எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 21, 2014

ஃப்ரூட் சாலட் – 85 – ஆற்றிலும் சைக்கிள் ஓட்டலாம் – மூங்கில் - இந்திராஇந்த வார செய்திகள்:

முகம்மது சையதுல்லா – பத்தாவது வரை மட்டுமே படித்த 60 வயதுக்காரர். மூன்று குழந்தைகள் – இரண்டு பெண்கள் ஒரே மகன். பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தாலும் திறமைசாலி.  இவர் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். மனைவி நூர்ஜஹான் மேல் அதீத பாசம் வைத்திருப்பவர். ஷாஜஹான் போல இவரால் தாஜ்மஹால் கட்ட முடியாவிட்டாலும், தனது கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் மனைவி நூர்ஜஹான் பெயரை வைத்திருக்கிறார்.

இவர் இருக்கும் பீஹார் மாநிலத்தில் ஒரு சமயத்தில் வறட்சி மக்களை தொந்தரவு செய்ய பல சமயங்களில் வெள்ளம் புகுந்து நிலங்களை எல்லாம் நாசம் செய்யும். இவரது கிராமத்திலிருந்து வெளியே செல்ல சைக்கிளில் பயணம் செய்து பின்னர் நதியைக் கடக்க படகினை பயன்படுத்த வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்த இவர் இரண்டினையும் ஒரே வாகனத்தில் செய்ய முனைந்து கண்டுபிடித்ததே நூர் சைக்கிள்”. 

நூர் சைக்கிள் மூலம் நிலத்திலும் ஆற்றிலும் பயணிக்கலாம். முதன் முதலில் 6000 ரூபாய் செலவு செய்தாலும், இப்போது தயாரிக்க மூன்றாயிரம் வரை போதுமானது என்கிறார். இவரது பல படைப்புகளில் சில: சிறிய ட்ராக்டர், சாவி கொடுத்தால் இயங்கும் டேபிள் ஃபேன், புல்வெட்டும் கருவி மூலம் இயங்கும் தண்ணீர் மோட்டார், மேடு பள்ளங்களில் ஓட்டினாலும் ஓட்டுபவருக்கு, அதிர்வு தெரியாத ஸ்ப்ரிங் வைத்த சைக்கிள்  என சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி பல கண்டுபிடிப்புகள் இருந்தாலும், இவரது வாழ்க்கையை ஓட்ட இவர் ஒவ்வொரு நாளும் தனது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பழங்கள் விற்கிறார். தனக்கு போதிய உதவி கிடைத்தால் நிச்சயம் பல கண்டுபிடிப்புகளை செயல்படுத்த முடியும் என்னும் இவருக்கு ஆதரவு தருபவர்கள் தான் யாருமில்லை!

ஐம்பதாயிரம் பணம் இருந்தால் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் தயார் செய்ய தேவையான யோசனை இவரிடம் இருக்கிறது என்கிறார். இவரது ஆசை, இறப்பதற்குள் ஒரு சிறிய ஹெலிகாப்டர் தயாரிப்பது!

பல திறமைகள் இருந்தாலும், போதிய ஆதரவு இல்லாது முன்னேற முடியவில்லை என்பது இவரது ஆதங்கம். இத்தனை வயதிலும் தளராது உழைக்கும் இவருக்கு நமது பாராட்டுகள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்துக் கொள்வது இரண்டாம் முறையும் வெற்றி பெற்றதற்குச் சமம்.

இந்த வார குறுஞ்செய்தி:

IF YOU CONFER A BENEFIT, NEVER REMEMBER IT… IF YOU RECEIVE ONE, NEVER FORGET IT.”

