எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 11, 2015

பாய்ஸ் பட செந்தில் – தில்லியில்!பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில் நடித்த ஒரு காட்சி வரும் – உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி நினைவில்லையெனில் உங்களுக்காகவே காணொளி இங்கே.....எந்த இடத்தில் என்று என்ன பிரசாதம்/உணவு கிடைக்கும் என ஒரு டேட்டாபேஸே வைத்திருப்பார். அதை தனது மூலதனம் என்றும் பெருமையாகச் சொல்வார். அதே போல தில்லியில் ஒருவர் இருக்கிறார்.  இவர் உருவத்தில் செந்திலைப் போல இல்லாமல் ஒல்லியாகத் தான் இருப்பார். ஆனால் டேட்டாபேஸ் மட்டும் செந்திலின் டேட்டாபேஸை விட அதிகமாய் விவரங்கள்! அவர் சொல்வது போல Information is Wealth என்பதில் இவருக்கு அதீத நம்பிக்கை போலும்.

தில்லியின் எந்தப் பகுதியில் எந்த நிகழ்வு – குறிப்பாக தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு இவரைப் பார்க்க முடியும். தில்லியில் பல நிகழ்ச்சிகளை தமிழர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது இந்நிகழ்ச்சிகளுக்கு எனக்கும் அழைப்பு வருவதுண்டு. அதில் பெரும்பாலானவற்றை நான் தவிர்த்து விடுவது வழக்கம் – அலுவலக ஆணிகள் ஒரு காரணம் – இன்னொன்று புதியதாய் ஒரு இடத்திற்குச் செல்வதில், அதுவும் தனியாகச் செல்வதில் இருக்கும் தயக்கம்!


படம்: இணையத்திலிருந்து....

கிட்டத்தட்ட கடந்த இரண்டு மூன்று வாரங்களில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். ஒன்று எங்கள் பகுதியிலேயே நடந்த நிகழ்ச்சி. மற்றொன்று ராமகிருஷ்ண புரத்தில் இருக்கும் மலைமந்திரில் நடந்த நிகழ்ச்சி. இரண்டு இடங்களிலும் தலைநகர் செந்திலைப் பார்த்தேன். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தார் அவர்.  குறிப்பாக சாப்பாட்டு வேளைகளிலும், உணவு வேளைகளிலும்.  பாய்ந்து பாய்ந்து போய் காபி குடிப்பதும், சிற்றுண்டி வகைகளை ஒரு கை பார்ப்பதுமாக இருந்தார்.


படம்: இணையத்திலிருந்து....

எங்கள் பகுதியில் இரண்டு நாட்கள் விழா. புகைப்படங்கள் எடுக்கும் பணியை எனக்கு அளித்திருந்ததால் முழுவதும் அங்கேயே தான் இருந்தேன். அந்த இரண்டு நாட்களும் ஒரு விஷயத்தினை கவனித்தேன் – காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் மட்டும் கிட்டத்தட்ட முப்பது காபி குடித்திருப்பார். யார் காபி அருந்தச் சென்றாலும், அவருடன் இவரும் ஆஜர். For Company sake குடிப்பதாக இருந்தாலும், இத்தனை காபி குடிப்பது அவருக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று காபி குடித்தாலே எதிர்த்துக் கொண்டு வரும்! இவருக்கு ஒன்றும் செய்யாது போலும்!

மாலையில் பஜ்ஜி – அது பாட்டுக்கு பத்து பன்னிரெண்டு என உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்கிறார்! கூடவே தேநீர் கப் கப்பாக உள்ளே அனுப்புகிறார்! ஒரு வேளை அடைத்துக்கொள்ளாமல் இருக்க குடிப்பாரோ? மதிய உணவு எல்லோருக்கும் போடும்போதும் பார்த்தேன் – பந்தி முடிந்து கடைசியில் தான் எழுந்திருக்கிறார். இத்தனை சாப்பிட அவரால் எப்படி முடிகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த இன்னொரு நண்பரும் சொன்னார் – இவரை சாப்பாட்டு விஷயத்தில் அடித்துக்கொள்ளவே முடியாது என்றும், தில்லியில் எல்லா தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் இவரைக் கண்டிப்பாக பார்க்க முடியும் என்று சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை – ஒரு வேளை அதிகப்படுத்திச் சொல்கிறாரோ என நினைத்தேன். மூன்றாவதாக இன்னொரு நபரும் இவரைப் பற்றிச் சொன்னதும் தான் புரிந்தது இவரிடம் இருக்கும் டேட்டாபேஸ் ரொம்பவே பக்கா என்று.

