எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 18, 2014

ஃப்ரூட் சாலட் – 100 – வைரப்பற்கள் – தங்க தோசை - தாகூர்

இந்த வார செய்தி:

சில கன்னியர்களின் சிரிப்பைக் கேட்கும் போதே மயங்கி விடுவது வழக்கம். நீ சிரிப்பது முத்துக்கள் உதிர்வது போல இருக்கின்றதே என்று காதல் கவி பாடுவதும் நடப்பதே.  உன் பற்கள் முத்துக்கள் போல வெண்மையாக இருக்கின்றனவே என்று உவமை சொல்வது போல பற்கள் வைரம் போல ஜொலிக்கிறதே என்று உவமை காண்பிக்க முடியாது.  அதையும் உவமையாகச் சொல்ல முடியும் இப்போது... துபாய் நகரத்தினைச் சேர்ந்த ஒரு பல் மருத்துவர் மஜீத் நஜி – Liberty Dental Clinic என்ற பெயரில் பல் மருத்துவமனை வைத்திருக்கிறார். அவர் இப்போது பத்து கிராம் தங்கம் [24 காரட்] மற்றும் 160 வைரக் கற்கள் கொண்டு ஒரு பல் செட் தயாரித்து இருக்கிறார்.  அப்படி ஒன்றும் அதிக விலையில்லை – 152700 டாலர் தான் – அதாவது இந்திய மதிப்பில் சுமாராக 91,89,791/- ரூபாய் மட்டும்!

இந்த பல செட்டினைப் போட்டுக் கொண்டு ஒரு பெண் சிரித்தால் நிச்சயம் பற்கள் ஜொலிக்கும்! வைரக் கற்களின் தரத்திற்கான சான்றிதழை பெல்ஜியம் நகரில் இருக்கும் World Diamond Institute தந்திருக்கிறது. இந்தப் பற்களைப் போட்டுக் கொண்டு வெளியில் சென்றால் அப்படியே பளபளக்கும் என்பது நிச்சயம். ஆனால் ஒரு பிரச்சனை உண்டு! – இதை அணிந்து கொண்டு உணவு உண்ண முடியாது – அலங்காரத்திற்காக மட்டுமே அணிந்து கொள்ள முடியும்!

இதைத் தயாரித்த மருத்துவர் அதற்கான காரணமாகச் சொல்வது என்ன என்று பார்க்கலாம்!


சென்ற வருடத்தில் ஐக்கிய அரேபிய நாட்டு மக்கள் தான் உலகிலேயே மிகவும் சந்தோஷமானவர்கள் என்று பட்டம் பெற்றார்கள். அப்போது உதித்த எண்ணம் தான் இந்த வைரப் பற்கள். இதை விற்கும் பணத்தில் கணிசமான தொகையை ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.


அரச குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணிற்கு இந்தப் பற்கள் விற்கப் போவதாகவும் அடுத்தது கடார் நாட்டினைச் சேர்ந்தவருக்காக தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மஜித், உலகெங்கிலுமிருந்து இந்தப் பல் செட் வாங்க நிறைய பேர் விருப்பம் தெரிவிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளார்.   சாதாரணமான சிரிப்பே போதும் இல்லையா... இதற்கு இத்தனை செலவு செய்யணுமா என்ன! நீங்க சொல்லுங்களேன்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:

WHEN YOU FOCUS ON MONEY, YOU BUILD A COMPANY, BUT WHEN YOU FOCUS ON PEOPLE YOU CAN BUILD AN EMPIRE.

இந்த வார காணொளி:

பற்களுக்கு வைரம் அப்ப சாப்பிட என்ன?  தங்கம் தான்....

பெங்களூரூ நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை கிடைக்கிறது. அதன் விலை ரூபாய் 1011/- மட்டுமே...  அப்படி என்ன அதில் ஸ்பெஷல்?  தோசையின் மீது ஒட்டித்தரப்படும் மெல்லிய தங்கத் தகடு தான் ஸ்பெஷல்.  ஒவ்வொரு தோசையின் மீதும் தங்கத் தகடு [foil] ஒட்டித் தருவதால் தான் இத்தனை விலை.  இந்தக் காணொளியில் காண்பிக்கப் படும் பெண் சொல்வதைப் பார்த்தால் கோபம் தான் வருகிறது – ஒரு தோசைக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்வதில் தவறில்லை என்பது போன்ற வாக்குமூலம்!

