எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 9, 2014

ரங்கோன் ராதா....


ஜப்பானியர்களின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டி யிருந்திருக்கும். அது உன்னால் தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய ‘கெட்டகாலம்அவளை இப்படியாக்கிவிட்டது?இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது. அடுத்த வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு கேட்போம், பிறகு பார்ப்போம்என்றேன் நான்.

கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. “ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடிஎன்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். “போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய, “நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்: என்று நான் வாக்களித்தேன். அவளைக் காணாமலேயே அவள் மேல் காதலும் கொள்ள ஆரம்பித்தேன்!


இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த கதை. ஆனால் முதலில் அப்பெண்ணைப் பார்க்க, கதாநாயகன் பரந்தாமனை அழைத்துப் போவதாகச் சொன்ன நாகசுந்தரம், நண்பனைச் சந்திப்பதை தவிர்க்க ஆரம்பிக்கிறார். சில முறை கேட்ட பின் சொல்கிறார், நான் சொல்வதைக் கேட்டபின் ரங்கோன் பெண் ராதா பற்றி தவறாக எதுவும் நினைக்கக் கூடாது, அவளை நீ திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தால் தான் நான் அவள் பற்றிய உண்மைகளைச் சொல்வேன் என்று கூறுகிறார். அவர் கூறிய உண்மை - அந்த ரங்கோன் ராதா என்பவர் நாகசுந்தரத்தின் தங்கை!

பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை அவர்கள் எழுதிய ஒரு புதினம் தான் “ரங்கோன் ராதா”.  சில நாட்களுக்கு முன்னர் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் இந்த ரங்கோன் ராதாவும் ஒன்று. படிக்க ஆரம்பித்ததிலிருந்து விறுவிறுப்பாகச் சென்றது கதை. ராதா எப்படி நாகசுந்தரத்தின் தங்கை ஆனார் என்பது ஒரு பெரிய கதை. சுருக்கமாக பார்க்கலாம்.

நாகசுந்தரத்தின் தந்தை காலத்திலிருந்து பார்க்க வேண்டும் இதற்கான காரணத்தினை! நாகசுந்தரத்தின் தந்தை பொன் ஆசை, மண்ணாசை என பல ஆசைகள் கொண்டவர்.  வெளியே நல்லவர் போல வேஷம் போட்டாலும், உள்ளுக்குள் பல விதமான கள்ளத்தனங்களை கொண்டவர். தனது மாமனார் உடைய சொத்து முழுவதையும் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காகவே, முதல் மனைவி ரங்கம்மாளுக்கு [நாகசுந்தரத்தின் தாய்] பேய் பிடித்துவிட்டதாகச் சொல்லி, ரங்கம்மாளின் தங்கை தங்கம் என்பவரையும் கல்யாணம் செய்து கொண்டார். தொடர்ந்து சில காரியங்கள் செய்யப் போய், பேராசையின் காரணமாக ஒரு கொலை செய்து விடுகிறார். அதிலிருந்து அவரை தப்பிக்க வைக்க ரங்கம்மாள் தானே இறந்ததாக நாடகமாடி ஊரை விட்டு வெளியேறுகிறார். அங்கிருந்து பர்மா சென்று வேறொரு திருமணம் புரிந்து கொண்டு பர்மாவில் குண்டு விழுந்த சமயத்தில் இந்தியா திரும்புகிறார்.

வந்து சேர்வது அவரது கணவர் வீட்டுக்கு அடுத்த வீடு. அவர் வந்த சமயத்தில் அவரது கணவர் இரண்டாம் மனைவியான தங்கத்துடன் காசி சென்றிருக்க, நாகசுந்தரத்திற்கு இந்த விஷயங்கள் தெரிகிறது. தனது தாய் இருந்தும் இறந்து விட்டதாகச் சொல்லி தன்னை ஏமாற்றி இருக்கிறாரே என்று தனது தந்தை மேலே பயங்கர கோபம் வருகிறது. தனது தாய்க்கு இரண்டாம் கல்யாணத்தின் மூலம் பிறந்த ராதாவினை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டு, அவரை தனது நண்பர் பரந்தாமனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். 

