எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 22, 2015

சரிதாயணம் – நான் இருக்கிறேன் அம்மாவாத்யார் என்று பதிவுலகத்தில் அனைவராலும் அழைக்கப்படும் பால கணேஷ் அவர்களின் இரண்டாவது புத்தகம் “சரிதாயணம் @ ’சிரி’தாயணம்.  அதில் ஒரு புதுமையைப் புகுத்தி, புத்தகத்தினைத் திருப்பினால் “நான் இருக்கிறேன் அம்மா” எனும் இன்னுமொரு புத்தகத்தினையும் அதில் இணைத்திருக்கிறார் கணேஷ்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஒரு புத்தகம் வாங்கும்போதே இரண்டு புத்தகம் வாங்கிய மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.

முதலில் சரிதாயணம் பகுதி 2 பற்றி பார்க்கலாம் – அதில் கொஞ்சம் சுயநலமும் இருக்கிறது – மொத்தம் எட்டு கட்டுரைகள் – அதில் முதல் கட்டுரையான “சரிதாவும், ஏரோப்ளேனும், பின்னே ஞானும்” இப்படித்தான் ஆரம்பிக்கிறது – 

”புது தில்லியில் நண்பர் வெங்கட் நாகராஜ் பைக்கை விரட்ட, பில்லியனில் அமர்ந்து போய்க் கொண்டிருந்தபோது என் கைப்பேசி அழைத்தது.” 

தில்லியிலிருந்து சென்னை வரை ஏரோப்ளேனில் கணேஷ், சரிதா மற்றும் அவரது மாமா-மாமி பயணித்த கதையை படிக்கும்போது – Air Pockets-ல் மாட்டிக்கொண்ட விமானம் குலுங்குவது போல அப்படி வயிற்றில் ஒரு குலுக்கல் – சிரித்து சிரித்து தான்!

”ஏர்ஹோஸ்டஸ் சைவமா? என்று கேட்க, சரிதாவின் மாமா, “சைவமாவது…? நான் வைஷ்ணவன்ம்மா! நெத்தில பாரு எவ்ளோ பெரிசா ஸ்ரீசூர்ணம் இட்டுண்டிருக்கேன்….!” என்று கஸ்டம்ஸ் பெண்ணிடம் நெற்றியைக் காட்டி” என்று எழுதி இருந்தாலும், அதற்கு பழைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு சாஸ்திரிகள் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார் என்று சொல்லும் மாமாவின் படத்தில் ஏனோ நெற்றி நிறைய விபூதி பட்டையும் பொட்டும் இருக்கிறது.சரிதா செய்த பொருவிளங்காய் உருண்டை கொண்டு ரௌடியை அடித்து துரத்திய கதை, வீட்டுக்கு வந்த பிடிக்காத விருந்தாளியை துரத்த சரிதா போட்ட சபதம், மோகினிப் பிசாசை ஓட்டிய திறமை, வீட்டிற்கு ஏ.சி. போட்டதால் கணேஷிற்கு வந்த பிரச்சனைகள், சரிதாவிற்கு செல்ஃபோன் வாங்கிய கதை என அனைத்து கட்டுரைகளும் படித்தால் நிச்சயம் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பது நிச்சயம்!  மொத்தம் எட்டு கட்டுரைகள் – ஒவ்வொன்றும் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் கட்டுரைகள். பல வீடுகளில் இப்படி சரிதாக்களிடம் மாட்டிக்கொண்டு ”ழே”வென்று முழிக்கும் கணேஷ்கள் இருந்தாலும், அதை வலைப்பக்கத்தில் எழுதி, பிறகு புத்தகமாகவும் வெளியிட ரொம்பவும் மனோ தைரியம் வேண்டும். 

சரிதாயணம் சிரிப்பிற்கு உத்திரவாதம் என்றால், புத்தகத்தின் மறு பாதியான “நான் இருக்கிறேன் அம்மா”வில் சில கதைகள் த்ரில் ரகங்கள். மொத்தம் 10 சிறுகதைகள் இருக்கும் இத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுமே பிடித்தது என்றாலும், தொகுப்பின் தலைப்பாக இருக்கும் “நான் இருக்கிறேன் அம்மா” மனதைத் தொட்ட கதை.

“எனக்கொரு மகன் பிறப்பான்” கதையில் தான் படிக்க முடியாத மருத்துவப் படிப்பினை தன் மகன் மீது திணிக்கும் அப்பா பற்றிய கதை இன்றைக்கு பல வீடுகளில் நடக்கும் விஷயம் என்றாலும் கதையாக தரும் போது சிறப்பாகவே தந்திருக்கிறார் கணேஷ்.

