எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 29, 2015

சாப்பிட வாங்க: காச்ரி சட்னி!


காச்ரி சட்னி

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாகுபடி செய்யும் நிலங்களில் ஊடு பயிராக காச்ரி எனும் ஒரு காய்காய்க்கும் கொடியும் வளர்கிறது. வெள்ளரி வகையைச் சேர்ந்த இக்காய் சற்றே புளிப்பாக இருக்கும்.  இதனை சட்னியாகவும், பொடியாகவும் செய்து பயன்படுத்துவார்கள். பொதுவாக ராஜஸ்தானிய உணவுகளில் ஆம்சூர் பொடிக்கு பதில் இந்த காச்ரி பொடியும் பயன்படுத்துவார்கள். தக்காளி இல்லாத சமயங்களில் அதற்கு பதிலாக இந்த காச்ரியை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்வதும் உண்டு!

நேற்று ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் அலுவலக சிப்பந்தி ஒருவர் அவரது நிலத்தில் விளைந்தது என்று கொஞ்சம் காச்ரியை கொண்டு வந்தார்.  எனக்கு வேண்டாம் என்று மறுத்தாலும் கட்டாயப்படுத்தி கொடுத்து விட்டார். அவர் இங்கே தனியாக, அலுவலக விடுதியில் தங்குவதால் சமைக்க முடியாது என்றும் அதனால் என்னிடம் கொடுத்து சட்னி செய்து சாப்பிடச் சொல்ல, காச்ரி சட்னி செய்வது எப்படி என்று தெரியாது எனச் சொல்ல, செய்முறையும் சொல்லிக் கொடுத்தார்!


இதாங்க காச்ரி.... 

நேற்று மாலையில் வீடு வந்த பிறகு இந்த காச்ரி-யை ஒரு கை பார்த்து விடுவிது என்ற நோக்கத்துடன் களத்தில் இறங்கினேன்! செய்து முடித்து சுவைத்தால் நன்றாகவே இருந்தது. சப்பாத்தி, பூரி, என அனைத்துடனும் இச்சட்னியை ருசிக்கலாம்! பொதுவாக வறண்ட பூமியில் வளரும் என்று சொன்னாலும், நம் கிராமங்களிலும் இது கிடைக்கும் என நினைக்கிறேன்.  உங்கள் வசதிக்காக காச்ரி காய்களை படம் பிடித்து இப்பதிவில் இணைத்திருக்கிறேன். 

தேவையான பொருட்கள்:

காச்ரி – 250 கிராம்
பச்சை மிளகாய் – இரண்டு
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்.
மிளகாய்த் தூள் – 1 ½ ஸ்பூன்.
தாளிக்க – ஜீரா ஒரு ஸ்பூன் மற்றும் எண்ணெய்.

எப்படிச் செய்யணும் மாமு?

காச்ரியை தோல் அகற்றி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  பச்சை மிளகாயையும் ஒன்றிரண்டாக வெட்டிக் கொண்டு, பூண்டு தோல் உரித்து மூன்றையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, கொஞ்சம் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து ஜீராவை போட்டு பொரிந்ததும், மஞ்சள் பொடியை சேர்க்கவும்.  அதன் பிறகு அரைத்து வைத்த விழுதினை போட்டு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து வாணலியை மூடி வைக்கவும். பத்து பதினைந்து நிமிடங்களில் காச்ரி சட்னி தயார்!

வேண்டுமெனில் மேலாக கொத்தமல்லி தழைகளை தூவி அழகு படுத்தலாம்! காச்ரி எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இதனை காய வைத்து பொடியாகவும் வைத்துக் கொள்வார்களாம்.  Kachri Powder என்ற பெயரிலேயே கடைகளிலும் கிடைக்கிறதாம். மேலும் விவரங்கள் தேவையெனில் இணையத்திலும் கிடைக்கிறது.  காச்ரி புரதச் சத்து நிறைந்தது என்பதும் இங்கே சொல்ல வேண்டிய விஷயம்!

என்ன நம்ம ஊர்ல கிடைக்குதான்னு பார்த்து செய்து பார்க்க தானே போறீங்க!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்


    

42 comments:

 1. 'சுக்கங்காய்'னு நினைக்கிறேன். இந்தக்காயை நம்ம ஊரில் பார்த்திருக்கிறேன். தோட்டத்தில் இந்தக்கொடி தானாய் வளார்ந்து படர்ந்திருக்கும்.

  ஹ்ம்ம் ... முன்பே தெரிந்திருந்தால் சட்னி அரைச்சிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இப்ப தெரிஞ்சுடுச்சு.... அடுத்த வாட்டி ஊருக்குப் போனா அரைச்சுடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 2. நம்மூரு கோவைக்காய் போல இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. இது வெள்ளரி வகையைச் சேர்ந்தது.... கோவைக்காய்க்கு ஹிந்தியில் பெயர் தெரியுமா? குந்த்ரு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இது நம்மூரிலும் கிடைக்கும் காய்தான்
  பெயர் நினைவுக்கு வரவில்லை
  செய்முறைதான் புதியது
  நிச்சயம் செய்து பார்த்துவிடுவோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பெயர் தெரிந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ரமணி ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. தமிழ் மணத்தில் இணைத்து
  வாக்களித்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 5. இங்கே - குவைத்தில் கிடைக்கின்றதா எனத் தெரியவில்லை..