அவரது இந்த முயற்சி வெற்றி பெற்றதா, அவர் தந்தை மீண்டும் முதல் மனைவியான ரங்கம்மாளைச் சந்தித்தாரா? என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாமே! பல இடங்களில் அந்தக் காலத்திற்கேற்ப நீண்ட வசனங்களும், அதிகமான விவரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.  பல இடங்களில் இத்தனை விவரங்கள் தேவையில்லையே என்று தோன்றச் செய்தது. பேய் பிடித்துவிட்டதாக்க் கூறி ரங்கம்மாளை படுத்தும் கொடுமையை மிகவும் அதிகமாகவே விவரித்து இருக்கிறார். படிக்கும்போது நமக்கே பணத்தாசை எனும் பூதம் பிடித்திருப்பது வேஷதாரி கணவனைத் தானே என்று தோன்றுகிறது.  

இந்தப் புத்தகம் சில வருடங்களுக்கு முன்னர் பூம்புகார் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் விவரங்கள் கீழே:

புத்தகத்தின் தலைப்பு: ரங்கோன் ராதா.
ஆசிரியர்:  பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை.
பக்கங்கள் எண்ணிக்கை: 192.
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை, சென்னை.
விலை: ரூபாய் 60/- [ஜனவரி 2002 பதிப்பு]
இப்போது இணையத்திலும் கிடைக்கிறது [விலை ரூபாய் 75/-].

இக்கதை ஹாலிவுட் தயாரிப்பான Gaslight என்ற படத்தினை தழுவி எழுதப்பட்டது.  இக்கதை பின்னர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. படத்தின் பெயரும் ரங்கோன் ராதா”! இந்த படத்திற்கான திரைக்கதை கலைஞர் மு. கருணாநிதி. நடித்தவர்கள் – சிவாஜி கணேசன் [தந்தை], பானுமதி [முதல் மனைவி], எம்.என். ராஜம் [இரண்டாம் மனைவி], எஸ்.எஸ். ராஜேந்திரன் [மகன்] மற்றும் ராஜசுலோச்சனா [ராதா]. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லையாம்! [நன்றி: The Hindu].
இரண்டு மணி 10 நிமிடம் ஓடக் கூடிய இந்தப் படத்தினைப் பார்க்கும் பொறுமை உங்களுக்கு இருந்தால் யூ ட்யூபில் இப்படத்தினைக் காணலாம். அதற்கான சுட்டி இங்கே!

புத்தகம் மூலமாகவோ, இல்லை சினிமாவின் மூலமாகவோ முழுக் கதையையும் தெரிந்து கொள்ளலாம். 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. சரியாக ஓடவில்லை என்றாலும் "ரங்கோன் ராதா" நல்ல படம்...

  பொதுநலம் - என்றும் பொதுநலம்...
  புகழ் உடலைக் காக்கும்...
  மிகப் புனிதமான செயல்
  பொதுநலம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. முன்பு ஒருமுறை பார்த்தது. முழுமையாக நினைவில் இல்லை.
  எனினும் அந்தக் காலத்தில் ரங்கோன் ராதா எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும் தானே!..
  தங்களின் பதிவின் மூலம் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. தங்களின் சுருக்கமான கதையே போதும்னு படுகிறது !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. அந்தக் காலத்து ஹீரோக்கள் நெகட்டிவ் ரோலை மிக இயல்பாக எடுத்து நடித்துள்ளனர் என்பதற்கு இந்தக் கதை சாட்சி... பார்க்கலாம்..ஆனா இரண்டரை மணி நேரம் தொடர்ந்து கிடைக்கணுமே...பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 5. ரங்கோன் ராதா படத்துல பரந்தாமன் யார் சார்...
  அடுத்த தடவை கடைக்கு போறப்ப புத்தகத்தை தேடி பாக்குறேன் சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 6. Rangon Radha padam innum parththadhillai. U T moolamaga parkkiren.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 7. ரங்கோன் ராதா படத்திற்கான இணைப்பைத் தந்தமைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது பார்க்க இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. அண்ணாவின் அருமையான கதை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. விறுவிறுப்பான விமர்சனம்.. பயனுள்ள சுட்டி..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. அறிஞர் அண்ணாவின் இந்த நாவலைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்! படித்தது இல்லை! படமும் பார்க்கவில்லை! பகிர்வுக்கு நன்றி! சமயம் கிடைக்கும் போது படிக்கவும் பார்க்கவும் செய்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. மிகவும் சிறப்பான தகவல் அதிலும் பழைய படங்கள் பார்க்கும் போது
  கிட்டும் மகிழ்விற்கு எல்லையே இல்லை .இன்றே இப் படத்தினைப்
  பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தந்த சிறப்பான பகிர்வுக்கு என்
  நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. ரா.ஈ. பத்மநாபன்April 9, 2014 at 5:38 PM