இந்தக் காணொளி எடுத்த வருடம் 2012 – இப்போது இந்த உணவகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பெங்களூரூ நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த வார உழைப்பாளி:தலைநகர் தில்லியில் பேட்டரி மூலம் இயங்கும் E-Rickshaw வண்டிகள் சில மாதங்களாக இயங்கி வருகின்றன. சென்ற வாரத்தில் ஒரு நாள் அப்படி ஒரு E-Rickshaw-வில் பயணம் செய்யும் தருணத்தில் ஓட்டுனரிடம் பேசியபடி வந்தேன். வாடகைக்கு ஓட்டுகிறார் அந்த நபர் – பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 350/- [பேட்டரி charge செய்வது, வண்டியை பராமரிப்பது எல்லாம் உரிமையாளரின் வேலை]. இப்படி பல E-Rickshaw-க்கள் இருப்பதால் போட்டி அதிகம். நாள் முழுவதும் வேலை செய்தால் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை கிடைக்கலாம் – அதில் 350/- ரூபாய் உரிமையாளருக்குக் கொடுத்து விட, மீதம் இருப்பதில் தன்னுடைய செலவுகளும், வீட்டிற்கான செலவுகளும் பார்க்க வேண்டும்.

இதில் மருந்தும் அருந்துவீர்களா [இங்கே மருந்து என்பதற்கு பொருள் சரக்கு என்று கொள்க!] எனக் கேட்டபோது சிரித்தபடியே எனக்கு அந்த பழக்கம் இல்லைஎன்றார். நல்லது தான் – இல்லையெனில் அதற்கு செலவு செய்து வீட்டிற்கு தர வேண்டியதை குறைக்காமல் இருக்கிறாரே..... ஒரு நாள் கூட ஓய்வு இல்லாது உழைக்கும் அந்த உழைப்பாளிக்கு ஒரு சலாம் போட்டு எனது பயணத்தினை முடித்தேன்!

இந்த வார நிழற்படம்:

தமிழகத்தில் இருக்கும் ஒரு சுற்றுலா தலத்தில் எடுத்த படம் இது. இடம் என்ன என்பதைச் சொல்ல முடியுமா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!படித்ததில் பிடித்தது:

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ....
எங்கே தலை கம்பீரமாக நிமிர்கிறதோ....
எங்கே அறிவு சுதந்திரமாய் சஞ்சரிக்கிறதோ....
எங்கே சொற்கள் உண்மையின்
அடித்தளத்தில் இருந்து பிறக்கின்றனவோ....
எங்கே உலகம் சாதி மத பிரிவுகளால்
உடையாமல் இருக்கின்றதோ....
எங்கே இரக்கமும் செயலாக்கமும்
முழுமையாக கைகளை நீட்டுகின்றதோ....
எங்கே அழகிய நீரோடைகள்
மூடப் பழக்க வழக்கம் என்னும் பாலையில்
பாயாமல் செய்கின்றனவோ.....
அந்த சொர்க்க பூமியை நோக்கி – என் தந்தையே
என் நாடு விழித்து எழுவதாக!

-   ரவீந்திரநாத் தாகூர்.

இந்த வாரம் ஸ்பெஷல்: ஃப்ரூட் சாலட்-100

ஜூன் 13, 2012 அன்று ஃப்ரூட் சாலட்எனும் பெயரில் பல விதமான விஷயங்களைக் கலந்து பதிவாக தரும் வழக்கத்தினை தொடர்ந்தேன். வாரத்திற்கு ஒரு பதிவு என்று முடிவு செய்து, ஃப்ரூட் சாலட்-1 என்று ஆரம்பித்து இன்றைக்கு வெளியிடும் இப்பகிர்வு இவ்வரிசையில் நூறாவது பழக் கலவை!  தொடர்ந்து இந்த பழக்கலவைக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

முக்கிய குறிப்பு:  ஃப்ரூட் சாலட் தொடர்ந்து தரவா, இல்லை வேண்டாமா? என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


70 comments:

 1. சிரிப்பதற்கு இவ்வளவு செலவா?
  இயற்கை எழில் கொஞ்சும் இடம் ஊட்டி தானே ஐயா
  தம 2

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பதற்கு இவ்வளவு செலவு..... அதே கேள்வி தான்....

   ஊட்டி அல்ல.....

   த்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  100வதுதொடருக்கு வாழ்த்துக்கள்
  ஏனைய தகவல்கள் மற்றும் காணொளி படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி...
  த. ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. முதலில் வாழ்த்துக்களை பிடியுங்கள் சார்.... எப்போதும் உங்களின் பதிவுகளின் ரசிகன் நான், அதுவும் இந்த பகுதிக்கு ஸ்பெஷல் !! தொடர்ந்து எழுத வேண்டும்..... இன்னொரு முட்டையை நூறில் சேர்க்கவும் விரைவில் !


