வெள்ளி, 18 செப்டம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 144 – பெண் லாரி ஓட்டுனர் - அம்மா – ஜீன்ஸ்!


இந்த வார செய்தி:



கல்பனா சாவ்லா' விருது பெற்ற, லாரி ஓட்டுனர் ஜோதிமணி: பிறந்து வளர்ந்தது எல்லாம், ஈரோடு மாவட்டம், பசுவப்பட்டி கிராமம். குடும்பக் கஷ்டத்தால் 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, சாயத் தொழிற்சாலை வேலைக்குப் போனேன். அப்பாவும், அண்ணனும் லாரி டிரைவர். 12 ஆண்டுகளுக்கு முன், கள்ளிப்பட்டிக்கு திருமணமாகி வந்தேன். சொந்தமாக லாரி வைத்திருந்தார் கணவர். வேலைக்கு ஆள்போட்டு, சம்பளம் கொடுக்க கட்டுப்படி ஆகாததால், தனியாளாக தொடர்ந்து லோடுக்கு போனதால், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது; இன்னொரு பக்கம், லாரிக்கு தவணை கட்ட சிரமம். முதல் பையனுக்கு, 2 வயது; பெண் பிறந்து ஏழு மாதமான நிலையில், 'நானும் லாரி ஓட்டக் கத்துக்கிறேன்'னு சொன்னேன். கணவரும், வீட்டுப் பெரியவர்களும் மறுத்தனர்; குடும்பச் சூழ்நிலையை சொல்லி, சம்மதிக்க வைத்தேன்.லாரி ஓட்ட கற்றுக் கொடுத்தது; லைசென்ஸ் வாங்குவதற்காக தொலைதுாரக் கல்வியில், 8ம் வகுப்பு முடிக்க வைத்தது; குஜராத், ஐதராபாத் என, அவர் லோடுக்குப் போகும்போது என்னையும் அழைத்து போய், டிரைவிங் நுணுக்கம் முதல், லோடு வேலைகள் வரை, என் கணவர் சொல்லிக் கொடுத்தார்.

மூன்று மாதத்தில் சூப்பராக ஓட்ட கற்று, முதல் முறையாக, 800 கி.மீ., தொலைவில் இருக்கும் ஐதராபாத்துக்கு லோடு ஏற்றி போனேன்; கணவரும் கூட வந்தார். அப்புறம் தனியாக போகப் பழகிக் கொண்டேன். இருவரும் உழைத்து, லாரி தவணையை அடைத்து, இன்னொரு லாரியும் வாங்கினோம். சேர்ந்தே இரண்டு லாரியில் லோடுக்குப் போக ஆரம்பித்தோம். இப்போது, தனியாக குஜராத் வரைக்கும், 'அப் அண்ட் டவுன்' 4,500 கி.மீ., வரை லோடு ஏத்தி டிரைவராக போகிறேன். 

இப்படி கிளம்பினால், 15 - 25 நாள் கழித்து தான், திரும்பி வருவேன்.அதிகபட்சமாக, 80 கி.மீ., வேகத்தில் ஓட்டியிருக்கிறேன். இப்போது பவர் ஸ்டீரிங் இருப்பதால், கொஞ்சம் ஈசியாக உள்ளது. போகும் வழியில் சமைத்து சாப்பிட்டு, இரவு நேரங்களில், லாரியிலேயே துாங்கி, காலையில் எழுந்து ஓட்டுவேன். ஒருமுறை மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் லாரி ஓட்டி போனபோது, இரவு, 2:00 மணிக்கு டயர் பஞ்சரானது. ஸ்டெப்னியை மாற்ற ஜாக்கி இல்லாமல், வேறு லாரியை நிறுத்தி, ஜாக்கி வாங்கி, ஸ்டெப்னியை மாற்றுவதற்குள் விடிந்து விட்டது. தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏற்றி வந்தாலும், அதில் நான் மட்டும் தான் பெண் என்பது, ரொம்ப பெருமையாக இருக்கும். இப்போது, டிரைவராக மட்டுமே, மாதம், 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரி என்பதால், கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைத்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாது; முடியும்னு நினைத்தால் எந்தச் சுமையும் சுகமாக மாறிவிடும்.