  கிடைத்தால் - சட்னிதான்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. காச்ரி சட்னி
  அறியாதது
  இரண்டு மிளகாய் நிற்பதைப் பார்த்தால்
  சட்னிக்கு கொம்பு முளைத்தது போல் தோன்றுகிறதது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. சட்னிக்கு கொம்பு முளைத்திருக்கிறது! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. வித்தியாசமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. கோவைக்கய் போல் இருக்கிறது. சட்னி செய்முறைஅருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. இது நம்ம டெல்லியில் கிடைக்கும் பரமல் சப்ஜி போல இருக்கே வெங்கட் !! அதுதானா ? அதுதான் என்றால் உடனே சட்னி செய்து விடலாம். பார்ப்பதற்கு யம்மி ஆகா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. இது பர்மல் இல்லை. வெள்ளரி வகையைச் சார்ந்தது. நமது மார்க்கெட்டில் கொஞ்சம் பெரியதாய் கிடைக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதாஜி!

   Delete
 10. அட! தெரியாமப் போச்சே....

  ReplyDelete
  Replies
  1. இப்ப தெரிஞ்சு போச்சே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. தெரியாத விடயம்,
  அருமை சகோ, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 12. அவ்வளவாகப் பிடிக்காது! :) பூண்டு சேர்ப்பதாலோ? :)

  ReplyDelete
  Replies
  1. பூண்டு! :) எல்லாமும் எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லையே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 13. என்ன சார்.. பதிவைச் சரியாக முடிக்கவில்லை. 'நீங்கள் மறந்ததை நான் சேர்த்துள்ளேன்.

  என்ன நம்ம ஊர்ல கிடைக்குதான்னு பார்த்து செய்து பார்க்க தானே போறீங்க! இல்லைனா கவலையே படாதீங்க. இந்த சீசனுக்கு தில்லி வந்தீங்கன்னா, நான் பண்ணி வச்சுருப்பேன். முன்னாலயே சொல்லிட்டீங்கன்னா, சப்பாத்தியும் ரெடி செய்துவிடலாம். இல்லாட்டி, நீங்க கொண்டுவந்துருங்க... என்ன சரிதானே...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இப்படி ஒரு முடிவா..... இதுவும் நல்லாத் தான் இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 15. சின்ன சைஸ் வெள்ளரி மாதிரி இருக்கு. சலாட் செய்து பார்த்தீர்களா

  ReplyDelete
  Replies
  1. இதை சலாட்-ஆகவும் சாப்பிடலாம். அலுவலகத்தில் கொடுக்கும் போதே சாப்பிட்டேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. சாப்பிட வாங்க தலைப்பு சாப்பிட வர மாட்டுதே... ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. டாபாவில் கிடைக்கும்னு நினைக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. கிடைக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 18. நம்ம ஊர் கோவக்காய்போல உள்ளது பார்வைக்கு

  ReplyDelete
  Replies
  1. கோவைக்காய் மாதிரி இருந்தாலும் சுவையில் வேறுபட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 19. Replies
  1. பார்க்க பர்வல்/பர்மல் மாதிரி தான் இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 20. பார்ப்பதற்கு பர்வல் மாதிரி, நம்ம ஊர் கோவைக்காய் மாதிரி இருக்கும் ..ஆனால் கோவைக்காயை விடப் பெரிதாக...த்ரிபூசணியியின் சிறிய மிகச் சிறிய காய் போல இருக்கும்....பாண்டிச்சேரிப் பகுதியில் நான் இருந்த பகுதியில் சுக்காங்கா(ய்) என்று சொல்லுகின்றார்கள்...இதைக் கூட்டாகவும் செய்து சாப்பிடலாம்...தக்காளிக் காய் கூட்டு போல புளிப்பு இருக்கும் என்பதால்...பச்சையாகவே கடித்துச் சாப்பிடவும் நன்றாக இருக்கும்....இதை அவியலிலும் சேர்த்துச் செய்திருக்கின்றேன்....காச்ரி சட்னி பற்றி நெட்டில் வட இந்திய சட்னி வகைகள் தேடிய போது அறிந்து பாண்டியில் இருக்கும் போது செய்ததுண்டு. என் தங்கை (குர்காவ்ன்) செய்வாள். ஆனால் அந்தக் காச்ரிதான் இந்தச் சுக்காங்காயா என்று தெரியவில்லை....சட்னி நன்றாக இருக்கும்..

  கீதா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   Delete
 21. இது சுக்கங்காய் போல இருக்கிறது. இதன் சுவை புளிப்பு என்று கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது. ஆனால், சுக்கங்காய் பாவற்காய் போல கசப்பாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சுக்கங்காய் பற்றி கட்டுரையில் எங்கும் எழுதவில்லை நண்பரே. பின்னூட்டத்தில் தான் அக்காய் பற்றி எழுதி இருக்கிறது. சுக்கங்காய் கசப்பாக இருக்கும் என்ற தகவலுக்கு நன்றி. காச்ரி புளிப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜசேகர் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....