இந்த வார ரசித்த இசை:

வயலி எனும் இசைக்குழு வாசிக்கும் இந்த இசையைக் கேளுங்கள். சாதாரணமாக நம்மிடம் மூங்கில் கொடுத்தால் என்ன செய்வோம்? பெரிதாய் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. வயலி குழுவில் இருப்பவர்களிடம் கொடுத்தால் அவர்கள் இசைக் கருவிகள் தயாரிப்பார்கள்! மட்டுமல்ல ஒரு இனிய இசையையும் கொடுப்பார்கள்.  நீங்களே கேளுங்களேன்!
இந்த வார ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடல், “இந்திராபடத்திலிருந்து....  தொடத் தொட மலர்ந்ததென்ன.....  படம் பார்க்கவில்லை என்றாலும், இந்த படத்தின் பாடல்களை வந்த புதிதில் பல முறை கேட்டிருக்கிறேன். நான் ரசித்த பாடல், இதோ உங்கள் ரசனைக்கு...
ரசித்த கார்ட்டூன்:

கைக்கு கைகொடுங்கள் ப்ளீஸ்!நன்றி: தினமலர்.

படித்ததில் பிடித்தது:

குருநானக் ஒரு பெரும் பணக்காரரிடம் ஒரு ஊசியைத் தந்து, ""இதை நான் கேட்கும்போது திருப்பித் தர வேண்டும்'' என்றார். கூறிய பிறகு சென்றுவிட்டார். பணக்காரரின் மனைவி ""குருநானக் பெரியவர். வயதானவர். அவர் தந்த ஊசியை அவரிடமே தந்து விடுங்கள்'' என்று கூறினார். சிரமப்பட்டு, குருநானக்கைக் கண்டுபிடித்து ""நல்ல வேளை, ஊசியைத் தந்து விட்டேன். இல்லாவிட்டால் இறந்த பிறகு சொர்க்கத்தில் கொண்டு வந்து தரமுடியுமா'' என்று சொல்லியிருக்கிறார் பணக்காரர். அதற்கு குருநானக், ""இந்தச் சின்ன ஊசியையே உன்னால் சொர்க்கத்திற்கு எடுத்து வர முடியாது என்றால், இவ்வளவு சொத்துக்களையும் எப்படி எடுத்து வருவாய்?'' என்று கேட்டாராம். செல்வந்தருக்குப் புரிந்துவிட்டது. கஞ்சத்தனத்தைவிட்டு விட்டு, தான தர்மங்கள் செய்ய ஆரம்பித்து
 
விட்டார்!.

-          தினமலர்.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. எல்லாமே அருமை. ப.பி ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நான் பார்த்த ஜேம்ஸ்பர்ண்ட் படம் ஒன்றில் பாண்ட் தரையில் ஓட்டிச் செல்லும் கார், தண்ணீரை அடைந்ததும் மோட்டார் போட்டாக மாற்றி பயன்படுத்துவார். இப்ப தண்ணில ஓட்டக்கூடிய சைக்கிளா..? அருமை! (‘தண்ணி’ல சைக்கிள் ஓட்றவங்க சென்னைல நிறையவே உண்டு.) உங்களுக்ழுப் படித்ததில் பிடித்தது எனக்கும் மிகவே பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தண்ணில சைக்கிள் ஓட்டுறவங்க, சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே உண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.

   Delete
 3. முகம்மது சையதுல்லா அவர்களின் திறமை வியக்கத்தக்கது... அவருக்கு வாழ்த்துக்கள் பல...

  என்றும் ரசிக்கும் பாடல்...

  மற்ற ஃப்ரூட்சாலட் - நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அனைத்துமே அருமை ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. //ஒரே வாகனத்தில் செய்ய முனைந்து கண்டுபிடித்ததே ”நூர் சைக்கிள்”. //