-          தினமலர் இணைய இதழிலிருந்து.....

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.... அனைவரின் சார்பிலும் இவருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:

சிறுவர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தும் பென்சிலை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு பேனாவினை கொடுப்பதற்கு ஒரு காரணம் இருக்கலாம்! பென்சிலில் தவறாக எழுதுவதை சுலபமாக அழித்து விடுவது போல பேனாவால் எழுதும் தவறுகளை திருத்துவது கடினம்.  அது போலவே வாழ்க்கையில் சில தவறுகளை திருத்திக் கொள்வது கடினம் என்பதை புரிய வைப்பதற்காக இருக்கலாம்!


இந்த வார குறுஞ்செய்தி:

எறும்புகளுக்கு ABCD தெரியாது. ஆனால் Q-வில் போகத் தெரியும்.
மனிதர்களுக்கு ABCD தெரியும். ஆனால் Q-வில் போகத் தெரியாது.

மெட்ரோ மேனியா:



இப்போதெல்லாம் இளைஞர்கள்/இளைஞிகள் அணியும் ஜீன்ஸ் பேண்டுகள் இடுப்பை விட்டு இறங்கிக் கொண்டே இருக்கிறது.  ஆங்காங்கே கிழிந்து/கிழித்து விட்டுக்கொள்வதும் ஒரு ஃபேஷன். இந்த வாரத்தில் மெட்ரோவில் பயணித்த போது அமர்ந்து கொள்ள இருக்கை கிடைக்க நான் அமர்ந்திருந்தேன்.  அடுத்த நிலையத்திலிருந்து ஒரு இளைஞன் முதுகில் மூட்டையோடு [Back-pack] எனது எதிரில் நின்று கொண்டான்.   

இறக்கமாக ஒரு ஜீன்ஸ், முட்டி, கணுக்கால் அருகே, தொடை என ஆங்காங்கே கிழிசல்கள். இருந்த கிழிசல்கள் பெரும்பாலானவை பெரிதானவை.  சரி எல்லாம் போகட்டும் என விட்டுவிட்டாலும் ஒரு கிழிசல் பார்த்தபோது மனதிற்குள் புலம்பாமல் இருக்க முடியவில்லை! அந்த கிழிசல் அதுவும் பெரிய கிழிசல் இருந்த இடம் – ZIP-க்கு மிக அருகே நீள வாக்கில்! என்ன Fashion Statement-ஓ போங்க!

இந்த வார காணொளி:

அம்மா.....  அன்னையர் தினம் சமயத்தில் வெளிவந்த குறும்படம்.  ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சுலபமாகப் புரியும். மற்றவர்களும் பார்க்கலாம்! தப்பில்லை – பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் மற்றவர்களுக்கும் புரிந்து கொள்வது சுலபம்.  பாருங்களேன்!




படித்ததில் பிடித்தது:

கோபம்...  

ஒரு இளைஞன் இருந்தான் அவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும் போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்..!

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7, பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.

இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார்..!

"ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?"

அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான். பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும் நண்பர்களே..!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்




44 கருத்துகள்:

  1. முதல் செய்தி தினமலரிலிருந்து (சொல்கிறார்கள் பகுதி) படத்திலேயே தினமலர் லோகோ இருக்கிறது பாருங்கள். தினமணி அல்ல!

    சுவையான சாலட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அப்போது தான் தினமணியும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதே நினைவில் எழுதி இருக்கிறேன் போல......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கல்பனா சாவ்லா விருது பெற்ற ஜோதி மணி போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்துகள்! குறுஞ்செய்தி நச்!
    கோபம் ஆணி அடிக்கிற மாதிரி இருக்கு..மொத்தத்தில் ப்ருட் சாலட் சுவையோ சுவை அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.....

      நீக்கு
  4. பதில்கள்
    1. Cuddly உங்களுக்கும் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி கிரேஸ்....