  வைர பல்லா.... இப்போவே இதை எனது மனைவியிடம் இருந்து மறைக்கணும்.


  பெங்களுருவில் இந்த தங்க தோசை கிடைக்கும் இடம் மூடப்பட்டு விட்டது, நான் அறுசுவை பகுதிக்கு தேடி சென்றபோது தெரிந்து கொண்டேன் !


  கொடைக்கானலில் எடுத்ததா ? கண்டு பிடித்ததற்கு பரிசு என்ன ?!

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு முட்டை...... :)

   கொடைக்கானல் அல்ல :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 4. அநியாயம் வெங்கட்.... இவ்வளவு விவரமும் தந்த நீங்கள் அவரைக் காண்டாக்ட் செய்யும் விவரம் தந்திருந்தால் நானும் ஒரு பல்செட்டுக்கு ஆர்டர் தந்திருப்பேன் இல்ல?

  இற்றை, குறுஞ்செய்தி நன்றி.

  காணொளி, செய்தி படித்திருக்கிறேன். கொஞ்சம் பழைய நியூஸ்!

  பு.ப. ஊட்டி?

  ப.பி அருமை.

  பு.சா 100 க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மருத்துவமனையின் பெயர் கொடுத்திருந்தேனே..... :)

   ஊட்டி அல்ல....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. பெண்களுக்குப் புன்னகையைவிட பொன்னகையா அழகைத் தரும்....

  படம் கொடைக்கானல் என்று நினைக்கிறேன்.

  ஃபுரூட் சாலட் என்று போல் அனைத்தும் அருமை.

  100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து இன்னும் பலநுாறு ஃபுரூட் சாலட் பதிவுகள் வெளியிடவேண்டும்.
  மீண்டும் வாழ்த்துகிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. புன்னகை - பொன் நகை - புரிந்து கொள்ள முடியவில்லை இவர்களுக்கு...... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete

 6. புன்னகை இருக்கும்போது பொன் நகை எதற்கென தோன்றுகிறது அந்த தங்க வைர பல் தொகுப்பை பார்க்கும்போது.

  ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத இந்த நாட்டில் ஒரு தோசை ரூபாய் 1011 ஆம். இதை அந்த பெண் நாலாவது முறை சாப்பிடுகிறாராம். இதில் பெருமை வேறு! நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்?

  அந்த படகுத் துறை சொல்லாமல் சொல்லிவிடுகிறது அந்த சுற்றுலாத்தலம் கோடைக்கானல் தான் என்று.

  இந்த வார பழக்கலவையும் அருமை. வாராவாரம் புதிய தகவல்களை தரும் பழக்கலவையை தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்.

  ReplyDelete
  Replies
  1. //ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத இந்த நாட்டில் //

   அதே எண்ணம் தான் எனக்குள்ளும் தோன்றியது...

   அந்த சுற்றுலாத் தலம் கொடைக்கானல் அல்ல.....

   பழக்கலவையை தொடர்ந்து ரசிப்பதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

   Delete

  2. தவறுதலாக கோடைக்கானல் என சொல்லிவிட்டேன். அந்த சுற்றுலாத்தலம் ஏற்காடு. அந்த படம் ஏற்காட்டில் அண்ணா பூங்கா உள்ள இடத்துக்கு அருகே சாலை அருகே இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

   Delete
  3. ஏற்காடு தான். இரண்டாவது படம் அண்ணா பூங்கா எதிரே இருக்கும் ஏரி தான்.... ஆனால் சாலையிலிருந்து எடுக்கப் பட்ட படம் அல்ல. கரை ஓரத்திலிருந்து எடுத்த படம்.

   தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. என்னது, இந்த வார ஃப்ரூட் சாலட் தங்கமும், வைரமுமாக ஜொலிக்கிறதுன்னு நினைச்சுக்கிட்டே படித்தேன். கடைசியில் தான் தெரிகிறது இது 100வது ஃப்ரூட் சால்ட் என்று. சரி, இந்த 100வது ஃப்ரூட் சாலடை படிக்கிறவர்களுக்கு, தங்கம், வைரம் என்று எதுவுமில்லையா???

  ஃப்ரூட் சாலடை தொடருங்கள் வெங்கட் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்கம்-வைரம் ஏதுமில்லையா? இப்ப தான் புதையல் இருக்கும் இடம் தெரிஞ்சிருக்கு.... எடுத்தவுடனே எல்லாருக்கும் பங்கிட்டு கொடுத்திடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. சுற்றுலா தளம் ஏற்காடுதானே?

