எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, February 25, 2014

விலை போகும் தேசப் பற்று....தலை நகரிலிருந்து – பகுதி 27

தலைநகரில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை நடக்கின்ற உலகப் புத்தகத் திருவிழா, இந்த வருடம் 15-23 ஃபிப்ரவரி வரை நடைபெற்றது.  முதல் விடுமுறை நாட்களான 15-16 அன்று பயணத்தில் இருந்ததனால் செல்ல முடியவில்லை.  வேலை நாட்களில், அதுவும் இரண்டு வார விடுமுறைக்குப் பிறகு, புத்தகத் திருவிழாவிற்குச் செல்வதென்பது கொஞ்சம் கடினம். ஆகவே கடைசி இரண்டு தினங்களான 22 அல்லது 23-ஆம் தேதி செல்லலாம் என நினைத்தேன். 

தலைநகரின் மற்ற பதிவர்களான ஷாஜஹான் மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர்களும் ஞாயிற்றுக் கிழமை வருவதாகச் சொல்லவே நானும் நண்பர் பத்மநாபனும் சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று புத்தக்த் திருவிழா நடக்கும் பிரகதி மைதான் சென்றோம்.  நான் முதலில் சென்றுவிட மற்றவர்களுக்காகக் காத்திருந்தேன். மெட்ரோவில் சென்றதால் பிரகதி மைதான் ரயில் நிலையத்தின் இரண்டாம் நுழைவாயில் அருகே காத்திருப்பதாக முன்னரே நண்பர்களுக்குத் தெரிவித்திருந்தேன்.

அங்கே கண்ட காட்சி தான் தலைநகரிலிருந்து பகுதி 27 ஆக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புத்தகத் திருவிழா பற்றிய கட்டுரைகளை விரிவாக நண்பர் ஷாஜஹான் அவரது புதியவன் பக்கம் வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறார். அங்கே படிக்கலாம். நானும் மூன்று புத்தகங்கள் வாங்கினேன். அவை பற்றிய வாசிப்பனுபங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.  சரி இந்த கட்டுரைக்கு வருகிறேன்......


நண்பர்களுக்காக காத்திருந்தபோது, நூற்றுக் கணக்கில் புத்தகத் திருவிழாவிற்குச் செல்லும் மக்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளைஞர்களும், குழந்தைகளும், பெரியவர்களும் என எல்லா வயது மக்களும் வந்து கொண்டிருந்தது புத்தகம் படிக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது என மகிழ்ச்சி கொள்ள வைத்தது. வருகின்ற மக்களில் பலர் நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென நிற்கும்படி ஆனது.  என்ன காரணம் எனப் பார்த்தேன்.


பட உதவி: கூகிள்.

ஐந்து அல்லது ஆறு பெண்கள் – ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஒரு எண்ணம் – நாற்பது முதல் ஐம்பது வயது இருக்கலாம் – நல்ல உடல்நலத்தோடு, பலத்தோடு இருப்பவர்கள் – வருகின்ற பலரை நிறுத்தி, தங்களது கையிலிருக்கும் தேசியக் கொடியை ஆண்களின் சட்டையிலோ அல்லது பெண்களின் மேலாடையிலோ குண்டூசி கொண்டு குத்தி விட்டு காசு கேட்கிறார்கள். தேசப்பற்றை பறைசாற்ற அவர்கள் பாடுபடுகிறார்கள் என நினைத்து விடாதீர்கள் – அங்கே தான் இருக்கிறது சூட்சுமம்.

காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அந்த தேசியக் கொடி எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பார்கள்?  கொடியை அணிவித்ததும், அதனை பெற்றுக் கொண்ட மக்களிடம் காசு கேட்பார்கள் – சில்லறையாகக் கொடுத்தால் உனக்கு தேசப்பற்று இல்லையா? அதிகம் கொடுஎன்பார்கள். ஒரு குடும்பம் – தலைவன் தலைவி மற்றும் சிறு பெண் – தலைவனுக்கு கொடி அணிவிக்க, அவரும் 50 ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அவரிடம் கூட “உனக்கு தேசப் பற்று கொஞ்சம் கூட இல்லையே....  100 ரூபாய் கொடு என்று வாய் கூசாது கேட்டார்.

பலர் இப்படி காசு கேட்டு மிரட்டிய பிறகு “உன் கொடியை நீயே வச்சுக்கோஎன்று கழற்றி கொடுத்தார்கள். ஒருவர் சட்டையிலிருந்து குத்தப்பட்ட கொடி கீழே விழ பலரின் கால்களில் பட்டு சின்னா பின்னமானது.

தில்லி வந்த புதிதில் புது தில்லி ரயில் நிலையத்தின் அஜ்மேரி கேட் பகுதியிலும் இதே போல பெண்கள், வருபவர்களின் சட்டையில் நமது தேசியக் கொடியை அணிவித்து காசு வசூலிப்பதைப் பார்த்திருக்கிறேன். முதன் முதலில் பார்த்த போது இந்தியாவின் தலைநகரில் தேசப் பற்று கொஞ்சம் அதிகம் போல என நினைத்தேன். பிறகு காசு வாங்குவதைப் பார்த்த பிறகு தான் இது இவர்களுக்கு கௌரவப் பிச்சை என்பது புரிந்தது.

தேசியக் கொடியை அணிந்து கொள்வதால் மட்டும் ஒருவருக்கு தேசப் பற்று வந்து விடும் என்பதில்லை.  என்றாலும் இந்த தேசப் பற்றினை அடாவடியாக வியாபாரமாக்க வேண்டாமே என்று தோன்றியது.

