எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, March 20, 2014

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல....சில மாதங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் வேலைகளில் மூழ்கி இருந்த நேரம். ஒவ்வொரு நாளும் காலை 09.00 மணிக்குச் சென்றால் இரவு ஏழரை, எட்டு எனவும், சனி, ஞாயிறு விடுமுறைகளில் கூட அலுவலகம் செல்லுமளவு பணிச்சுமை. இதன் நடுவே வரும் பல தொலைபேசி அழைப்புகள் – அழைப்புகளை சமாளிப்பதற்கே இரண்டு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஒரு சிலர் அலுவலகத்திற்கு நேராகவே வந்து சந்திக்க ஆரம்பித்தார்கள். பொதுவாகவே எங்கள் அலுவலகத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனாலும் இந்த காலகட்டத்தில் சில காரணங்களுக்காக வெளியிலிருந்து வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.  அப்படி வந்தவர்களில் ஒருவர் - ஒரு மூதாட்டி.

வரவேற்பறையிலிருந்து அவர் வந்த தகவல் சொல்லி, உள்ளே அனுப்பவா வேண்டாமா என்று கேட்க, வந்த விஷயம் கேட்டு பின் உள்ளே வர அனுமதிக்கச் சொன்னேன். 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி. ஏதோ தீ விபத்தில் சிக்கி தனது முகத்தில் சில தீக்காயங்களின் தழும்புகளுடன் இருந்தார்.

உள்ளே நடந்து வந்ததில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவரை அமரச் செய்து கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளச் செய்தோம். குடிக்க நீர் கொடுத்து, தேநீர் சாப்பிடுகிறாரா எனக் கேட்டு அவர் வேண்டாமெனச் சொன்ன பிறகு அவரிடம் எதற்காக வந்திருக்கிறார் எனக் கேட்க, நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதத்தைக் காண்பித்து அதில் தவறு இருப்பதாகச் சொன்னார். பொதுவாகவே எந்தக் கடிதமாக இருந்தாலும் மூன்று நான்கு பேர் பார்த்து பிறகு தான் பெறுநருக்கு அனுப்புவது வழக்கம். இதில் தவறெங்கே? என யோசித்து அவரிடமிருந்து கடிதத்தினை வாங்கிப் பார்த்தேன்.

எல்லாம் சரியாகத் தான் இருந்தது. அவரிடம் என்ன தவறு என்று கேட்டேன். முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அவர் கொல்கத்தாவிலிருந்து வந்திருந்தார்.  முழுவதும் பெங்காலி மொழியில் தான் பேசினார்.  அவர் பேசிய பெங்காலி மொழியினை நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பதில் அளித்தேன். என்ன பிரச்சனை என்று கேட்க அப்போது சொன்னார், எனது பெயருக்கு முன்னர் நீங்கள் அனுப்பிய கடிதத்தில் Ms. என்று எழுதி இருக்கிறது, நீங்கள் Miss என்று தான் எழுதி இருக்க வேண்டும் என்றார்.

அவருக்கு பதில் சொல்லும் விதமாக, இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு பெண்மணி மணம் ஆனவரா இல்லையா என்று தெரியாத போது பொதுவாக Ms. என்ற சொல்லை முன்னர் போடுவது வழக்கம் என்று சொல்ல, அவர் அழ ஆரம்பித்து விட்டார். “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் நீங்கள் என் பெயருக்கு முன்னால் நான் சொன்ன படி Miss என்று தான் எழுதி இருக்கவேண்டும். இப்படி நீங்கள் எழுதியது எனது மனதை நோகடித்து விட்டதுஎன்று சொன்னபடி கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் அவருக்கு மனதில் ஏறவில்லை. அவர் அழுதுகொண்டே பேசிய பெங்காலி எங்களுக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரம் அவரிடம் ஒன்றும் சொல்லாது இருந்தோம். பிறகு அலுவலகத்தில் மற்றொரு பிரிவில் இருக்கும் பெங்காலி ஒருவரை அழைத்து அந்த மூதாட்டியிடம் அவரது மொழியில் பேசி சமாதானப் படுத்தச் சொன்னோம். அதற்குள் அவர் கேட்டபடியே அவர் பெயருக்கு முன்னர் Miss என்பதைச் சேர்த்து வேறொரு கடிதம் கொடுத்தோம்.

கொல்கத்தாவிலிருந்து இந்த விஷயத்திற்காகவே தில்லி வந்தாரா இல்லை வேறு வேலையாக வந்தாரா எனத் தெரியாது. இருந்தாலும், கல்யாணம் ஆகவில்லை என்பதில் அவருக்கு இருக்கும் வருத்தம்,  அதுவும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தொடரும் வருத்தம்.  என்ன வார்த்தைகள் சொல்லி அவரைத் தேற்றுவது என்பது எங்களில் யாருக்கும் புரியவில்லை.

