எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 21, 2014

நெட்டைக் கொக்கும் சொட்டைத் தலையும்!ஒரு சில மனிதர்களைப் பார்க்கும்போதே கொஞ்சம் சிரிப்பு வரத் தான் செய்கிறது. எனது அலுவலகத்தில் இப்படி ஒரு மனிதர் – எனது எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பார் – அதாவது நாங்கள் இருவருமே எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பவர்கள்.  என்னை விட கொஞ்சம் குள்ளமானவர் என்பதால் நான் சாதாரணமாக பார்க்கும்போது அவரது தலைப்பகுதி தான் தெரியும். இதில் என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது என்று கேட்கு முன் கொஞ்சம் பொறுங்கள்.

அண்ணனுக்கு சிறு வயதில் அடர்த்தியான முடி இருந்தாகச் சொன்னாலும், தற்போது தலையின் பின்பக்கமாக தலை நகர் தில்லியின் நடுவே கறுப்பாக ஓடும் யமுனை நதி போல மெல்லிய ஒரு கோடு தான் – அதாவது அவ்வளவு தான் தலை முடி. மற்ற எல்லா பாகங்களும் 100 எலுமிச்சை சக்தி கொண்ட Vim Liquid போட்டு தேய்த்து வைத்த பாத்திரம் போல பள பள! அதன் பளபளப்பிற்கு முன்னர் வைரம் தோற்றுவிடும் என்றால் பாருங்களேன்! பல சமயங்களில் கண்கள் கூசும் அளவிற்கு இருக்க, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வேலைப் பார்க்கலாம் எனத் தோன்றும்.


நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் முகப்புத்தக இற்றையிலிருந்து எடுக்கப்பட்ட படம். நன்றி மூவார் முத்தே!

இதில் கொடுமை என்றால், இம்மாதிரி மனிதர்களிடம் நிச்சயம் சின்னதாய் ஒரு சீப்பு இருக்கும்.  அதை வைத்து இல்லாத தலைமுடியை வாரிக் கொண்டிருப்பார்கள்.  பாவம் அவருக்கு தலை முடி இல்லையே என்பதில் எனக்கும் வருத்தம் தான்.  நடுவே ஒருவர் அவருக்கு மருந்து ஒன்றினை வாங்கித் தர எங்களுக்கு ஆரம்பித்தது பிரச்சனை. இரண்டொரு நாட்களுக்கு ஒரு முறை எங்கள் முன்னர் வந்து அவரது தலையைக் காண்பித்து முடி முளைத்திருக்கா பாருங்க! இரண்டு மூணு முடி புதுசா வந்திருக்குல்ல!என்பார்.  நாங்களும் அவரை ஏமாற்ற வேண்டாமே என்று “ஆமாம்என்று சொல்லி விடுவோம். 

பல சமயங்களில் அவருக்கு இந்த வழுக்கையால் பிரச்சனை தான்.  நல்ல குளிர் காலத்திலும் கார சாரமாக சாப்பிட்டு விட்டால் அவரது தலை முழுவதும் முத்துக்காக முத்தாகஎன்று வியர்வை முத்துகள் அரும்பத் தொடங்கி விடும்.  உணவு உண்டு முடித்தவுடன், Laser Printer-ல் இருந்து ஒரு புதிய zerox காகிதத்தை எடுத்து அந்த வியர்வை அரும்புகளை காகிதத்தினால் ஒத்தி எடுத்து விடுவார் – பரபரவென்று தேய்த்தால் வளர்ந்து வரும் சில ஒற்றை முடிகள் உதிர்ந்து விடுமாம்!

இப்படி இருக்கும் நபருக்கு கொஞ்சம் தற்பெருமையும் அதிகம்.  அவர் இருக்கும் பகுதியின் குடியிருப்போர் சங்கத்திற்கு அண்ணன் தான் Vice President. யாரிடம் பேசுவதென்றாலும் வார்த்தைக்கு வார்த்தை, தான் Vice President என்பதை இரண்டு மூன்று முறையாவது சொல்லி விடுவார்.  அலைபேசியில் யாருடைய அழைப்பு வந்தாலும் Kaun Banega Crorepati Amitabh Bachhan “Kaun Banega Crorepati Se Amitabh Bachhan Bol raha hoon” சொல்வது போல, அவரும் நான் Vice President பேசுகிறேன் என்பது தான்!

