வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 106 – சாதனை மனிதர் – நீச்சல் - டாஸ்மாக்




இந்த வார செய்தி:

பார்வையில்லாமலும் சாதிக்க முடியும்!

இந்தியாவிலேயே முதன்முறையாக, வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற, பார்வையற்ற மாற்றுத்திறனாளியும், என்.ஜி.எம். கல்லுாரி உதவி பேராசிரியருமான ஆர்.மணிகண்டன்: பிறவியிலேயே வலது கண்ணில் பார்வையில்லை. 9ம் வகுப்பு படிக்கும் போது இடது கண்ணிலும் பார்வை பறி போனபின், மூன்று ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்த என் தந்தையின் துாண்டுகோலும், முயற்சியும் என்னைத் துாக்கி நிறுத்தின. மனச் சோர்வுகள் விலகி, சந்திரன் என்ற பார்வையற்ற ஆசிரியரிடமிருந்து, 'பிரெயில்' முறையில் படிக்கவும், எழுதவும், 10 நாட்களில் கற்றுக் கொண்டேன். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் என்னால், இப்போது பிரெயிலில் எழுத, படிக்கத் தெரியும்.

மீண்டும் கல்வி கற்கும் ஆவலில் பள்ளியில் சேர்ந்து, 10ம் வகுப்பு வரை, தமிழ் மீடியத்தில் படித்தேன். பிறகு, பிளஸ் 1ல், ஆங்கில மீடியத்தில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தில் காமர்ஸ், அக்கவுன்டன்சி பாடங்களைப் படிப்பது கடினம் என பலரும், 'டிஸ்கரேஜ்' செய்தனர்.



ஆனாலும், என் முடிவில் பின்வாங்காமல் படித்து, பிளஸ் 2வில் 1,043 மதிப்பெண் பெற்று, பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பின், பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில் பி.காம்., மற்றும் எம்.காம்., படிப்பில், முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றேன்.

படிக்கும் போதே, ஆசிரியர் தொழிலுக்குத்தான் போக வேண்டும் என்ற லட்சியம், எனக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பி.எட்., மற்றும் எம்.பில்., முடித்தவுடன், இரண்டு ஆண்டுகள், 'டுட்டோரியலில்' கல்லுாரி ஆசிரியராக வேலை பார்த்தேன். பின், என்.ஜி.எம். கல்லுாரியில், உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

என்னுடைய மாணவர்களுக்கு, அக்கவுன்டன்சி, இன்கம்டாக்ஸ் போன்ற முக்கியமான சப்ஜெட்டுகளை கற்றுத் தருகிறேன். கம்ப்யூட்டரை நானே இயக்க கற்றுக் கொண்டிருப்பதால், விரைவில் என் மாணவர்களுக்கு, 'பவர்பாயின்ட் பிரசன்டேஷன்' முறையில், பாடம் நடத்த திட்டமிட்டுள்ளேன். கடந்த 2005ல், வணிகவியலில் பிஎச்டி., - முனைவர் பட்ட ஆய்வுக்காக பதிவு செய்து, 2013ல் முடித்தேன். வணிகவியல் பாடத்தில் பார்வையற்றவர் பிஎச்.டி., பெறுவது, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. சாதாரண மனிதர்களைப் போலவே, பார்வை இல்லாதவர்களாலும், எல்லா சாதனைகளையும் நிகழ்த்த முடியும்.

-   தினமலர் “சொல்கிறார்கள்பகுதியிலிருந்து....

எத்தனை தன்னம்பிக்கை இந்த மனிதருக்கு.  சிறிய தோல்விகளுக்கே துவண்டு விடும் பலருக்கு, வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணிக்க இவர் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வாரப் பூங்கொத்து பேராசியர் மணிகண்டன் அவர்களுக்கு...



