வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஃப்ரூட் சாலட் – 131 – வீடில்லா கொடுமை - பட்டாம்பூச்சி – நல்லாசிரியர்


இந்த வார செய்தி:

இந்தியாவில் பெருநகரங்களை நோக்கி தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வேலை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு இருக்க இடமோ, தெரிந்தவர்களோ இருப்பதில்லை. ஆனாலும் ஒரு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் நகரங்களை நோக்கி வருகிறார்கள். தலைநகர் தில்லியில் மட்டும் இப்படி வரும் நபர்கள் எண்ணிலடங்கா.  அப்படி ஒன்றும் பெரிதாய் படித்தவர்களோ, வேலை தெரிந்தவர்களோ இல்லை – பாமர மக்களும் இப்படி வருகிறார்கள். 

வந்தாரை வாழ வைக்கும் நகரம் என்று சொல்வதிற்கில்லை என்றாலும் இப்படி வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தலை நகர் தில்லிக்கு இப்படி வருபவர்கள், கிடைத்த வேலை செய்து கொண்டு, இரவு நேரங்களில் மேம்பாலங்களுக்கு அடியிலோ, பேருந்து நிறுத்தங்களிலோ, ஆங்காங்கே இருக்கும் பூங்காக்களிலோ அல்லது சாலையோர நடைபாதைகளிலோ படுத்துக் கொள்கிறார்கள்.  

நாள் முழுவதும் ரிக்‌ஷா இழுப்பது, மூட்டை தூக்குவது போன்ற கடுமையான வேலைகள் செய்யும் அவர்களுக்கு இரவுத் தூக்கம் பஞ்சு மெத்தையில் அல்ல! அதுவும் குளிர் காலங்கள் என்றால் ரொம்பவே கொடுமை. அதீதமான குளிரில் வீட்டுக்குள் இருந்தாலே குளிருமே, இதிலே வெட்ட வெளியில் போதிய கம்பளி உடைகள் இல்லாது படுப்பது இவர்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். 

அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் குளிர் காலங்களில் தற்காலிக Night Shelters ஏற்படுத்திக் கொடுத்தாலும் போதிய அளவு இருப்பதில்லை என்பது தான் உண்மை நிலை. இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் Corporate Social Responsibility என ஒரு பொறுப்பு இருக்கிறது. தனது நிறுவனத்திற்குக் கிடைக்கும் லாபத்திலிருந்து ஒரு கணிசமான பங்கினை இப்படி தேவையானவர்களுக்கு உதவி செய்ய கொடுக்க வேண்டும்.

நேற்று ஒரு காணொளி காண நேர்ந்தது. பாகிஸ்தானில் உள்ள நிறுவனம் Molty Foam – படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம் இது. பாகிஸ்தானில் உள்ள பெரு நகரங்களிலும் இப்படி வீடு இல்லாது உழைக்கும் மக்களுக்கு அவர்கள் ஒரு நல்ல வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.  பகல் நேரங்களில் அவர்களது நிறுவனத்தின் விளம்பரப் பலகையாக இருப்பதை, இரவு நேரங்களில் கொஞ்சம் திருப்பி படுக்கையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையாக 9 நகரங்களில் அமைத்திருக்கிறார்கள்.

சென்ற அக்டோபர் மாதத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பரப் பலகை படுக்கைகளின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 60000 வரை உயர்ந்திருக்கிறது.  இந்தக் காணொளியைப் பாருங்களேன்!




இது போன்ற நல்ல விஷயத்தை இந்திய நிறுவனங்களும் ஏன் முயற்சி செய்யக் கூடாது?



இந்த வார முகப்புத்தக இற்றை:




A child is like a butterfly in the wind – some can fly higher than others, but each one flies the best it can. Why compare one against the other? Each one is different. Each one is special. Each one is beautiful!



இந்த வார குறுஞ்செய்தி:

'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள், வெற்றி நிச்சயம்.



இந்த வார காணொளி:

இவர் மாதிரி நல்லாசிரியர் தான் இப்போதைய தேவை. மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் இவருக்கு என்ன ஒரு ஈடுபாடு! பாருங்களேன்!





படித்ததில் பிடித்தது:

அவன் பள்ளிக்குப் போக வீட்டை விட்டு வெளியே வந்தான். வானத்தில் பறந்து கொண்டிருந்த வானம்பாடிகளைப் பார்த்து, "என்ன கவலையில்லாத வாழ்க்கை?" என்று சொன்னான். இதைக் கேட்ட பெரியவர் ஒருவர் அவனை நெருங்கி, "அவை பூச்சிகளையும், ஈக்களையும் பிடித்து தங்கள் குஞ்சுகளுக்கு கொண்டு போய்க் கொடுக்கின்றன. மகிழ்ச்சியாகப் பறந்தவண்ணம் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. நீ நினைப்பது போல அவை வீணே திரியவில்லை" என்றார். புரிந்துகொண்ட சிறுவன் பள்ளிக்கு ஓடினான்.

