எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 21, 2014

ஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குரல் வளம் - புகழ்இந்த வார செய்தி:

பனி மூடிய லடாக் நகரத்தின் அழகு அங்கே வரும் பயணிகளுக்கு ஒரு அற்புதமான காட்சியாக தோன்றலாம். ஆனால் அங்கேயே வசிக்கும் மக்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியாது.  வருடத்தின் பெரும்பாலான நாட்களில் குளிர் என்பதால் தண்ணீர் உறைந்து போய்விடும்.  அப்படி இருக்கும் மக்கள் தண்ணீருக்காக என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? 

இப்படி கடினமான வாழ்க்கை வாழும் மக்களின் நலன் கருதி செயல்படும் ஒரு குழுவினைப் பற்றிய ஒரு செய்தி இந்த வார செய்தியாக.

ஆங்கிலத்தில் செய்தியை வாசிக்க:இந்த வார முகப்புத்தக இற்றை

பவள சங்கரி அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து....
இந்த வார குறுஞ்செய்தி:

உன்னை அளவின்றிப் புகழுகிறவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்றப் போகிறான்.

இந்த வார ரசித்த பாடல்:

என்ன குரல் வளம் இப்பெண்ணுக்கு.... 
இந்த வார புகைப்படம்:

முன்பு பகிர்ந்த சிவன் சிலை இருந்த இடத்தின் அருகே ஒரு மரம். அதில் இப்பூக்கள் நிறைய பூத்திருந்தன. என்ன பூ என்பதோ, பெயர் என்ன என்பதோ எனக்குத் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.படித்ததில் பிடித்தது

 படம்: இணையத்திலிருந்து....

கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.
பசி எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!
நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!
உண்ண உணவின்றி மறித்துபோகும்
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
     மணிகண்டன் அழகர் என்பவர் எழுதி இருந்ததிலிருந்து.....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   அடிவாங்கும் ஆண்கள் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!

40 comments:

 1. அந்த பூவின் பெயர் பூவரசம் பூ.சிறுமியின் குரலைபோல பூவும் இனிமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 2. இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை.
  அந்த குழந்தையின் குரல் என்ன ஒரு இனிமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 3. சிறுமியின் குரல் தேன்! என்னமா வளைந்து குழைந்து இழைகிறது. யாரேனும் நல்ல பயிற்சி கொடுத்தால் இன்னொரு லதா மங்கேஷ்கர் கிடைப்பார். நிச்சயம் யார் கண்ணிலாவது இந்த சிறுமி படுவாள் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. A.R. Rahman Foundation-ல் சேர்ந்து விட்டதாகத் தெரிகிறது. உறுதியான செய்தி இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 4. சாலட்டைச் சுவைத்தேன்
  அற்புதச் சுவை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. வணக்கம்
  ஐயா

  அற்புதமான பதிவு.. படிக்க படிக்க திகட்ட வில்லை.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. எல்லாவற்றையும் ரசித்தேன். புகைப்படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. புருட் சாலட் இனிமை! பூவரசம்பூ,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. பூவரசம் பூ பூத்தாச்சு. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு. நாட்டு தேக்கு எனப்படும் பூவரசமரம் இல்லாத ஊரே இல்லை. இந்த பூ என்ன பூ என்று நீங்கள் கேட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.....

   Delete
 10. இது பூவரசம் பூ...
  அந்த இலையில் ஊதி செய்து ஊதி விளையாடி இருக்கிறோம்...
  எல்லாச் செய்திகளும் அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

 11. பழக்கலவை அருமை. நானும் அந்த குரலை இரசித்தேன். இதுபோல் எவ்வளவு பேர் முகம் அறியப்படாத Super Singers களாக இருக்கிறார்களோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. ஃப்ரூட் சாலட் பழங்கள் அனைத்தும் இனிமை என்றாலும் அதில் வழியும் தேன் போல் அந்தப்பெண்ணின் குரல் இனிக்கிறது! அதில் வரும் 'தயா கரோ பிரபோ' என்ற வரி போல யாராவது இந்தக் குழந்தையின் குரலை கண்டு பிடித்து புகழும் வளமும் இந்தக்குழந்தைக்குச் சேர்க்க வேண்டும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 13. குழந்தையின் பாடலும், மணிகண்டன் அழகர் கவிதையும் மிக அருமை.
  பூவரசம் பூ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. ஸ்டேடஸ் சூப்பர் அண்ணா! இதுபார்க்க மாலையில் பிங்க் நிறத்துக்கு மாறிவிடும் changing rose போல இருக்கிறதே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 15. அற்புதமான பகிர்வு. பூவரசம் பூ அழகு. சிறுமியின் குரலில் என்னவொரு இனிமை. மணிகண்டன் அழகர் அவர்களது கவிதை அருமை.

  பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 16. பூவரசம் பூவை மறக்கமுடியுமா?? எத்தனை குழல் செய்து இருப்போம் அதன் இலையில்! உணவை வீனாக்காமல் இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 17. பூவரசம் பூ அழகு.

  இறைவன் யார் மூலமாவது அக்குழந்தைக்கு கைகொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அருமையான குரல்..

  ஃப்ரூட் சாலட் மேல் தேன்விட்ட மாதிரி குரல் இனிமை சேர்க்கிறது உங்கள் சாலட்டுக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 18. அருமையான சாலட் ..
  த.ம ஆறு

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 19. கலக்கலான ஃபுரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாடிப்படி மாது!

   Delete
 20. லே லடக்கில் உள்ளப் பிரச்ஹ்கினை தண்ணீர் அஹ்டை நிவர்த்தி செய்ய ஐஸ் மேன் என்பவர் தனது எஞ்சினியரினங்க் அறிவைக் கொண்டு தண்ணீர் சேகரிப்பு வழி வகுத்துள்ளார்..இதை எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களது பாசிட்டிவ் செய்தியில் படித்தோம்.

  இற்றையும், குறுஞ்செய்தியும் மிக மிக அருமை!

  பூவரசம்பூ பூத்தாச்சு! எங்களுக்குச் செய்தியும் வந்தாச்சு....இந்த மரத்தின் இலையை சுறுட்டி பீ பீ செய்து ஊதுவோம். மிக நல்ல சத்தம் வரும்..

  அந்தக் குட்டிப் பெண்ணிற்கு யாராவது வாய்ப்பு கொடுக்கலாமே! முக நூலில் பகிர்ந்துள்ளோம். இறைவன் அவளுக்கும் வழி காட்டுவார் என்று நம்புவோம்...

  படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது.

  எல்லாமே அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....