சனி, 15 நவம்பர், 2014

தில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க!




இயற்கையின் எழிலில் நடக்கலாம் வாங்க!
லோதி கார்டன் - நடைபாதை
தலைநகரிலிருந்து என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி ரொம்பவே நாட்களாயிற்று. இந்த வலைச்சர வாரத்தில் தினம் ஒரு பதிவு எழுத நினைத்த போது தலைநகரிலிருந்து பதிவு ரொம்ப நாளாயிற்றே என்று தோன்ற லோதி கார்டன் நினைவுகளை எழுதலாம் என்று இதோ எழுதிவிட்டேன்!



லோதி கார்டன் - மசூதி


லோ[DH]தி என்ற பெயர் கேட்டதும் வரலாற்று புத்தகங்களில் இப்ராஹிம் லோதி, சிகந்தர் லோதி என்று படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?  அதே லோதிகள் காலத்திய ஒரு பூங்கா தான் இந்த லோதி கார்டன்.  இந்த பூங்காவிற்குள் மொஹம்மத் ஷா, இப்ராஹிம் லோதி, சிக்கந்தர் லோதி போன்ற பல மன்னர்களின் சமாதிகள் இங்கே அமைத்திருக்கிறார்கள். படா கும்பட், மசூதி, காவல் கோட்டைகள் என்று பழைய கால கட்டிடங்களும் இங்கே உண்டு. இன்னமும் அவை அழியாமல் காக்க அரசாங்கமும் INTACH நிறுவனமும் போராடி வருகிறார்கள். 



பழமையான பாலம்
லோதி கார்டன் - அத்புலா




என்னா லுக்கு? என்று கேட்கிறதோ ு
லோதி கார்டன் - அத்புலா அருகே ஒரு வாத்து

அத்புலா என்ற மிகப் பழைய பாலமும் இந்த பூங்காவிற்குள் காண முடியும்.  பாலத்தின் கீழே ஒரு சிறிய கால்வாயும் உண்டு. இந்த பாலம் முகலாயப் பேரரசரான அக்பர் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். இந்த கால்வாய் அருகில் இருக்கும் [B]பாரா புல்லாவில் கலந்து யமுனை ஆற்றில் கலந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்தப் பாலத்திற்கு மேலிருந்து பார்த்தால் நிறைய வாத்துகள் இந்த நீர்நிலையில் நீந்தி விளையாடுவதைப் பார்க்க முடியும்.



காதல் கோட்டையில் ஒரு காவல் கோட்டை
லோதி கார்டன் -Watch Tower


வீழ்வேன் என்று நினைத்தாயோ? 
காய்ந்தாலும் பறவைகளுக்கு வீடாவேன்
லோதி கார்டன் - மரம்
 

தில்லியின் கான் மார்க்கெட் மற்றும் சஃப்தர்ஜங் சமாதிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் மிகப் பெரிய பூங்கா இது – 90 ஏக்கர்களுக்கு மேல் பரவி இருக்கும் இந்த பூங்கா அருகில் இருக்கும் மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் – காலை மற்றும் மாலைகளில் இந்தப் பூங்காவிற்குள் இருக்கும் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள் – பெரும்பாலும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இது. 

 

லோதி கார்டன் -முகம்மது ஷா கல்லறை



இயற்கை அன்னையின் கூந்தலோ?
லோதி கார்டன் - கூந்தல் பனை மரம்


சமீபத்தில் இறந்து போன எழுத்தாளரான குஷ்வந்த் சிங் இந்த பூங்காவின் அருகில் தான் இருந்தார்.  நாள் தவறினாலும் இவர் இங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டது தவறியதில்லை. முடியாத போதும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாவது இங்கே வருவது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.  நிறைய மரங்கள், பூச்செடிகள், மரங்களில் இருக்கும் பறவைகளின் ஓசைகள் என ரம்மியமான காலை/மாலையாக மாற்றிவிடும் இந்தப் பூங்கா.  மதிய நேரங்களில் காதலர்களுடைய தொல்லைகள் தான் இருக்கும்!




மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
லோதி கார்டன் - நடைபாதை ஓர மூங்கில்கள்


”இவளுக்கு இத்தனை நீண்ட கூந்தலா!”
பொறாமை கூடாது பெண்களே!
லோதி கார்டன் - கூந்தல் பனை


மதிய நேரங்களில் இங்கே ஆணும் பெண்ணுமாய் பல ஜோடிகள் அடிக்கும் லூட்டிகள் அதிகமே. அந்த நேரங்களில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போவது நல்லதல்ல! அதிகாலை நேரமெனில் குழந்தைகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் – கூடவே இயற்கை அன்னையின் வரங்களான பல மரங்களை இங்கே அவர்களுக்கு காண்பிக்கலாம் – கூந்தல் பனை மரங்களை இங்கே நிறைய பார்க்க முடியும்.  கூடவே சுத்தமான காற்றும் கிடைக்குமே!


உள்ளே இருப்பதைச் சொன்னால் 
உள்ளே இருப்பது இலவசம்
லோதி கார்டன் - வசதிகள்

தில்லி வந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   அர்[dh]தி [ch]சாய் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!




32 கருத்துகள்:

  1. //தில்லி வந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்!////

    நோ நோ தில்லி வந்தால் நீங்கள்தான் எங்களை கூட்டிச் செல்லனும் கலைஞர் பேச்சை கேட்டு ஹிந்தி படிக்காம விட்டுட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வரும்போது சொல்லுங்கள் அழைத்துச் செல்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. டில்லியில் எங்கேயிருந்து எப்படி போகணும்னு ஒரு லிஸ்ட் கொடுங்க.முக்கியமா ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் ஆட்டோக்கள் நிறையவே - மீட்டர் போட்டுச் செல்லலாம். அல்லது ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்றலாம். தில்லி வந்தால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்துவிடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஜனவரி 2014 - குளிர் சமயத்தில் எடுத்த படங்கள் - இப்போது தான் வெளியிட முடிந்தது....

      படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. கூந்தல் பனை மரங்கள்...? கேட்காதது பார்க்காதது. ”உள்ளே இருப்பதைச் சொன்னால் உள்ளே இருப்பது இலவசம்” புரியலையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி படத்தில் இருப்பது என்ன என்பதைச் சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன். இது வரை யாரும் பதில் சொல்ல வில்லை! பார்க்கலாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  6. அழகான புகைப்படங்கள். ஜில் என்று இருக்கிறது பார்க்கும் போதே என நினைத்துக் கொண்டே....அப்படியே வந்தால்..குளிர் காலத்தில் எடுத்தபடம் என தெரிவித்து இருக்கிறீர்கள்.

    வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  8. பார்த்தேன். படித்தேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. தலைநகர் டில்லிக்கு செல்ல வாய்ப்பும் சூழ்நிலையும் எனக்கு இல்லாவிட்டாலும், அவ்வப்போது தங்கள் பதிவுகளின் மூலம் டில்லி வாழ் மக்களின் சமூகச் சூழல், டில்லியிலுள்ள கட்டிடங்கள், தோட்டங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். இந்த வரிசையில் இந்த பதிவினில் தில்லி லோதி கார்டன் பற்றிய படங்களும் தகவல்களும் அருமை.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  10. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. இல்லை GMB ஐயா.... இது குப்பைக்கூடை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதிவை படித்ததும் புது டில்லியில் நான்கு ஆண்டுகள் இருந்தது நினைவுக்கு வந்தது. அருமையான புகைப்படங்களுக்கு அழகான கவிதை தலைப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தில்லி நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. லோதி கார்டனை தங்களால் நானும் பார்த்தேன்
    அருமை
    புகைப் படங்கள் ஒவ்வொன்றும் காட்சிகளை அழகுற கண் முன்னே நிறுததுகின்றன
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. இரண்டு முறை சென்று வந்து இருக்கிறோம். அருமையான இயற்கை சூழ்ந்த இடம். பார்க்க வேண்டிய இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  15. சென்றதுண்டு! அருமையான படங்கள்! நினைவுகளை எழுப்பியது! மிக்க ந்னறி பகிர்தலுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  16. அருமையான நடை அழகான புகைப்படங்கள் நேரில் பார்த்தது போன்ற உணர்வு. நன்றி


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலசந்திரன் ஜி! தங்களது முதல் வருகையோ?

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....