எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 10, 2014

ஃப்ரூட் சாலட் – 109 – அரசு ஊழியர்கள் - தோல்வி – கர்பா – ஓவியம்இந்த வார செய்தி:

அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்: ஏழை பட்டதாரிகளுக்காக கட்டணமின்றி சேவை

அரசு, வங்கிப் பணிக்கான தேர்வுகளை மையப்படுத்தி வணிக ரீதியாகப் புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் பெருகி வரும் வேளையில், ஏழை பட்டதாரி மாணவர்களை அடையாளம் கண்டறிந்து எவ்விதக் கட்டணமும் வாங்காமல் அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

கோவையில் உள்ள திருச்சி சாலையில் எல்.ஜி.தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது சரோஜ்பவன். அகில இந்திய காப்பீட்டு ஊழியர்களுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் எண்ணற்ற பட்டதாரி மாணவர்கள் புத்தகமும், கையுமாக வந்து செல்கின்றனர்.

வங்கித் தேர்வு, எல்.ஐ.சி., ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி. போன்ற அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை என்பதுதான் இந்த பயிற்சி மையத்தின் சிறப்பு.

பல பயிற்சி மையங்களில் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவிட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ஆனால், அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கட்டணம் வாங்காமல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கி வருகின்றனர். இதில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பயிற்சியை வழங்குகின்றனர். சில நேரங்களில் புத்தகம் வாங்க முடியாத ஏழை பட்டதாரிகளுக்கு புத்தகத்தையும் கொடுத்து படிக்க வைக்கின்றனர்.

வாரத்தில் ஒருநாள், துறை சார்ந்த திறமையாளர்களை அழைத்து வந்து பயிற்சி பெறும் மாணவர்களிடம் பேச வைத்து உத்வேகத்தை அளிக்கின்றனர். இவ்வளவும் செய்து கொடுக்கும் அவர்கள், மாணவ, மாணவிகளிடம் வைக்கும் கோரிக்கை ஒன்று மட்டும்தான். விரைந்து படித்து அரசு வேலையை வாங்குங்கள். அரசு வேலையை பெறாமல் ஓயாதீர்கள் என்பதுதான்

நல்ல விஷயம் தானே! முழு கட்டுரையும் இங்கே படிக்கலாம்! இந்த சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து நபர்களுக்கும் பாராட்டுகளும் பூங்கொத்துகளும்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

My wife is relative of nathuram godse....
She kills all the "Gandhis" of my pocket!

இந்த வாசகம், அதிகம் செலவு செய்யும் மனைவியால் நொந்து போன கணவன் எழுதியது போலும்!
இந்த வார குறுஞ்செய்தி:

தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது.... வெற்றி தலைக்குப் போகக் கூடாது.இந்த வார மகிழ்ச்சி:

சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. சென்ற ஆசிய போட்டிகளில் ஆறாம் இடத்தினைப் பெற்ற இந்தியா இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்று விட்டாலும், நண்பர் ஒருவருடைய மகனும் இந்தப் போட்டிகளில் Sports Injury Specialist-ஆக கலந்து கொண்டு ஹாக்கியில் இந்தியா தங்கம் பெற தனது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார். இந்தியாவின் இந்த வெற்றியில் நாமும் மகிழ்ச்சி கொள்வோம்.ரசித்த பாடல்:

இந்த வாரம் குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு திரும்பினேன்.  சாலை வழி பயணத்தின் போது ஓட்டுனர் போட்ட பாடல்கள் அனைத்துமே கர்பா[Garba] பாடல்கள் தான்! நவராத்திரி சமயத்தில் ஆரம்பித்து, தீபாவளி வரை குஜராத்தில் எங்கு பார்த்தாலும் இந்த கர்பா பாடல்களும் நடனங்களும் தான்! அப்படி ஒரு கர்பா பாடல் இதோ இங்கே உங்களுக்காக!
ஒண்ணும் புரியல போ!என்று சொல்பவர்களுக்கு, இதே மாதிரி Non-Stop-ஆக பாடல்களை நான்கு மணி நேரம் தொடர்ந்து கேட்டதாலோ என்னமோ இந்தப் பாடல்கள் பிடித்து விட்டது எனக்கு! :)இந்த வார ஓவியம்:
 
C. Siva Prasad எனும் ஓவியரின் சில ஓவியங்களை சமீபத்தில் பார்த்தேன்.  பார்த்த உடனேயே அவரின் சில ஓவியங்கள் மிகவும் பிடித்து விட்டது. அப்படி ஓர் ஓவியம் இந்த வார ரசித்த ஓவியமாக உங்களுக்காக!  படித்ததில் பிடித்தது:

நேற்றிரவு இங்கே மழை பொழிவது போல பாசாங்கு செய்தது மேகம். அக்டோபர் மாதம் வந்த பிறகும் கோடை போலவே இருப்பதால், மழைக்காக ஏங்கியது மனம். மழை தான் வரவில்லை மழை பற்றிய கவிதைகளாவது படிக்கலாம் என தேடியபோது கிடைத்த கவிதை ஒன்று...

