புதன், 26 மார்ச், 2014

அப்பா....



உங்கள் அப்பாவை உங்களுக்குப் பிடிக்குமா?

பொதுவாகவே ஆண்களுக்கு அவர்களது அம்மாவைப் பிடிக்கும் அளவிற்கு அப்பாவினை பிடிக்காது என்று சொல்வதுண்டு. அப்பாவிடம் தேவையான எல்லா விஷயத்திற்கும் அம்மாவைதான் தூது அனுப்புவார்கள்! பிடிக்காது என்று சொல்வதை விட ஒரு பயமும் இருக்கும். இன்று நாம் பார்க்கப் போகும் ஒரு குறும்படமும் ஒரு அப்பா-மகனுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தான். அதுவும் தாயில்லாத மகன். வீட்டில் அப்பா மட்டுமே.



கொஞ்சம் ஏழ்மை வேறு. கதையில் வரும் இளைஞன் தனக்கு அப்பாவினை அவ்வளவாக பிடிக்காது என்று நேரடியாகவே சொல்கிறார். அவரை விட நான் அதிகம் சம்பாதிக்க வேண்டும், அவரை முன்மாதிரியாக வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று சொல்கிறார். ஒவ்வொரு நாளும் POCKET MONEY கொடுக்கும்போது அதிலிருந்து கொஞ்சம் வரி எனச் சொல்லி ஒரு உண்டியலில் போட்டுவிடுகிறார். தனது பங்காகவும் அதே அளவு காசினைப் போடுகிறார். அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என அப்பா சொல்லும்போது மகனுக்கு அப்படி ஒரு சோகம்!

படிப்பு முடிந்து வெளியூருக்கு வேலைக்காகச் சென்று விடுகிறார். அப்படி போகும்போது அப்பா, மகனுக்கு பணம் கொடுத்து, இன்னும் வேண்டுமெனில் கேள், எனச் சொல்ல, வேண்டாம் என மறுத்து கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். தொலைபேசியில் அழைத்து இன்றைக்கு வருகிறாயா எனக் கேட்க, அடுத்த வருஷம் பார்க்கலாம், எனக்கு ரொம்ப வேலை இருக்குஎனச் சொல்லி தொலைபேசி அழைப்பினை முடித்து விடுகிறார். அப்பாவின் முகத்தில் சோகம் ததும்புகிறது.

சில நாட்கள் கழித்து அப்பா இறந்து போன தகவல் வர வீட்டிற்கு வருகிறார். அப்பாவின் பெட்டியைத் திறந்து பார்க்கும்போது சில விஷயங்கள் தெரிகிறது. அங்கிருந்த கடிதங்களைப் பார்த்தபின் ஒரு இல்லத்திற்குச் செல்கிறார். அங்கே என்ன நடக்கிறது. அவர் தந்தை என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க இந்த குறும்படத்தினைப் பார்க்கலாமே! நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் இந்தக் குறும்படம்.


படத்தின் பெயர்:       GIFT.
இயக்கம்:             DANIEL YAM
மொழி:               ENGLISH.



 
இப்படத்தில் சொல்லும் ஒரு விஷயத்தினைச் சொல்லி இந்த இடுகையை முடிக்கிறேன்....
                               
BEING RICH IS NOT ABOUT HOW MUCH YOU HAVE, BUT ABOUT HOW MUCH YOU CAN GIVE……

வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்....

வெங்கட்.
புது தில்லி.

46 கருத்துகள்:

  1. அப்புறம் வந்துதான் பார்க்கணும் படத்தை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க ஸ்ரீராம். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அற்புதமான காணொளி
    பகிர்வுக்கு மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. த.ம வில் இணைத்து வாக்களித்துவிட்டேன்
    த.ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. அருமையான குறும்படம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

      நீக்கு
  5. நல்லதொரு செய்தியைத் தரும் காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. நெகிழ வைக்கும் குறும்படம்... நன்றி...

    "பொதுவாகவே" நீங்கள் சொன்னது சரி தான்... ஆனால் எனக்கு அப்பாவையும் மிகவும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. காணொளியைப் பார்த்து முடித்ததும் கண்கள் பனித்தன! அற்புதம்! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  8. அன்பின் வெங்கட்..
    இந்த குறும்படம் சில தினங்களுக்கு முன் எனது Facebook - ல் வந்தது.
    குறும் படத்துக்குள் - பெரும் விஷயம்.
    கதையின் முடிவில் கண்கள் கசிவதை தவிர்க்க இயலாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  9. சந்தோசத்தில் மிகப் பெரிய சந்தோசம் ,அடுத்தவங்களை சந்தோசப் படுத்திப் பார்க்கிறதுதான்னு நம்ம பாக்யராஜ் சொன்னதை நினைவு படுத்தியது குறும் படம் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி...