இந்த வார முகப்புத்தக இற்றை:

பிரிட்டிஷ்காரன் :       உனக்கு நீச்சல் தெரியுமா?
இந்தியன் :                      தெரியாதே..
பிரிட்டிஷ்காரன்:         அப்படீன்னா.. உன்னை விட நாய் மேல்..!
இந்தியன்:                        அவ்வ்வ்வ்.. சரி உனக்கு நீச்சல் தெரியுமா?
பிரிட்டிஷ்காரன்:         ஓ..! ஏன் தெரியாது நல்லாவே தெரியுமே..
இந்தியன்:                        அப்படீன்னா.. நாய்க்கும் உனக்கும் என்ன மேன் வித்தியாசம்..?
யாருகிட்ட....? :)



இந்த வார குறுஞ்செய்தி:




ரசித்த காணொளி:

நேற்று ஒரு காணொளி பார்த்தேன்.  ICICI Prudential Life Insurance ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது.  தனது குழந்தைக்காக, அப்பா எதையும் செய்வார் என்று சொல்லும் விளம்பரம்!  பார்த்தீர்களா?  இல்லையெனில் பார்க்கலாமே!






ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக பகவதிபுரம் ரெயில்வே கேட்படத்திலிருந்து  ”காலை நேரக் காற்றேபாடல்.. தீபன் சக்ரவர்த்தி மற்றும் எஸ்.பி. ஷைலஜா குரலில், இளையராஜாவின் இன்னிசையில் - இதோ உங்கள் ரசனைக்கு!

 



இந்த வார புகைப்படம்:



நாங்கல்லாம் குளிக்கும்போது கூட முகரகட்ட பொஸ்தகத்துல அப்டேட் போடுவோம்லே!

இந்த வார கவிதை:

ஊரும் ஜனமும்

கிழக்கேயும்
டாஸ்மாக்
மேற்கேயும்
டாஸ்மாக்
வடக்கேயும்
டாஸ்மாக்
தெற்கேயும்
டாஸ்மாக்
டாஸ்மாக்குகளுக்கு மத்தியில்தான்
ஊரும் ஜனமும்!

தமிழகத்தின் நிலை சொல்லும் இதை படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


56 கருத்துகள்:

  1. டாஸ்மாக் குறித்த ஆதங்கம்..

    முன்னெல்லாம் ஊரின் ஓர் எல்லையில் சிவன் கோவிலும் மற்றோர் எல்லையில் பெருமாள் கோவிலும் இருப்பது வழக்கம்! இப்போது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி bandhu ஜி!

      நீக்கு
  2. முதல் பந்தி. எல்லாமே ரசித்தேன். இறுதி மட்டும் சுர்ர்ர்... விற்பவர்கள் தவறா... வாங்குபவர்கள் தவறா... தேர்தல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  3. பேராசிரியர் ஆர் மணிகண்டன் பாராட்டப்பட வேண்டியவர்
    பாராட்டுவோம்
    தண்ணீரில் செல்போனுடன் குரங்கு படம் அருமை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. எல்லாமே அருமை. 'பாஸிட்டிவ்' மனிதர் மனிகண்டனுக்குப் பாராட்டுகள். வீடியோ அற்புதம். பாடல் இனிமை. டாஸ்மாக் கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எல்லாப் பகுதிகளுமே அருமை... அதிலும் அந்த விளம்பரம் சூப்பர்... நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு

  7. இந்த வார பழக்கலவை மிக அருமை. முதலில் முனைவர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த வார புகைப்படத்தில் படத்தை விட Facebook க்கு கொடுத்துள்ள தமிழாக்கம் பிடித்திருந்தது. ம்.ம். அந்த கவிதைக்கு என்ன சொல்ல! ‘டாஸ்மார்க் கடை இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்.’ என்பது புதிய சொல்லாடல் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. அருமையான பல செய்திகளைச் சுமந்து வந்த
    இனிய பழக்கலவை .நண்பரே...
    கேரளா கொஞ்சம் கொஞ்சமாக மது ஒழிப்பை
    அமுல் படுத்தும் இச்சமயம்.. நம் மாநிலம்
    அதற்கான சலுகைகளை ஏற்றுகிறது...
    குடித்து குடித்து குடிகெட்டுப் போங்க என்று
    உரைக்காமல் உரைக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா.
    பேராசிரியர் பற்றிய தகவலும் தண்ணீருக்குள் குரங்கின் கையில் தொலைபேசியும் மது ஒழிப்பு பற்றிய கவிதையும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

