எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 28, 2015

கார் சாவி

 படம்: இணையத்திலிருந்து....

நான் காஜ்லா..... தில்லியின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்த அலுவலக சந்திப்பில் கலந்து கொண்டு வெளியே வந்தேன். டம்பப் பை முழுக்க கைவிட்டு துழாவினாலும் சாவி கிடைத்தபாடில்லை. சந்திப்பு நடந்த இட்த்திலேயே இருக்குமோ எனத் தோன்ற அங்கே சென்றால் அங்கும் இல்லை! என்னுடைய வாகனம் நோக்கி நடந்து கொண்டே வாகனத்தின் சாவியை மீண்டும் தேடியபடியே நடந்தேன்.

வழக்கமாக செய்யும் தப்பையே செய்து விட்டேனோ என நினைத்தேன். வாகனத்திலேயே சாவியை மறந்து வைத்து விடுவது எனக்கு வழக்கம்! சாவி தொலையாமல் இருக்க, சாவித் துவாரத்திலேயே வைத்து விடுவது தான் நல்லது என எனக்கு ஒரு எண்ணம்! என் கணவர் எப்போதும் சொல்வார் – இப்படி வாகனத்திலேயே விட்டுச் சென்றால் உன் வாகனத்தை திருடுவது வெகு சுலபம்!  அவர் எப்போதும் சொல்வது போலவே இன்று நடந்து விடுமோ....

ஓட்டமும் நடையுமாக வாகனம் நிறுத்தி வைக்கும் இடத்திற்கும் வந்தாயிற்று...  அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! வாகனம் காற்றில் மறைந்திருந்தது!  அலைபேசியிலிருந்து காவல்துறையை அழைத்து என்னுடைய வாகனம் தொலைந்து விட்டதை தெரிவித்தேன். எங்கே நிறுத்தினேன், வாகன எண், என்ன வண்ணம் என்று விவரமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். வண்டியிலேயே சாவியை விட்டுவிட்ட எனது முட்டாள் தனத்தையும் சொல்லி விட்டேன்! விரைவிலேயே கண்டுபிடிக்க முயற்சி செய்வதாகச் சொன்னார்கள்....

அடுத்ததாக என்னுடைய கணவரை அழைக்க வேண்டும். நிச்சயம் முட்டாளே...  சாவியை அப்படி வைக்காதே என எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கிறேன்.... இப்போது திருடு போய் விட்டது பார்என திட்டப் போகிறார். இருந்தாலும் அழைக்கத்தான் வேண்டும்.    

“நாதா.....  [இது போல தப்பு செய்த நேரங்களில் இப்படித் தான் அழைப்பது வழக்கம்!] ஒரு சிறிய பிரச்சனை. இங்கே வாகனத்தினை நிறுத்தி விட்டுச் சென்றேன். வழக்கம் போல சாவியை அதன் துவாரத்திலேயே விட்டு விட்டேன். சந்திப்பு முடிந்து திரும்பினால், வாகனம் இல்லை. களவு போய்விட்டது போலும்! நீங்கள் கவலைப் படாதீர்கள்.... காவல் துறையை அழைத்து புகார் செய்து விட்டேன். விரைவில் கண்டுபிடித்து விடுவதாக வாக்களித்து இருக்கிறார்கள்என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தேன்.

எதிர் முனையில் நீண்ட மௌனம்.  ஒரு வேளை அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதோ என திரையைப் பார்த்தேன். இல்லை... இல்லை....  சற்றே மௌனத்திற்குப் பிறகு வழக்கம் போல “முட்டாளே.... என ஆரம்பித்தார்! நான் தானே இன்றைக்கு உன்னை அந்த சந்திப்பிற்காக வாகனத்தில் கொண்டு வந்து விட்டேன். நீ வாகனம் எடுத்துச் செல்லவே இல்லையே!” 

அடடா..... கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ?  என மனதுக்குள் நினைத்தபடியே, “நல்ல வேளை திருடு போக வில்லை. சரி நீங்களே என்னை வந்து அழைச்சுட்டுபோங்க!என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில்.....