தேசமே விலை போகும்போது தேசப் பற்று விலைபோவதைப் பற்றி ஏன் இத்தனை கவலை”...... 

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.  

54 comments:


 1. //இந்த தேசியப் பற்றினை அடாவடியாக வியாபாரமாக்க வேண்டாமே என்று தோன்றியது//

  சென்னையிலும் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் நாள் ஆகிய நாட்களில் போக்குவரத்து சைகை விளக்கருக்கே காத்திருக்கும்போது, இது போன்று தேசியக் கொடியை கொடுத்து பணம் கேட்பதுண்டு. இது வியாபாரமல்ல. நாகரீக பிச்சை. என் செய்ய. சில சமயம் இரக்கப்பட்டு கொடியை வாங்கியதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 2. இந்த தேசப் பற்றினை அடாவடியாக வியாபாரமாக்க வேண்டாமே என்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி....

   Delete
 3. இங்கு புத்தகச் சந்தையில் பட்டாணி சுண்டல் விற்பவர்களையே போலிசார் துரத்தி துரத்தி விரட்டுகின்றனர்.. டெல்லி போலீசாரும் இதனை கருத்தில் கொண்டிருக்கலாம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   இதையெல்லாம் கவனித்து, அவர்களிடம் “தங்களை’ கவனித்துக் கொள்ளச் சொல்லி இருப்பார்கள்! :(

   Delete
 4. Replies
  1. மோசம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 5. நீங்க சொல்றது சரிதான், இந்திய கேட், பார்லிமென்ட் எல்லாம் பக்கும் பொழுது நம்மள அறியாமல் நாட்டுபற்று வருது, அதே வச்சி இவங்க வியாபாரம் பண்றாங்க. முதல் தடவை என் சட்டையிலும் குத்திகிட்டேன், அப்புறமா இவங்க செய்றதா பார்த்தா கோபம் தான் வருது.

  நல்ல பதிவு சார்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையா மகேஷ் பிரபு..... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. தேசமே விலை போய்க் கொண்டிருக்கும் போது!?....
  மேற்கொண்டு ஆச்சர்யம் ஏதும் இல்லை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. அடப்பாவிகளா இப்படி ஒரு பிசினஸ் நடக்குதா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. மாட்டிக் கொள்கிறவர்கள் பாடு திண்டாட்டமே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. அவர்களை மட்டும் குறைகூற முடியாது. ஓசியில் எது, எது கிடைத்தாலும் கை நீட்டும் மக்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள்.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோபாலன்.

   Delete
 11. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாதது துரதிருஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. புத்தகத் திருவிழாவுக்கு வருவோர் கொஞ்சம் படித்தவர்கள், அவர்களையே இப்படி ஏமாற்றமுடிகிறது என்றால் மற்ற திருவிழாக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். தினமும் சென்ற என்னிடமும் இதேபோல வந்து முட்டுவார்கள். முறைக்கிற முறைப்பில் ஒதுங்கி விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி.

   Delete
 13. உங்களிடம் யாராவது கொடி விற்றார்களா.?உங்களைப்பார்த்தால் தேசப் பற்று இல்லாதவர் மாதிரி தெரிந்ததோ.?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 14. அடக்கடவுளே!!! எதுல தான் வியாபாரம் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. // ”தேசமே விலை போகும்போது தேசப் பற்று விலைபோவதைப் பற்றி ஏன் இத்தனை கவலை”...... //
  நெற்றியடி !
  இப்படி உணர்வுகளை காசாக்கும் நம் சமூகம் அப்போது மாறும்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 16. எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா, காசு சம்பாதிக்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரா.ஈ. பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 17. உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு தேசிய கொடியின் மீது இருந்த மதிப்பு 2009 பின்பு சுத்தமாய் போய்விட்டது சார் ... அதற்காக தேசத்தின் மீது பற்று இல்லாதவன் என்று சொல்லிட முடியுமா ? தலைநகரமே இந்த லட்சணத்தில் இருக்கிறது ... வாழக தேசியம் ... இது போன்று நிறைய எழுதுங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டும் ... நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   Delete
 18. Desame Vilai Pogumbodhu... Sariyana varigal. Thalainagaril Ippadi oru kodumaya ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 19. ”தேசமே விலை போகும்போது தேசப் பற்று விலைபோவதைப் பற்றி ஏன் இத்தனை கவலை”...... //

  உண்மையே! மிகவும் நல்லதொரு பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 20. உங்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன் !
  ******த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. ”தேசமே விலை போகும்போது தேசப் பற்று விலைபோவதைப் பற்றி ஏன் இத்தனை கவலை”....

  உண்மை அண்ணா....
  எப்படியெல்லாம் பிச்சை எடுக்கிறார்கள் பாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. இப்புடிக்கா கூட பிசினசு நட்குதாபா... சோ சேடு... சோ சேடு...!

  மகுடம் ஏத்தியாச்சு... ஏத்தியாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.

   Delete
 23. நம் ஊரில் பெண்கள் என்றாலே ஆண்கள் மரியாதை கொடுப்பார்கள். இங்கே பெண்களே கொடீக்கு விலைபேசுவது அநியாயத்திலும் அநியாயம். தட்டிக் கேட்க ஆளில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 24. போட்ட கமெண்ட் எங்க போச்சு. தேசியப் பற்று போலக் காற்றில் பறந்ததோ. டெல்லியில் மட்டும் தான் இப்படியா என்று தெரியவில்லை. அநியாயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 25. அட! தேசப்பற்று இப்படியா விலை கோகிறது! இதுவரை அறியாத செய்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 26. எதைக் காசாக்கலாம் என்று அலையும் கூட்டம்...வருந்தவைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 27. இப்படியுமா....!?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....