எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 16, 2014

ஃப்ரூட் சாலட் – 92 – தேர்தல் முடிவுகள் - புதுக்கவிதை - தந்தையின் டைரிஇந்த வார செய்தி:

தேர்தல் முடிவுகள் [இப்பதிவு எழுதும்போது] பல ஊடகங்கள் எதிர்பார்த்தது போலவே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் இருக்கிறது/வென்றிருக்கிறது. சென்ற ஆட்சியாளர்களிடமிருந்து இவர்கள் எந்த விதத்தில் மாறுபடுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு எந்த விதத்தில் வசதிகள் செய்து கொடுப்பார்கள், ஊழல் இல்லாத, தன்னலம் கருதாத, ஆட்சியாக இந்த புதிய ஆட்சி அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கும்போது அந்த வெற்றி ஆட்சியாளர்களின் மனதை களங்கப்படுத்தி, “ஐந்து வருடங்கள் நமக்கு கிடைத்திருக்கிறது. அதில் எந்த அளவு சம்பாதிக்க முடியுமோ அத்தனை சம்பாதிக்க வேண்டும்” என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடாமல் இருக்க வேண்டும். இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான – குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு, உணவு, ஊழலற்ற அரசாங்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மோதி அலை அடித்து, மோதியை பிரதமராக ஆக்கிய மக்கள் தாங்கள் எடுத்த முடிவினால் தங்களது தலையை ”மோதி”க்கொள்ளப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு தந்தையின் டைரிக்குறிப்பு:

என்னுடைய மகன் என்னுடையவனாகவே இருக்கிறான் – அவனுக்கு ஒரு மனைவி கிடைக்கும்வரை……

என்னுடைய மகள் என்னுடையவளாகவே இருக்கிறாள் – என்னுடைய வாழ்நாள் முழுவதுமே!

இந்த வார குறுஞ்செய்தி:

ஒரு கண்ணாடி தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன் – நான் அழும்போது அந்த கண்ணாடி சிரிப்பதில்லை……  - சார்லி சாப்ளின்.

சுஜாதாட்ஸ்:

புதுக்கவிதை பற்றி சற்று பேசலாம். புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது.

“அடிக்கடி கட்சிமாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன”

என்கிற வாக்கியத்தினை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.

என்னய்யா விளையாடுகிறீர்களா?

-    கணையாழியின் கடைசி பக்கங்கள், அக்டோபர் 1972.
ரசித்த பாடல்:

நாசர் மற்றும் ரேவதி நடித்த அவதாரம் படத்திலிருந்து இளையராஜா அவர்களின் குரலில் “தென்றல் வந்து தீண்டும்போது” எனும் நான் ரசித்த பாடல்….  இதோ உங்களுக்காக….புகைப்படம்:படித்ததில் பிடித்தது:

துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்என்றான். ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. நான் கடவுளை அறிய விரும்புகிறேன்என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

காற்றுஎன்றான் இளைஞன்.

நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வாஎன்று சொல்லி விட்டார்.

நீதி: முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..


54 comments:

 1. சரியான நேரத்தில் தேவையான பதிவு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 2. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 3. புகைப்படமும் பாடலும் ரசிக்கவைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. எல்லாம் அருமை. குருவின் ட்ரீட்மென்ட் கொடுமையாக இருக்கிறது! :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. #தங்களது தலையை ”மோதி”க்கொள்ளப் போகிறார்களா#
  உண்மைதான் ,அடிக்கடி ராமர் வேறு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் !
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. //மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான – குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு, உணவு, ஊழலற்ற அரசாங்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.//
  நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. இந்த வார ஃப்ரூட்சாலட் சுவையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குணசீலன்.

   Delete
 9. படித்ததில் பிடித்தது - சிறப்பான நீதி... மற்றவைகளும் நல்ல சுவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

   Delete
 10. மாற்றம் வந்தால் எதாவது நல்லது நாட்டுக்கு நடந்துறாதான்னுதான் மனசு ஏங்குது.