இவருக்கு தெரிந்தவர்களின் அழைப்பு வந்தால் பரவாயில்லை.  ஒரு நாள், அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். அவருக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் இவரது பெயரைச் சொல்ல, இவரும் “எப்பவும் போல நான் Vice President பேசுகிறேன் என்று சொல்ல, அழைத்தவருக்கு குழப்பம்.  அவர் அழைத்தது இவரது பெயரைக் கொண்ட வேறொரு நபரை. இருந்தாலும் விடவில்லையே நண்பர். 

தொடர்ந்து அந்த முகம் தெரியாத நபரிடம் தன்னைப் பற்றி பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டே இருந்தார்.  அந்த நபர் வெறுத்துப் போயிருப்பாரோ இல்லையோ நாங்கள் அனைவருமே வெறுத்து விட்டோம் – முன் பின் தெரியாத ஆளைக் கூட விட மாட்டேன் என்கிறாரே என்று எங்களுக்குள் எண்ணம்.  இதற்கே இப்படி என்றால் தெரிந்த ஆட்களிடம் எவ்வளவு பேசுவார் என்று யோசித்துப் பாருங்கள்.  அவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வருகிறது என்றாலே எனக்குள் ஒரு நடுக்கம். இருக்காதே பின்னே!

நண்பர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  அவ்வப்போது அவரது ஊரின் பெருமைகளைச் சொல்வது அவரது வழக்கம். தங்களது ஊர் உணவு வகைகளைக் கொண்டு வந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வார் – எங்கள் ஊர் உணவு மாதிரி வராது என்பார் – கூடவே நமது உணவு வகைகளைக் கொடுத்தால் “இல்லை எனக்கு வேண்டாம் – நல்லாவே இருக்காது – எங்க ஊர் உணவு மாதிரி வராதுஎன்று சொல்வார்! யோவ் சாப்பிடாமலே நல்லா இருக்காதுன்னு எப்படி முடிவு பண்ண? என்று கேட்டால் பார்க்கும்போதே பிடிக்கலை! என்று சொல்லுவார்.  அதற்காகவே அவரை தமிழகம் அழைத்து வந்து தென்னிந்திய உணவாகக் கொடுத்து அவரின் எண்ணத்தினை மாற்றும் ஆசையுண்டு!

அதற்காகவே அவரைக் கடத்திக்கொண்டு வரலாம் என்றால் தொடர்ந்து அவருடைய “Vice President Bol rahaa hoon” பேச்சுகளைக் கேட்க வேண்டியிருக்குமே எனக் கொஞ்சம் கலவரமாக இருக்கிறது! பேசாம ஆளை வைச்சு கடத்திடலாமா சொல்லுங்களேன்! கூடவே நம்ம ஊரில் அடிக்கும் வெயிலுக்கு ஊர் முழுவதும் Cooling Glass கொடுக்க வேண்டுமே என்ற பயமும் இருக்கிறது.

அவ்வப்போது இப்படி சில கதை மாந்தர்களைப் பற்றி எழுதுவதும் சுகமாகத் தான் இருக்கிறது.  தொடர்ந்து எழுத ஆசை.  நேரமும் மனதும் ஒத்துழைத்தால் தொடர்ந்து எழுதுவேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  அவரை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவு அல்ல.  அவரிடமும் இப்படி ஒரு பதிவு எழுதுகிறேன் என்று சொன்ன பிறகே எழுதிய கட்டுரை இது. கூடவே இன்னொரு செய்தியும் – எனக்கே அப்படி ஒரு நிலை வரலாம் – தலைமுடி அதிகம் கொட்டுவது போல தெரிகிறது! நெட்டை கொக்கு என்று எனை அழைத்த நண்பர்கள் இனிமேல் “சொட்டைத் தலையாஎன்று கூப்பிட்டாலும் கூப்பிடலாம்!  

40 comments:

 1. டிஸ்கி .... என்ன ஒரு முன்னெச்சரிக்கை! :)))

  தமிழ்நாட்டு உணவை நல்லா இருக்காது என்கிறாரா... அவர் கூட நான் டூ!

  ReplyDelete
  Replies
  1. டிஸ்கி: ஹிஹிஹி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஹா ஹா ஹா.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான மனிதர்கள் இருக்கிறார்கள்....