  ReplyDelete
  Replies
  1. நீங்க யாருங்க?

   ஆனா சொன்ன பதில் சரி தான்! :)

   பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கு நன்றி.

   Delete
 9. 100 வது ஃப்ரூட் சாலட் கோப்பைக்கு நன்றி:)! தொகுப்பு அருமை. அவசியம் தொடருங்கள்.

  தங்க தோசை உணவு விடுதி மல்லேஷ்வரத்தில் எனத் தெரிகிறது. 3 வருடம் முன்னர் வந்த செய்தி. இப்போதும் தொடர்கிறார்களா தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இப்போது அந்த உணவகம் இல்லை என்று சுரேஷ் சொல்லி இருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. பணம் செய்யும் பாடு தான் எத்தனை...?!

  ஃபுரூட் சாலட் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. பணம் செய்யும் பாடு.... அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. E-Rickshaw கொஞ்சம் ஓவர்லோடு ஆனாலும் கவிழ்ந்து விடுவதாக நான் அங்கு வந்த போது கேள்விப்பட்டேன் .அனுமதி வாங்காமல் அது இயக்கப் படுவதால் தடை செய்யப் படும் என்றும் செய்தி வந்து கொண்டிருந்ததே ,என்னாச்சு ?
  உங்களின் காபி ரைட் பழக்கலவை தொடரட்டும் !
  கொடைக்கானல் ?
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. e-rickshaw அனுமதி தேவையில்லை என்று முதலில் சொல்லி பின்னர் தேவை என்று அப்புறப்படுத்த நினைத்தார்கள். இப்போது அதிலும் அரசியல் புகுந்துவிட, அவை இன்னும் செயல்படுகின்றன.

   அவற்றால் ஏற்படும் விபத்துகள் அதிகம் தான்.

   சுற்றுலா தலம் கொடைக்கானல் அல்ல.... ஏற்காடு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி.

   Delete
 12. நூறாவது பழக்கலவை வைரமும் தங்கமுமாக ஜொலிக்கிறது..

  வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. ரா.ஈ. பத்மநாபன்July 18, 2014 at 10:19 AM

  என்னத்த ஓய் வைரப் பல் செட். நம்ம திரிஷா கொஞ்சநாள் முன்னாடி ஒத்தப்பல்லுல வைரத்தைப் பதித்து விட்டு பல்லைக் காட்டினாரே அதுக்கு முன்னே வைரப் பல்செட் எம்மாத்திரம்.

  ஃப்ரூட் சாலட் - ஐ நிறுத்தி விடாதீர்கள். பூச்சி மருந்து கலப்பில்லாத பழங்களின் கலவை உங்கள் கடையில்தான் கிடைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இன்னுமா த்ரிஷா மோகம் குறையவில்லை அண்ணாச்சி..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 14. வைரப்பற்கள் விற்கும் பணத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப் போவது நல்ல விஷ்யம.
  தங்க தோசை அதிகபடி ஆசை.
  சுற்றுலா தளம் ஏற்காடு .
  100வது ஃ ப்ரூட் சாலட் வாழ்த்துக்கள். அழகிய பழக்கலவை.
  அனைத்தும் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   ஏற்காடு தான்.

   Delete
 15. தங்கம் வைரம் ஜொலிப்போடு 100வது ஃப்ரூட் சலாட் மிக அருமை!
  தங்களால் நான் இங்கே இப்பதிவில் அறிந்துகொள்ளும் விடயம் ஏராளம்..

  தொடருங்கள் சகோ! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 16. Vazhththukkal. 100 avadhu fruit saladkku. Menmelum thodara manamarndha vazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 17. தங்க தோசை, வரப் பல்ன்னு ஜொலிக்குது இன்றைய பதிவு. சரக்கடிக்காத ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு சலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 18. ”எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ....
  எங்கே தலை கம்பீரமாக நிமிர்கிறதோ....
  >>
  நிஜம்தான் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 19. 100-வது ஃப்ரூட் சலாட் சுவை குறையவில்லை கூடி இருக்கிறது, what with news of diamond teeth and golden( or gold ) dosa. .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 20. இனிக்கத்தானே செய்கிறது! தொடருங்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 21. புதிய தகவல்கள்..
  நூறாவது பழக்கலவை அருமை..
  தொடருங்கள்.. நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 22. 100 வது ஃப்ருட் சாலட் பதிவிற்கு வாழ்த்துக்கள்! பொன் நகையை ரசிக்க முடியவில்லை! முகப்புத்தக இற்றை அருமை! உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள்! தாகூரின் கவிதை இனிமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 23. வணக்கம் சகோதரரே!

