எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, July 5, 2014

ஃப்ரூட் சாலட் – 98 – அதிவேக ரயில் – நாயும் பூனையும் – ஹிந்தி எதிர்ப்பு....


படம் இணையத்திலிருந்து......
 
இந்த வார செய்தி:

சமீபத்தில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அது குறித்த பலவிதமான கருத்துகளை படிக்க முடிந்தது. முதலில் ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துங்கள், போலவே ரயில் பயணங்கள் விபத்துகள் இல்லாத/தடுக்கும்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதற்கான அவசியம் குறித்தும் பல கருத்துகள் வந்த வண்ணமே இருந்தன. 

ஒரு படத்தில் விவேக் சொல்வார், “ரயில் வண்டியில் இருக்கும் கழிவறையில் ஒரு கோப்பை வைத்து அதை சங்கிலியால் கட்டி வைத்து விடுகிறார்கள் – அந்த சங்கிலியாவது நீளமாக இல்லாது, சிறிய அளவே இருப்பதால் அதைப் பயன்படுத்தும்போது பெரிய சண்டையே போட வேண்டியிருக்கிறது என....! அதைப் பார்த்த அல்லது அந்த மாதிரி அவஸ்தைப்பட்ட ஒருவரும் இதை ரயில் அமைச்சகத்திற்கு ஆலோசனையாக எழுதி அனுப்பி இருக்கிறாராம்!

சரி இந்த விஷயங்கள் இருக்கட்டும், இன்றைய செய்தியாக நாம் பார்க்கப்போவது ரயில் கட்டணம் பற்றிய விஷயம் அல்ல.  கடந்த வியாழனன்று, தில்லியிலிருந்து ஆக்ரா வரை அதிவேக விரைவில் செயல்படப் போகும் ஒரு ரயில் வண்டியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்படியான இந்த ரயில் தலைநகர் தில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 98 நிமிடத்தில் செல்ல முடிந்ததாகவும், திரும்பி வரும் போது 96 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் மாதத்திலிருந்து 90 நிமிடத்தில் செல்லும்படியான அதிவேக விரைவு வண்டி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் பாதையில் செல்லும் போபால் ஷதாப்தி மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது – நடுவில் மதுராவில் நின்று பிறகு செல்லும் இந்த வண்டி புது தில்லியிலிருந்து ஆக்ரா வரை செல்ல இரண்டு மணி ஆறு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது! [அதாவது எந்த வித தாமதமும் இல்லை எனும் பட்சத்தில்!]

இந்தப் பாதையில் சின்னச் சின்னதாய் கிராமங்கள் நிறையவே இருக்கின்றது. இக்கிராமங்களில் இருக்கும் பல்வேறு மக்கள் தங்களது காலைக்கடன்களை முடிப்பதே இந்த ரயில் பாதையின் ஓரங்களில் தான். ரயில் வருவது பற்றியோ, அதில் இருக்கும் மக்கள் கவனிப்பார்களே என்பது பற்றியோ இவர்களுக்கு கவலையில்லை – அனைவருக்கும் ராஜ மரியாதை தான்! இப்படிப்பட்ட மனிதர்கள் அதிவேக ரயில் வரும் பாதையின் குறுக்கே போகமுடியாதபடி தடுப்பு இருந்தால் தான் இந்த திட்டம் நிறைவேறும் – சோதனை ஓட்டத்தின் போது பாதையில் பல RPF சிப்பாய்களை நிறுத்தி வைத்தார்களாம்!

27 கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன! ஒரு விதத்தில் இந்த அதிவேக விரைவு வண்டி நமக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி என்றாலும், பயணிகளுக்கான வசதிகளை இன்னும் மேம்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும், விபத்து தடுப்புக்கான வழிமுறைகளை மேம்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும் – இதில் அவர்களது கவனத்தினைச் செலுத்தினால் நல்லது. 

நவம்பர் மாதம் இந்த அதிவேக விரைவு வண்டி அறிமுகம் செய்யப்பட்டதும் அதில் பயணித்து, அந்த அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! சரியா!

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:

When Life gives you a thousand reasons to cry, show that you have a million reasons to smile.  Your happiness is hidden within you.  Just remove your worries.