”கிளி, கிலி, கிழி!” கதையில் ஒரு அழகிய பெண் கொல்லப் படுகிறார். அவரைக் கொலை செய்தது யார் என்று துப்பறிய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் எனும் K.R. – கொலை செய்ததாக அருண் என்பவரை கைது செய்துவிட்டாலும், கடைசியில் சொன்ன விஷயம் நிச்சயம் எதிர்பார்க்காதது!

“கொன்னவன் வந்தானடி” கதையில் தனக்கு துரோகம் செய்த மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று ஒரு துப்பறியும் நிபுணரிடம் செல்கிறார் ஒரு பணக்காரர்.  கடைசியில் கொல்லப்பட்டது யார், எதற்காக என்பது தெரியும் போது அதிர்ச்சி….

அமைதியின் பின்னே, கல்லுக்குள் ஈரம், நானும் ஒரு கொலைகாரனும், சங்கி-வெங்கி-பிங்கி என்று ஒவ்வொரு கதையும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் கணேஷ். 

மொத்தத்தில் சிறப்பானதோர் புத்தகம் படித்த திருப்தி உங்களுக்குக் கிடைப்பது நிச்சயம். மற்ற எழுத்தாளர்களின் நூல்களை “நூலழகு” செய்து தரும் கணேஷ் தனது புத்தகத்தினை மிகவும் சிறப்பாக அழகு செய்திருக்கிறார்.  புத்தகத்தினை வெளியிட்டவர்கள் ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்.  புத்தகம் கிடைக்குமிடம், விலை மற்ற விவரங்கள் உங்கள் வசதிக்காக இங்கே:

கிடைக்குமிடம்: ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், 32/1, கங்கையம்மன் கோவில் தெரு, வடபழனி, சென்னை-600026.

புத்தகத்தின் விலை: ரூபாய் 70/-. 

மொத்த பக்கங்கள்:    64 + 64

“சிரிப்பே சிறப்பு” என்று தன் கைப்பட எழுதி கையொப்பம் இட்டு புத்தகத்தினைத் தந்த நண்பர், வாத்யார், எழுத்தாளர் பால கணேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நீங்களும் புத்தகத்தினை வாங்கிப் படித்து இன்புறலாமே!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து…

48 comments:

 1. புத்தக விமர்சனம் அருமை.
  பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. அட்டகாசம். விமர்சனத்தோடு உங்கள் கண்ணில் தென்பட்ட ஓவியத்தில் இருந்த சிறுபிழையையும் சுட்டிகாட்டியது நன்று,... பலரும் தங்களுக்கு நான் இருக்கிறேன் அம்மா தொகுப்பு ரொம்பவும் பிடித்துள்ளதாக எழுதி இருப்பது மகிழ்வாய் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 3. அடடே.... விவ் ரிச்சர்ட்ஸ் படத்தை கிராபிக்ஸ் பண்ணின போது சைவ சாஸ்திரிகள் படத்துலருந்து நெத்திப் பொட்டையும் பூணூலையும் வெச்சுட்டேன் மறந்துபோயி... இதை யாரும் இதுவரை சுட்டிக் காட்டலையே.... உங்க கூர்மையான கவனிப்புக்கு அழுத்தமான கைகுலுக்கல். தமாஸ் புத்தகத்துல இதுவும் ஒரு தமாஸ்னு எடுத்துக்குங்களேன். ஹி... ஹி... ஹி... ‘நான் இருக்கிறேன் அம்மா’ தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றையும் நீங்கள் ரசித்துப் பகிர்ந்த விதம் க்ளாஸ். இத்தனை விரைவில் படித்து, இத்தனை ரசனையான விமர்சனம் தந்த நண்பா... உனக்கு என் அன்பும் நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புத்தகம் என்பதால் தான் இச் சிறிய தவறினையும் சொன்னேன் கணேஷ்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.

   Delete
 4. வணக்கம்
  ஐயா.
  தங்களின் பார்வையில் விமர்சனத்தை அருமையாக எழுதியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
  த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. அற்புதமான விமர்சனம் நான் இப்போதான் படிக்க ஆரம்பித்து இருக்கேன்
  வாழ்த்துக்களும் நன்றியும் பாலகணேஷ் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலா லெனின்.

