம்!

அதென்னமோ எனக்கும் இந்த தொலை/அலைபேசிகளுக்கும் ஒத்தே வருவதில்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த தொலைபேசி எண்ணிலும் நிறைய பிரச்சனைகள்.  அப்போது நடந்த விஷயங்கள் பற்றி முன்பே பதிவில் எழுதி இருக்கிறேன் – யாரடி நீ மோகினி? நல்ல வேளை அந்த மோகினியால் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை!  ஏன்னு கேட்காதீங்க, படிக்காதவங்க படிச்சுப் பாருங்க!

இப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை. அது “ரொம்ப அதிர்ஷ்டமான எண்எனச் சொன்ன அந்த கடைக்காரரை தேடிப் பிடித்து திட்ட ஆசை!  என்ன பண்ணலாம்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


56 கருத்துகள்:

  1. 'உங்கள் தவறால், நீங்கள் தவறாக அழைத்துள்ள இந்த அழைப்பாளர், இப்போது உங்களைக் கொல்லும் மன நிலையில் இருக்கிறார்....தயவு செய்து காத்திருக்கவும்' என்று ரெகார்டட் வாய்ஸ் போலப் பேசிப் பழகுங்கள். ஒரே வரியில் முடியுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியா தான். அடுத்த முறை வரும்போது செயல்படுத்திட வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இதுவல்லவோ ராசி...! ஹிஹி... கடைக்காரரைப் பார்த்தால் சொல்லலாம் : "என்னிடம் சொன்னது போல் யாருக்கும் 'வாழ்த்தி' சொல்லாதே"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  5. அண்ணே...உங்களை யாரோ பலமா விதவிதமா கலாயிச்சுகிட்டு இருக்காங்க போல...இருந்தாலும் ரா[[கா]]சி நல்ல ராசிதான் ஹா ஹா ஹா ஹா...

    நான் ஒருமுறை இரண்டு முறை பார்த்து விட்டு "ஹலோ அந்தேரி போலீஸ் ஸ்டேஷன்" ன்னு சொல்லிருவேன் கொய்யால அப்புறம் போன் வரட்டும் பார்க்கலாம். நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க பலன் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  6. எங்கள் வீட்டு தொலைபேசிக்கு இப்படி சில நேரம் தவறான அழைப்பு வரும் .கடை என்று அழைப்பும், வேறு ஊர் பேர் சொல்லி அவர்கள் வீடுதானே என்று கேட்டு வரும்.. அவரத்தில் ஏற்படும் பிழைகள் என்று நினைக்கிறேன்.

    “ரொம்ப அதிர்ஷ்டமான எண்ணால் நீங்கள்
    பட்ட அவஸ்தைகள் அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. மனோ நான் சொல்ல வந்ததை கரெக்டாச் சொல்லிட்டார்...! இந்த மாதிரி ராங் கால் வரும் போது நானும் ரயில்வே ஸ்டேஷன் என்கொயரி கவுண்டர் இது, வெஸ்ட் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன் நம்பர் இதுன்னு செலாலிடுவேன். அதுக்கப்புறம நம்ம சிம்ம(?)க் குரலைக் கேட்டால் அவங்களாகவே கட் பண்ணிடுவாங்க. ஹி... ஹி... ஹி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  8. //அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்...//

    அதிர்ஷ்ட தேவதை - இந்த மாதிரி தட்டுவாள் என்று யார் தான் எதிர் பார்க்க முடியும்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  9. ராங் அனுபவம் கேட்க சுவாரசியமாக இருக்கு.ஆனால் உங்கள் நிலமையில் யார் இருந்தாலும் இப்படித்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

      நீக்கு
  10. எனக்கு அனில் கபூர் / ஸ்ரீ தேவி நடித்த Mr. India ஞாபகம் வந்தது. அதில் அன்னு கபூர் படம் முழுவதும் ராங் கால்களால் அவதிப்படுவார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      நீக்கு
  11. அதிஷ்ட எண் குறித்த பதிவுதான்
    எத்தனை சுவாரஸ்யம் (படிப்பவர்களுக்கு)
    நிச்சயமாக அவர் எல்லா எண்ணுக்குமே
    அவர் அப்படித்தான் சொல்லி விற்றிருப்பார்
    அகப்பட்டால் கேளுங்கள்.அப்படித்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  12. ராசி உங்களுக்கு ராசியாகலைப் போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  14. மனதை தளர விட்டு விடாதீர்கள். ஒருநாள் அதிர்ஷ்ட தேவதையே வந்து தொலைபேசியில் காதைத் தட்ட வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. மொபைலை தலைய சுத்தி எங்காவது வீசி எறிஞ்சுடலாமான்ற அளவுக்கு நானே நொந்து போயிருக்கேன்... இங்கயும் அப்படிதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு அவர்களே.