ஒரு சிலர் திருமணம் ஆனபின், தனக்கு வாய்த்த துணை சரியில்லை என வருத்தப்பட, திருமணம் ஆகாதவர்களுக்கு இப்படி ஒரு வருத்தம். என்ன சொல்வது.  அன்றைய தினம் முழுவதும் அந்த மூதாட்டியும் அவர் அழுகையும் எனது மனதை விட்டு அகலவில்லை. இந்த நிகழ்வு பற்றி முன்னரே பதிவு எழுத நினைத்தாலும் ஏனோ எழுத மனம் வரவில்லை.  நேற்று அருணா செல்வம் எழுதிய ஒரு பதிவினை படித்ததும், இந்த மூதாட்டி நினைவுக்கு வர இன்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

விதம் விதமான மனிதர்கள், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கவலைகள்;  வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

68 comments:

 1. இதே பிரச்சினை, தமிழக முதல்வர் ஜெ.அவர்களைக் குறிப்பிடும்போதும் பத்திரிகையாளர்களுக்கு ஒருகாலத்தில் இருந்தது. தனை 'செல்வி' என்றுதான் குறிப்பிடவேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தியத்தைத் தொடர்ந்து இன்றுவரை அவரை அப்படியே குறிப்பிடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா ஐயா....

   Delete
 2. /// விதம் விதமான மனிதர்கள், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கவலைகள்.
  வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ///

  அந்த மூதாட்டியின் நிலை கண்டு மனம் வருந்தியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. விதம் விதமான மனிதர்கள், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கவலைகள்; வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

  விநோதமான அனுபவம்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. உள்மன பாதிப்பின் உச்சம்...! மூதாட்டியின் நிலை வருத்தத்தக்கது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருத்தம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 7. தலைப்பைப் பார்த்து பயந்துதான் போனேன் !

  இவ்வளவு நாளும் பாட்டியின் மனதிற்குள் நீங்காத எண்ணமாக இருந்திருக்கலாம். படிக்கும்போது கஷ்டமாகத்தான் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 8. பாவம்..

  //தலைப்பைப் பார்த்து பயந்துதான் போனேன் ! //

  நானும்... :) :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 9. மனதை நெகிழ வைத்த, அதே சமயம் வித்தியாசமான ஒரு பகிர்வு! இதைப் படித்த போது உங்களுக்கு நிறையவே சுவார்ஸ்யமான மனிதர்களைச் சந்திக்கும் அனுபவங்கள் இருப்பது தெரிகின்றது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. அவரது பெயருக்கு முன்னால் Kumari என்று எழுதியிருக்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. இங்கே குமாரி பயன்படுத்துவதில்லை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. வித்தியாசமான மூதாட்டி தான்.. பாவம் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   சிக்கிக் கொண்டு சில நிமிடங்கள் அவதி தான்! :) ஆனாலும் பாவமாக இருந்தது.

   Delete
 13. எனக்கும் இத்தகைய அனுபவம் ஏற்பட்டுள்ளது. இந்த Ms. என்றால் இருவரையும் குறிக்கும் Miss. என்பது குமாரி அதாவது திருமணம் ஆகாதவர் என்று பொருள் என்பது படித்தவர்களுக்கே தெரிவதில்லை. வயதாகியும் திருமணமாகாதவர்களுக்கு தங்களை திருமணமானவர்கள் என்ற பொருளில் Ms என்று குறிப்பிடுவதை ஒரு இழுக்காகவேதான் கருதுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 14. குமாரி கமலத்திற்கு சொந்தக்காரங்களா இருப்பாங்களா ,அந்த மூதாட்டி ?
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 15. Miss. மற்றும் Ms. இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை இப்போதுதான் நன்கு தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்...

   Delete
 16. நகைச்சுவைப் பதிவாக இருக்கும் ன்று வந்தேன். அழுகாச்சி ஆச்சி பற்றிய பதிவாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அடடா. உங்களுக்கு ஏமாற்றமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. தலைப்பைப் பார்த்துக் கொஞ்சம் யோசனை! :))) பதிவைப் படிச்சதும் மனதில் வேதனை! :((((

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 18. வலிகளும் வழிகளும் இவர்களுக்கு இனி எப்போதும் மாறப் போவதில்லை .
  மூதாட்டியின் துயரம் மனதை வாட்டுகிறது .எப்போதும் வித்தியாசமான
  (சமூகம் சார்ந்த )தகவல்களை வழங்கும் உங்களுக்கு என் மனமார்ந்த
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .த.ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 19. முன்னர் நீங்கள் எழுதிய மறுமணம் பதிவில் முத்தக்காவின் கமெண்ட் நினைவுக்கு வருகிறது. :-(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

   Delete
 20. எது எது எப்பப்போ நடக்கணுமோ அது அது அப்பப்போ நடக்கவில்லையென்றால் கொஞ்சம் சிக்கல்தான். அந்த மூதாட்டியின் மனநிலை குறித்து வருந்தத்தான் வேண்டியுள்ளது.

