வெள்ளி, 6 மார்ச், 2015

ஃப்ரூட் சாலட் – 128 – முதல்வருக்கே பாடம் – இசைக்கு வயதில்லை - ஹோலி



இந்த வார செய்தி:

முதல்வருக்கு பாடம் கற்பித்த 69 வயது இளைஞர்

கர்நாடக மாநிலத்தின் முதல்வரான சித்தராமையா பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நட்த்தி இருக்கிறார். அதற்கு வந்திருந்த விவசாயிகளில் ஒருவர் ஹனசி என்பவர்.  69 வயதான இவருக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் பருத்தி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பயிரிடுகிறார். 

வந்திருந்த விவசாயிகள் பலரும் ஏரிகளைத் தூர் வாருதல், நஷ்ட ஈடு வழங்குதல் ஆகியவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, இவர் மட்டும், இக்காலத்தின் நவீன வசதிகளான Google Earth, What’s app ஆகியவற்றைப் பயன்படுத்தி, விவசாயம், மற்றும் பயிர்கள் நாசமானதைச் சொல்லி வாங்கும் insurance ஆகியவற்றை மேம்படுத்த வழிகள் ஏன் செய்யக் கூடாது என்பதை கேட்டிருக்கிறார்.  அவரது வயதில் இந்த யோசனைகளைக் கேட்ட முதல்வரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 

முழுக்கட்டுரையும் இங்கே – ஆங்கிலத்தில்!


இந்த நல்ல மனிதருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:


யாருக்காகவும் நீ மாற நினைக்காதே. ஏனெனில் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்.....



இந்த வார குறுஞ்செய்தி:

அம்மாவின் அன்பு தோசை மாதிரி....  அப்பாவின் அன்பு தோசைக்கல் மாதிரி.... தோசையின் ருசி தெரியும்....  தோசைக்கல்லின் தியாகம் தெரியாது!



இந்த வார இசை:

இந்த மூதாட்டிக்கு 74 வயதாம்! ஆனால் குரலில் எத்தனை இளமை...  கேட்டுப் பாருங்களேன்....  காணொளியில் பாடியிருக்கும் இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள்.....




இந்த வார புகைப்படம்:



சென்ற சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் தங்கியிருக்கும் பகுதியில் ஒரு நிகழ்ச்சி. பாராயணம், பாட்டுக்கச்சேரி, பத்மாவதி கல்யாணம் எனச் சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்த ஒரு சிறுவன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரிந்து கொள்ள எந்த ஆர்வமுமின்றி தான் உண்டு தன் செல்ஃபோன் விளையாட்டு உண்டு என மூழ்கி இருந்தான். நான் அவனைப் புகைப்படம் எடுத்தது கூட அவனுக்குத் தெரியாது – அந்த அளவிற்கு விளையாட்டில் மூழ்கி இருந்தான்! எடுத்த பிறகு அவனிடம் காண்பித்தபோது, செல்ஃபோனிலிருந்து பார்வையை விலக்காது சொன்னது –

“ஃபோட்டோ எடுத்தாச்சுல்ல, எடுத்துக்கோங்க.... விளையாடும்போது Disturb பண்ணாதீங்க!



இன்றைக்கு ஹோலி:


படம்: இணையத்திலிருந்து....

வண்ணத் திருவிழாவாம் ஹோலிப் பண்டிகை இன்று தில்லியிலும் வட இந்தியாவின் பெரும்பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அலுவலகத்திற்கு விடுமுறை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருக்கப் போகிறேன்! ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை வீட்டின் ஜன்னலருகே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நல்ல பொழுது போக்கு.  அவர்களின் மேல் தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்!

அனைத்து நண்பர்களுக்கும் ஹோலி நல்வாழ்த்துகள்.



படித்ததில் பிடித்தது:



ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

நீதி: தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ் வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்.