ரசித்த பாடல்:

சைவம்படத்தில் வரும் அழகே அழகே எதுவும் அழகே பாடலை சில நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.  நான் ரசித்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு....
சுஜாதாட்ஸ்:

ஹைக்கூவின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமை. ஹைக்கூ என்பதில் உவமைகளே இருக்காது. சந்திரனைப் போல கண்கள், பவளம் போல உதடுகள் இதெல்லாம் ஹைக்கூ இல்லை! இவையெல்லாம் கவிதையில் நேரடியான அனுபவத்தைக் கலைக்கிறது. உவமையென்றால் உவமிக்கும் பொருளைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். அதெல்லாம் கிடையாது Haiku happens என்பார்கள். நேரடியாகக் கிடைத்த ஒரு அனுபவத்தை உடனே சிறைப்பிடிக்கும் தன்மை எல்லா ஹைக்கூவிலும் உண்டு. அந்த அநுபவக் கணத்தை அதிகம் வார்த்தை ஜாலமில்லாமல், உவமை ஏதும் இல்லாமல் நேராக வாசகனுக்குக் கடத்தும் முயற்சிதான் ஹைக்கூ. கவிதையின் ஜூம்லென்ஸ் என்று ஹைக்கூவினைச் சொல்லலாம்!

சமவெளியில்
பசுவின் உதடுகளில்
புல்லின் ஈரம்....

இந்த வார புகைப்படம்:படித்ததில் பிடித்தது:

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
“பாபிபார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
[ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா.]
அருமையாய் நடித்தனர்......
[என டைரியில் எழுதுகிறாராம்.]

-   ந. ஜெயபாஸ்கரன். 
என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: நேற்றே வந்திருக்க வேண்டிய பதிவு! ஒரு நாள் தாமதமாய்......


66 comments:

 1. இந்த அதிவேக விரைவு வண்டி நாடு முழுவதும் ஓடும்படி அமைத்தால் நன்றாயிருக்கும்! எங்கே? சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன...நடக்கின்றன... நடந்துகொண்டே இருக்கின்றன!

  இத்தரையில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்களுமே இப்போதைய அவசிய அறிவுரை.

  குறுஞ்செய்தி ஓல்ட் பட் கோல்ட் டைப்!

  சைவம் படத்தின் இந்தப் பாடல் உன்னி கிருஷ்ணன் மகள் பாடியதாலேயே முதலிலேயே ஹிட் ஆகி விட்டது!

  சுஜாதாட்ஸ்..... ம்ம்ம்ம்...

  புகைப்படம் டாப்!

  ஜெபாவின் கவிதை கூட டாப்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சிறப்பான இப் பகிர்வுக்கு எனது ஓட்டுனையும் வழங்கிச் செல்கிறேன்
  நேரம்மின்மையால் மீண்டும் வந்து இவ் ஆக்கத்தினை வாசித்து மகிழ்கின்றேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 3. வணக்கம்
  ஐயா
  விலை உயர்வு என்றாலும் மக்களின் பயணம் நின்றுவிடாது.. தொடரத்தான் செய்யும்
  நாட்டு நடப்புக்களை மிக அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் வீடியோவையும்இரசித்தேன். குறுஞ்செய்தியும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. ஃப்ரூட் சாலட் மிக அருமை. அந்த புகைப்படம் ரொம்ப அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 5. சொந்த தளத்திலே கருத்து போடும் உங்களுக்கு அடுத்த எனது பதிவு (technical post) பதில் சொல்லும் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவும் படிக்கிறேன் - வெளியிட்ட பிறகு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. அனைத்து தளங்களிலும் 2 நாட்கள் கழித்து கருத்து போடும் உங்களுக்கு...

  பதில் உண்டு ஐயா...

  அனைத்தும் சூப்"பறு" ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 7. பல்வேறு மக்கள் தங்களது காலைக்கடன்களை முடிப்பதே இந்த ரயில் பாதையின் ஓரங்களில் தான்.//
  காலைகடனை கழிக்க அங்குள்ள மக்களுக்கு வசதி செய்து தரவேண்டும் முதலில் அப்போதுதான் அதிவேக ரயிலால்.விபத்துகள் தவிர்க்கப்படும் .