      நீக்கு
  12. ///தமிழகத்தின் நிலை சொல்லும் இதை படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!///

    முன்பு கோவில் இல்லா ஊரில் என்று சொல்லவது போல இப்போது டாஸ்மாக் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  13. பாராட்டுக்குரியவர் ஆர். மணிகண்டன். ரசித்த புகைப்படம் அருமை:).

    குடியினால் ஏற்படும் சீரழிவுக்குத் தீர்வு கண்டால்தான் நாடு முன்னேறும்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே!

    அருமையான ப்ரூட் சலாட்!.. பேராசிரியருக்கு நல் வாழ்த்துக்கள்!
    குரங்கையில் கைப்பேசி இதுவும் அசத்தல்!
    அனைத்தும் சிறப்பு!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி

      நீக்கு
  15. போற்றப்பட வேண்டிய பேராசிரியர்...
    நல்ல வீடியோப் பகிர்வு...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  17. எப்போதும் போலவே அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

    முக்கியமாக முனைவர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  18. ப்ருட் சாலட் இனித்தது! தன்னம்பிக்கை மனிதரில் தொடங்கி டாஸ்மாக் கவிதை வரை அனைத்தும் அற்புதம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  19. சாதனை மனிதர் ஹெலன் கெல்லரை நினைவூட்டுகின்றார்! மிகப் பெரிய சாதனையே! நாமெல்லாம் எங்கு என்று யோசிக்கவும் வைக்கின்றார்!

    இற்றை ஹாஹஹ....குறுஞ்செய்தியும் அருமை! காணொளி பார்த்திருக்கின்றோம்...நல்ல ஒரு காணொளி உணர்வு பூர்வமான ஒன்று!

    ..எத்தனை முறைகேட்டாலும் அலுக்காத பாடல்! ராஜா அல்லவா!! தீபன் சக்கரவர்த்தி இப்போது ஏதோ ஒரு ஷோவில் பார்த்த நினைவு!

    டாப் அந்த புகைப்படமும் (உங்கள் கமென்ட் ஓஹோ) டாஸ்மாக்கும்! அதுதானே உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  20. சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  21. #டாஸ்மாக்குகளுக்கு மத்தியில்தான்
    ஊரும் ஜனமும்!#
    இந்தியாவுக்கு மூணு பக்கமும் கடல் ,நாலு பக்கமும் கடன் என்று சொல்வதைப் போலவே !))
    த ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  23. தினமலரின் மணிகண்டன் பற்றிய பகிர்வுக்கு நன்றி! வாழ நினைத்தால் வாழலாம்!
    தனது குழந்தையின் சந்தோஷத்திற்காக தனது பரம்பரை மீசையை துறக்கும் அப்பா! வேடிக்கைதான்.!
    த.ம.12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  24. அனைத்தும் அருமை! அதிலும்...! மணிகண்டன் மா மனிதர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  25. சுவையான கலவை.பிரமிக்க வத்த மணிகண்டன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  26. ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தர்ஷனி.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  28. சிறிய தோல்விகளுக்கே துவண்டு விடும் பலருக்கு, வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணிக்க இவர் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வாரப் பூங்கொத்து பேராசியர் மணிகண்டன் அவர்களுக்கு...//

    நல்ல மனிதருக்கு பூங்கொத்துடன் வாழ்த்தும் சொல்லிக்கிறேன்.
    காணொளி அருமை.பாடல் பகிர்வு இனிமை.
    ஊருக்குள் எல்லா இடங்களிலும் டாஸ்மார்க கடை இருப்பது வருத்தமான ஒரு விஷயம்.ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தள்ள வேண்டியது தானே இந்த கடைகளை.(ஒதுக்குபுறம் என்பதே கிடையாது என்று ஆகி விட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....