எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 23, 2015

ஃப்ரூட் சாலட் – 122 – CNG ரயில் எஞ்சின் – பேராசை - சுயநலம்இந்த வார செய்தி:

சமீபத்தில் CNG மூலம் இயங்கும் ரயில் இஞ்சின் ஒன்றினை அறிமுகம் செய்திருக்கிறது இந்திய ரயில்வே.  டீசல் மற்றும் மின்சாரம் கொண்டு ரயில் இஞ்சின்கள் இதுநாள் வரை இயக்கப்பட்டு வந்தன.  இதில் டீசல் மூலம் இயங்கும் இஞ்சின்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு பலமான கேடுகளை விளைவிப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.

சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் இருக்கும் ரிவாரி முதல் ரோதக் வரை இயங்கும் பாசஞ்சர் ஒன்றில் சோதனை முயற்சியாக CNG மூலம் இயங்கும் படி செய்து இருக்கிறார்கள்.  முழுவதும் அல்ல – மொத்த எரிபொருளில் 20 சதவீதம் CNG மூலமும் அதன் பின்னர் டீசல் மூலமும் இயங்கப் போகிறது.  இதன் மூலம் கணிசனமான அளவு எரிபொருள் செலவும் குறைய வாய்ப்பிருக்கிறது.  தொடர்ந்து இந்தியாவில் ஓடும் பல டீசல் எஞ்சின்களை இப்படி CNG மூலம் இயங்கும்படிச் செய்தால் நல்லது. இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயமும் உண்டு. இந்த இஞ்சின் தயாரிக்கப்பட்ட இடம், நமது ICF, Chennai.  தொடர்ந்து Solar Power, Wind Power போன்றவை கொண்டும் ரயில் இஞ்சின்களை இயக்க முடியுமா என்ற சோதனையில் இருக்கிறார்களாம்.  நல்ல விஷயம். 

இந்த முயற்சியில் இந்திய ரயில்வே இன்னும் முன்னேற நமது வாழ்த்துகள் மற்றும் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:

Don’t mistake God’s PATIENCE for his absence. His timing is PERFECT and His PRESENCE is constant. He’s ALWAYS with you!

இந்த வார குறுஞ்செய்தி:

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு….
தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்!

ரசித்த பாடல்:

இன்றைய ரசித்த பாடலாக “சீர் கொண்டு வா வெண் மேகமே” இதோ உங்களுக்காக!  என்னெவொரு இனிய பாடல்…..ராஜா காது கழுதை காது:

எக்மோர் ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம்ஒருவர் தன்னிலை மறந்து கீழே கிடக்க, அவரைக் கடந்த இரண்டு குடிமகன்களில் ஒருவர் சொன்னது:  ”நம்மள மாதிரி ஹால்ஃப் அடிச்சிருந்தா ஸ்டடியா நடக்கலாம்….  ஃபுல் அடிச்சா இப்படி விழுந்து தான் கிடக்க வேண்டியிருக்கும்!”

இந்த வார புகைப்படம்:

சமீபத்தில் திருவரங்கத்தில் எடுத்த கோலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். மாட்டுப் பொங்கல் அன்று எடுத்த புகைப்படங்கள் இன்னமும் வெளியிடவில்லை. அன்று எடுத்த படங்களில் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு…..


படித்ததில் பிடித்தது:

ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டார்.

இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று "இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவுவேண்டும் கேள்" என்றார். உடனே பிச்சைக்காரர், "அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்" என்றார்.

அதற்கு, வைர வியாபாரி இன்னுங்குறைவாக வாங்கும் எண்ணத்துடன் "ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்" என்றார். "அப்படியானால் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலேயேருக்கட்டும்" என்றவாறே பிச்சைக்காரர் நடக்கலானார்.

வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவாரென்ற எண்ணத்துடன் காத்திருந்தார். அதற்குள் அங்குவந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார்.

இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், "அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு
கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாகச் செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்என்றார். அதைக்கேட்ட பிச்சைக்காரர், பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத்தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.

மேலும் எனக்கு இதுவே மிகப்பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடனிருக்கிறேன். அதன் மதிப்புதெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய்..! இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!" என்றவாறே நடக்கலானார்

நீதி : பேராசை பெருநஷ்டம் !!! 

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


44 comments:

 1. வித்தியாசமான குறுஞ்செய்தி உண்மை...

  என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

  படித்ததில் பிடித்தது சூப்பர்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  சிறப்பான தொகுப்பு படங்கள்எல்லாம் அழகு சொல்லிய குறுஞ் செய்தியும் நன்று பகிர்வுக்கு நன்றி..த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. வாழ்க்கையில் பலமுறை நாம் ஐம்பது பைசா கணக்கில் நிறய இழந்துவிடுகிறோம்..
  தம+

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 4. இன்னும் பலர் அப்படித்தான் இருக்கின்றனர்.
  நீதிக்கதை அருமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 5. வைரக் கதையின் நீதி எனக்கு மிகவும் பிடித்தது. ஒருவனின் தகுதிக்கு மீறிய செல்வம் துன்பத்தையே தரும் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் நான் அளவான செல்வமே வைத்திருக்கிறேன்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. படித்ததில் பிடித்தது அருமை.
  பேராசை பெருநஷ்டம் என்பது சரி தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. பிச்சைக்காரர் மூலமாக பேராசை பெருநஷ்டம் எனச் சொன்ன கதை அருமை.
  சீர் கொண்டு வா... பிடித்த பாடல்...
  அனைத்தும் அருமையான செய்திகள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 8. பேராசை கதை மிக்க அழகாக இருக்கு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 9. அனைத்தையும்


  சீர் கொண்டு வா பாடல் ஆரம்ப இசையே அமர்க்களமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. பழக்கலவையை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. தகவல்கள் அனைத்தும் கதம்ப மாலை ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.

   Delete
 12. இறை இற்றை அருமை! குறுஞ்செய்தியும்....

  பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும்...

  பேராசை பெருநஷ்டம் கதை அருமை.....பிடித்தது..

  ஹஹாஹ் ராஜா காது கழுதை காது....

  கோலம் சூப்பர்.....டாப் செர்ரி இற்றை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. நல்ல தொகுப்பு. குட்டிக் கதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. பேராசை பெருநஷ்டம் !!! என்று நீதி சொல்லும் கதை அருமை.
  அனைத்து செய்திகளும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 15. கதை அருமை.cng ரயில் வரவேற்கத்தக்க செய்தித ம 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. கதம்பம் அருமை நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. இந்த வார குறுஞ்செய்தியை அதிகம் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. தாங்கள் படித்ததில் பிடித்தது, எனக்கும் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி ஐயா.

   Delete
 19. வாழ்க நலம்!..
  அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   தங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

   Delete
 20. வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி.

   Delete
 21. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலையரசி அவர்களே....

   என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

   Delete
 22. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!

  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr
  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  (இன்றைய எனது பதிவு
  "இந்திய குடியரசு தினம்" கவிதை
  காண வாருங்களேன்)

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி புதுகை வேலு.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....