   Delete
 6. விமர்சனத்தை காணும் போது எப்போது படிப்போம் என இருக்கிறது....
  பாலகணேஷ் அவர்களுக்கு மேலும் பல நூல் வெளியிட வாழ்த்துக்கள்.

  தம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 7. அருமையாக விவரித்திருக்கிறீர்கள் வெங்கட் நகைச்சுவை அவ்வளவு சுல பமாக யாருக்கும் வந்துவிடாது. .அதை நீங்களும் ரசித்து அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். வாத்தியாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

  --

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 8. உங்களின் இந்த விமர்சனம் புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. பொங்கலுக்கு ஊருக்கு வந்தும் சென்னை புத்தகத்திருவிழாவிற்கு போக முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன்.

   Delete
 9. .அடடா.... நான் மிஸ் பண்ணிட்டேனே... வாங்கிடறேன். பு.கால கண்ணில் படலை! வாழ்த்துகள் பாலகணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. வெங்கட் ஜி! வருகின்றோம் இந்தப் பதிவைப் படிக்க பின்னர்! ஏன் தெரியுமா...நாங்களும் சரிதாயணம் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்... எழுதுவதற்கு....எனவே எழுதிவிட்டு வருகின்றோம் இதைப் படிக்க.....தவறாக நினைக்க வேண்டாம் ..

  இதை வெளியிட வேண்டாம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பார்வையில் சரிதாயணம் பற்றிப் படிக்க காத்திருக்கிறேன். தவறாக நினைக்க ஒன்றுமே இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. நல்ல புத்தகம்(உத்தகங்கள்?)... நல்ல விமரிசனம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 12. நானும் வாங்கி படித்துவிட்டேன்! அடுத்த விமர்சனம் இந்த புத்தகத்துக்குத்தான்! உங்களுக்கு மட்டும் வாத்தியார் கையெழுத்து போட்டு கொடுத்து இருக்காரு! எனக்கு கொடுக்கலையே! சிறப்பான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   அடுத்த முறை அவரைப் பார்க்கும் போது அவரிடம் கையெழுத்து வாங்கி விடுங்கள்! :)

   Delete
 13. பால கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 14. ரசிக்கும்படி இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.

   Delete
 15. நகைச்சுவை அவருக்கு மிக இயல்பாய் வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 16. அருமையான அலசலாக விமர்சனம்.
  நண்பரே நானும் இதனைக்குறித்து விமர்சனம் எழுதி இருக்கிறேன் நல்ல விமோசனத்தோடு இருக்கிறதா பாருங்கள் எனது விமர்சனம்
  தலைப்பு என் நூல் அகம் 3
  இணைப்பு கீழே
  http://www.killergee.blogspot.com/2015/01/3.html

  தமிழ் மணம் 9

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விமர்சனமும் அருமையாக இருந்தது கில்லர் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. அருமையான விமரிசனம் வெங்கட்ஜி. திரு. கணேஷ் அவர்களின் சரிதாவின் விசிறி நான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. வலைப் பூவுலகின் வாத்தியார் பாலகணேஷ் அவர்களின்
  "சரிதாயணம்" நான் இருக்கிறேன் அம்மா நூல் விமர்சனம்
  அருமை! ரசித்தேன்! நன்று!
  இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  நன்றியுடன்,
  புதுவை வேலு,
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி [புதுவை வேலு]

   Delete
 19. இப்படி எல்லோரும் கலந்துக்கட்டி புத்தக விமர்சனம் எழுதிறீங்களே, பாவம் ஒருத்தன் சிட்னில இருக்கானே அவனுக்கு ஏதாவது ஒரு புக்கை அனுப்பி வைக்கலாமேன்னு யாருக்காவது தோணுச்சா?

  புத்தக விமர்சனம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. பல சமயங்களில் தில்லியிலேயே புத்தகம் கிடைக்காமல் இப்படி நினைத்ததுண்டு! :) அனுப்பி வைத்துவிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 20. நூலின் விமர்சனம், நூலைப் படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 21. தெரியாம போச்சே?! அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 22. ரசனையான விமர்சனம்... வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 23. விமர்சனம் படிச்சவுடனே படிக்கணும்கற ஆசையைத் தூண்டுது.... பாலா சாருக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. புத்தக விமர்சனம் அருமை அண்ணா ! படிக்கத்தூண்டுகிறது . இனிதான் ஆர்டர் செய்யனும் . நன்றி அண்ணா !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திருமுருகன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....