  இற்றை செய்தி, பாடல், கவிதை படம் எல்லாம் மிக அருமை.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 8. Indhavara pugaippadaththuku yenna oru arumayana pose. So nice.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 9. அழகே அழகே எல்லாம் அழகே!...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 10. எதைச் செய்தாலும் மக்கள் பாதுகாப்பில் முதலில் கவனம் செலுத்தவேண்டும் அரசு.

  அழகே அழகு பாடலை நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்..அருமையான ப்ருட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 11. புரூட் சாலட் முழுவதுமே அருமை !

  தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற உங்கள் அக்கறை மகிழ்ச்சி தருகிறது.

  முகப்புத்தக இற்றையின் கவிதை நன்று !

  ஹைக்கூ நம்மிடம் இவ்வளவு பிரபலமாகியதற்கான காரணகர்த்தாக்களில் சுஜாதா முக்கியமானவர்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது. உங்கள் பக்கத்திற்கும் வந்து பதிவினைப் படிக்கிறேன்....

   தொடர்ந்து சந்திப்போம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாமானியன்.

   Delete
 12. அங்கு அதிவேக ரயில் வந்து மக்கள் பயனுறவேண்டும்.அதே வேளை திறந்த மலம் கழிப்பிடத்தையும் மாற்றிக் கொடுக்கவேண்டும். இங்கு TGV- 400km/h, உன்னத சேவை தருகிறது.
  முதியோர், மரங்கள் பற்றிய அலட்சியம் மாறவேண்டும்.
  கவலையை மறந்து சந்தோசமாக இருப்பதென்பது "மருந்து குடிக்கும் போது, குரங்கை நினையாதே" போல் மிகச் சிரமம்.
  பாடலை ரசித்தேன். ஆனந்தயாழ்- நா.முத்துக்குமாரின் வரிகள். ஆர்பாட்டமில்லா இசை,அதுவும் வீணை,மிருதங்கத்துடன். புதிய குரல்- இன்னுமொரு வாரிசு..
  இவ்வகைக் கவிதையை சுஜாதா கொண்டாடினார். இப்போ பெரிதாகக எழுதுவாரில்லை.
  படம் அருமை!, யூரியூப்பில் இவ்வகை எதிரும் புதிருமான மிருங்களின் கூட்டு, கொண்டாட்ட வாழ்க்கை கொட்டிக்கிடக்கிறது.
  நான் 50 வருடங்களுக்கு முன் வளர்த்த நாய்க்குட்டி, அப்போது எங்கள் வீட்டில் குட்டி போட்டிருந்த
  பூனையில் பால் குடித்து வளர்ந்தது. அதைப் படமெடுத்து வைக்க கருவி இருக்கவில்லை.
  இன்றைய இந்தி சர்ச்சையை ஒட்டிய கவிதை.
  இப்படி , இந்தி மறுப்பாளரைக் கோமாளிகளாகச் சித்தரிக்கும் ஏராளமான கவிதைகள் படித்துள்லோம்
  ஆனாலும், எல்லோரும் இந்தி கற்கவேண்டுமென நிர்ப்பந்திப்பது, தவறு.விரும்பியோர் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

  இன்று முதல் எல்லோரும் இந்தி கற்றே ஆகவேண்டுமென சட்டம் கொண்டு வந்தால், 20 வருடத்தில் இந்தியாவில் இந்தி தவிர வேறு மொழி தேவையில்லை எனும் நிலை வரும்.மேலும்
  10 வருடத்தில் ஏனைய மொழிகள் அழிந்துவிடும்.
  இதைத்தான் இலங்கையிலும் செய்ய அரசு முயலுகிறது. இது பலருக்குப் பிடிக்காத,கசக்கும் உண்மை.
  இன்னுமொரு மொழி அறிதல், என்பதை விட இன்னுமொரு மொழியை அழித்தலென்பதே அரசின்
  திட்டம்.
  என் கருத்து தவறெனில் மன்னிக்கவும்


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரீஸ்.....

   எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை. நமது மொழியை மறக்காது இருக்க வேண்டும். எந்த மொழியும் மற்றவர்கள் மேல் திணிப்பது நல்லதல்ல....