      நீக்கு
    2. எல்லாத் தொகுப்புமே நன்றாக இருந்தது....

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  5. தகவல்கள் அனைத்தும் நன்று நண்பரே.. காணொளி கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்துகள்!
    அவரின் திறமையை, மனோவலிமையைப் பாரட்டியே ஆகணும்!

    அத்தனை பகிர்வுகளும் மிக அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  7. காணொளி அருமை.மற்றப் பழத்துடுகளும் சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  8. அருமையான சுமையான சால்ட்,,,,
    நல்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  9. ஜோதிமணிகள் போன்றோரைப் பெண்களின் முன்னோடிகள் என்று சொல்லலாமா. காணொளி பார்க்க முடியவில்லை. படித்த்கதில் பிடித்ததுஎங்கோ ஏற்கனவே படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      காணொளி பார்ப்பதில் ஏதும் பிரச்சனையா?

      நீக்கு
  10. பாராட்டுக்குரிய பெண்மணி அந்த லாரி டிரைவர். ஆண்களுக்கே சவாலான ஒரு விஷயத்தைக் கையிலெடுத்து சாதிக்கும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். cudly குறும்படத்தை என் மகள்தான் எனக்குக் காட்டினாள். :) கோபம் பற்றிய கதை முன்பே கேட்டிருந்தாலும் கோபம் வரும்போதெல்லாம் மனத்தில் கொண்டுவரவேண்டிய கருத்து. இன்றைய ஃப்ரூட் சாலட் அபாரம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  11. கல்பனா சாவ்லா விருதுக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. கோபம் கதை படித்தபின் கோபம் வராது யாருக்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    பாராட்டுக்குரியவர் அந்த பெண் லாரி டிரைவர். முகப் புத்தக இற்றை செய்தியும், குறுஞ்செய்தியும் மனதில் இடம் பிடித்தன. மாறி வரும் கலாச்சாரங்கள் நிறையவே பயத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. கோபம் பற்றிய கதை ஏற்கனவே படித்திருப்பினும் , அந்த தந்தையின் அறிவுரை சிறப்பு. மொத்தத்தில் இன்றைய பழக்கலவை இனிதாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  15. அனைத்துமே அருமை. பெண் ஓட்டுநர் மனதில் ஆழப்பதிந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. காணொளி பார்ப்பதில் ஏதும் பிரச்சனையா?/ காணொளி பார்ப்பதில் பிரச்சனை இல்லை. நான் முன்பு வந்தபோது காணொளியே திறக்க வில்லை. ஒரு கட்டம் மட்டுமே இருந்தது. இப்போது பார்த்து விட்டேன் படம் பார்த்துக் கதை சொல்வது என்பார்களே அதுபோல் நன்றி.

    Reply

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  17. குறுஞ்செய்தி புன்னகையை வரவழைத்தது. லாரி ஓட்டுனரைப்பற்றி முன்பேயே படித்தேன். அவருக்கு ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  18. ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். குறுஞ்செய்தி, காணொளி, கோபம் செய்யும் காயம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  19. லாரி ஓட்டும் பெண்ணைப் பற்றி நிறையப் படிச்சாச்சு! குறுஞ்செய்தி அருமை. காணொளி இயல்பாக இருந்தது. கட்லி தயார் செய்யும் பெண் தாய் மடியில் தூங்குவது அருமை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  20. லாரி ஓட்டும் பெண்ணைப் பற்றி வாசித்திருந்தாலும் எங்கள் பொக்கேவும்...நல்ல தைரியமான பெண்மணி....

    குறுஞ்செய்தி டாப்.. இற்றை ஜோர்...

    கட்லி மிகவும் பிடித்தது.....
    (கீதா: கட்லி ரொம்பவே பிடித்திருந்தது...)

    படித்ததில் பிடித்தது அருமை..

    ஆண்களின் ஜீன்ஸ் ...ம்ம்ம் வெங்கட்ஜி பெண்களின் ஜீன்ஸ் கூட மிகவும் இறங்கித்தான் வருகின்றது ..இன்னும் மோசமாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....