      நீக்கு
  16. நாம எந்த எண்னை செலக்ட் செய்தாலும் கூட்டிக் கழித்து ராசியான எண் என்று என்பதே வியாபார தந்திரம் !
    த .ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  18. நாஞ்சில் மனோவின் ஐடியா வொர்கவுட் ஆகுதா பாருங்க........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  19. சரியா சொன்னீங்க வெங்கட்!! பல இடங்களில் கடன் வாங்கி பணம் கட்டாமலிருக்கும் ஒருவர், எங்க வீட்டு நம்பர் உபயோகித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். நாங்கள் மூன்று வருடங்களாக இந்த எண்ணை உபயோகிக்கிறோம். தொடர்ந்து கலெக்ஷன் ஏஜென்ஸிடமிருந்து பணம் கட்டுங்கள் என்று நிறைய கால்கள் வருகின்றன. அவசர வேலையாக இருக்கும் பொழுது எரிச்சல் பட வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  20. கடைசி நான்கு எண்களை கூட்டினால் 9 தானே வருகிறது. உங்கள் அதிர்ஷ்ட 3 என்பதால் 9 ஆம் எண் உங்களுக்கு தொந்தரவு வந்திருக்கலாம்! எனவே கூட்டு எண் 3 வரும் எண்ணைத் தேர்ந்தெடுங்கள்.

    எனக்கும் இது போல் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஒரு மருத்துவர் உபயோகித்து வந்த எண் எனக்கு தந்ததால், நடு இரவில் கூட கூப்பிட்டு நோயாளிகளின் சிகிச்சைக்காக உடனே வீட்டிற்கு வரச்சொன்ன அனுபவம் உண்டு.தவறான எண் என்று சொன்னால் கூட நம்பமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  21. ஹாஹாஹா! நல்ல ராசி போங்கள்! //”மாதாஜி, இது கடையல்ல, நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கடைக்கு சொல்லுங்க!”ன்னு சொன்னா, அதான் வீட்டுல சொல்லிட்டேனே, நீயே கடைக்கு சொல்லிடு, சாயங்காலத்துக்குள்ள சாமான் அனுப்பிடு” ந்னு சொல்ல, ஒரே களேபரம்.//

    தாங்கள் தங்களின் வேதனையை நகைசுவையாக எழுதி எங்களை ரசிக்கும்படி செய்துவிட்டீர்கள்...ஆனால் இந்தக் கஷ்ட்டத்தை அனுபவிப்பது நீங்கள் தானே!

    ஹலோ மை டியர் ரான் நம்பர் ஜேசுதாஸின் குரல் நினைவுக்கு வந்த்தது!

    எங்கள் வீட்டுத் தொலை பேசியிலும் ஏன் செல் ஃபோனிலும் இதே போன்ரு தொல்லைகள்...தமிழ் நாட்டில் இருந்தாலும், ஒருவர் கூப்பிட்டு ஹிந்தியில்அடிக்கடித் திட்டிக் கொண்டிருந்தார்... அதுவும் அவருக்கு தர வேண்டிய பணம் கேட்டு....இது எப்படி?!!!!! ஏதோகொஞ்சம் ஹிந்தி அப்படியும் இபடியும் தெரிந்ததால் புரிந்தது..ஆனால் பதில் சொல்லத் திணறியது.......ஒரு கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  22. Yennoda cell no last 4 digit 0966 dhan. but andha koottu thogai nalla rasi dhan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  23. சுவாரஸ்யமான பதிவு!!

    எனக்கும் ஏர்டெல்லிலும் லும் வேறு மாதிரி பிரச்சினைகள் ஏற்படுகின்றன! நாம் யாருக்கோ அழைக்கும்போது, வேறு ஒருத்தர் ஃபோனை எடுத்து பேசுகிறார். இது யார் புதுக்குரல் என்று தயங்கும்போது, எதிர்க்குரல் நம்மை 'ஏன் பேசாமல் இருக்கிறாய்?' என்று அதட்டுகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  24. இப்படி தவறான அழைப்புக்கள் எனக்கும் வந்துள்ளது! ஸ்ரீராம் சொன்ன யோசனை சூப்பரா இருக்கு பயன்படுத்தி பாருங்க! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  25. நீங்கள் மிகவும் பொறுமையானவர் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    "//இப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை. அது “ரொம்ப அதிர்ஷ்டமான எண்” எனச் சொன்ன அந்த கடைக்காரரை தேடிப் பிடித்து திட்ட ஆசை! //" - திட்டவெல்லாம் செய்யாதீர்கள், அதற்கு பதில் அவருடைய அலைபேசி எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு அடிக்கடி உங்களுக்கு வரும் தொல்லைப்பேசியைப் போன்று அவருக்கும் தொல்லை கொடுங்கள். அப்பொழுது தெரியும் அவருக்கு நீங்கள் எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இது நல்ல ஐடியாவா இருக்கே..... செயல்படுத்திட வேண்டியது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  26. பொறுமையின் திலகம்னு உங்களுக்கு பெழர் வைத்தாச்சு. இந்த ஊரி சகட்டுமேனிக்கு விளம்பர அழைப்பு வரும். அதுவும் ஜெர்மன் பாஷையில். அய்யா தெரியாதைய்யான்னால் உடனெ ஆங்கிலத்துக்கு மாறுவார்கள். இப்போதெல்லாம் மகன் சொல்படி தெரிந்த நம்பரையே எடுப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
    2. இதனால்தான் நான் புது நம்பர்களுக்குப் போன் செய்யும்போது அவர்கள் எடுப்பதில்லையா? அட ராமா

      நீக்கு
  27. மிகவும் ரசித்துப் படித்தேன்.....உங்களுக்கு நம்பரால் ஏற்பட்ட சிரமத்தை. நல்லவேளை... எமெர்ஜென்ஸி நம்பர், ஆஸ்பத்திரி கிளினிக் நம்பராக உங்களுக்கு அமையவில்லை என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....