-   ஃப்ரான்ஸ் கம்பன் மகளிரணி வலைப்பூவிலிருந்து....



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. நம்ம நிறுவனங்கள் சித்திக்க கூட செய்யாது...

    மற்ற அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. பகலில் விளம்பரம், இரவில் ஆதரவற்றோருக்கு படுக்க இடம்... ஐடியா பிரமாதம். என்ன ஒரு நல்ல மனசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. பகலில் விளம்பரப் பலகை.. இரவில் படுக்கை.. இதே போல பெருவில் விளம்பரப் பலகை மூலம் காற்றில் உள்ள ஈரப் படத்தை உறிஞ்சி குடிநீராக்கும் ஒரு திட்டத்தைப் பற்றி பதிவில் பகிர்ந்திருந்தேன்..
    http://eliyavai.blogspot.com/2014/03/blog-post_9.html

    நல்லது செய்யவேண்டும் என்ற மனம் இருந்தாலே போதும்.. எவ்வளவு பேருக்கு உதவ முடியும் என்று காட்டியுள்ளார்கள்!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து குடிநீர் உண்டாக்கும் திட்டம் பற்றிய காணொளி நானும் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

      நீக்கு
  4. இரண்டு காணொளிகளுமே அருமை. அந்த ஆசிரியர் போல் சொல்லிக் கொடுத்தால் potential energy மற்றும் kinetic energy பற்றி அறிய நமது energy யை வீணாக்கவேண்டாம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. ஆகா,,,,,,, அருமையான ஃப்ரூட் சாலட் , வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

      நீக்கு
  6. அனைத்தும் நன்று. இந்த வாரக் குறுஞ்செய்தி மிகவும் அருமை. அருமையான நேர்மறைக் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. iதஞ்சையில் எங்கள் வீடு கட்டும் வேலையில் பெயின்ட் அடித்ததெல்லாம் ராஜஸ்தானிலிருந்து வந்த ஆட்கள் தான், அதுவும் வயதில் மிகக் குறைந்தவர்கள்! ஹிந்தியைத்தவிர வேறு மொழி தெரியாதவர்கள் சைகையாலேயே சமாளித்து வேலை முழுவதையும் முடிக்கிறார்கள்!

    முகப்புத்தக இற்றை மிக மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை நண்பரே காணொளி அருமை இவர்களுக்கு வரும் இந்த நல்ல தூக்கம் அம்பானிகளுக்குகூட வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. எல்லாமே அருமை. ரொம்ப மாசம் ஆகி விட்டது உங்கள் பதிவுக்கு வந்து. மெல்ல மெல்ல எல்லாத்தையும் படிக்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே.!

    விளம்பர பலகை படுக்கை விபரம் ஆச்சரியமாக இருந்தது, மனித நேயம் மிக்க செயலை இங்கும் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி. மற்ற அனைத்தும் அருமை. குறுஞ் செய்தியும், படித்ததில் பிடித்ததும் மனதில் உறையும் வாசகங்கள். நல்லதொரு பழக்கலவையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி....

      நீக்கு
  11. ஃப்ரூட் சாலட் – 131 மிகவும் அருமை.

    காணொளியில் உள்ளது சூப்பர் ஐடியா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  12. பாகிஸ்தான் நிறுவனங்களின் சேவை பாராட்டத்தக்கது! அனைத்தும் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. பாகிஸ்தான்லேருந்து இப்படி ஒரு நல்ல காரியமா? அட!

    குறுஞ்செய்தி நேர்மறை!

    ப.பி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. ஆசிரியர் பாராட்டிற்குரியவர்
    பர

    பாராட்டுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

  15. நல்ல தகவல்கள்
    நாடி வந்து பாராட்ட வைக்கும் பதிவு!
    பாராட்டுக்கள்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

      நீக்கு
  16. ஆஹா! பாகிஸ்தானா? !! ஆச்சரியம்தான். அருமையான திட்டம் அந்த பெட் திட்டம்....ம்ம்ம் நம்மூர்ல செய்வாங்கனு நினைக்கிறீங்களா ஜி?! செய்தால் நன்றாக இருக்கும் தான்....

    இற்றையும், குறுஞ்செய்தியும் மிக மிக அருமையான வார்த்தைகள்! ...

    ஆஹா இப்படி இயற்பியல் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் இருந்துவிட்டால் நம்மூரில் இயற்பியலில் ஆராய்சிகள் பெருகிவிடுமே.....ம்ம்ம் பாராட்டுக்கள் அந்த நல்லாசிரியருக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாகிஸ்தானில் தான்.

      ஆசிரியர் ரொம்பவே ஆச்சரியப் பட வைத்தார் இல்லையா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....