எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, March 11, 2014

விடியல் பார்வையற்றோர் இசைக்குழு....தலைநகரிலிருந்து.....

ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் தில்லித் தமிழ்ச் சங்கம் சென்றிருந்த போது சங்கத்தில் மார்ச் ஆறாம் தேதி நடக்க இருக்கும் ஒரு நிகழ்வின் அறிவிப்பினை அனைவருக்கும் அளித்தார்கள். அறிவிப்பினை பார்த்த உடனே நிகழ்ச்சி நடப்பது வேலை நாள் என்றாலும் வர வேண்டும் என்று தீர்மானித்தேன். திருச்சி திருவரங்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்திலிருந்து செயல்படும் விடியல் பார்வையற்றோர் இசைக்குழுவழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி தான் அந்த நிகழ்ச்சி.மார்ச் ஆறாம் தேதி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வழியில் நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டு தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தின் திருவள்ளுவர் அரங்கினை அடைந்தோம். அங்கே அரங்கத்தில் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள் – வீட்டுமனைகள், வீடுகள் விற்கிறோம் என்றும் தங்களது சிறப்புகள் பற்றியும் விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். மெல்லிசை நிகழ்ச்சி என வந்தால், வேறு நிகழ்ச்சியோ, நாள் மாறி வந்து விட்டோமா என நினைத்தால், இல்லை. அந்த நிறுவனம் தனது விளம்பரத்திற்காகத் தான் இந்த நிகழ்ச்சியையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.சற்று நேரத்திற்குப் பிறகு மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. மெல்லிசைக் குழுவினை நடத்தி வரும் வரதராஜன் குழுவின் உறுப்பினர்கள் பற்றிச் சொல்லி, தமிழின் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தினையும், அவரது பேச்சில் வெளிப்படுத்தினார். பாரதிதாசனையும், பாரதியாரையும் ஆங்காங்கே குறிப்பிட்டு அவர் பேசிய விஷயங்கள் மிக அழகு.  அவர்களது குழுவிற்கு பொருத்தமாய் “விடியல்என்று பெயர் வைத்திருக்கும் அவர்கள், தங்களது குழுவின் பெயரை எழுதி வைத்திருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரின் மேல் எழுதி வைத்திருந்த ஈழத்துக்கவி சச்சிதானந்தம் அவர்களின் வாசகம் தமிழின் மேல் அவர்களுக்கு இருக்கும் பற்றினை பறைசாற்றியது. அந்த வாசகம்.....


சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்
இசைக்குழுவில் மொத்தம் 12 பேர் வந்திருந்தார்கள். பாடுபவர்கள் தவிர, தபலா வாசிப்பவர், ட்ரம்ஸ் வாசிப்பவர், எலக்ட்ரானிக் ட்ரம்ஸ் வாசிப்பவர், கீ போர்ட் வாசிக்கும் இரு நபர்கள் என குழுவில் இருக்கும் அத்தனை பேரும் புறக்கண்களை இழந்துவிட்டாலும் நம்பிக்கை எனும் அகக்கண்களை இழக்கவில்லை. சாதாரணமாக மெல்லிசை நிகழ்ச்சி என்றால் பாடுபவர்களின் முன்னே ஒரு ஸ்டாண்ட் மீது பாடல்வரிகளை எழுதி இருக்கும் புத்தகத்தினையோ, அல்லது சமீப கால பாடகர்கள் போல Tablet  சாதனமோ வைத்து அதைப் பார்த்து பாடுவார்கள். இவர்கள் பாடிய அனைத்து பாடல்களையும் மனதிலிருந்தே மிக அழகாய் பாடினார்கள். இறைவன் பெருமை சொல்லும் சில பாடல்களை பாடியபின்னர் தமிழ் சினிமாவிலிருந்து பல பாடல்களை பாடினார்கள்.  தற்போதெல்லாம் எந்த மெல்லிசை குழு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தாலும் ஒரு பாடலை கட்டாயம் பாடிவிடுகிறார்கள் – ’முகுந்தா முகுந்தா கிருஷ்ணா’ எனும் தசாவதாரம் படப் பாடல்! காரணம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் திரு இரா. முகுந்தன்! தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் அவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்!பாடகர்களில் ஒர் முதியவர் – மிகச் சிறப்பாக பாடினார். அதுவும் அவரது குரலுக்கு பழைய பாடல்கள் மிகவும் பொருத்தமாக இருந்தது. டி.எம்.எஸ். பாடிய பாடல்களை இவர் பாடினார்.  நடுவே ஒரு பாட்டில் எம்.ஜி.ஆர். போலவே பேசியும் காண்பித்தார். நிகழ்ச்சியின் நடுவே, நானும் நண்பர் பத்மநாபனும், அவரது குரலிற்கு நாகூர் ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல்களும் சிறப்பாக இருந்திருக்கும் என பேசிக் கொண்டிருந்தோம்.
பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என கலந்து பாடியது மிகச் சிறப்பாக இருந்தது. எம்.ஜி.ஆர். – சிவாஜி பாடல்கள் முதல், சமீபத்திய பாடல்களான “டிங் டங், டிகடிக டிங், டங்”, “சொய்.... சொய்....  விஜய் பாடல்கள், என அனைத்து ரக பாடல்களையும் பாடினார்கள். பாடகர்கள் அனைவரும் சிறப்பாக பாடி, மக்களை மகிழ்விக்க, இந்த இசைக்குழுவினரை ஆதரிக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளை வழங்கவும், இசையை ரசிக்க வந்திருந்த பலர் குழுவினருக்கு நன்கொடைகளை வழங்கிய வண்ணம் இருந்தார்கள்.  பல நல்ல மனிதர்கள் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என தொடர்ந்து தரத்தர குழுவின் தலைவரான திரு வரதராஜன், காசாளரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்!


ஆறரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி சற்றே நேரம் கடந்து துவங்கியதால் நிகழ்ச்சி முழுவதும் இருந்து ரசிக்க முடியாத நிலை. நிகழ்ச்சியின் நடுவே கலைஞர்களை கௌரவித்து பூங்கொத்துகளை வழங்கினார்கள்.  09.30 மணி வரை இன்னிசை மழையில் நனைந்து அங்கிருந்து நானும் நண்பர் பத்மநாபனும் புறப்பட்டோம். 

ஒரு சில குறைகளோடு பிறந்தாலும், தங்களது தன்னம்பிக்கையை இழக்காது வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இருக்கும் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். சமீபத்தில் முகப்புத்தகத்தில் பார்த்த ஒரு மேற்கோளுடன் இப்பகிர்வினை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.....

I RESPECT BLIND PEOPLE…. BECAUSE THEY JUDGE OTHERS BY THEIR PERSONALITY AND NOT BY THEIR LOOKS!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....  அதுவரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. ஈழத்துக்கவி சச்சிதானந்தம் அவர்களின் வாசகம் சிறப்பு...

  இசைக்குழுவினருக்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. விடியல் இசைக் குழுவைப்பற்றி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள். மிகப் பொருத்தமான மேற்கோள் காட்டி பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. இங்கே மதுரையிலும் மினி லாரியில் பின்புறம் அமர்ந்து, நடமாடும் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள் .அவர்களின் தன்னம்பிக்கையை கண்டு வியக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. அருமையான பதிவு!
  ஈழத்துக்கவிஞரின் வரிகள் நெற்றியில‌டிப்பது போல இருந்தன!
  தமிழ் நாட்டில் இந்த வரிகளுக்கு எங்கே மதிப்பிருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 5. //ஒரு சில குறைகளோடு பிறந்தாலும், தங்களது தன்னம்பிக்கையை இழக்காது வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இருக்கும் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்.//

  அவ்வண்ணமே - நானும் அவர்களுக்கு என் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. ஈழத்துக் கவி சச்சிதானந்தம் வரிகள் அருமை

  முகுந்தனுக்கு இப்படியொரு பின்னணி இருக்கிறதா :-

  //I RESPECT BLIND PEOPLE…. BECAUSE THEY JUDGE OTHERS BY THEIR PERSONALITY AND NOT BY THEIR LOOKS!// செம வரிகள் சார் )

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 7. கண்கள் இழந்த பின்னும் வாழ்க்கையின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை வியக்க வைக்கிறது. அவர்கள் வசதியாக என்றும் வாழ இறைவன் அருளட்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 8. புறக்கண்களை இழந்துவிட்டாலும் நம்பிக்கை எனும்
  அகக்கண்களை இழக்காமல் சிறப்பான திறமைகளை
  வெளிப்படுத்தி மகிழ்விக்கும் இசைப்பாடகர்களுக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete

 9. விடியல் இசைக்குழுவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் பதிவின் மூலம் அவர்களைப் பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஒரு அருமையான மேற்கோளுடன் கட்டுரையை முடித்து இருக்கிறீர்கள். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   திருச்சியை அடுத்த ஒரு கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் தான். திருச்சி BHEL-ல் கூட இவர்கள் நிகழ்ச்சி நடந்திருக்கிறதாம்.....