  ReplyDelete
  Replies
  1. மனிதர்கள் பலவிதம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 3. ‘இவரைத் தெரியுமா?’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் சில மனிதர்களின் குணாதிசையங்களைப் பற்றி வந்த தொடர் போல் உள்ளது இது. நகைச்சுவையாக எழுதப்பட்டாலும் அவரின் மாநிலத்தின் பெயரை எழுதாமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது. இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. மாநிலத்தினை பெயரை எழுதாது இருந்திருக்கலாம்....

   வெளியிடும் போது தவறாக தோன்றவில்லை. இனிமேல் கவனமாக இருக்கிறேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. உங்கள் நண்பர் தமிழ்நாட்டு உண்வை சாப்பிட்டு பார்த்து விட்டு அல்லவா சொல்லவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அதான்.... சாப்பிடாமலே ஒரு அடம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 5. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தீபாவளி வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. ஒரு மாற்றுக்குதான் தமிழ்நாட்டு சமையலை அவர்கள் சாப்பிட முயற்சிப்பார்கள் ஆனால் எல்லோருக்கும் தமிழ்நாட்டு சமையல் புடிக்காது காரணம் நமது சமையலில் புளி கொஞ்சமாவது சேர்ந்து இருக்கும். ஆனால் அது அவர்களின் உணவில் இருக்காது புளிப்பு வேண்டுமென்றால் அவர்கள் எலுமிச்சம் சாற்றைதான் ஊற்றி கொள்வார்கள் சாம்பார் வைத்தால் கூட எலுமிச்சம் சாருதான் உபயோகிப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. புளிப்புச் சுவை கொடுக்க இவர்கள் “ஆம்சூர்” சேர்த்துக் கொள்வார்கள். சமைக்கும்போது எலுமிச்சை சாறு பிழிவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete

 7. /தொடர்ந்து எழுத ஆசை. நேரமும் மனதும் ஒத்துழைத்தால் தொடர்ந்து எழுதுவேன்!//
  நேரம் கிடைக்கும் போது இது போன்று எழுதுங்கள்..நாங்களும் தொடர்ந்து வருகிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. இம்மாதிரி மனிதர்களிடம் நிச்சயம் சின்னதாய் ஒரு சீப்பு இருக்கும். அதை வைத்து இல்லாத தலைமுடியை வாரிக் கொண்டிருப்பார்கள். // பார்க்க வேடிக்கையாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மிகவும்
  ’ ப ள ப ள ப் பா ன ’
  தீபாவளி நல்வாழ்த்துகள்,
  வெங்கட் ஜி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 12. வாழ்க நலம்!..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 13. ஹஹஹஹ்...நல்ல பதிவு! இன்னும் இது போன்று எழுதுங்கள்! ரசிக்கக் காத்திருக்கின்றோம்! எல்லா ஊர் சமையலுமே ஏதோ ஒரு வகையில் நல்ல சுவையுடையவையே. ஆனால் சிலருக்கு அவர்கள் ஊர் சாப்பாடு மட்டுமே பெரிது என ஒரு பெருமை அது என்னவோ தெரியவில்லை!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 15. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நானும் கொஞ்சம் கொஞ்சமாக முடி இழந்து வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. ஆண்கள் எல்லோருக்குமே இந்த பிரச்னைதான். தீர்வும் இருக்கிறதே! ஹர்ஷா போக்லே பாருங்கள் எப்படி மாறிவிட்டார்!
  உங்களுக்கும், ஆதி, குழந்தை ரோஷ்ணி ஆகியோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 17. நீங்களும் அவர் தலையைப் பார்த்தே தலைவாரிக் கொள்வதாக கேள்வி பட்டேனே ?
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. அட உங்களுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சுடுச்சா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  அடுத்த பதிவில், மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களுடைய புகைப்படத்தை போடவும்.

  ReplyDelete
  Replies
  1. //சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களுடைய புகைப்படத்தை போடவும். //

   ஆசை தோசை அப்பளம் வடை.......

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்....

   Delete
 19. இன்னும் பத்து ஆண்டுகள் கடந்தால் நாட்டில் வழுக்கைத் தலைகளே அதிகம் காண்பீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. அருமையான பதிவு !

  மனிதர்களை படிப்பது அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை ! உங்களுக்கு அந்த வரம் கிட்டியுள்ளது. மனிதர்களில்தான் எத்தனை வகை ?!

  முடிந்தால் நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என்னை பற்றியே நான் எழுதிய பகடி பதிவை வாசித்து பாருங்களேன்...

  தேங்காய்க்குள்ள பாம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது சாமானியன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....