  இனிய 100 ஆவது ஃப்ருட் சால்ட் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வழக்கம் போல்,நிறைய விஷயங்களை, அறிந்து கொள்ளும் அருமையான பதிவாக வந்த இந்த ஃப்ருட் சால்ட்டுக்கும் நன்றி! இனியும் தொடருங்கள். நாங்களும் தொடர்வோம்!

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி....

   Delete
 24. 100 ஆவது ஃப்ருட் சால்ட் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,நான் ரசித்து படிப்பதே இந்த ஃப்ரூட் சாலட்தானுங்க அதை மட்டும் நிறுத்திடாதீங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்....

   Delete
 25. முதலில் உங்களது இறுதிக் கேள்விக்கு பதில் சொல்லி விடுகின்றோம்! ஃப்ரூட் சாலட் கண்டிப்பாக வேண்டும்! இத்தனை சுவை மிக்க ஃப்ரூட் சாலடை விட மனசு வருமா? சொல்லுங்கள்?!!

  100 வது ஃப்ரூட் சாலட் பதிவு என்பதால் தான் வைரம் தங்கம் என்று அசத்திவிட்டீர்களோ? வைரப்பற்கள்? தங்கப்பல் கேள்விப்பட்டிருக்கின்றோம்...வைரப் பல் ....பொன் நகையே வேண்டாமே புன் நகை போதுமே..!!..

  ரவீந்திரநாத் டாகூர் கவிதை அருமை! டாப்!

  பாட்டரி ஆப்பரேட்டட் ஆட்டோ நல்லதுதான் புகையிலிருந்து கொஞ்சம் தப்பலாமே! அவரது உழைப்பு அவருக்கு நன்மை பயக்கட்டும்.

  100 வது சாலடிற்கு எங்களது வாழ்த்துக்கள்!  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி தரன் ஜி.....

   Delete
 26. ரெகுலரா பல் தேய்க்கிறவங்களுக்கு தள்ளுபடி உண்டா பல் செட் விலையில? அப்புறம். பாதுகாப்பு ஆசாமிகளுக்கான கூலி எவ்வளவு ஆகும் தெரியலியே?
  நூறு சேலட் கண்டதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி. மஜித் அவர்களுக்கு அனுப்பிட வேண்டியது தான். :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 27. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.

   Delete
 28. முத்துப்பல் சிரிப்பல்லவோ முல்லை பூ விரிப்பல்லவோ என்று அந்த காலத்தில் பூக்காரி என்ற படத்திற்காக டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் பாடியது நினைவிற்கு வருகிறது. .இதை மனதில் வைத்துதான் கவிதை வடித்தனரோ 

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.

   Delete
 29. அருமை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஃப்ரூட் சாலட் ஐ ரசிப்பவன் நான். நிறுத்த வேண்டாம். 100 வது பதிவு அருமை. அனைத்தையும் ரசித்தேன்.நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete
 30. ஓ இது உங்க 100- வது பதிவா. அசத்துரீங்க. இவ்வளவு செலவு செய்து வைரப்பல் கட்டிக்கிட்டா சிரிப்பா வரும் செலவை நெனச்சு அழுகைதானே வரும்.

  ReplyDelete
  Replies
  1. இது எனது 744-வது பதிவு.

   ஃப்ரூட் சாலட் வரிசையில் 100-வது பதிவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.

   Delete
 31. முகப்புத்தக இற்றை, குறுஞ்செய்தி, தாகூரின் கவிதை அனைத்தும் பிரமாதம்! நூறு தடவைகள் பழக்கலவை உண்டாலும் மேலும் அதை உண்ணவே தூண்டுகிறது அதன் இனிமை! தொடருங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 32. வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 33. நூறாவது ப்ரூட் சாலட்டை வைரமும் தங்கமுமாகக் கொடுத்து அசத்திவிடீர்கள், வெங்கட். இன்னும் பலநூறு ப்ரூட் சாலட்டுகள் தர வாழ்த்துக்கள்.

  Stay positive. Better days are on their way - எனக்காகவே சொன்னாற்போல இருக்கிறது. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   எல்லாம் சரியாகும்! கவலை வேண்டாம்......

   Delete
 34. தங்க தோசையையும், வைரப் பல்செட்டையும் பீரோவில் பத்திரமாய்ப் பூட்டி வைச்சுட்டேன். நூறாவது முறையாக ப்ரூட் சாலட் தயாரிப்புக்கு வாழ்த்துகள். தொடர்ந்து தயாரித்து இதில் நிபுணத்துவம் பெறவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....