  இவரும் பாஷா மாதிரி "நான் ஒரு சைக்கிள் செஞ்சா நூர் சைக்கிள் செஞ்ச மாதிரி" ன்னு சொல்லிக்கலாம்.. ஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 7. Vayali Bamboo Band குழுவினரின் அருமையான இசையை இரசிக்க உதவியமைக்கு நன்றி! அனைத்து தகவல்களுமே அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. இப்படித்தான் திறமைகள் அங்கீகரிக்கப்படாமலேயே காணாமல் போகின்றது..... ப்ரூட் சாலட் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. திறமைகள் உள்ள இடத்தில் வசதியோ பிறரது ஊக்குவிப்போ இல்லாமல்
  போவது கொடுமையிலும் கொடுமை .எத்தனை கண்டு பிடிப்புக்களைக்
  கண்டு பிடித்தும் அந்தப் பெரியவரின் வாழ்நாள் சாதனை வெளி வராமலே
  போய்விட்டதே இவர்களுக்கு உதவ யாரேனும் முன்வர வேண்டும் .
  சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .த .ம .6
  முடிந்தால் இந்த ஆக்கத்தைக் கொஞ்சம் பாருங்கள் சகோதரா .
  http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   Delete
 10. நூர் சைக்கிள் அட் போட வைத்தது! முகம்மது சையதுல்லா அவர்களின் திறமை கண்டிப்பாகப் போற்றப்பட்டு அங்கீகாரம் கொடுத்து அவரது கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர உதவலாம்!! இப்படித்தான் நமது நாட்டில் பலரது கண்டுபிடிப்புகள் வெலீவராமலே போகின்றது! நமது வாழ்த்துக்கள் அவருக்கு! பாராட்டுக்கள்!

  வயலி மூங்கில் இசைக்குழு மிகவும் அருமையாக இருக்கின்றது! நல்ல இசைத் திறமை! கேரளா போன்று தோன்றுகின்றது! கேரளா இசைக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மாநிலம்தான்!

  படித்ததில் பிடித்தது, எங்களுக்கும் பிடித்தது!

  அனைத்துப் பழங்களுமே ஃப்ரூட் சாலடில் சுவையாக இருந்தன! எப்போதுமே அப்படித்தானே!

  பகிர்வுக்கு மிக்க நன்றி


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.....

   Delete
 11. முகம்மது சையதுல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.படித்ததில் பிடித்தது மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு....

   Delete
 13. எல்லாப் பழங்களுமே சூப்பர் அய்யா ...ரசித்து சாப்பிட்டோம் ....திறமைகள் மதிக்கப் படுவதே இல்லை தான் ...மியூசிக் செம ...

  த ம + 1 எப்புடீஈஈஈஈஈஈ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.....

   Delete
 14. ஐம்பதாயிரம் முதலீடு செய்ய யாரும் வரவில்லை என்றால் கண்டுபிடிப்புகள் பற்றிய நம்பிக்கை வரவில்லை எனலாமா. நண்பர் ஒருவரின் கதையில் அமெரிக்காவில் நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்....

   Delete
 15. ரா.ஈ. பத்மநாபன்March 21, 2014 at 5:51 PM


  வயலி - கலக்கி சாரே! அடிபொழி.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி....

   Delete
 17. முகம்மது போன்றோரை ஊக்குவிக்க ஒரு பெரிய அளவு முயற்சி நம் ஊரில் இல்லை என்பது கொடுமை! படத்தில் அமீர்கான் செய்தால் ஆஹா ஓஹோ என்கிறோம்.. (3 இடியட்ஸ்) நேரில் கண்டு கொள்வதில்லை! வயத்தெரிச்சல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 18. வயலி மூங்கில் இசை - மிகவும் அருமை!.. மனதைப் பறி கொடுத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 19. அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 20. Bamboo Music, really good, new to me, thanks.............

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

   Delete
 21. இந்த வார ஃப்ரூட்சாலட் நல்ல சுவை!

  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 22. முகம்மது சைக்கிள்ளா ..தப்பு தப்பு ..சையதுல்லாவின் முயற்சி பாராட்டத் தக்கது !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 23. ஒவ்வொரு வாரமும், வெளிச்சத்துக்கு வராதவர்களை, உலகம் அறிய செய்வதால், முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  "//கைக்கு கைகொடுங்கள் ப்ளீஸ்!//" - தலைப்பு மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....