   Delete
 10. உங்க வர்ணனைகளோடு பதிவைப் படிக்கும்போது நேரில் நிகழ்ச்சியை பார்த்தாற்போல ஒரு உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 11. Yella vuruppugalum sariyaga irundhum uzhaikkamal iruppavargal ippadippattavargalaippaarththu katrukkollavendum.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

 12. மிக மிக அருமையான மேற்கோள். பகிர்வுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. சென்னையிலயும் இந்த மாதிரி ஒரு ட்ரூப் இருக்காங்க. சேரனோட படத்துல ஒவ்வொரு பூக்களுமேங்கற பாடலுக்கு நடிச்சவங்க இவங்கதான். நிறைய மேடைக் கச்சேரி பண்றாங்க. இந்த மாதிரியானவங்களுக்கு ஆதரவு குடுக்கணும். இப்படியொரு நிகழ்ச்சிக்கு போனது மட்டுமல்லாமல் அதை அழகாக படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 14. ஈழக்கவிஞரின் வரிகள் சிறப்பு! விடியல் குழுவினருக்கு பாராட்டுக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 15. ”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
  என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”
  ஈழத்துக் கவிஞ்ர் சச்சிதானந்தத்தின் வரிகள் நச்!

  அருமையான பகிர்வு! தன்நம்பிக்கையையும், வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையையும் ஊட்டும் ஒரு பதிவு!

  //I RESPECT BLIND PEOPLE…. BECAUSE THEY JUDGE OTHERS BY THEIR PERSONALITY AND NOT BY THEIR LOOKS! // அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 16. வாழ்கையில் முன்னேறுவதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிருபித்து விட்டனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதனை பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. ”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
  என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”

  நெஞ்சுருக வைக்கும் நித்தியமான வார்த்தை என் உள்ளத்தை மகிழ
  வைத்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 18. தற்போதெல்லாம் எந்த மெல்லிசை குழு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தாலும் ஒரு பாடலை கட்டாயம் பாடிவிடுகிறார்கள் – ’முகுந்தா முகுந்தா கிருஷ்ணா’ எனும் தசாவதாரம் படப் பாடல்! காரணம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் திரு இரா. முகுந்தன்!

  ----------------------

  ஹா... ஹா....

  கடைசியில் மிகச்சிறப்பான வாசகம்.

  இசைக்குழுவினருக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 19. நாமும் வாழ்த்தி வணங்குகின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 20. நெஞ்சம் தொடும் பதிவு.
  வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 21. படிக்க மனம் நெகிழ்கிறது... நல்லதோர் பதிவு! அவர்கள் நலமாய் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 22. ஏதோ ஒரு புகன் இழந்தாலும் அவர்களது மற்ற புலன்கள் இன்னும் அதிகமாய் செயல்படும் குறிப்பிடிருக்கும் வாசகங்கள் நெகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 23. உழைத்து வாழத் தெரிந்த மனிதர்கள் !! அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 24. மனம் நெகிழ்ந்து போனேன் ஐயா.
  நானும் இது போன்ற ஒரு பதிவினை இட்டுள்ளேன். நேரமிருக்கும்பொழுது, வாசிக்க அழைக்கின்றேன். நன்றி
  http://karanthaijayakumar.blogspot.com/2014/01/blog-post_10.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீங்கள் குறிப்பிட்ட பதிவினை முன்னரே படித்து கருத்தும் எழுதி இருக்கிறேன்......

   Delete
 25. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 26. அவர்களின் தன்னம்பிக்கையை நாமும் மதிப்போம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 27. பெயரே அழகாக இருக்கிறது - விடியல் என்று. மேலும் மேலும் பல வாய்ப்புகள் பெற்று இந்தக் குழுவினர் முன்னேற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 28. அருமையான பதிவு...!

  //
  ”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
  என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”
  //

  நெகிழவைக்கிறது ஈழக்கவிஞரின் வரிகள்...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா...

   Delete
 29. ரா.ஈ. பத்மநாபன்March 13, 2014 at 10:15 AM

  அருமையான நிகழ்ச்சி. தில்லியில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கலைந்து விடும் மக்கள் கூட்டம் இந்நிகழ்ச்சியை அதன் பின்னும் இருந்து விரும்பி கேட்டது சிறப்பு. அந்த பெரியவர் ‘குருநாத்’ என்று நினைவு. அருமையான குரலில் ரசித்து ரசித்துப் பாடினார். வாழ்க விடியல் இசைக்குழு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி......

   Delete
 30. முகவரி கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. தில்லி தமிழ்ச் சங்கத்தில் விசாரித்து, கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....