      நீக்கு
  10. இந்தப் படம் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். எங்களுக்கெல்லாம் எங்க அப்பாவிடம் பயம் தான். இருக்கிறதுக்குள்ளே நான் ஒருத்தி தான் எங்க அப்பாவிடம் தைரியமாப் பேசுவேன்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. ஆனால் இங்கே எங்க குடும்பத்திலோ அதிகம் ஒட்டிக்கவும் மாட்டாங்க, வெட்டிக்கவும் மாட்டாங்க. என்றாலும் இப்போதெல்லாம் எங்க பையர் அப்பாவிடம் தான் ஜாஸ்தி பேசுவார். என்கிட்டே ஐந்து நிமிஷம் பேசினால் பெரிய விஷயம்! :)))))

    சின்ன வயதிலே தான் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்புத் தேவைப்படுகிறது. விடலைப்பருவம் எனப்படும் பதின்ம வயது வந்ததும் அவர்கள் அவர்களுக்கு இணையாக இருக்கும்படியான நபர்களையே தேடுகின்றனர். அப்போ அவங்க விருப்பத்திலே அம்மாவுக்கு முதல் இடம் இருந்தாலும் ஒரு நூலிழை தள்ளியே நிற்பாங்க. நட்பு, அப்பா இருவரிடம் தான் நெருக்கம் அதிகம் இருக்கும். இது என்னோட கவனிப்பு+கணிப்பு. படத்தை எதுக்கும் மத்தியானம் மறுபடி ஒருதரம் பார்த்துடறேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

      நீக்கு
  13. மிக அருமையான குறும் படம். நெகிழ வைத்துவிட்டது.
    இருப்பவர்கள் கொடுப்பதை விட இல்லாதவர் கொடுக்கும் கொடை மிக பெரிது.
    வறுமையிலும் செம்மை. இதை தான் சொல்வார்கள்.
    தந்தையை பின் புரிந்து கொண்டு தன் தந்தையின் பணியை ஏற்றுக் கொள்ளும் மகன் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மிக ஆனந்தம்.
    நான் அப்பா செல்லம். என் குழந்தைகளுக்கும் அப்பா பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. DANIEL YAM அவர்கள் இயக்கிய ஆங்கில குறும் படமும் அதற்கு நீ அளித்த விளக்கமும் ரசிக்கும்படியாக இருந்தன . வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்கிற ஒரு கருத்தினை முடிவில் தன் மகனுக்கு உணர்த்திய அந்த அப்பாவின் பெருந்தன்மை கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.....

      நீக்கு
  15. நான் ஐந்து வயதில் தந்தையை இழந்தவன்;தாயே தந்தையுமானாள்!
    நெகிழ்வான காணொளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  16. கண்கள் கசிய கண்ணுற்றேன் காணொளியை.. அன்பை அளவின்றி அள்ளித்தருபவரே அவனியில் என்றும் ஆகச்சிறந்தோர்.. நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் குமார்.பா.

      உங்களது முதல் வருகையோ?

      நீக்கு
  17. கடைசி வரிகள் சிறப்பு! படம் அப்புறம் பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படத்தினையும் பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  18. ரா.ஈ. பத்மநாபன்26 மார்ச், 2014 அன்று PM 5:03

    அருமையான குறும்படம்.

    நம் பெற்றோரின் அருமை, நாம் பெற்றோராகும்போதுதான் தெரியவருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  19. தந்தைக்கு மரியாதை செலுத்தும் மகன் நெகிழ வைக்கிறார்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  20. அருமையான குறும்படம். கண்களைக் கசிய வைத்துவிட்டது.
    இராஜராஜேஸ்வரி அம்மா சொன்ன இடத்தில் மனம் நம்மை மீறி குலுங்க வைக்கிறது.
    அவன் சொல்லும்...“ ப்பா“ என்ற வார்த்தையின் ஒலி... அப்ப ப்பா.. சொல்ல வார்த்தைகள் இல்லை.

    நன்றி நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. அப்பா பற்றிய உங்கள் எண்ணம் என்ன.? என் அப்பா என்னைத் தோழனாக பாவித்தார். நான் சிறுவனாக இருந்தாலும் என்னிடம் அபிபிராயம் கேட்பார். அப்பாவுக்கு என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்பா, அம்மா இருவர் மீதும் பாசம் உண்டு.... பதிவில் நான் சொன்னது பொதுவான விஷயம் மட்டுமே... என்னுடைய தனிப்பட்ட கருத்தல்ல....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  22. மனது நெகிழும் குறும்படம் !

    பகிர்வுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் ம்னோ...

      நீக்கு
  23. மிகவும் அருமை ..படத்துடன் கூடியபாடம் . பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....