இப்படி பக்காவாக ஒரு டேட்டாபேஸ் வைத்துக் கொண்டு இருக்கும் இவருக்கு என்றைக்கும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். அதிலும் சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தான் இவர் இப்படி விவரங்களைச் சேகரித்து ஒவ்வொரு இடமாக சென்று வருகிறார் போலும். 

மலை மந்திர் கோவிலில் நாங்கள் சென்று சேரும் நேரம் தான் காபி பக்கெட்டோடு ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாரோ இல்லையோ, நாலு கால் பாய்ச்சலில் இவர் அவர்களை நோக்கி ஓட, அவர்களோ, முதலில் பாட்டுப் பாடுபவர்களுக்குத் தான் என்று சொல்லியபடி அரங்கத்தினை நோக்கி ஓட, இவர் விடாது துரத்த, ஒரே களேபரம். அவர்களைத் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். ஆனாலும் பாட்டு பாடுபவர்களுக்கு கொடுத்து முடித்தபோது வாளி காலி! இவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக அவர்களைத் தொடர்ந்து சமையலறை வரை சென்று ஒரு காபியை வாங்கி வெற்றிக் களிப்புடன் தான் வந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

என்னதான் சாப்பாட்டு விஷயத்தில் அதீத ஆர்வம் என்றாலும், ஒரு அளவிற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்பது எப்போது அவருக்குப் புரியுமோ?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  நகைச்சுவை வீடியோவை இரசித்தேன்... தாங்கள் சொல்லிய மனிதர் களின் வாழ்க்கை போலதான் பல மனிதர்களின் வாழ்க்கையும்
  த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. Information is Wealth என்பது ரொம்பச் சரி! நாம் தடுமாறாமப்போய் வர முடியுதுல்லே! செந்திலை நான் அடிக்கடி நினைப்பேன்:-)

  ஆமாம்.... உங்களுக்கு நடனம், பாட்டு இவைகளில் ஆர்வம் அதிகமாக இருக்குன்னா சொல்லுங்க. தில்லி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இப்பவும் எனக்கு அழைப்பு வந்துக்கிட்டுதான் இருக்கு. நாளன்னைக்கு மார்ச் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு அஷ்டபதி விழா. பரத நாட்டியம், குச்சுபுடி, கதக், மோஹினியாட்டம், ஒடிஸின்னு ஆறு நிகழ்ச்சிகள் நாளுக்கு ரெண்டுன்னு நடக்கும். பரத நாட்டியம் நம்ம அலர்மேல் வள்ளி. எனக்குத்தான் பார்க்கக் கொடுத்து வைக்கலை:(

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு வரும் அழைப்புகளை இப்படி திருப்பி விடுங்கள். நேரம் இருந்தால் அந்நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறேன். மார்ச் 13 - 15 எங்கே? 14 வெளியூர் பயணம் என்பதால் செல்வது கடினம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
  2. அனுப்பிட்டேன். தனிமடல் பார்க்கவும்.

   Delete
  3. பார்த்து பதிலும் அனுப்பி விட்டேன். நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. கடவுள் சிலபேருக்கு இப்படி கடோத்கஜ வயிறு தந்து விடுகிறார்! அவர்களுக்கு 'மரம்' வைத்த அவர் இப்படித் 'தண்ணீர்' கிடைக்கவும் இடங்கள் ஏற்பாடு செய்து விடுகிறார் போலும்!