   Delete
 13. அதிவேக இரயிலினால் பயணிகளின் இன்னல் தீரும். அதுவே பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இற்றை, குறுஞ்செய்தி, புகைப்படம் என அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 14. அனைத்தும் அருமை ஐயா
  ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால்,முதலில் அவ்வினத்தின் மொழியை அழி,
  அவ்வினம் தானே அழிந்து போகும் என்பார்கள்,
  ஒரு மொழியை திணிப்பது என்பது வேறொரு மொழியைஅழிப்பது என்பதில்தான் முடியும் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. எல்லாத் தகவல்களும் அருமை... அதிலும் அந்தப் புகைப்படம் மிகவும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 17. பழக்கலவையை இரசித்தேன். படித்ததில் பிடித்ததில் திரு யோகன் அவர்களது மொழி பற்றிய கருத்தே என்னுடையதும். யாரையும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. வேகரயில் வேண்டியதுதான். அதற்குத் தகுந்த பாதுகாப்பும் வேண்டும்.தங்கள் பயணம் செம்மையாக அமைய வாழ்த்துகள். குழந்தையின் பாடல் வெகு அம்சம். சுஜாதாட்ஸ் எப்பவும் போல எங்கொ போகிறது. கவிதை பளிச்சிடுகிறது. வேறு மாநிலங்கள் செல்கையில் அந்த மொழியை அறிவது நமக்கு நன்மை.இங்கேயே வந்து திணித்தால் அதுபலன் கொடுக்காது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 19. கவிதையின் ஜூம்லென்ஸ் - சுவாரசியம்.
  அதிவேக ரயில் அவசியம் தேவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. அதிவேக ரயில் வேகமாக உஅப்யோகத்டுக்கு வரவேண்டும் ..

  முகப்புத்தக வாக்கும் மற்ற தகவல்களும் அருமை..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 21. பலதரப்பட்ட சுவையான தகவல்கள். கடைசிக் கவிதை ரசிக்கவைத்தது. சைவம் படப்பாடல் எனக்கும் பிடிக்கும். புகைப்படம் அழகு. முகப்புத்தக இற்றை... உணரவேண்டும் ஒவ்வொருவரும். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 22. வழக்கம்போல ஃப்ர்ருட்சலாட் சுவையாக இருக்கிறது புகைப்படம் ஜோர். ஹைக்கூ என்னும் பெயரில் வரும் கவிதைகள் ஏனோ முழுமை அளிப்பதில்லை ஒரு சிலது தவிர.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 23. அதிவேக வண்டிகளை அதிக வசதிகளுடன் தருமாயின் சுகம்தான்! முகநூல் இடுகையும் ஹைக்கூ பற்றிய சுஜாதாவின் கருத்தும் கடைசி கவிதையும் மனதை கவர்ந்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 24. கவிதை மனசை கனமாக்குகிறது! குறுஞ்செய்தி பிரமாதம்! பாடலும் இசையும் அதன் வரிகளும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 25. புரூட் சாலட் ரசிக்க வைத்தது... முகப்புத்தக இற்றை நச்... படித்ததில் பிடித்தது கவிதை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 26. உங்களுக்கு பிடித்த செய்தி எனக்கும் பிடித்தது.. பாடல் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

   Delete
 27. புரூட் சாலட் முழுவதுமே அருமை ! அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 28. சுவையான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 29. அன்பு வெங்கட்
  இந்த வார புரூட் சாலட் முழுவதுமே மிக அருமை நைனா!
  முகப்புத்தக இற்றையும் புகைப்படமும் டாப்புப்பா !

  அன்புடன்
  விஜய் / டில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 30. அனைத்தம் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 31. வழக்கம் போல ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை! பாடல் கேட்டோம் இனிமை! உன்னிகிருஷ்ணனின் மகள்?!!!! அதி வேக ரயில் வருவது நல்லதுதான்.....அதற்கு முன் ரயில் சம்பந்தப்பட்ட கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றனவே!

  இற்றை அருமை! டாப்! குறுஞ்செய்தி எல்லோரும் ஃபாலோ செய்தால் எந்த வீட்டிலும் புலம்பல்கள் இருக்காது!

  உங்களுக்குப் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   அழகே பாடல் பாடியது உன்னி கிருஷ்ணனின் மகள்.....

   Delete
 32. ஜெயபாஸ்கரின் கவிதை ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 33. விரைவு ரயில் தெரியாத தகவல் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....