  இந்தத் தேர்தலை வெளிநாட்டு இந்தியர்கள் எல்லோருமே கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. துறவி கதை சிறப்பு! தமிழகத்தில் மோடி அலையை லேடி அலை வென்றுவிட்டது பார்த்தீர்களா? யாரும் எதிர்பாராத வெற்றி இது. திமுக ஒரு சீட் கூட வெல்லாதது ஆச்சர்யம் அளித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. அனைத்தும் அருமை.. மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. எல்லொருடைய எதிர்பார்ப்புகளையும் பதிந்து வீட்டீர்கள். நல்லது நடக்கும் நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 16. உண்மையில் மோதிக் கொள்ளப் போகிறார்களா என்று பார்க்கத்தான் வேண்டும்!!!

  ஒரு தந்தையின் டைரிக்குறிப்பு: - இது தான் தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசம்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. Thagundha neraraththil thagundha padhivai velittu anaivaraiyum thripthi paduththuvadharku parattukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 18. எல்லாம் மிக அருமை அதிலும் இது மிக அருமை //மோதி அலை அடித்து, மோதியை பிரதமராக ஆக்கிய மக்கள் தாங்கள் எடுத்த முடிவினால் தங்களது தலையை ”மோதி”க்கொள்ளப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்….///

  // என்னுடைய மகன் என்னுடையவனாகவே இருக்கிறான் – அவனுக்கு ஒரு மனைவி கிடைக்கும்வரை……

  என்னுடைய மகள் என்னுடையவளாகவே இருக்கிறாள் – என்னுடைய வாழ்நாள் முழுவதுமே!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எனது பதிவொன்றில் மதுரைத்தமிழனின் வருகையும் கருத்தும். மகிழ்ச்சி.

   Delete
 19. அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் இருந்தாலே போதும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. சுவையான சாலட்
  அத்துடன் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
  காணொளியாக்கிக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 21. Replies
  1. தமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 22. அன்பு நண்பரே

  இந்த வார ப்ரூட் சால்ட் மிகவும் சுவையான சாலட். வார செய்தி, முகப்புத்தக இற்றை, குறுஞ்செய்தி, etc etc. மிகவும் அருமையான பாடலை
  காணொளியாக்கிக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி
  பகிர்வு தொடர நல்வாழ்த்துக்கள் மிக பல.
  அன்புடன்
  டெல்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 23. தங்களின் ஃப்ரூட் சாலட் எப்போதுமே அருமைதான்! அதை தாங்கள் அலங்கரித்து பரிமாறும் விதமுமே நாங்கள் மிகவும் ரசிப்பவை! இன்றும் அதே போலத்தான். நாங்கள் மிகவும் ரசித்தது....

  //மோதி அலை அடித்து, மோதியை பிரதமராக ஆக்கிய மக்கள் தாங்கள் எடுத்த முடிவினால் தங்களது தலையை ”மோதி”க்கொள்ளப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…..// நச்!

  சஜாதாட்ஸ்! எக்காலத்தும் பொருத்தமான ஒன்று!

  ராஜாவின் பல உன்னதமான இசையமைப்பில் வெளிவந்த பாடல்களுல் இதுவும் ஒன்றே! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. வழக்கம்போல பல்சுவையிலான ஃப்ரூட் சாலட் அருமை வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 25. எனக்கு மிகவும் பிடித்த இளையராஜா பாடல் அது: தென்றல் வந்து தீண்டும்போது... இதே போன்ற ஒரே ஒரு பாடல் இசையமைத்துவிட்டால் போதும் என்று யுவன்ஷங்கர் ராஜா ஆசைப்பட்டு சொன்ன பாடலாச்சே அது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 26. ரசித்தேன்.

  டைரிக்குறிப்பு பிரமாதம் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 27. ஆரவாரங்கள் அடங்கிய பிறகுதான் தெரியும் எப்படிப்பட்ட ஆட்சி என்று. இருப்பினும் ஒரு மாற்றம் வேண்டும்தானே.

  மகளை உயர்வாக சொல்லிவிட்டு மருமகளை மட்டும் ...... க்ர்ர்ர்!

  அழகான பூவுடன் சேர்ந்த கதை முதல் எல்லாமும் சுவையாகவே உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....