எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 14, 2015

மன்மதன் வந்தானா?அன்பு நண்பர்களுக்கு,
தமிழ் வருடங்கள் அறுபதில், 29-வது வருடமாக வருவது தான் மன்மத ஆண்டு. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் இருக்கும் பலனை வருடாதி வெண்பாஎன்ற தலைப்பில் பாடல்களாக அக்காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்களாம். அப்படி இன்று பிறக்கும் மன்மத ஆண்டிற்கான வெண்பா பாடல்......


இடைக்காட்டு சித்தர் எழுதிய 'மன்மத வருட வெண்பா'

மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.

பொருள்: இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும்  நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.

பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள்  சேதமடைந்து குறையலாம்.

பாடலின் பொருளை பார்க்கின்ற பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. மழைக்காக ஏங்கி மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் மழை வளம் பெருகும் என்று முதல் சொல்லாகவே குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சூறாவளிக் காற்று, இயற்கை சீற்றங்களின் விளைவாக காட்டில் விளையும் அற்புதப் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு உண்டு என்று குறிப்பிடப்படுகின்றது.
                                                       நன்றி: தினத்தந்திபாடல் சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். 

இந்த “மனமத ஆண்டில் உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோய் நெருங்கிடா வாழ்வும், அள்ள அள்ளக் குறையா செல்வமும், நீண்ட ஆயுளும், பெற்றிட எங்களது வாழ்த்துகள்!


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்


48 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios!

   Delete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 3. உங்கள் வாழ்த்துகளுக்கும், பதிவிற்கும் மிகவும் நன்றி. குடும்பத்தினர் யாவருக்கும்,ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. வணக்கம்
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதங்கி.

   Delete
 7. மன்மதன் வந்தான். நல்ல சங்கதியும் சொன்னான்!

  :))))
  இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. சீனத்திற் சண்டை உண்டா... சீனத்தால் சண்டை உண்டா, வருடம் பிறக்கும் போதே மழை பெய்கிறதே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 10. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 12. //இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.//

  நம்பிக்கையூட்டும் நல்ல தகவல். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. வணக்கம் சகோதரரே.!

  மன்மத ஆண்டைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி..

  தங்களுக்கும், தங்கள் குடுபத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 14. அன்பு நண்பரே!

  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
  தமிழ் மணத்தில் நுழைக்க... 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 16. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா......

   Delete
 17. மன்மத வில்லங்கங்கள் பெருகாமல் போனால் சரிதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 18. அருமையான பாடலோடு புத்தாண்டுச் செய்தி இனிமை வெங்கட் சகோ, ஆதி & ரோஷ்ணி. :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  முப்பெரும் பதிவர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ தேனம்மை லக்‌ஷ்மணன் ஜி!

   Delete
 19. மன்மத ஆண்டைப் பற்றியத் தகவல் பகிர்வுக்கு நன்றி.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. அன்பு வெங்கட் பஞ்சாங்கம் படிக்க முடியவில்லையே என்று யோசித்தேன். நீங்கள் அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள் மிக நன்றி. எப்பொழுதும் நலம் சூழ வாழ வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 21. நன்றி ஐயா
  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 23. தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 24. தினமும் பதிவிட்டு பின்னிப் பெடலெடுக்கும் பதிவர்களுள் நீங்களும் ஒருவர்! இந்த மன்மத ஆண்டும் உங்களுக்கு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! அன்புடஎம்ஜிஆர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....