முட்டாளே......  முதல்ல இங்கே என்னைப் பிடித்து கேள்வி கேட்கும் போலீஸ்காரரிடம் நான் உன் வாகனத்தினை திருட வில்லை என புரிய வைத்தால் தான் நான் அங்கே வந்து உன்னை அழைத்துக் கொண்டு போக முடியும்!

டிஸ்கி: ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம்.

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

42 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நல்ல அனுபவப் பகிர்வு... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா.
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. வெகு வெகு சுவாரஸ்யமான
  (என் இனத்தைச் சேர்ந்தவரின் ) பகிர்வு
  மிகவும் இரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி!

   Delete
 3. படித்திருக்கிறேன். ரசித்தேன் மீண்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. சாவியினால் வந்த சிக்கல் அல்ல. ஞாபக மறதியால் வந்த சிக்கலே. சற்று எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. அருமையான கதை. மிகவும் ரசித்தேன்!
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 7. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 9. ஹஹ! நான் படித்துக்கொண்டே வரும் போது தங்கள் மனைவி தான் இப்படிச்செய்தார்கள் என நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா.... என் மனைவி அல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 10. வெகு அண்மையில் நடந்த நிகழ்வுகளை மறப்பது
  ஷார்ட் டர்ம் மெமரி லாஸ் என்பர்.

  இது ஒரு தரம் இரு தரம் நடந்தது என்றால் பரவா இல்லை.

  அடிக்கடி நடக்கிறது என்றால்...

  ஒரு ந்யூராலஜிச்டை கன்சல்ட் செய்து அவருக்கு ரூபாய் ஐநூறு அழுது தொலைப்பது நல்லது.


  பிராஹ்மி என்று சொல்லப்படும் ஆயுர்வேத மருந்துகள் நினைவாற்றல் சக்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருள் அடங்கிய மாத்திரைகள் ஷாக் அடிக்கும் விலையில் அலோபதியிலும் கிடைக்கின்றன.

  அதெல்லாம் இருக்கட்டும்.

  கால பைரவர் என்று ஒரு சாமி. அந்த சாமி சிலையின் கீழ் தான் அந்தக் காலத்தில் கோவில் நடை முடிந்தபின் , சாத்தும்போது, சாவியை வைத்து விட்டு அர்ச்சகர் செல்வார்.

  அதுபோல ஹோட்டலுக்குள் செல்லும்போது செக்யூரிடியிடம் சாவியைக் கொடுத்து விட்டு போகும் விதிகள் இருந்தால் நல்லது இல்லையா .

  இருந்தாலும், எதற்கும்
  அஷ்டமி அன்று அர்ச்சனை செய்ய நல்லது.  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன பரிகாரம் அனைத்தும் இந்த நிகழ்வு யாருக்கு நடந்ததோ அவருக்கு எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 11. அன்பு நண்பரே

  நல்ல பகிர்வு. ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்து தான் இருப்பினும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  விஜய் டில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்திரசேகரன் ஜி!

   Delete
 13. நல்ல ஞாபக மறதி! ஹாஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. ஹஹஹஹஹ மிகவும் ரசித்தோம்...என்றாலும் இப்படிப்பட்ட ஆப்சென்ட் மைண்டெட்னெஸ் பல சமயங்களில் இக்கட்டானச் சூழலில் மாட்டிவிடுகின்றதுதான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. சிரித்து மகிழ்தேன் ஜி ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. ஆகா படித்து மகிழ்ந்தேன் ஐயா
  தர்மசங்கடமானசூழல்தான்
  நன்றி
  தம =1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி....

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 19. அண்மையில் என் பேத்தி இப்படித்தான் ஸ்கூட்டரின் சாவியை அதன் துவாரத்திலேயே விட்டு விட ஸ்கூட்டர் களவு போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. அடடா.. மறதியினால் ஸ்கூட்டர் களவு போய்விட்டதே.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 20. ஹாஹாஹா! இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....