  :))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. மரம் வைத்த அவர் இப்படி தண்ணீர் கிடைக்கவும்...... :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஏதோ தீயிற வாசம் வருதே?
  ஓ, உங்க வயிறா! அப்படின்னு ஒரு நாடகத்துல கேட்டது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி.

   Delete
 5. வித்தியாசமான கதாபாத்திரத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இப்படியும் இருக்கிறார்கள் என நினைக்கும்போது விந்தையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. உணவிற்காக மட்டுமே விழாவில் கலந்து கொள்வது
  புதுமையாக அல்லவா இருக்கிறது
  அது சரி ஐயா அவருக்கு இருப்பது வயிறுதானா? அல்லது ஒட்டகம் போல்
  இருக்கும்போது சேமித்து வைத்துக் கொண்டு இல்லாதபோது சாப்பிடும்
  தொழில் நுட்பம் எதுவும் வைத்திருக்கிறாரா?
  நன்றி ஐயா
  தம 2

  ReplyDelete
  Replies
  1. ஒட்டகம் போல சேமித்து வைத்துக் கொள்கிறாரா? இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. அவரின் ஜீரண சக்திக்கு ஒரு சலாம் ,!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 8. புரியும் நாள் வருவதற்கு முன் வரும் ஆபத்தை உணர்ந்தால் (திருந்தினால்) சரி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. காணொளியை இரசித்தேன். தலைநகர் செந்தில் ஒரு வினோத மனிதர் என நினைக்கிறேன். எல்லோராலும் ஒரு அளவிற்கு மேல் சாப்பிடமுடியாது. இவர் ‘வரம்’ வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார் என எண்ணுகிறேன். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. கால் வயிற்றை நிரப்புவதற்கே - போராடும் மனிதர்களுக்கு மத்தியில் - இப்படியும் சிலர்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. Kadalpayanangal information is wealth :O) !!

  Sir, please give his number, I may get more info !

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா.... எனக்குத் தெரியாது சுரேஷ்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. கல்யாண சமையல் சாதம் எங்கிருந்தாலும் வரப் பிரசாதம்
  கிடைத்துவிட்டால் போதும், அங்கிருப்பேன் (வாழ்) நாள் முழுவதும்!
  ஒரு வேளை முன் ஜென்மத்தில் கடோத்கஜனாக இருந்திருப்பாரோ...

  எப்படி மக்கள் அனுமதித்திருக்கின்றார்கள்?!! இங்கெல்லாம் தெரியாத ஒருவர் இலையில் வந்து அமர்ந்தாலே யார் என்ன என்று கேள்வி கேட்டு வெளியில் அனுப்புவதைக் குறியாகச் செய்வர்....ம்ம் பரவா யில்ல டெல்லி வாழ் தமிழர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 13. முப்பது காபியெல்லாம் ரொம்பவே ஓவர் தான் சார் .. எப்படித்தான் தாங்குது? பக்கா டேட்டா வைத்திருந்தால் மட்டுமே இப்படி பண்ண முடியும் ... திறமைசாலி தான் போல ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   Delete
 14. இப்படியும் சில காரக்டர்கள்.....! ஹூம்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 15. முடி உள்ளவன் அள்ளி முடியுறான் மொட்டை தடவிக்கிட்டு போக வேண்டியதுதான் ஜி
  தமிழ் மணத்தில் நுளைக்க அந்த 7நாட்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. ஹா ஹா... வித்தியாசமான மனிதர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete
 17. அபார ஜீரணர்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. ரா.ஈ. பத்மநாபன்March 12, 2015 at 10:06 AM

  கண்ணு போடாதீர்கள். அவருக்கு வயிறு வலிக்கப் போகுது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 19. எப்படி அவ்வளவு காபி குடிக்க முடியும்? ஏதாவது மனநோய் அவருக்கு இருக்குமோ??
  (some psychological dis order??)

  ReplyDelete
  Replies
  1. தெரியலையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 20. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 21. இவ்வளவு சாப்பிட்டும் ஒல்லியாகத்தான் இருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள். அது தான் ஆச்சிரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....