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.

-   சேவியர்.  இவரது மற்ற மழைக் கவிதைகள் இங்கே படிக்கலாம்!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 comments:

 1. அருமையான ஓவியம், எனக்கும் ஏனோ அந்தப் பாடல்கள் பிடிக்கிறது, வாழ்த்துக்கள் சொல்லிடுங்க இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்களுக்கு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  ஏழை மாணவர்களுக்கு செய்யும் சேவைபற்றியும் ஏனைய தகவலையும் மிக அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி வீடியோப் பாடலை இரசித்தேன்.த.ம.2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete

 3. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாய் இருந்தாலும் எனக்குப் பிடித்தது திரு சேவியர் அவர்களின் மழை பற்றிய கவிதை தான். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது.... வெற்றி தலைக்குப் போகக் கூடாது

  சிறப்பான பகிர்வுகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. முதல் செய்தி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! அந்தச் சேவை செய்யும் அரசு பணியாளர்களுக்கு!

  இற்றை டாப்! வாசித்ததுமே புரிந்து விட்டது!

  கர்பா பாடல் மொழி புரியவில்லை என்றாலும் நல்ல எனர்ஜி தரும் பாடல், குஜராதின் தனித்துவமான ஒரு வகையான பாடல்கள். தாண்டியா பாடல்களும் அப்படித்தானே....?!!

  ஓவியம் அழகோ அழகு! கவிதை யதார்த்தத்தைச் சொல்லும் நயமான கவிதை! மிகவும் ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 6. சரியான வழிகாட்டுதல் இல்லாததே பலர் அரசு வேலை பெற முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் ஏழைகளுக்கு உதவும் இவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதே. இத்தகைய செய்திகள் வெளியில் தெரிந்தால்தான், விவரம் அறிந்த பலரும், மற்றவர்களுக்கு உதவமுன் வருவர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி அவர்களே. உங்கள் முதல் வருகையோ?

   Delete
 7. இந்த வார ஃப்ரூட் சாலட் வழக்கம் போல் அருமை.

  அந்த ஓவியம் அப்படியே கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அந்த ஓவியம் பார்த்த உடனே பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. எனக்கு மிகவும்பிடித்தது தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது, வெற்றி தலைக்குப் போகக் கூடாது என்னும்வரிகள் தான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 9. வணக்கம் சகோதரரே.!

  இந்த வார ஃப்ரூட் சால்டும் நன்றாகவிருந்தது.! அந்த ஓவியம் மிக அழகாக அற்புதமாய் இருக்கிறது.! குறுஞ்செய்தி நல்லதோர் அறிவுரை.! படித்ததில் பிடித்த கவிதை சிறப்பாக இருந்தது.! அவரின் மற்ற மழை கவிதைகளையும் படித்து ரசித்தேன்.! மொத்தத்தில் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. ஓவியம் மிக நன்று-
  பழக்கலவை நன்றாக உள்ளது. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 11. முதல் செய்தி பாஸிட்டிவ்!

  எல்லாமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. மிக நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியம் அருமை ! ஓவியருக்கு
  வாழ்த்துக்கள் .இன்றைய ரசிக்க வைக்கும் பகிர்வினை வழங்கிய
  தங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 13. கவிதை அருமை. அனைத்துத் தகவல்களும் அருமை. அதிலும் மாணவர்களுக்குச் சேவை செய்யும் ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அது சரி, டெல்லியில் இப்போக் குளிர் இல்லை ஆரம்பிக்கணும்? நீங்க மழை வேண்டும்னு கேட்கறீங்க? :)))))

  ReplyDelete
  Replies
  1. குளிர் ஆரம்பிக்கணும் - ஆனா ஆரம்பிக்கவே இல்லை! ஆரம்பிக்குமுன் ஒரு மழை வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 14. நல்லாத்தான் இருக்கு சகோ., கர்பா பாடல். மொழி புரியாவிட்டாலும் அந்த துள்ளல் இசையும் அவர்களின் உற்சாக நடனமும் ...

  மற்றதும் சுவையே... வழமைபோல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 15. அனைத்தும் அருமை. கவிதையும் ஓவியமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. என்றும் போல் இன்றும் அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது.... வெற்றி தலைக்குப் போகக் கூடாது
  அருமை ஐயா அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் ஓவியம் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 19. அனைத்தும் அருமை, மழை கவிதை மிக அருமை.
  ஓவியம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 20. கர்பா பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 21. ப்ரூட் சாலட் அருமை அண்ணா...
  ஆர்ட் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 22. பாராட்டப்படவேண்டிய முயற்சி. இது போன்ற முயற்சிகளால் மட்டுமே லஞ்ச லாவண்யங்களையும் முறையற்ற சிபாரிசுகளையும் ஒழிக்க முடியும்.

  யோசிக்க வைத்த கவிதை !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாமானியன். உங்கள் பக்கமும் வந்து படிக்கிறேன்...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....