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. தொழில்நுட்பத்தைப் பற்றி விவசாயி பகிர்ந்துகொண்டது வியப்பைத் தந்தது. குழந்தைகள் மட்டுமல்ல பல பெரியவர்கள்கூட அலைபேசியில் தம் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தால் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்துவிடுகின்றனர் என்பது வேதனையைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. அனைத்தும் நல்ல தகவல் நண்பரே...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. ஃப்ரூட் சாலட் ரொம்ப நல்லா இருக்கு. அதிலும் அந்த தோசைக்கல்லின் தியாகமும், படித்ததில் பிடித்ததும் ரொம்ப சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  4. அனைத்து தகவல்களும் அருமை..

    ஆனாலும்

    ஃபோட்டோ எடுத்தாச்சுல்ல, எடுத்துக்கோங்க.... விளையாடும்போது Disturb பண்ணாதீங்க!.. -

    கொடூரமான வார்த்தைகள்.. இதெல்லாம் வளர்ந்து!?.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. யாருக்காவும் நீ மாறாதே... பிறகு சிற்பியின் கதை இப்படி அத்தனையும் இன்று ரசிக்கும்படியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அனைத்துமே அருமை.
    இந்த வார குறுஞ்செய்தி சிறப்பு.
    மூதாட்டியின் குரல் துளியும் நடுக்கம் இல்லாமல் சிறு வயதினர் பாடுவது போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  8. ரசனையான பகிர்வுகள். இந்த வார புகைப்படம் வளரும் தலைமுறைகளின் பிரதிநிதியைக் காட்டி வருத்தமளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  9. இந்த வார பழக்கலவையில் நான் இரசித்தது இந்த வார இசைப் பகுதியைத்தான். பாடியவரின் படத்தைப் பார்க்காமல் குரலை மட்டும் செவிமடுத்தால் பாடுபவருக்கு வயது 24 என்றுதான் சொல்லத்தோணும். 74 வயதில் இப்படிப் பாடுவது ஆச்சரியமே! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. அருமை !அருமை !மூத்தட்டியின் வியக்க வைக்கும் இனிய குரல்வளம் !
    பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ .த.ம .6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  11. குறுஞ்செய்தி ஹா... ஹா... ரசித்தேன்...!

    அற்புதமான கதை...

    ஹோலி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    தங்களின் தேடலுக்கு எனது தலை சாய்ந்த வணக்கம்.. 74 வயது பாடும் பாடல் என்று சொல்ல முடியாது... மிக திறமையாக பாடுகிறார் அந்த பாட்டி எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.. மற்ற தகவல்கள் குறுஞ் செய்திகள் எல்லாம் அசத்தல்...த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை, பாடல் பாடியவர் வயது தெரியவில்லை, இளமையான இனிமையான குரல். பல் போனால் சொல்போச்சு என்கிறார்கள் ,அவர்களுக்கு பல் இருப்பது போல் தெரியவில்லை ஆனால் எப்படி இப்படி இனிமையான குரல்?
    பகிர்வுக்கு நன்றி.
    கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. ஃப்ரூட் சலாட் பூராவையும் ரசித்து ருசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  15. அருமையான சாலட் வித் அந்தப் பாட்டியின் இனிமையான குரலுடன் சாலடிற்கு மேலும் சுவை கூட்டியது. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அது ஒரு மூதாட்டியின் குரல் என்று சொல்லவே முடியாது....இளமையான மூதாட்டி!!!!

    குறுஞ்செய்தி, இற்றை அருமை. படித்ததில் பிடித்தது கதை பிடித்தது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே.

    வழக்கம் போல் ஃப்ரூட் சால்ட் இனிதாக இருந்தது. இந்த வார முகப்புத்தக இற்றை அருமையான கருத்து. குறுஞ்செய்தி, தந்தையின் தியாகத்தை உணர மட்டுமல்லாது, தந்தையை மதிக்க வேண்டுமென கற்றுக்கொடுக்கிறது. பாட்டும் இனிமையிலும் இனிமை..கதையின் நீதியும் சிறப்பு. நல்லதொரு பழக்கலவையை எங்களுடன் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....