  (தலைப்பைப் பார்த்து நானும் தான் பயந்து போனேன். என்னமாத் தலைப்பு வைக்கறாங்கய்யா!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   தலைப்பு பார்த்து பயந்து போனீங்களா? :))))

   Delete
 21. ரா.ஈ. பத்மநாபன்March 20, 2014 at 5:28 PM

  எது எது எப்பப்போ நடக்கணுமோ அது அது அப்பபோ நடக்கவில்லையென்றால் சிக்கல்தான். பாவம் அந்த மிஸ் மூதாட்டியை நினைத்து வருந்துவதைத் தவிர நாம் என்ன செய்ய இயலும்.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பு பார்த்து ரொம்பவே பயப்பட்டது தெரிகிறது. இரண்டு முறை கருத்து பகிர்ந்திருக்கீங்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 22. எங்கள் தெருவிலும் (பாண்டிச்சேரி) ஒருபெண்மணி இருக்கிறார்.
  அவரை நாங்கள் அனைவரும் மிஸ் என்று தான் சிறுவயதிலிருந்து கூப்பிட்டுப் பழக்கம்.
  அப்போதே அவர்கள் கிழவி போல் தான் இரப்பார்கள். இப்போ சொல்லவா வேண்டும்?
  நான் இந்த முறை தவறி போய் மேடம் என்று சொல்லிவிட்டேன். வந்ததே அவங்களுக்குக் கோபம்.... “வெளிநாடு போய்விட்டு வந்தால் உனக்கு மறியாதை தெரியாமல் போய் விட்டது. யார் யாரை எப்படிக் கூப்பிட வேண்டும் என்ற அறிவுகூட இல்லாமல் போய் விட்டது....“ இன்னும் .இன்னும் நிறைய பொழிந்தார்கள். நான் மன்னிப்பு கேட்டும் நான் கிளம்பும் வரை என்னிடம் பேசவே இல்லை.

  என்ன செய்வது? இப்படியும் ஒருத்(தீ)

  நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 23. ஆஹா இப்படியும் ஒரு பிரச்சனையா???

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 24. எந்தெந்த ருபத்தில் பிரச்சினை வருகிறது பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 25. ஒ! click bait தலைப்பா ?
  //அவர் பேசிய பெங்காலி மொழியினை நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டு//அண்ணா பல மொழி வித்தகர் போலவே! ஹா..ஹா..ஹா..

  ReplyDelete
  Replies
  1. தில்லியில் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசிப் பேசி சில பாஷைகள் கற்றுக் கொண்டேன். :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 27. Aruna Selvam..velinadu poittu vandhuttangala?? theriyave illa?

  Any every one got their own problem...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி F. Xavier.

   Delete
 28. திருமதி.அருணா செல்வம் வெளி நாடு போயிட்டு வந்து இருக்காங்க ...எல்லாருக்கும் சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் ...ஒவ்வருவருக்கும் அவரவர் பிரச்சனைகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி F. Xavier.

   Delete
 29. முதலில் தலைப்பைப் பார்த்து பயந்து விட்டேன்! மனிதர்கள் பலவிதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 30. திருமணமானவர்களைக் குறிக்க முன்பெல்லாம் Mrs. என்றும் திருமணமாகாதவர்களைக் குறிக்க Miss. என்றும் எழுதப் பட்டது . இப்போது மாறிவிட்டதா.?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 31. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 32. வேறு ஏதோ எழுத வேண்டும் என்று எண்ணி இந்த தலைப்பை எழுதிவிட்டீர்கள், ஆனா வீட்டில் இருக்கும் கிரிக்கெட் பேட் (மதுரைத் தமிழன் சொன்னது!!!) நியாபகத்துக்கு வந்தவுடன், இந்த மூதாட்டியைப் பற்றி எழுதி விட்டீர்கள் அப்படித்தானே!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... எப்படியெல்லாம் யோசிக்கறீங்க? அது சரி நம்ம மதுரைத் தமிழன் சில நாட்களாகவே எங்கே காணோம்...

   Delete
  2. அவரும் என்னை மாதிரி, தமிழகத்துக்கு யாருக்கும் தெரியாம வந்திருக்கப்போராரு!!!!!

   Delete
  3. இருக்கலாம்..... சொக்கன் சுப்ரமணியன். சில நாட்களாகவே பதிவுகள் எழுதவில்லை போல.

   Delete
 33. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம். பாவம் அந்த மூதாட்டி.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனை கஷ்டங்கள்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....