எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 5, 2014

துளசி கோபால்நேற்று த்வாதசி நாள் – உத்தான த்வாதசி – தெலுங்கர்கள் இதனை க்ஷீராப்தி த்வாதசி என்றும் சொல்கிறார்கள்.  இந்த தினத்தில் துளசி கோபால் கல்யாணம் நடத்துகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தில்லி நண்பர் வீட்டில் இப்படி நடந்த துளசி கோபால் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்திருந்தேன். 

நேற்று அங்கே சென்று எடுத்த சில புகைப்படங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ படங்கள்.....


மாப்பிள்ளை ரெடி, பொண்ணு ரெடியா?


சீவி முடிச்சு, சிங்காரிச்சு, மணப்பெண்ணும் ரெடி!


விளக்கு முகப்பில் அமர்ந்து வேங்கடவனும் திருமணம் பார்க்க வந்தாயிற்று!


மணப்பெண்ணுக்கு நான் தோழியாக்கும்! என்று அமர்ந்திருக்கும் ஸ்ரீகௌரி....


மணப்பெண் தோழியான ஸ்ரீகௌரியின் சிகையலங்காரம்! 


நாங்க புதுசா....  நாங்க புதுசா....


நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!


நெல்லிக்காய் விளக்கு தான் இன்றைய ஸ்பெஷல் விளக்கு!


கல்யாணம் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் துளசி!


 இனிமே வெண்ணை திருடவேண்டாம்... சுடச்சுட உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் கோபால்!

கல்யாணத்துக்கு வந்துருக்கோம், ஒண்ணும் சாப்பிட இல்லையா? என்று கேட்பவர்களுக்காக!

நேற்று கார்த்திகை தீபமும் கொண்டாடினார்கள்.  அதற்கு செய்து வைத்திருந்த சில தின்பண்டங்களை உங்களுக்காகவே இங்கே பகிர்ந்திருக்கிறேன்! உண்டு மகிழுங்கள் நண்பர்களே!


எனக்கு ரொம்பவும் பிடித்த கடலை உருண்டை!


இது பொரி உருண்டை....


பொட்டுக்கடலை உருண்டை
என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் வேறொரு பதிவினில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 comments:

 1. துளசிகோபால் திருமண படங்களும், அதற்கான வர்ணனையும் அருமை. சத்துள்ள தின்பண்ட உருண்டைகளைப் பார்க்க சாப்பிட வேண்டும்போல் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 2. துளசி கோபால் என்றதும் பதிவர் துளசி அவர்களை நினைத்துவிட்டேன்.... ஹா ஹா... அருமையான படங்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா.. எதிர்பார்த்தேன் - சிலராவது இப்படி நினைப்பார்கள் என்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 3. படங்களும் அருமை. அவைகளுக்கு தாங்கள் தந்துள்ள தலைப்புகளும் அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. படங்களும் அதற்கான வர்ணனையும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 5. தலைப்பைப் பார்த்ததும் நமது வலைப்பதிவர் துளசி டீச்சர் பற்றிய பதிவோ என்று நினைத்து விட்டேன். பதிவினில் படங்களும் விளக்கமும் அருமை!
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 6. துளசி கோபால் திருமண படங்கள் அழகு. , கெளரியின் ஜடை அலங்காரம், அழகு. விளக்குகள், நெல்லிக்காய் விளக்கு, அனைத்தும் அருமை.

  கார்த்திகை நைவேத்தியம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. துளசி கோபால் பதிவர் திருமணமா !!
  இப்பொழுதுதானே 60 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
  நான் மூக்கு பிடிக்க சாப்ப்பிட்டு வந்தேனே !!
  அதற்குள் நூறாண்டு திருமணமா?
  எவ்வளவு விரைவில் காலம் ஓடுகிறது.
  என்று நினைத்து வந்தால்,

  இங்கே,

  தெய்வீக மணமகன் மனமகள்.

  கல்யாண கோலங்கள் அற்புதம்.

  கோபாலுடன் நான் ஆடுவேனே...