  இங்கதான் அண்ணாத்தே நீ நிக்கிறே! பவுசாத் தேடிப்புடிச்சு அழ்ழகா குடுக்கற பாரு! நல்லா இரு ராசா! நல்லா இரு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. ஏகப்பட்ட வசனங்களைத் தாங்கி இருந்திருக்கும். நிறையத் தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பழைய புத்தகம் ஒன்றின் பகிர்வு சுவாரஸ்யத்தைத் தந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   ஏகப்பட்ட வசனங்கள் - உண்மை! :)

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன்.

   Delete
 15. ரங்கோன் ராதாவில் படத்தில் ரங்கம்மா ,வைத்தியரின் பெண்ணைத் தன் பெண்ணாக வளர்ப்பதாகத் தான் வரும். இரண்டாம் கல்யாணத்தைச் சொல்லவில்லை. நல்ல நடிப்பு,நல்ல படம். சிவாஜியின் வில்லத்தனம் பிரமாமாக இருக்கும். நல்லதொரு பகிர்வு வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 16. நல்ல விமர்சனம். படத்திற்கான லிங்கையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. நேரம் கிடைக்கும்போது படத்தைப் பார்க்கிறேன். அதற்குமுன் பொறுமையைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அதற்கு முன் பொறுமையைத் தயார் செய்து கொள்ள வேண்டும்! :))) அதே அதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 18. பார்க்க முயற்சிக்கிறேன்.. விமர்சனம் அருமை பாஸ்!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது பாருங்க ஆவி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 19. கடந்த வருட புத்தகசந்தையில் வாங்க வேண்டும் எண்டு எடுத்த புத்தகம், பின் வேண்டாம் என்று வைத்து விட்டேன்.. வாங்காதது நல்லதாயிற்று :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 20. நான் கதையைப் படித்திருக்கிறேன். படம் பார்த்தது இல்லை.
  நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்.

  உங்களின் முகவரி தெரிந்தால் நான் எழுதிய புத்தகங்களை உங்களுக்கு அனுப்பி.... என்
  புத்தகத்திற்கும் ஒரு மதிப்புரை கொடுக்கும் படி கேட்டால் எழுதுவீர்களா....?

  அருமையாக எழுதுகிறீர்கள். வணங்குகிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதில் அனுப்பி இருக்கிறேன்.....

   Delete
 21. அந்த படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 22. சார்லஸ் போயரும் இன்க்ரிட் பெர்க்மனும் ’காஸ்லைட்’டில் அசத்தியிருப்பார்கள். அதை மிஞ்சும் விதத்தில் சிவாஜி பானுமதி இருவரின் அசாத்திய நடிப்பு ரங்கோன் ராதாவில் மறக்க முடியாதது. ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 23. சிவாஜி பானுமதியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். சிவாஜி உருப்படியாக நடித்த சில படங்களில் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

   சிவாஜி உருப்படியாக நடித்த சில படங்களில் ஒன்று! - :)))))

   Delete
 24. நல்ல படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை பார்க்கவில்லை அண்ணா...
  இந்த வாரத்தில் பார்க்க முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 25. படமும் பார்க்கலை, கதையும் படிச்சதில்லை. சினிமாவா வந்ததுனு தெரியும். அதில் ஜிவாஜி, பானுமதினு இப்போத் தான் தெரியும். :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 26. நல்ல பகிர்வு! ரங்கோன் கதை வாசித்ததில்லை! படமும் பார்த்ததில்லை! பார்க்கிறோம்! வாசிக்கிறோம்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....