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. கோபாலுடன் நான் ஆடுவேனே! :))))

   மகிழ்ச்சி சுப்பு தாத்தா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 8. நானும் துளசிகோபாலைத் தேடினேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. மிகவும் கலைநயத்துடன் அலங்காரம் செய்திருக்கிறார்கள், துளசிக்கும், கோபாலுக்கும்.
  (நான் கூட துளசி டீச்சரை சந்தித்தீர்களோ என்னவோ, அதைப்பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 10. Nice to know abt. such an event & Mouth watering 'Chikkies'... !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன். தில்லி பயணம் எப்படி இருந்தது? உங்களைச் சந்திக்க இயலவில்லை,

   Delete
 11. திருமணத்திருமணவிழா அருமையான படங்களுடன்
  பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. துளசி கோபால் கல்யாணத்தில் கலந்து கொண்டோம்.

  உருண்டைகளையும் உண்ணலாம் என கண்டு மகிழ்ந்தோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. ஆஹா ......துளசி கோபால் திருமண உற்சவம் முடிந்த பின் வீட்டுக்கு
  வந்த விருந்தாளிகள் எமக்கு அளித்த இத்தனை சுவைமிகு பண்டங்களும்
  வெறும் பார்வைக்கு மட்டும் அல்லாமல் உண்மையில் சுவைக்கும் படியாக
  எமது முகவரிக்குத் தயவு செய்து அனுப்பி வையுங்கள் இல்லையேல் அம்பாள்
  கண்ணை நோண்டிடுவாள் சீர்க்கிரம் ஓடுங்கள் சகோதரா !:)))))

  ReplyDelete
  Replies
  1. அனுப்பி விட்டேன்! விரைவில் கிடைத்திடும் உங்களுக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 15. நானும் பதிவர் துளசி கோபால் பற்றி ஏதோ பதிவு என்று நினைத்து விட்டேன்! அவர்கள் வேறு இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள், மதுரைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார்கள் என்று படித்தேனா, அவர்கள் பற்றித்தான் என்று நினைத்தேன்! :)))))

  படங்களும் விவரங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. துளசி கோபால் என்றதும் பதிவர் துளசி அவர்களை நினைத்துவிட்டேன்.. //

  நானும். !

  படங்கள் அருமை ! தின்பண்டங்கள் ஆசையைத் தூண்டின !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 17. மிக அழகான படங்கள்! பகிர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. படங்களும் பதிவும் அருமை நாகராஜ் ஜி.

  அந்த ஊருண்டைகளைப் பார்க்கும் போது நாக்கில் நீர் ஊறுகிறது.

  அப்புறம்..... அது என்ன நெல்லிக்காய் விளக்கு....? நான் கேள்விப்பட்டதே இல்லை.
  எப்படி அது.....
  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. இந்த நாள் மட்டும் தான் நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவார்களாம். பொதுவாகவே நெல்லிக்காயை மாலை வேளைகளில் சாப்பிடுவது இல்லை - சிலர் மாலை வேளைகளில் தொடக்கூட மாட்டார்களாம். இந்த நாள் மட்டும் விதிவிலக்கு!

   நெல்லிக்காயில் ஒரு சிற்ய துளை போட்டு, அதில் திரி அமைத்து எரிய விடுவது துளசி விவாக நாளில் சிறப்பு - அந்த விளக்கு கொண்டு தான் ஆரத்தி எடுப்பார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 19. நான் அருணா செல்வத்தை வழிமொழிகிறேன்..

  தம ஏழு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

   Delete
 20. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 21. அழகான படங்களுக்கு அட்டகாசமான தலைப்புகள். ரசித்தேன் தலைவரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா!

   Delete
 22. மிக அழகான படங்கள். அதிலும் அந்தத் தோழி கௌரியின் சிக அலங்காரம் பேஷ் பேஷ்! நெல்லிக்காய் விளக்கு??? தலைப்புகள் ரசிக்க வைத்தன!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 23. வணக்கம் சகோதரரே.!

  அனைத்துமே அழகான. தெளிவான,ரசனையுடன் அலங்காரம் செய்திருந்த படங்கள்.! துளசி கல்யாணத்தை நேரிலேயே கண்டு விட்ட மன நிறைவை தந்தன.! கல்யாண வைபோகத்தில் எங்களையும் கலந்து கொள்ளச்செய்தமைக்கு என் நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 24. வாழ்க மணமக்கள்!..
  பதிவும் படங்களும் - கல்யாணத்தில் பரிமாறப்பட்ட கடலை உருண்டை போல இனிப்பு!..

  ReplyDelete
 25. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....